உன்னதப்பாட்டு மூன்றாவது அதிகாரம்- விளக்கம் ; Deep Explanation of Song of Solomon Chapter 3
உன்னதப்பாட்டு-அதிகாரம்3- விளக்கம்
இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
-உன்னதப்பாட்டு 3 : 1
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்.
- இது ஒரு கவிதை.
- இதில் எழுதப்பட்டுள்ளது எபிரேய மொழியிலான கவிதை.
- நமக்கு தமிழில் விளங்கி கொள்வது கடினம்.
தமிழில் உதாரணமாக கூற வேண்டுமென்றால்,
சமுத்திரம் போல திரண்ட ஜனங்கள்,
ஜனத்திரளுக்குள்ளே நீந்தினேன்,
மகிழ்ச்சிக் கடலில் விழுந்து தத்தளித்தேன்,
என் மனம் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது.
- இந்த வசனங்களை பேசும் போது, மணவாட்டி பரலோகத்திற்கு போய் விட்டாள்.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இருக்கக் கூடிய 7 வருடங்களில் நடக்கக் கூடிய சம்பவம் இது.
- இந்த 7 வருடங்கள், யூதர்களுடைய 360 நாட்கள் கொண்ட வருடங்கள்.
- இங்கு பூமியில் உள்ள இராக்காலத்தை பற்றி மணவாட்டி பேசுகிறாள்.
- பரலோகத்தில், காலம் நேரம் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- எங்கே என் மணவாளன் அவரை பரலோகத்தில் காணவில்லையே என்று மணவாட்டி தேடுகிறாள்.
- பூமியின் இராக்காலங்களில் என்றால் இரவையும் குறிக்கும்.
- இருள் என்கிற எதிர்மறையான விஷயத்தையும் குறிக்கும்.
- நான் சோகம் என்னும் இருளிலே மூழ்கியிருக்கிறேன்.
- நல்லதல்லாத எதிர்மறையான நாட்களையும் இருள் குறிக்கும்.
- பூமியிலே இருள் போன்ற 7 வருட காலம் அது.
- ஏனென்றால்அந்தி கிறிஸ்து ஆளுகிறான்.
- இதையெல்லாம் நடப்பிப்பவர் இயேசு கிறிஸ்து.
- எப்படி தெரியும்?
- வெளிப்படுத்தின விசேஷத்தில் அந்த 7 சுருள்களை திறக்க, யூதாவின் ராஜசிங்கம் வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இராக்காலங்களில்
பூமியின் இருளான ஏழு வருட காலத்தில்
என் படுக்கையிலே
சபையாகிய என் இளைப்பாறுதலின் நேரத்தில்
என் ஆத்தும நேசரைத் தேடினேன்
நான் மணவாளனை தேடினேன்
தேடியும் நான் அவரைக் காணவில்லை.
ஆனால் அவரை நான் பரலோகத்தில் காணவில்லை.
————————————————————————-
நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
-உன்னதப்பாட்டு 3 : 2
-உன்னதப்பாட்டு 3 : 2
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்.
- இங்கு இது கவிதை நயமாய் சொல்லப்படுகிறது
நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும்
பரலோகத்தில் முழுவதும்
தேடியும் நான் அவரைக் காணவில்லை.
- அவரைத் தேடியும் எங்கும் காணவில்லை.
- சிங்காசனத்தில் காணவில்லை.
- பிதாவின் வலதுபாரிசத்தில் காணவில்லை.
நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
-உன்னதப்பாட்டு 3 : 3
-உன்னதப்பாட்டு 3 : 3
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்.
நகரத்திலே திரிகிற காவலாளர்
பரலோகத்திலே திரிகிற தேவதூதர்கள்
என்னைக் கண்டார்கள்
மணவாட்டியாகிய என்னை கண்டார்கள்.
என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
என் மணவாளனை கண்டீர்களா என்று அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கும் தெரியவில்லை.
என் மணவாளனை கண்டீர்களா என்று அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கும் தெரியவில்லை.
————————————————————————-
நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
-உன்னதப்பாட்டு 3 : 4
-உன்னதப்பாட்டு 3 : 4
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்.
நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்;
- அந்த தேவதூதர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் மணவாளனைக் கண்டேன்.
- இயேசு பரலோகத்திலும், பூமியிலும் ஒரே நேரத்தில் இருக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர் தானே.
என் தாயின் வீட்டிலும், என்னைப் பெற்றவளின் அறையிலும்
மணவாட்டி என் தாய்வீடு, என்னை பெற்றவளின் வீடு என்று இங்கு சொல்வது பரம எருசலேம் அதாவது பரலோகம்.
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
-கலாத்தியர் 4 : 26
கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
- மீண்டும் அவரை பரலோகத்தின் தனது அறையில் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் அவரை பற்றிக்கொண்டேன் என்று மணவாட்டி சொல்கிறாள்.
- இது ஒரு கவிதையாக மட்டுமே சொல்லப்படுகிறது.
- மற்றப்படி அவர் சர்வ வியாபகர்.
- அனைத்து இடத்திலும் இருக்க கூடியவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
————————————————————————-
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
-உன்னதப்பாட்டு 3 : 5
-உன்னதப்பாட்டு 3 : 5
விளக்கம்:
- இந்த ஒரு வசனத்தை மணவாளன் பேசுகிறார்.
