Posts

Showing posts from October, 2021

உன்னதப்பாட்டு ஆறாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 6

Image
உன்னதப்பாட்டு - அதிகாரம் 6 - விளக்கம் உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.  -உன்னதப்பாட்டு 6 : 1 விளக்கம் : யூதர்கள் சபையை பார்த்து சொல்லுகிறார்கள். கிண்டலாக சொல்கிறார்களா? நிஜமாக சொல்கிறார்களா? தெரியாது.  யூதர்களால் கூட கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய முடியாது.  ஆண்டவரைக் கண்டுபிடிக்கக் கூடிய இந்த நாட்களில் அவரைத் தேட வேண்டும். 

உன்னதப்பாட்டு ஐந்தாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 5

உன்னதப்பாட்டு- அதிகாரம்5- விளக்கம் என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.  -உன்னதப்பாட்டு 5 : 1 விளக்கம் : மணவாளன் பொதுவாய் பாடுகிறதாய் அமைந்திருக்கிறது.  இது 4:16 உடன் தொடர்புடையது.  மணவாட்டி அழைக்கிறதாய் அந்த வசனம் அமைந்திருக்கும்.  அந்த வசனத்திற்கு பிரதியுத்தரமாக இந்த வசனம் அமைந்திருக்கும்.  வாடையே ! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய  ; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.    - உன்னதப்பாட்டு 4 : 16 வாடையே! இது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும்.  அவர்கள்மேல் ஊதி : பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;  - யோவான் 20 : 22 ஊதி Exhale, வெளிசுவாசம். எபிரேய மொழியில் Hey என்ற ஐந்தாவது எழுத்து தொண்டையில் இருந்து உச்சரிக்க வேண்டும்.  5 என்ற எண் தேவ வல்லமையை க...

8 வகையான முள்ளுகள் - 8 வகையான சத்துருக்கள்- எப்படி விடுதலை பெறுவது

முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.  - உன்னதப்பாட்டு 2 : 1 முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.  - உன்னதப்பாட்டு 2 : 2 நாம் முள்ளுக்குள்ளே, லீலி புஷ்பமாக இருக்கிறோம். நாம் உலகத்திற்குள்ளே, சத்துருக்களுக்கு மத்தியில் தேவனுடைய பிள்ளைகளாக வாழ்கிறோம்.  இரட்சிக்கப்பட்ட பின் நமக்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் போராட்டம் உண்டு. ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.  - எபேசியர் 6 : 12 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.  - எபேசியர் 6 : 13 8 வகையான முள்ளுகள் - 8 வகையான சத்துருக்கள் 1) எகிப்திய முள் 2) அமலேக்கிய முள் 3) மோவாபிய முள் 4) கானானிய முள்...

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4

Image
உன்னதப்பாட்டு-அதிகாரம் 4-விளக்கம் வசனம் 1-5: மணவாளனாகிய இயேசு கிறிஸ்து, மணவாட்டியாகிய சபையிடம் எதிர்ப்பார்க்கும் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன? என்பதனை சொல்லுகிறது. 

The gospel story revealed in Bible names (Both English and Tamil)

ஆதாம் முதல் நோவா வரையிலான பெயர்களும், அதன் பெயர் அர்த்தமும், அதன் முழு விளக்கமும். 1) ஆதாம்  -  மனுஷன்  ( ஆதியாகமம்  5:2) 2) சேத்  -  நியமிக்கப்பட்டவன் (5:3) 3) ஏனோஸ்  -  சாவுக்குரிய (5:6) 4) கேனான்  -  கவலை (5:9) 5) மகலாலெயேல்  -  மகிமையுடைய   தேவன் (5:12) 6) யாரேத்  -  கீழே   இறங்குதல் (5:15) 7) ஏனோக்கு  -  கற்றுக்   கொடுத்தல் (5:18) 8) மெத்தூசெலா  -  அவருடைய   மரணம் (5:21) 9) லாமேக்கு  -  வேதனைப்படுகிறவன் (5:25) 10) நோவா  -  இளைப்பாறுதல் ,  ஓய்வு (5:29) அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.  -1 கொரி 15 : 45 விளக்கம் : இந்த 10 பெயர்களில் அடங்கியுள்ள இரகசியம் என்னவென்றால்,  “மனிதன்   துக்கப்பட்டு   மரணமடைய   நியமிக்கப்பட்டுள்ளான் .  மகிமையுள்ள   தேவன்   இறங்கி   வந்து   வசனத்தைக் கற்றுக் கொடுப்பார் .  அவருடைய   மரணம் ...

தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அந்த பெயர்களின் பொருளும், விளக்கமும்

தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அந்த பெயர்களின் பொருளும், விளக்கமும் பெரிய தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அதன் பெயர் அர்த்தமும் 1) ஏசாயா - கர்த்தருடைய மீட்பு ( எபிரேய மொழியில் உயிர் எழுத்துக்கள் இல்லாததால் ஓசியா, உசியா, யோசுவா, இயேசு அனைத்திற்கும்  ஒரே பொருள் தான்). 2) எரேமியா - கர்த்தர் உயர்ந்தவர் 3) எசேக்கியேல் - தேவனுடைய வல்லமை 4) தானியேல் - தேவன் நீதியுள்ளவர்.  விளக்கம் :  இந்த 4 தீர்க்கத்தரிசிகளின் பெயர்களுக்குள் அடங்கியிருக்கும் இரகசியம் என்னவென்றால்,  “எமது இரட்சகராகிய இயேசுவானவர் அதி உன்னதமான கர்த்தரும், சர்வ வல்லமையுள்ள, நீதியுள்ள தேவனுமாவார்”. 

உன்னதப்பாட்டு மூன்றாவது அதிகாரம்- விளக்கம் ; Deep Explanation of Song of Solomon Chapter 3

உன்னதப்பாட்டு-அதிகாரம்3- விளக்கம் இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.  -உன்னதப்பாட்டு 3 : 1 விளக்கம்: மணவாட்டி பேசுகிறாள்.  இது ஒரு கவிதை.  இதில் எழுதப்பட்டுள்ளது எபிரேய மொழியிலான கவிதை.  நமக்கு தமிழில் விளங்கி கொள்வது கடினம்.  தமிழில் உதாரணமாக கூற வேண்டுமென்றால்,   சமுத்திரம் போல திரண்ட ஜனங்கள், ஜனத்திரளுக்குள்ளே நீந்தினேன், மகிழ்ச்சிக் கடலில் விழுந்து தத்தளித்தேன், என் மனம் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது. இந்த வசனங்களை பேசும் போது, மணவாட்டி பரலோகத்திற்கு போய் விட்டாள்.  சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இருக்கக் கூடிய 7 வருடங்களில் நடக்கக் கூடிய சம்பவம் இது. இந்த 7 வருடங்கள், யூதர்களுடைய 360 நாட்கள் கொண்ட வருடங்கள்.  இங்கு பூமியில் உள்ள இராக்காலத்தை பற்றி மணவாட்டி பேசுகிறாள்.  பரலோகத்தில், காலம் நேரம் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  எங்கே என் மணவாளன் அவரை பரலோகத்தில் காணவில்லையே என்று மணவாட்டி தேடுகிறாள். பூமியின் இராக்காலங்களில் என்றால் இரவையும் குறிக்கும்.  இருள்...

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

Image
உன்னதப்பாட்டு -அதிகாரம் 2 -விளக்கம் நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.  -உன்னதப்பாட்டு 2 : 1 விளக்கம் : மணவாளன் தன்னைப் பற்றி பேசுகிறார்.  நான்  அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன்  (Haya) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.  - யாத்திராகமம் 3 : 14 மோசேக்கு தன்னை வெளிப்படுத்தின தேவனைக் குறிக்கும்.  அதே சொல்லை இயேசுவானவர் புதிய ஏற்பாட்டில் பலமுறை உபயோகித்து, தான் தான் ஆபிரகாமிற்கு முன்னேயே இருந்த அந்த தேவன்( Haya) என்பதனை காட்டியிருக்கின்றார்.  எனவே, இயேசுவானவர் தேவனாய் நம்மிடம் பேசுகிறார்.  சாரோனின் ரோஜாவும் அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள் மட்டும் வாசம்பண்ணினார்கள்.  - 1 நாளாகமம் 5 : 16 சாரோன் அமைந்திருக்கின்ற இடம்: Tel-Aviv மற்றும் Haifa இந்த இடங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அந்த இடம் தான் சாரோன்.  சாரோனின் ரோஜா: சாரோனின்...

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம் சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.  -உன்னதப்பாட்டு 1 : 1 விளக்கம் :  சாலொமோன் பாடின இந்த புத்தகம், ஒரு தீர்க்கத்தரிசனம் கலந்த கவிதைப் பாடல் என்றே சொல்லலாம். ————————————————————————- வசனம் 2-7:  சாலொமோனை (மணவாளனாகிய இயேசுவை) பார்த்து, சூலமித்தியாள்(மணவாட்டியாகிய சபை) பாடுகிறாள்.  ————————————————————————- அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.  -உன்னதப்பாட்டு 1 : 2 விளக்கம் : அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக சபை சொல்கிறது, மணவாளரே! இயேசுவே! உங்களால் எனக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் முத்தம், அதாவது உங்கள் வார்த்தை. கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் தேவனுடைய வார்த்தை தான்.  ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.  - யோவான் 1 : 1 அந்த வார்த்தை மாம்சமாகி , கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய ...