உன்னதப்பாட்டு ஐந்தாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 5

உன்னதப்பாட்டு- அதிகாரம்5- விளக்கம்

என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.
 -உன்னதப்பாட்டு 5 : 1

விளக்கம்:
  • மணவாளன் பொதுவாய் பாடுகிறதாய் அமைந்திருக்கிறது. 
  • இது 4:16 உடன் தொடர்புடையது. 
  • மணவாட்டி அழைக்கிறதாய் அந்த வசனம் அமைந்திருக்கும். 
  • அந்த வசனத்திற்கு பிரதியுத்தரமாக இந்த வசனம் அமைந்திருக்கும். 
வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய 
; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.  
 -உன்னதப்பாட்டு 4 : 16

வாடையே!
  • இது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும். 
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
 -யோவான் 20 : 22

ஊதி
  • Exhale, வெளிசுவாசம்.
  • எபிரேய மொழியில் Hey என்ற ஐந்தாவது எழுத்து தொண்டையில் இருந்து உச்சரிக்க வேண்டும். 
  • 5 என்ற எண் தேவ வல்லமையை குறிக்கும். 
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
 -2 தீமோத்தேயு 3 : 16
  • Theo Neustos in Greek.
  • Theos என்றால் தேவன்.
  • Neustos என்றால் வெளி சுவாசம்.
  • Abram -Abraham ஆக மாற்றினார் (added Hey letter in between).
  • Sarai- Sarah ஆக மாற்றினார் (added Hey letter in between).
  • அந்த அபிஷேகம் தேவன் ஒருவரிடத்திலிருந்து வர வேண்டும். 
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
 -அப்போஸ்தலர் 2 : 2
  • பரிசுத்த ஆவியானவரே வாருங்கள். 
  • வந்து சபையின் மேல் வீசுங்கள். 
  • நீங்கள் எங்கள் மத்தியில் உலாவுங்கள். 
  • ஒரு சபை எப்படிப்பட்ட சபையாய் இருக்க வேண்டும்
  • இயேசுவானவர் வருவதற்கு அந்த சபை பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் உள்ள சபையாக இருக்க வேண்டும். 
என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன்
  • மணவாளன் பிரதியுத்தரம் வழங்குகிறார்.
  • சபை யாருக்கும் சொந்தமானது அல்ல. எனக்கு சொந்தமானது. 
  • என் தோட்டம். 
என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்
  • இயேசுவானவர் தமது சபை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பதனை இவ்வசனம் காட்டுகிறது. 
என் வெள்ளைப்போளத்தையும் 
  • அவருடைய ராஜ வாசனை அந்த சபையில் இருக்க வேண்டும். 
  • மத்தேயு புத்தகத்தில், ராஜாவாக எப்படி குருடர்களுக்கு சுகம் கொடுத்தார் என நாம் வாசிக்கிறோம். 
  • இயேசுவானவர் சபையிலே நமது நண்பன் கிடையாது, சகோதரன் கிடையாது. அவர் ராஜா. 
என் கந்தவர்க்கங்களையும் 

அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.
 -1 இராஜாக்கள் 10 : 10
  • இந்த இரு காரியங்களை வைத்து தேவன் சொல்லுகிறார் நான் ராஜாவாய் தான் சபையிலே இருக்க விரும்புகிறேன் என்று. 
  • சபையிலே வருகிற எதுவும் ராஜாவாகிய எனக்காய் வர வேண்டும். 
  • ராஜாவாகிய இயேசுவுக்கு கொடுக்கும் கந்தவர்க்கங்கள் - விசுவாசிகள், பரிசுகள், செயல்பாடுகள், ஊழியம், திறமை, தசம பாகம், காணக்கை.
  • சபை வேறு, ஜெப ஆலயம் வேறு.
  • Synagogues - ஜெப ஆலயம்; Ecclesia- சபை
  • இயேசுவுக்கு சொந்தமான சபை. 
  • ராஜாவாகிய இயேசுவை சந்திக்க ராஜ அரண்மனைக்கு போகிறீர்கள். 
என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்
என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
 -நீதிமொழிகள் 24 : 13
  • நல்லது என்பது ஆரோக்கியத்தை குறிக்கிறது. 
  • தேன் என்றால் அவருடைய வார்த்தை.
  • ராஜாவாகிய இயேசு தனது சபையிலே ராஜாவாக வீற்றிருக்கும் போது 
  • அவர் தேனை -தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு வருகிறார். 
  • அவருடைய மணவாட்டிக்கு அவர் தேனை ஊட்டுகிறார். ஏன்? 
  • அவள் ஆரோக்கியம் அடையவும், அவள் இன்பமாய் இருக்கவும். 
  • ஒரு உண்மையான கிறிஸ்தவனின் ஆரோக்கியமும், இன்பமும் அவருடைய வார்த்தையிலே இருக்கிறது. 
என் திராட்சரசத்தை
அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
 -யோவான் 18 : 11
  • இங்கு திராட்சைரசத்தை தான் குறிப்பிடுகிறார்.
  • அவருடைய சிலுவைபாடுகள் தான் அந்த பானம்
என் பாலோடும் குடித்தேன்
  • அவரோடு இருந்த 11 சீஷர்கள்.
  • கூடவே இருந்தாலும் முதிர்ச்சி அடையாமல் இருக்கிறார்கள். 
  • பால் என்பது முதிர்ச்சி அடையாத கிறிஸ்தவர்களை காட்டுகிறது. 
நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
 -1 கொரி 3 : 2

