தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அந்த பெயர்களின் பொருளும், விளக்கமும்

தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அந்த பெயர்களின் பொருளும், விளக்கமும்

பெரிய தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அதன் பெயர் அர்த்தமும்

1) ஏசாயா - கர்த்தருடைய மீட்பு ( எபிரேய மொழியில் உயிர் எழுத்துக்கள் இல்லாததால் ஓசியா, உசியா, யோசுவா, இயேசு அனைத்திற்கும்  ஒரே பொருள் தான்).
2) எரேமியா - கர்த்தர் உயர்ந்தவர்
3) எசேக்கியேல் - தேவனுடைய வல்லமை
4) தானியேல் - தேவன் நீதியுள்ளவர். 

விளக்கம்
இந்த 4 தீர்க்கத்தரிசிகளின் பெயர்களுக்குள் அடங்கியிருக்கும் இரகசியம் என்னவென்றால், 

“எமது இரட்சகராகிய இயேசுவானவர் அதி உன்னதமான கர்த்தரும், சர்வ வல்லமையுள்ள, நீதியுள்ள தேவனுமாவார்”. 


சிறிய தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும், அதன் பெயர் அர்த்தமும்.

1)ஓசியா - இரட்சகராகிய கர்த்தர் 
2)யோவேல் - கர்த்தரே தேவன்
3)ஆமோஸ் - சுமை சுமப்பவர்
4)ஒபதியா - கர்த்தருடைய ஊழியக்காரர்
5) யோனா - புறா
6) மீகா - கர்த்தருக்கு ஒப்பானவன் யார்?
7) நாகூம் - தேற்றரவாளன்
8) ஆபகூக் - அரவணைத்தல்
9) செப்பனியா - கர்த்தர் மறைந்திருக்கிறார்
10) ஆகாய் - பண்டிகையின் சந்தோஷம்
11) சகரியா - தேவன் நினைவுகூறுவார்
12) மல்கியா - என்னுடைய தூதன்

விளக்கம்:

இந்த 12 தீர்க்கத்தரிசிகளின் பெயர்களுக்குள் அடங்கியிருக்கும் இரகசியம் என்னவென்றால், 
  • இரட்சகராகிய கர்த்தர் (இயேசுசும்மா ஒரு கர்த்தர் அல்ல.
  • அவர் ஜீவனுள்ள தேவன்
  • அந்த தேவனாகிய இயேசு நமக்காக இந்த பூமியிலே பிறந்து வந்து நம்முடைய பாவ சுமையை அவர் சுமந்தார்
  • அவர் சொன்னார்வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களேநீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று
  • அவர் அப்படி சுமை சுமக்கிறவராக வந்து அவர் ஒரு ஊழியக்காரனை போல வந்தார். 
  • ஆகையால் நான் ஊழியம் கொள்ள வராமல்ஊழியம் செய்ய வந்தேன் என்கிறார்
  • அப்படி வந்த இயேசுவானவர் நம்மோடு தொடர்ந்து தங்கியிருந்து நம்மை ஆசீர்வதிப்பதற்கு பரிசுத்த ஆவியானவரை நமக்கு கொடுத்தார்
  • இயேசுவானவர் ஞானஸ்நானம் எடுத்து கரையேறின பொழுது வானம் திறவுண்டது
  • பரிசுத்த ஆவியானவர் புறா வடிவிலே வந்து இறங்கினார்
  • ஆகவேபுறா பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம்
  • இந்த இயேசுவுக்கும்பரிசுத்த ஆவியானவருக்கும்இந்த கர்த்தருக்கும் ஒப்பானவர் யார்யாருமில்லை.
  • இவரைப் போல ஒரு தெய்வம் கிடையவே கிடையாது.
  • அந்த பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருந்து நம்முடைய தேற்றரளவாளன் ஆனார்
  • நான் போவேன். நான் போனால் உங்களோடு இருப்பதற்கு ஒரு தேற்றரளவாளன்  அனுப்புவேன் என்று சொன்னார். 
  • கொரி 6:19 ன் படி அவர் நம்முடைய சரீரத்திற்குள் வாசமாயிருக்கிறார்
  • நம்முடைய சரீரம் அவருடைய ஆலயமாகிறது.
  • அப்போஸ்தலர் 2 ம் அதிகாரத்தின்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை மூடிநம்மை அரவணைத்து.
  • பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நமக்கு கொடுத்துஅந்நிய பாஷை , தீர்க்கத்தரிசனம் போன்ற ஆசீர்வாதங்களையும் நமக்கு கொடுக்கிறார்
  • ஆம்உலகத்திற்கு கர்த்தர் மறைந்திருக்கிறார்.
  • நீதியின் சூரியன் உலகத்திற்கு தெரியாது ஏன்
  • உலகம் பாவம் என்னும் அந்தகாரத்திலேஇருட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறபடியினால் அவர்களுக்கு தேவன் மறைந்திருக்கிறார்
  • ஆனால் நமக்கு கர்த்தர் பண்டிகையின் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார்
  • பிலிப்பியர் 4:4 ல் சொல்லுகிறார்கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
  • மறுபடியும் சொல்லுகிறேன் சந்தோஷமாய் இருங்கள் என்று.
  • துக்கப்பட ஆயிரம்காரணங்கள் இருக்கலாம்
  • ஆனால் சந்தோஷப்பட ஒரே காரணம் .
  • கர்த்தராகிய இயேசு மற்றும் அவர் கொடுத்த இரட்சிப்பு.
  • கர்த்தர் எங்களை ஒரு போதும் மறக்கிறவரல்ல.
  • தேவன் எப்பொழுதும் நம்மை அவருடைய நினைவில் வைத்திருக்கிறார்
  • நினைவு கூறுகிறார்
  • இன்றைக்கு உலகத்தில் ஆண்டவருடைய பிரதிநிதிகளாக கர்த்தருடைய தூதர்களாக நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4