8 வகையான முள்ளுகள் - 8 வகையான சத்துருக்கள்- எப்படி விடுதலை பெறுவது
முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம்
-உன்னதப்பாட்டு 2 : 1
முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
-உன்னதப்பாட்டு 2 : 2
- நாம் முள்ளுக்குள்ளே, லீலி புஷ்பமாக இருக்கிறோம்.
- நாம் உலகத்திற்குள்ளே, சத்துருக்களுக்கு மத்தியில் தேவனுடைய பிள்ளைகளாக வாழ்கிறோம்.
- நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை தொடங்குவதே இந்த எகிப்திய முள்ளிலிருந்து தான்.
- உலகத்தாராய் நாம் வாழ்ந்த வாழ்க்கை தான், இந்த சத்துருவின் ஆளுகைக்குள் நாம் வாழ்ந்த வாழ்க்கை.
- அதாவது நாம் எகிப்திலிருந்து (உலகத்திலிருந்து) விடுதலை ஆன பின்னரே நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆகிறோம்.
- நம்மை எகிப்திலிருந்து (உலகத்தில்) இருந்து பிரித்து அழைத்து நமக்கு தேவன் இரட்சிப்பை தந்திருக்கிறார்.
- தேவன் தாமே நம்முடைய பாவங்களை சிலுவையில் அழித்து நமக்கு விடுதலையை பெற்று தந்து விட்டார்.
- நமக்கு முதல் எதிரி தேவனுக்கு பயப்படாதவர்கள்.
- நாம் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- நமக்காக வல்லமையாக ஜெபிக்கக் கூடிய ஒரு சிறு கூட்டம் நமக்கு தேவை.
- யோசுவா போல நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்க ஒருவர் தேவை.
- மோசேயை போல அந்த ஜெபிக்கிறவருக்கு ஒரு தலைவன் தேவை.
- ஆரோன் மற்றும் ஊர் ஐ போல அந்த தலைவனை தாங்குகிற இருவர் தேவை.
- இப்படி அனைவரும் ஒன்றுக் கூடி ஜெபிக்கும் போது இவ்வகையான சத்துருவிடம் இருந்து விடுதலை பெறலாம்.
பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:
-எண்ணாகமம் 22 : 10
- நமக்கு விரோதமாக நேரடியாக அவனால் ஒன்றும் செய்ய முடியாது.
- அதனால் எப்படி பாலாக் பிலேயாமை வைத்து தாக்க முயற்சித்தானோ,
- அதே போல இந்த மோவாபிய முள்ளாகிய சத்துரு மனிதனை வைத்து நம்மை தாக்க முயற்சிப்பான்.
- நம்முடைய மாம்ச இச்சைகளை தொடும்படியாக அவன் வருவான்.
எப்படி விடுதலை பெறுவது:
- இப்படிப்பட்ட மாம்ச இச்சைகளுக்கு நாம் விலகி ஓட வேண்டும். இப்படித்தான் இதிலிருந்து தப்பித்து கொள்ள முடியும்.
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
-2 தீமோத்தேயு 2 : 22
- தவறான வேத போதனைகளை கொண்டு வருவான்.
- நம்மை ஆவிக்குரிய வாழ்க்கையில் இருந்து பின் வாங்கச் செய்வான்.
-யோசுவா 23 : 12
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.
-யோசுவா 23 : 13
எப்படி விடுதலை பெறுவது:
- நமது ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கிற வகையில் அமையக்கூடிய இந்த வகையான சத்துருக்களை முற்றிலுமாக பிடுங்கி எறிய வேண்டும்.
- அதே போல தவறான போதனைகளை, தவறான உபதேசங்களை முழுவதுமாக அழிக்க வேண்டும்.
- நீங்கள் பலன் தர வேண்டும் என்கிற நேரத்திலே அறுத்து கொண்டு போய் விடுவான்.
- உங்கள் பலனை (strength) அழிக்காமல், உங்கள் அறுவடையை அழிப்பான் (Harvest).
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
-யாக்கோபு 5 : 4
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.
-நியாயாதிபதிகள் 6 : 11
எப்படி விடுதலை பெறுவது:
கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது, அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.
-நியாயாதிபதிகள் 7 : 13
அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும், அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
-நியாயாதிபதிகள் 7 : 14
- நமக்காக ஜெபிப்பதற்கு தங்களை வாற்கோதுமையாக ஒப்புக்கொடுக்கிற, இசைந்த மனதுடைய ஒரு சிறிய கூட்டம் தேவை.
- பெலிஸ்தர், தம்மை அழிப்பதற்கான ஆயுதங்களை இஸ்ரவேலர்களின் கையில் கொடுக்க கூடாது என கவனமாய் இருந்தான்.
- இவ்வகையான முள் நம்மை செயலற்றவர்களாக, போராடாதவர்கள் ஆக மாற்றி விடும்.
- தேவனுடைய ஜனங்கள் ஆவிக்குரிய ஆயுதங்களை உண்டாக்காதபடி இந்த முள் ஆட்கொள்ளும்.
- செழிப்பின் உபதேசம், Hyper Grace இவையெல்லாம் பெலிஸ்திய முள்ளில் அடங்கும்.
- நமக்காக ஆவிக்குரிய ஆயுதங்கள் ஏந்திய ஜெபவீரர்கள் ஜெபிப்பதற்கு தேவை.
- இந்த வகையான சத்துரு தேவனுடைய பெயரை உபயோகித்து நம்மை ஏமாற்றுவான்.
- இப்படிப்பட்ட சத்துருக்களிடம் இருந்து தப்பிக்க,
- எசேக்கியா ராஜா தேவனிடம் மன்றாடினது போல நாமும் தேவனிடம் அமர்ந்து,
- இவர்களை எதிர்க்க எனக்கு பலன் இல்லை
- ஆண்டவரே! நீரே எனக்கு பலன் தாரும் என்று சொல்லி மன்றாட வேண்டும்.
- கர்த்தர் சொல்லி சொல்லி பார்த்து, நாம் அவருக்கு கீழ்ப்படியவில்லையென்றால்,
- நம்மை பாபிலோன் கைகளில் விற்றுப் போடுவார்.
- நேபுகாத்நேச்சார் வந்து இஸ்ரவேலர்களை சிறை கைதிகளாக கொண்டு போகிறான் என்று வாசிக்கிறோம்.
- பாபிலோனுடைய சுகஜீவியம் நம்மை கவர்ந்திழுக்கும்.
- இங்கு பாபிலோன் குமாரத்தி என்று சபைக்கு சொல்லப்பட்டுள்ளது.
- அவர் நம் மத்தியில் உலாவ வேண்டும்.
- அதற்கேற்றப்படி நம்மை நாம் மாற்றி வேலி அடைத்து வாழ வேண்டும்.
- பாபிலோனுடைய சுகஜீவியம் எனக்கு வேண்டாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- இந்த முள்ளுகளை எல்லாம் அடையாளம் கண்டுகொண்டு,
- அதில் இருந்து விடுதலை ஆனோம் என்று சொன்னால் அப்போது,
- அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து அவருடைய ஜனமாவார்கள்
Comments
Post a Comment