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
 -எபிரேயர் 5 : 12

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
 -1 பேதுரு 2 : 3
  • அறிவு முதிர்ச்சியை கொண்டு வராது. 
  • முதிர்ச்சி எப்பொழுது வரும்? 
  • நாம் வேத வசனத்தை அறிந்து, அதன் படி வாழும் போது வரும். 
  • முதிர்ச்சி அறிவினால் வருவது அல்ல.
  • முதிர்ச்சி கீழ்ப்படிதலினால் வரும். 
  • முதிர்ச்சி காலத்தால் வருவதும் அல்ல. 
  • உதாரணமாக, உங்களுக்கு 5 வசனங்கள் தெரிந்து 5 க்கும் நீங்கள் கீழ்படிந்தால் நீங்கள் முழு முதிர்ச்சி அடைந்தவர்கள்.
  • ஆனால் உங்களுக்கு 50 வசனங்கள் தெரிந்து அதில் 25 வசனங்களுக்கு மாத்திரம் நீங்கள் கீழ்படிந்தால் நீங்கள் பாதி முதிர்ச்சி அடைந்தவர்கள். 
சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்
  • சிநேகிதர் என்பது யூதர்களை குறிக்கும். 
  • தேனாகிய வார்த்தையை நீங்களும் புசியுங்கள்.
  • பிரியமானவர்கள் என்பது உலகத்தில் இருப்பவர்கள். 
  • நான் என்னுடைய சுவிஷேசம் நற்செய்தி என்னும் பாலை சபை மூலமாக உங்களுக்கு கொடுக்கிறேன்.
  • வாங்கி குடியுங்கள் என்கிறார்.

நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
 -உன்னதப்பாட்டு 5 : 2

விளக்கம்:
  • சபையினுடைய நிலைமையை பார்த்து, இயேசுவானவர் பரிதாப நிலையில் இருக்கிறார்.
  • மணவாட்டி பேசுகிறாள். 
நான் நித்திரைபண்ணினேன்
  • இன்றைய அநேக கிறிஸ்தவர்களின் நிலையை இது காட்டுகிறது. 
  • சபைகளினுடைய நிலையை இது காட்டுகிறது.
  • எழும்பாமல் நித்திரை பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு தான் எழுப்புதல் வேண்டும். 
  • சபை கனநித்திரையின் ஆவிக்கு இடம் கொடுத்திருக்கிறது. 
  • நித்திரை என்பது ஆண்டவரோடு உறவாடாமல், ஆண்டவரை விட்டு தூரப் போயிருக்கிறார்கள்.
  • நித்திரை பண்ணும் போது உறவாடுதல் கிடையாது.
  • பேச்சு வார்த்தை கிடையாது. 
  • சபை இளைப்பாறுதல் கிடைக்கப்பெற்று இருந்தாலும், சபைக்கு நிறைய வேலை இருக்கிறது.
  • தேவனோடு பேச வேண்டும். 
  • தேவன் பேசுவதை கேட்க வேண்டும். 
  • சுவிஷேசம் அறிவிக்க வேண்டும். 
  • சபைக்கு போக வேண்டும். 
  • ஆவிக்குரிய நித்திரை பண்ணிக் கொண்டிருந்தால், விழித்தெழு.
  • வசனத்தில், ஜெபத்தில் விழித்திருங்கள்.
என் இதயமோ விழித்திருந்தது
  • எனக்கு ஜெபிக்க ஆசையாய் இருக்கிறது . 
  • ஆனால் முடியவில்லை. 
  • தூக்கம் வருகிறது. 
  • ஜெபம் இருக்க வேண்டிய இடத்தில், ஜெபத்திற்கு நித்திரையாயும், மற்ற விஷயங்களுக்கு விழித்தும் அநேக கிறிஸ்தவர்கள் காணப்படுகிறார்கள். 
கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்
  • தூங்குகிற பிள்ளையை எழுப்ப மனதில்லாமல், இயேசுவானவர் வெளியே போய் விட்டார். 
  • நமது நித்திரையினால், அவரை நாம் துரத்தி விட்டோம். 
  • வெளியே போன இயேசு, அங்கே இருந்து கொண்டு மணவாட்டியின் வீட்டின், இதயத்தின், கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார். 
  • அப்படி ஒரு பரிதாப நிலை அவருக்கு. 
  • கர்த்தர் வார்த்தையை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். 
  • வார்த்தையை கேளுங்கள்.
என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற
  • சகோதரி- ஒரே அப்பாவின் பிள்ளைகள்.
  • பிரியமே- பிரியமானவளே.
  • புறா- யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத பரிசுத்தமானவளே.
  • உத்தமியே- ஆவிக்குரிய விபச்சாரியாக இருந்த உன்னை உத்தமியாக நான் மாற்றி விட்டேனே.
  • இவ்வளவு பரிசுத்தமாக்கப்பட்ட நீ, 
  • இவ்வளவு இரட்சிக்கப்பட்ட நீ,  
  • என்னுடைய மணவாட்டியாய் இருக்கிற நீ 
  • என்னை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டாயே. 
  • நீ ஏன் வீணாய் கைவிடப்பட வேண்டும். 
  • கதவை திற
என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்
  • உன் வீட்டிற்குள்,சபைக்குள், இதயத்திற்குள் இருக்க வேண்டிய நான் வெளியே துரத்தப்பட்டு 
  • பனியிலே நனைந்து கொண்டு, தூரலில் நடுங்கி கொண்டிருக்கிறேன். 
  • உங்கள் வாயால் துரத்தவில்லை. 
  • உங்கள் நடத்தையால் துரத்தி விட்டீர்கள். 
  • வெளியே நின்று கதவை தட்டும் இயேசுவின் பரிதாப நிலையை பார்த்தோம். 

என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
 -உன்னதப்பாட்டு 5 : 3

விளக்கம்:
  • இப்போது மணவாட்டி அதற்கு வழங்கும் பிரதியுத்தரத்தை பார்ப்போம். 
என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்
  • வஸ்திரம் என்பது நீதியைக் குறிக்கும்.
  • ஆண்டவர் நமக்காக பெற்றுக் கொடுத்த அந்த நீதி, அந்த உறவு அதை கழற்றி போட்டு விட்டேன் என்று மணவாட்டி சொல்லுகிறாள். 
  • கிறிஸ்தவர்களின் பின்வாங்குதலைக் காட்டுகிறது. 
நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன்
  • நான் எப்படி திரும்ப வருவேன்.
  • நான் திரும்பவும் எப்படி மனந்திரும்பி, அவரிடம் வருவேன்.
  • (எ.கா) வாலிப பிள்ளைகள் கிறிஸ்தவனல்லாதவரை காதலித்து விட்டு, அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பார்கள். 
  • (எ.கா )ஒரு சபையில் இருக்கிற உபதேசம் தவறு என்று தெரிந்தும் அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பார்கள்.
என் பாதங்களைக் கழுவினேன்

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
 -ஏசாயா 52 : 7
  • ஊழியத்தை விட்டு விட்டேன் என்று அர்த்தம்.
  • பாதங்கள் கர்த்தருடைய ஊழியத்தைக் குறிக்கும்.
  • ஊழியம் செய்து கொண்டிருந்த அநேக கிறிஸ்தவர்கள், விசுவாசிகள் சரியான காரணத்தை முன்னிட்டு ஊழியத்தை விட்டு விட்டார்கள். 
நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன். 
  • நான் எப்படி மறுபடியும் ஊழியத்திற்குள் வருவேன். 
  • ஊழியத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு நீ செல்கிறாய் என்றால், அந்த வேலையை கொடுப்பது பிசாசு. 