- உன்னதப்பாட்டு 2:7. இது பூமிக்குரிய இளைப்பாறுதலை பற்றி பேசுகிறது.
- அதே வசனம் இங்கே ஏன் வர வேண்டும்?
- பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் (like ஆபிரகாம், தாவீது etc).
- நாம் தெசலோனிக்கேயர் நிரூபத்தில் பார்த்தோம்,
- இரகசிய வருகையில் பரதீஸிலிருப்பவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்
- அவர்களை தொடர்ந்து நாமும் மேகங்களின் மேலே எடுத்துக்கொள்ளப்படுவோம் என்று.
- இவர்கள் தான் மணவாளனின் தோழர்கள்.
- பரலோகத்தில் இருக்கிற அவர்களுக்கு இயேசுவானவர் சொல்லுகிறதை போல இந்த வசனம் அமைந்திருக்கிறது.
- பரலோகத்தில் யாரும் யாரையும் குழப்ப முடியாது.
- ஆனால் என் மணவாட்டி நிம்மதியாக இளைப்பாறட்டும் என்ற நோக்கத்தோடு சொல்வதாக அமைந்துள்ளது.
- இது நித்திய இளைப்பாறுதலை பற்றி பேசுகிறது.
————————————————————————-
வசனம் 6-11
வசனம் 6-11
- இவை மணவாளனும் பேசவில்லை.
- மணவாட்டியும் பேசவில்லை.
- பொதுவாக யாரோ சொல்வது போல அமைந்திருக்கிறது.
- இந்த வசனங்கள் ஆயிரம் வருட அரசாட்சியை குறிக்கிறது.
- ஆயிரம் வருட அரசாட்சியின் போது, இயேசுவானவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை இந்த வசனம் காட்டுகிறது.
வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
-உன்னதப்பாட்டு 3 : 6
-உன்னதப்பாட்டு 3 : 6
விளக்கம்:
வெள்ளைப்போளத்தினாலும்
ராஜரீகம்
சாம்பிராணியினாலும்
ஆராதனை
வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும்
பொருளாதார ஆசீர்வாதம்
வனாந்தரத்திலிருந்து
பூமியிலிருந்து
இவர் யார்?
இயேசு. இது கவிதை என்பதால் இப்படி சொல்லப்பட்டுள்ளது.
————————————————————————-
இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.
-உன்னதப்பாட்டு 3 : 7
-உன்னதப்பாட்டு 3 : 7
விளக்கம்:
சாலொமோனுடைய மஞ்சம்
சாலேமின் ராஜா, அதாவது சமாதானப்பிரபுவாகிய இயேசுவின் ராஜரீக தோரணை மஞ்சம்.
இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.
- 6 என்பது மனிதனைக் குறிக்கும்.
- 10 என்பது நிறைவை குறிக்கும்.
- 60 என்பது சகல மனிதர்களையும் குறிக்கும்.
- அந்த காலத்தில் இருக்க போகிற இஸ்ரவேலின் சகல மனிதர்களும் அவரை சுற்றி இருக்கிறார்கள்.
————————————————————————-
இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 3 : 8
-உன்னதப்பாட்டு 3 : 8
விளக்கம்:
- அந்த சகல மனிதர்களும் (60) தான் சாத்தானை பிடித்து ஆயிரம் வருடங்களுக்கு கட்டி போட்டவர்கள்.
- ஆகவே, அவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள் என்பது அல்ல.
- பயத்தை கொடுத்து கொண்டு வந்த அந்த மிருகத்தை கட்டி போட்டவர்கள் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.
சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
-உன்னதப்பாட்டு 3 : 9
-உன்னதப்பாட்டு 3 : 9
விளக்கம்:
சாலொமோன் ராஜா
இயேசு
லீபனோனின் மரத்தினால்
பலம், உறுதியான ஆட்சி
இரதத்தைப் பண்ணுவித்தார்.
ஆட்சி செய்வதைக் குறிக்கிறது.
- இயேசு எருசலேமை தலைநகரமாக கொண்டு முழு உலகத்தையும் ஆட்சி செய்யப் போகிறார் அந்த ஆயிரம் வருட அரசாட்சியில்.
————————————————————————-
அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.
-உன்னதப்பாட்டு 3 : 10
-உன்னதப்பாட்டு 3 : 10
விளக்கம்:
அதின் தூண்களை
எருசலேமை அதாவது இஸ்ரவேலரை
எருசலேமின் குமாரத்திகளினிமித்தம்
யூதர்களின்நிமித்தம்
- அந்த ஆயிரம் வருட அரசாட்சியில் இஸ்ரவேலையும் அவர் கனம் பண்ணுகிறார்.
- அவர்களுக்கு ஒரு முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறார்.
————————————————————————-
சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.
-உன்னதப்பாட்டு 3 : 11
-உன்னதப்பாட்டு 3 : 11
விளக்கம்:
சீயோன் குமாரத்திகளே!
யூதர்கள்
ராஜாவாகிய சாலொமோனின் கலியாணநாளிலும்,
இயேசுவானவரின் கலியாணநாளிலும்
அவருடைய தாயார்
கவிதையாக சொல்லப்பட்டுள்ளது.
ஆட்டிகுட்டியானவரின் கலியாணத்தை பற்றி இங்கு பேசப்படுகிறது.
————————————————————————-
Comments
Post a Comment