என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
 -உன்னதப்பாட்டு 5 : 4

விளக்கம்:

என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார்
  • நமது ஆண்டவராகிய இயேசு எந்தளவுக்கு நம்மை நேசக்கிறார் என்றால்
  • மூடப்பட்ட கதவிலேயே நின்று கொண்டு, அந்த இடத்தை விட்டு போகாமல் கதவு துவாரத்தின் வழியாக விரலை விடுகிறார். 
  • எவ்வளவு ஒரு பரிதாப நிலை. 
  • உங்களை யாராவது வெளியே போ என்று துரத்தி விட்டு விட்டால், நீங்கள் அந்த இடத்திற்கு மறுபடியும் போவீர்களா?. 
  • போக மாட்டீர்கள். 
  • அவருக்கும் ரோஷம் உண்டு. 
  • ஆனால் அவர் நம் மேல் வைத்த அன்பு, அந்த ரோஷத்தை விட உயர்ந்தது. 
  • அதனால் தான் அங்கேயே நிற்கிறார். 
  • அவர் தன் கையை நீட்டி நமக்காக எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்.
  • பூட்டப்பட்ட கதவின் வழியாய் வருகிற கிருபையின் கரம்.
  • உடனே பற்றிக்கொள்ளுங்கள்.
அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
  • மணவாட்டி சொல்லுகிறாள்.

என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
 -உன்னதப்பாட்டு 5 : 5

விளக்கம்:
என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன் 
  • சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, சபை எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது என்று அறியாமல் இவர்கள் மனந்திரும்ப முயற்சிக்கிறார்கள்.
பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது
  • ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபாதாரபலி .
  • இந்த பலியை தான் இங்கு காட்டுகிறது.
  • வெள்ளைப்போளம் என்பது ராஜாவின் வாசனை திரவியம். 
  • ராஜா தொட்டு கொண்டு இருந்த கைப்பிடி, அவர் பிடித்துக் கொண்டு இருந்த போது இருந்த வெள்ளைப்போள வாசனை 
  • நான் அந்த கைப்பிடியை பிடிக்கும் போது என் விரல்களிலும் வடிந்தது. 

என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.
 -உன்னதப்பாட்டு 5 : 6

விளக்கம்:

என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்
  • கைவிடப்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுவை தேடுகிறார்கள். அவரோ அங்கு இல்லை. 
அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று
  • அப்போது தான் சபைக்கு தெரிகிறது, இயேசு சொன்ன வார்த்தை. 
  • இரவில் திருடன் வருவது போல வருவேன் என்று அவர் சொன்னது. 
என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று
  • சபை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதே இனி நான் செய்வேன் என்று அவர்கள் ஆத்துமா சோர்ந்து போயிற்றாம்.
அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.
  • அவரை சபையில் தேடினேன். 
  • அவர் கூப்பிட்ட போது மக்கள் போகவில்லை.
  • இப்போது சபை எடுத்து கொள்ளப்பட்ட பிறகு மக்கள் என்ன கதறினாலும் தேவன் பதிலளிக்க போவதில்லை. 

நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
 -உன்னதப்பாட்டு 5 : 7

விளக்கம்:

நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்
  • நகரத்தில் திரிகிற காவலாளர்- அந்திகிறிஸ்துவின் காவலாளர்கள். 
  • அந்திகிறிஸ்து முழு உலகத்தையும் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வருவான். 
  • ஒரே அரசாங்கம். ஒரே இராணுவம். 
  • அப்போது அந்திகிறிஸ்துவின் காவலாளர்கள் கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களாகிய உங்களை அடிப்பார்கள், துன்புறுத்துவார்கள். 
அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்
  • என் போர்வை- என் அடையாளம். 
  • பெரிய மனிதர்களை கௌரவப்படுத்த பொன்னாடைகளை போர்த்துவார்கள். 
  • அது போல இங்கு போர்வை மதிப்பு, கௌரவம், அடையாளத்தை குறிக்கின்றது. 
  • சபை எடுத்து கொள்ளப்பட்ட பிறகு, சபையினுடைய மதிப்பு, கௌரவம், அடையாளம் அனைத்தும் அந்தி கறிஸ்துவின் காவலாளர்களால் அகற்றப்படும். 

எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
 -உன்னதப்பாட்டு 5 : 8

விளக்கம்:

எருசலேமின் குமாரத்திகளே! 
யூதர்கள்
  • கிறிஸ்தவர்கள் யூதர்களோடு பேசுகிறார்கள். 
  • சபை எடுத்துக் கொள்ளப்பட்டு பிறகு, முதல் மூன்றரை வருடம்
  • அந்தி கிறிஸ்து யூதர்களுக்கு மாத்திரம் ஆராதிக்கிற உரிமையை கொடுத்து வைத்திருப்பான்.
  • எனவே, இந்த வசனம் சபை யூதர்களை பார்த்து கேட்கிறது, என் நேசரைக் கண்டீர்களானால் எனக்கு சொல்லுங்கள் என்று. 
நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
  • பார்த்தீர்கள் என்றால் என் நிலைமையை, நான் சோகமடைந்திருக்கிறேன் என்று 
  • அவருக்கு தயவு செய்து தெரிவியுங்கள். 

ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
 -உன்னதப்பாட்டு 5 : 9

விளக்கம்:
  • யூதர்கள் சபைக்கு பிரதியுத்தரமாக சொல்லுகிறார்கள்.
ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! 
  • சபையே!
மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
  • நீங்கள் சொல்லுகிற உங்கள் இயேசு மற்ற மத தெய்வங்களை விட சிறந்தவரோ? 
நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
  • ஏளனமாய் கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களை பார்த்து யூதர்கள் பேசுகிறார்கள். 

என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
 -உன்னதப்பாட்டு 5 : 10

விளக்கம்:
  • வெண்மை- பரிசுத்தம்.
  • சிவப்பு- இரத்தம் சிந்தி மரித்தவர்.
  • எத்தனை ஆயிரம் தீர்க்கத்தரிசிகள் வந்திருந்தாலும், அவர்கள் எல்லோரையும் விட என் இயேசு சிறந்தவர். 

அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 5 : 11

விளக்கம்:
  • தங்கம் ராஜரீகத்தை குறிக்கிறது. 
  • ஏன் காகம்- இளமையை குறிக்கிறது. 
  • அவர் 33 வயதில் சிலுவைக்கு போனவர். 
  • திருமண வயதை கூட அடையாத ஒரு வாலிப மேசியா தான் நம்முடைய இயேசு. 

அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 5 : 12

விளக்கம்:
  • புறாக்கண்கள்- அவர் அகிம்சையை கற்றுக்கொடுத்தவர். 
  • அவர் பரிசுத்தர். 
  • இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது பரிசுத்த ஆவியானவர் புறா வடிவில் அவரில் இறங்கினார் என்று வாசிக்கிறோம். 
பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
  • அவருடைய கண்கள். 
  • அனைவரையும் மன்னிக்கக் கூடிய 
  • பால் போன்ற நேர்த்தியான கண்கள் கொண்டவர். 

அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
 -உன்னதப்பாட்டு 5 : 13

விளக்கம்:

அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது
  • அவர் அழகானவர், மகிமையானவர், ராஜரீகமுள்ளவர். 
உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது
  • உதடுகள் என்றால் வார்த்தை.
  • லீலிபுஷ்பம் பள்ளத்தாக்கில் பூக்கும் போது, மழை வரப் போகிறது என்று சொல்லுவீர்களே 
  • அது போல எதிர்கால எதிர்ப்பார்ப்பை தன்னுடைய வார்த்தையால் கொடுத்தவர். 
வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது
  • அவர் எங்களையும் ராஜாவாக மாற்றினார். அவரும் ராஜா. 
  • அந்த வெள்ளைப்போளத்தை மாலையாக கோர்த்து எங்கள் நெஞ்சிலே அணியச் செய்திருந்தார். 

அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 5 : 14

விளக்கம்:
  • அவருடைய கரம் எங்களை பாதுகாத்தது. ஆசீர்வதித்தது. 
  • அவருடைய கரத்தின் வல்லமை யானை தந்தங்களை போலிருந்தது.
  • நீங்கள் கேட்கிறீர்களே, உங்கள் நேசர் யார் என்று.
  • அவர் வேறு யாருமில்லை. 
  • உங்களுடைய பழைய ஏற்பாட்டில் ஆதி 17 ம் அதிகாரத்தில் ஆபிரகாமுக்கு El Shaddai என்று வெளிப்படுத்தினாரே. 
  • அவர் தான். 

அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 5 : 15

விளக்கம்:
  • அவர் கால்கள் பசும்பொன்.
  • அவர் நீதியாய் நியாயம் தீர்த்தவர். 
  • பழைய ஏற்பாட்டிலே நியாயத்தீர்ப்புகளை வழங்கினவரே இந்த இயேசு தான். 

அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்.  
 -உன்னதப்பாட்டு 5 : 16

விளக்கம்:
  • அவருடைய வார்த்தை அழகானது. 
  • உங்களுக்கு புதிய ஏற்பாடு தெரியாதே. 
  • அதில் என்ன அழகாக மதுரமாக இயேசுவே பேசியிருக்கிறார். 
  • கைவிடப்பட்ட சபை யூதர்களை பார்த்து பேசுகிறது.
  • எனவே அவரை தேடி கண்டுபிடிக்கக் கூடிய காலத்தில் கண்டுபிடித்து கொள்வோமாக. 
  • 8 ம் வசனத்தில் எருசலேமின் குமாரத்திகளே!  என்று ஆரம்பித்து, 16 ம் வசனத்தில் எருசலேமின் குமாரத்திகளே!  என்று முடிகிறது. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4