உன்னதப்பாட்டு ஆறாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 6

உன்னதப்பாட்டு - அதிகாரம் 6 - விளக்கம்

உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
 -உன்னதப்பாட்டு 6 : 1

விளக்கம்:
  • யூதர்கள் சபையை பார்த்து சொல்லுகிறார்கள்.
  • கிண்டலாக சொல்கிறார்களா? நிஜமாக சொல்கிறார்களா? தெரியாது. 
  • யூதர்களால் கூட கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய முடியாது. 
  • ஆண்டவரைக் கண்டுபிடிக்கக் கூடிய இந்த நாட்களில் அவரைத் தேட வேண்டும். 

தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப்பாத்திகளுக்கும் போனார்.
 -உன்னதப்பாட்டு 6 : 2

விளக்கம்:
  • கைவிடப்பட்ட சபை, யூதர்களுக்கு பிரதியுத்தரமாக பதிலளிக்கிறது. 
  • இயேசுவானவரே பள்ளத்தாக்கின் லீலி. 
  • அவர் பரலோகத்தில் இருந்து பூமி என்னும் பள்ளத்தாக்குக்கு வந்தார். 
  • தனது சபையை கூட்டிக் கொண்டு, 
  • அதனது நிரந்தர தோட்டமாம் பரலோகத்திற்கு போய்விட்டார். 
  • பூமியிலுள்ள மனிதர்களையும் லீலியை போல மாற்றினார்.
  • இந்த வசனத்தோடு சபை எடுத்துக்கொள்ளப்படுதல், பரலோகம் அனைத்தும் முடிவடைகிறது. 
லீலிபுஷ்பங்களைக் கொய்யவும்
  • அவற்றை பறித்து அனுபவிக்கவும்
தமது தோட்டத்துக்கும் 
  • சபைக்கு அடையாளம்
கந்தவர்க்கப்பாத்திகளுக்கும்
  • பரலோகத்திற்கு அடையாளம்
  • அவர் சபையை எடுத்துக்கொண்டு பரலோகத்திற்கு போய் விட்டார். 
  • கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களாலேயே, இந்த தீர்க்கத்தரிசனம் சொல்லப்பட வைக்கப்படுகின்றது. 

நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
 -உன்னதப்பாட்டு 6 : 3

விளக்கம்:
  • இன்று, இந்த காலத்தில் நடக்கக் கூடிய விஷயங்கள்.
  • நிகழ்காலத்தில் நடக்க கூடிய விஷயம். 
  • கவிதை என்றால் அப்படி தான், காலம் மாறி மாறி வரும். 
  • மணவாட்டி சொல்லுகிறாள். 
நான் என் நேசருடையவள்
  • இரட்சிக்கப்பட்ட அனைவருமே இயேசுவினுடையவர்கள். 
  • நாம் ஒரு குறிப்பிட்ட சபைக்கு மட்டும் சொந்தக்காரர்கள் அல்ல. 
என் நேசர் என்னுடையவர்
  • இயேசுவானவர் எல்லா சபைக்கும் சொந்தமானவர்.
  • அவர் உங்களுக்கு சொப்பனங்களில், தரிசனங்களில் வராவிட்டாலும் அவர் உங்களுக்கு உரியவர்.
  • கிறிஸ்துவை விசுவாசித்து, வசனத்தின்படி இயங்குகிற அனைத்து சபைகளுக்கும் உரியவர் இயேசு.
  • இயேசு நமக்கெல்லாம் பொதுவானவர். 
அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்
  • இயேசு சபைகளுக்குள் உலாவுகிறார். 
  • மேய்கிறார் என்றால் சாப்பிடுகிறார் என்று அர்த்தம். 
  • இது உறவை, ஐக்கியத்தைக் காட்டுகிறது. 

என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.
 -உன்னதப்பாட்டு 6 : 4

விளக்கம்:
  • மணவாளன் பேசுகிறார். 
  • இது ஒரு அழகான வசனம், தீர்க்கத்தரிசனமும் கூட.
  • யோசுவா 12 ம் அதிகாரத்தில் பார்த்தால், யோசுவாவின் தலைமையில் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்குள் நுழைந்த இஸ்ரவேலர்கள் எப்படி ஒவ்வொரு தேசமாக கைப்பற்றினார்கள் என்று நாம் வாசிக்கிறோம். 
  • அதில் மொத்தம் 64 தேசங்கள் இருந்தன.
  • சிற்றரசர்கள் 33 ; பேரரசர்கள் 31(பலம், அதிகாரம், கலாச்சாரம் பெரியது). 
  • யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் முதலில் கைப்பற்றினது எரிகோ. 
  • கடைசி தேசம் திர்சா (யோசுவா 12:9-24)
            எரிகோ அமைந்துள்ள இடம்


யாக்கோபின் கிணறு அமைந்துள்ள இடம்- சமாரியா


அந்த இடம் அமைந்திருக்கின்ற பட்டணத்திற்கு இப்போதைய பெயர் Nablus


  • அந்த பட்டணத்திற்கு இன்றைய பெயர் Nablus- பாலஸ்தீன A territory பட்டணம். 
  • அந்த பட்டணம் வேதத்தில் சீகேம் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட.
  • Nablus என்று பாலஸ்தீன அந்த அரபு மொழியில் சொல்லப்பட்டாலும், எபிரேய மொழியில் sheh’him அதாவது சீகேம் என்று தான் எழுதப்பட்டு இருக்கும். 
           சீகேம் அமைந்துள்ள இடம்


  • சீகேம் என்ற பிரதேசத்தின் வடக்கே, நடந்து போக கூடிய தூரத்தில் இருக்கின்றது தான் திர்சா என்ற இடம். 
  • யோசுவாவின் காலத்தில் அது ஒரு தேசமாக இருந்தது. 
  • பிற்காலத்தில் சாலொமோனுக்கு பிறகு தேசம் இரண்டாக பிரிந்த போது,
  • யெரொபெயாம் என்கிற மன்னனை கொண்டு வந்து வடக்கு ராஜ்யத்தின் ராஜாவாக ஏற்படுத்தினார்கள். 
  • கி.மு 772 வரை வடக்கு ராஜ்யம்- இஸ்ரவேல் என்ற பெயரில் தான் இருந்து வந்தது. 
  • அந்த யெரொபெயாம் இந்த திர்சாவில் இருந்து கொண்டு தான் வடக்கு ராஜ்யத்தை ஆட்சி செய்தார். 
  • அதற்கு பிறகு நிறைய பேர் அங்கு இருந்து கொண்டு தான் ஆட்சி செய்தார்கள். 
  • ஒரு குறிப்பிட்ட மன்னன் வந்து இடத்தை மாற்றும் வரை. 
  • ரொம்ப தூரத்தில் அல்ல, கொஞ்சம் பக்கத்தில் தான் இடத்தை மாற்றனார். 
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறு வருஷம் அரசாண்டு,
 -1 இராஜாக்கள் 16 : 23

பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைச் தரித்தான்.
 -1 இராஜாக்கள் 16 : 24
  • இந்த உம்ரி வேறு யாரும் அல்ல. ஆகாப் மன்னனின் அப்பா.
  • உம்ரி, சமாரியாவுக்கு தலைநகரத்தை மாற்றுவதற்கு முன், திர்சா தான் வடக்கு ராஜ்யத்திற்கு தலைநகரமாக இருந்தது. 
நீ திர்சாவைப் போல் செளந்தரியமும்
  • திர்சா என்பதன் அர்த்தம் இனிமை, pleasant, அழகான, சௌந்தர்யமான, அமைதியான. 
  • அந்த பெயருக்கு ஏற்றாற்போல அமைதியாக அந்த திர்சா காணப்பட்டது. 
  • அதற்கு பின் உம்ரி அதை தெற்காக கொண்டு வந்து சமாரியவை தலைநகரமாக்கினான். 
  • அதற்கு பிறகு சமாரியா தான் கி.மு 722 ல் அசீரியர்கள் வந்து வடக்கு ராஜ்யத்தை பிடித்துக்கொண்டு போகும் வரை, இஸ்ரவேலின் தலைநகரமாக இருந்தது.
  • தெற்கு ராஜ்யத்தின் தலைநகரம் எருசலேம்.
  • திர்சா, எருசலேம் இரண்டுமே தலைநகரங்கள்.
  • ஒன்று பிரிந்து போன யூதர்களின் தலைநகரம்.
  • இன்னொன்று இஸ்ரவேலின் நிரந்தர தலைநகரம். 
  • யோசுவா காலத்தில் திர்சா ஒரு பெரிய தேசம். 
  • ஆனால் சாலொமோன் காலத்தில் திர்சா ஒரு நகரம்.
  • இந்த நகரம், பிற்காலத்தில் பெரிய தலைநகரமாக ஆகப் போகிறது என்று சாலொமோனுக்கு தெரியாது.
  • ஆனால், அழகாய் இந்த தீர்க்கத்தரிசனத்தை சொல்லியிருக்கிறார்.  
  • புறஜாதியாருக்கு மத்தியிலே சபை ஒரு தலைநகரம் போல காணப்படுகிறது. 
  • அதாவது இரட்சிக்கப்பட்டு விசேஷித்தவர்களாய் வந்து விட்டோம். 
  • திர்சா எப்படி வடக்கு ராஜ்யத்தின் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமைதியான நகரமாக இருந்ததோ 
  • அதே போல சபை பாவிகளும், அந்நியர்களும் , நரகத்திற்கு போய்கொண்டிருக்கிறவர்களாகிய புறஜாதியார் மத்தியிலே அழகாக, அமைதியாக இருக்கிறது. 
  • புறஜாதிகளின் பாவத்திற்கு மத்தியில் இரட்சிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டத்தைக் காணும்போது அந்த அமைதியாய் இருக்கிற திர்சாவை போல தெரிகிறது என்கிறார் இயேசு. 
  • புறஜாதிகள் ஆவிக்குரிய அசிங்கத்தில் காணப்படும் போது, சபை ஆவிக்குரிய சௌந்தர்யத்தில் காணப்படுகிறது. 
எருசலேமைப் போல் வடிவமும்
  • எருசலேம் என்பது ஆண்டவர் நேசிக்கும் ஒரு இடம். 
  • அந்த எருசலேம் தான் மோரியா மலை.
  • மோரியா மலையில் தான் மெல்கிசெதேக்கு வாழ்ந்து வந்தார். 
  • அந்த மலையில் தான் ஈசாக்கை பலி கொடுக்க ஆபிரகாம் போகிறார். 
  • தாவீது, ஓர்னான் என்னும் மனிதனிடம் அந்த மலையை வாங்கினார்.
  • அந்த மலையில் தான் சாலொமோன் தேவாலயம் கட்டுகிறார். 
  • ஆண்டவருக்கு எருசலேம் மேல் ஒரு கரிசனை, அக்கறை. 
  • நித்திய தலைநகரமாக எருசலேமை ஆண்டவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 
  • சபைக்கு கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பெயர் தான் புதிய எருசலேம். 
  • வெளி 19 ல் ஆட்டுகுட்டியானவரின் கலியாணம் முடிந்து, புதிய எருசலேமாக மணவாட்டி இறங்குகிறாள் என்று வாசிக்கிறோம். 
  • அதனால் தான் இங்கு எருசலேமின் வடிவம் போல நீ காணப்படுகிறாய் என்ற ஆண்டவர் சொல்லுகிறார். 
  • இஸ்ரவேலுக்கு மத்தியில் எருசலேம் எவ்வளவு அழகாக இருந்ததோ, அதே போல சபையாகிய நீ புறஜாதியாருக்கு மத்தியில் எருசலேம் வடிவில் இருக்கிறாய் என்று சொல்லுகிறார். 
கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்
  • வெற்றிக் கொடிகள் பறக்க விட்டு கொண்டிருக்கும்  ஒரு படையை போல, சபை வீரமாய், கெம்பீரமாய் வருகிறது என்கிறார்.
  • மற்றவர்கள் மத்தியில் நாம் அழகாக, பசுமையாக திர்சாவை போல இருக்க வேண்டும். 

உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 6 : 5

விளக்கம்:

உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு
  • உன் கண்களுக்கு முன்பு நான் தோல்வியடைந்துவிட்டேன்.
  • இது ஒரு அன்பின் வெளிப்பாடு. 
  • (எ.கா) சில நேரம் நீ தான் அழகாய் இருக்கிறாய் என்று சொன்னால், சீ போ பொய் சொல்லாதே என்று சொல்லுவோம் அல்லவா? 
  • (எ.கா) வரட்டுமா என்று சொல்லிவிட்டு போவோம்.
  • அது போல தான் இங்கு காட்டப்படும் எதிர்மறையான சொல் வெளிப்பாடுகள் எல்லாம்.  
அவைகள் என்னை வென்றது
  • ஆச்சர்யத்தோடு ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தம்.
  • அவருடைய ஆசை சபை தன்னை பார்க்க வேண்டும் என்பது. 
  • இது ஒரு ironic expression. 
  • மணவாட்டியே! நீ என்னை பார்ப்பதை நான் ரசிக்கிறேன். 
  • உன் பார்வையில் நான் மயங்குகிறேன். 
  • உன்னுடைய கண்கள் என்னை வென்றது. சபையே நீ என்னை பார்க்கிறாய். 
  • ஆண்டவர் இந்த வசனத்தின் மூலமாய் நம்மிடம் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா?
  • இயேசுவைப் பார் என்று. 
  • Ro’Ke’h in Hebrew - காண்கிறவன் என்று அர்த்தம்.
  • Ho’Se’h in Hebrew - பார்க்கிறவன் என்று அர்த்தம்.
  • பழைய ஏற்பாட்டில் ஞானதிருஷ்டிக்காரன் அல்லது தீர்க்கத்தரிசிகளை குறிப்பிடுகிற இடத்திலெல்லாம் இந்த சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
  • அவர்கள் தேவனை காணுகிறவர்கள் என்று அர்த்தம்.
  • தேவனை நாம் காண முடியாது. 
  • ஆனால் தேவனுடைய வல்லமையை, மகத்துவத்தை, தேவனை பல விதங்களில் காண நம்மால் முடியும். 
  • இயேசுவை நம்முடைய சரீரக் கண்களால் காண முடியாது. 
  • ஆனால் வார்த்தையின் மூலமாக சபை, இயேசுவை காண வேண்டும். 
  • அநேக கிறிஸ்தவர்கள் அற்புதங்கள், அடையாளங்கள், சுகம், அபிஷேகம், தீர்க்கத்தரிசனம் இவற்றின் பின்னால் ஓடுகின்றார்களே தவிர,
  • அவற்றைக் கொடுக்கிற இயேசுவின் பின்னால் போவதை குறைத்து வைத்திருக்கிறார்கள். 
  • இவ்வளவு ஆழமாக நீ என்னை பார்க்கின்றாயா? 
  • உன் கண்கள் என்னை வென்றது என்று இயேசு சொல்லும் அளவிற்கு சபை மணவாளனை பார்க்க வேண்டும். 
உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது
  • அளகபாரம் என்பது தலைமயிரைக் குறிக்கும். 
  • தலைமயிர் பல காரியங்களை குறிக்கும். 
  • மணவாட்டியினுடைய தலைமயிர் அதனுடைய அடர்த்தி, கருமை. 
  • வெள்ளாட்டு மந்தை போல் அடர்த்தியாய் இருக்கிறதாம். 
  • வெள்ளாடு ஆபத்தில்லாத அமைதியான விலங்கு
  • சபை அப்படி தான் இருக்க வேண்டும். 
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
 -மத்தேயு 10 : 30

ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
 -1 கொரி 11 : 15
  • ஆண்டவர் தன்னுடைய மணவாட்டிக்கு மகிமையென்னும் அளகபாரத்தை கொடுத்திருக்கிறார். 
  • சபையே, உங்களை ஆண்டவர் மகிமைப்படுத்தி வைத்திருக்கிறார். 
  • எனவே படிப்பு, பட்டம், புகழ், பதவி இவற்றின் மூலம் மகிமையை தேடிப் போக வேண்டிய அவசியம் கிறிஸ்தவர்களுக்கு கிடையாது. 
  • கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையின் அடர்த்திப் போல சபையின் தலைமயிர் மகிமை பெற்றிருக்கிறதாம். 
  • அவரே மகிமையை கொடுத்து, அவரை ரசிக்கிறார்.
  • வெள்ளாடு வெள்ளை நிறத்தில் இருக்கும். 
நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.
 -நீதிமொழிகள் 16 : 31
  • நம்முடைய முதிர்ச்சி, வளர்ச்சி அது கூட ஒரு மகிமையாம். 
  • (எ.கா) சிம்சோனுக்கு பலத்தை, மகிமையை தலைமயிரிலே தான் ஆண்டவர் வைத்தார். 
  • எனவே, தலைமயிர் என்பது அடையாளரீதியாக பலத்தை, வல்லமையைக் குறிக்கிறது. 
  • சபை என்பது வல்லமையுள்ள கன்னிகை. 
அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.
 -எண்ணாகமம் 6 : 5
  • பொருத்தனை பண்ணிக்கொள்பவர்கள், பொருத்தனை காலம் முடியும் வரையும் தலைமயிரை வெட்டக் கூடாது. 
  • இது பிரதிஷ்டையை காட்டுகிறது. 
  • மகிமை, வல்லமை மாத்திரம் அல்ல, பிரதிஷ்டையும் கூட. 
  • நாம் இயேசுவுக்காக பிரதிஷ்டை பண்ணப்பட்டவர்கள். 
  • நாம் இயேசுவுக்காக பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்தவான்கள். 
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
 -எசேக்கியேல் 44 : 20
  • எசேக்கியேல் மூலமாக ஆண்டவர் சொல்லுகிறார், ஆசாரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று. 
  • தன் தலைமயிரை நீளமாகவும் அல்லாமல், மொட்டையாகவும் இல்லாமல், சரியான அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சொல்லுகிறார். 
  • நாம் ஆண்டவருடைய சமூகத்துக்கு ஆசாரியர்களாக போகக் கூடிய அந்தஸ்தையும் காட்டுகிறது. 
  • சபையே நீ பெலன் உள்ளவள். மகிமை உள்ளவள். பிரதிஷ்டைப் பண்ணப்பட்டவள். 
  • அந்த ஆசாரியனாக இருந்து என்னை துதித்து, ஆராதித்து நமஸ்கரிக்கிற ஆசீர்வாதம் பெற்றவள் என்பதை தான் இயேசு சொல்கிறார். 
  • அதை தான் இந்த அளகபாரம் காட்டுகிறது. 

உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 6 : 6

விளக்கம்:
  • மணவாளன் மணவாட்டியை வர்ணிக்கின்ற அழகு.
  • கவிதை என்பது பொய்களைக் கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துகிறது. 
  • 4:2 தான் மறுபடியும் இங்கு வருகிறது. 
  • பற்கள் புன்சிரிப்பை காட்டுகிறது. 
  • இரட்டைக்குட்டி என்றால் மேல் வரிசை, கீழ் வரிசை பற்கள்.
  • பற்கள் எப்போது வெளியே தெரியும்?
  •  நாம் சிரிக்கும் போது தான். 
  • அந்த அழகை தான் இங்கு மணவாளன், மணவாட்டிக்கு காட்டுகிறார். 
  • சபை சிரிக்கின்ற, சந்தோஷமான மணவாட்டியாய் இருக்க வேண்டும். 

உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 6 : 7

விளக்கம்:

உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் 
  • இது 4:3 ல் உள்ள வசனம் தான். 
  • ஆனால் அது வேறு. இது வேறு. 
  • முக்காடு எபிரேய மொழியில் ட்சம்மா என்று வருகிறது.
  • இது தலையை மூடுகிற முக்காடு அல்ல, முகத்தை மூடுகிற முகத்திரை. 
  • லேஸ் மாதிரி கருப்பாய் இருக்கும். 
  • அதற்கு ஊடாக கன்னங்கள் தெரியும். 
  • அழகாய் இருக்கும். 
வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது
  • மாதுளம்பழம் என்று சொல்லும் போது அந்த அழகு, அந்த சுவை, அதை சாப்பிடுகிறவருக்கு மாத்திரமே தெரியும். 
  • அதன் உரிமையாளருக்கு மாத்திரமே தெரியும்.
  • ஆகவே, சபையினுடைய அழகு, மகிமை, மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே தெரியும். 
  • அது வேறு யாருக்கும் போக கூடாது. 
  • அப்படி போனால் அது ஆவிக்குரிய விபச்சாரம்.
  • என்னுடைய மணவாட்டி ஒரு விபச்சாரியை போல தன்னுடைய கன்னங்களை எல்லோருக்கும் காட்டிக் கொண்டு திரிகிறவள் அல்ல. 
  • அவளுடைய அழகை எனக்கு மாத்திரம் ரசிக்க வைக்கின்றவள் என்று இயேசு சொல்கிறார். 

ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
 -உன்னதப்பாட்டு 6 : 8

விளக்கம்:
  • 60, 80 என்ற இலக்கங்களை வைத்து குழப்பி கொள்ள வேண்டாம். 
  • (எ.கா) 4 பேர் பார்த்தா என்ன நினைப்பாங்க. 
  • அது பேச்சு வழக்கு. 
  • அது போல தான் இங்கும் சொல்லப்பட்டுள்ளது.
  • அநேகம் என்பதனை தான் இது குறிக்கிறது. (கவிதை நடையில்). 
ராஜஸ்திரீகள் அறுபதுபேரும்
  • ராஜஸ்திரீகள் என்றால் எத்தனையோ தேசங்கள் உண்டு. 
  • எத்தனையோ ராஜாக்கள் உண்டு. 
  • எத்தனையோ இளவரசிமாரும் உண்டு. 
  • அவர்கள் அழகு எப்படி இருக்கும்?
  • விலை உயர்ந்த ஆடை, அணிகலன்கள், வாசனை திரவியங்கள். 
  • அப்படிப்பட்ட ராஜஸ்திரீகள் நிறைய இருக்கிறார்கள். 
மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு
  • திருட்டுத்தனமாக ஒருவனை கவர வேண்டும் என்றால் அவள் எவ்வளவு அழகாக உடுத்துவாள். 
  • அவளுடைய கவர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கொள்ளுங்கள். 
கன்னியருக்குத் தொகையில்லை
  • மத்தேயு 5 வது அதிகாரத்தில் வரக் கூடிய அந்த 10 கன்னிப் பெண்கள். 
  • இயற்கை அழகு படைத்த கன்னியர்களுக்கு தொகையே இல்லை. 
  • இது கவிதை. 
முடிவுரை:
  • இந்த இடத்தில் மணவாளன் என்ன சொல்லுகிறார் என்றால், 
  • தன்னுடைய மணவாட்டியாகிய சபை எவ்வளவு அழகு என்று காட்டுவதற்கு இந்த உலகில் இருக்க கூடிய அதி சிறந்த அழகிகள் 3 கூட்டத்தாரைக் காட்டுகிறார்.
  • எவ்வளவு அழகிகள் இருந்தாலும், எனக்கென ஒரு மணவாட்டி இருக்கிறாள் என்று மணவாளன் சொல்லுகிறார்.

என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
 -உன்னதப்பாட்டு 6 : 9

விளக்கம்:

என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே
  • புறா அமைதியான பறவை. 
  • ஆபத்தில்லாத பறவை.
  • சமாதானத்தை குறித்து காட்டும் பறவை.
  • இச்சை இல்லாத புறாக் கண்கள். 
  • அந்த சபை ஒருத்தி. 
  • அந்த பண்மைக்குள் ஒருமையை காண்கிறார்.
  • எத்தனை வித்தியாசமான கிறிஸ்தவர்கள் இருக்கிறோம். 
  • எத்தனை சபை பெயர்களிலே இருக்கிறோம். எத்தனை தேசங்கள், எத்தனை இனம், 
  • எத்தனை மொழிகள் பிண்ணனிகள் கொண்ட கிறிஸ்தவர்கள் இருக்கிறோம். 
  • ஆனால் 2000 வருடங்களாக இருந்து வரும் கிறிஸ்துவின் சபை ஒருத்தி. 
  • என்னுடைய மணவாட்டி மற்றவர்கள் பின்னால் அலைகின்றவள் அல்ல. 
  • அவள் உத்தமி என்கிறார். 
அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்
  • ஒரு அம்மா, ஒரே மகளை வைத்திருந்தால் தன் மகளை எப்படியெல்லாம் வளர்ப்பார். 
  • ஒரே மகள் இருந்தால் அனைத்து அன்பும் அவளுக்கே வரும். 
  • செல்லப்பிள்ளையாக இருப்பாள். 
  • அதை கவிதை ரீதியாக குறித்து காட்டுகிறார். 
  • ஒரே மகள், பெற்றவளினுடைய பார்வைக்கு எப்படி இருப்பாள்? 
  • மிக செல்லமாக இருப்பாளல்லவா? 
  • அதே போல சபையாகிய ஒரே பிள்ளை, இயேசுவுக்கு செல்லப் பிள்ளை. 
குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்
  • மற்ற பெண்களெல்லாம், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்பார்கள். 
  • பிற மதங்களில் இருக்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்கு இல்லை. 
  • நாம் சுதந்திரமாக அந்த ஒரே பிள்ளை போன்று இருக்கிறோம். 
  • மற்றவர்கள் பொறாமை படும் அளவிற்கு கிறிஸ்தவர்களை நான் வைத்திருக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார். 
ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்
  • போற்றுதல் என்பது பொறாமையில் பேசுவது. 
  • நாங்கள் ராஜஸ்திரீகளாக இருந்தும் எங்களை விட அவள் அழகாக இருக்கிறாளே என்ற பொறாமை.
  • மறுமனையாட்டிகள் தங்களை அலங்கரித்து கொண்டால் தான் மற்றவர்களை கவர முடியும்.
  • ஆனால் இங்கு மணவாளன், மணவாட்டி மேல் கவரப்பட்டு இருக்கிறார். 

சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்?
 -உன்னதப்பாட்டு 6 : 10

விளக்கம்:

இவள் யார்?
  • இவள் யார்? என்பது Rhetorical Question. 
  • பதில் தன்னகத்தில் உள்ளடக்கமான ஒரு கேள்வி. 
சந்திரனைப்போல் அழகும்
  • உலகமே பாவ இருளில் இருக்கும் பொழுது,
  • சூரியனின் வெளிச்சத்தை தன்னகத்தே பெற்றுக்கொண்ட 
  • அந்த சந்திரன் மிளிறுகிறதே அந்த அழகு. 
சூரியனைப்போல் பிரகாசமும்
  • நீதியின் சூரியனாகிய இயேசுவின் பிரகாசம்.
  • உலகத்திற்கு இயேசுவை காண்பிக்க கூடிய ஒன்றே ஒன்று சபை மாத்திரமே. 
கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய்
  • யுத்தத்திற்கு போய் கொண்டிருக்கிற படை எப்படி கொடிகளோடு, வீரத்தோடு போகும் அந்த மாதிரியான ஒரு வீரம் கொண்டவள். 
  • என் சபை கோழை அல்ல. தைரியமான சபை. 
  • ட வரிசை தமிழின் அழகு. 
அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்?
  • அதிகாலையிலே அந்த சூரியன் மேலே வருவதற்கு முன் உலகிற்கு வெளிச்சம் வருகின்ற அருணோதயத்தை குறிப்பிடுகின்றார்கள். 
  • பாவமான இருண்ட உலகத்திற்கு அருணோதயமாய் உதிக்கின்ற இவள் யார்? (சபை)
  • அது தான் இதன் அர்த்தம். 

பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்.
 -உன்னதப்பாட்டு 6 : 11

விளக்கம்:

வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்
  • பழைய ஏற்பாட்டிலே வாதுமை, தேவனுடைய பிரசன்னத்தை குறிக்கும். 
  • வாதுமை கோல் தான் ஆரோனுடைய கோல். 
  • அது துளிர்த்தது. 
  • வாதுமை பூ வடிவத்திலே தான் Menorah என்று சொல்லுகின்ற அந்த குத்துவிளக்கை உண்டாக்க சொன்னார் ஆண்டவர் மோசேயிடம். 
  • வாதுமை நிறைந்த இடம் தான் அந்த லூஸ் என்ற இடம். 
  • அந்த இடத்திலே தான் யாக்கோபுக்கு தேவன் தரிசனமாகி Beth’el- தேவனுடைய வீடு என்று பெயர் மாற்றப்பட்டது. 
  • வாதுமை தேவனுடைய ஒளியைக் காட்டும்.
  • தேவனுடைய பிரசன்னத்தைக் காட்டும். 
  • ஆகவே, தேவனுடைய பிரசன்னம் இந்த உலகத்தில் சபையிலே இருக்கிறதாம். 
  • சபை தான் அந்த வாதுமைத் தோட்டம். 
  • வாதுமை தோட்டமாம் சபைக்கு இயேசுவானவர் வருகிறாராம். 
  • எதற்கு? 
  • பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளை பார்க்க. 
பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும்
  • பள்ளத்தாக்கு என்பது ஒரு நல்ல அர்த்தம் அல்ல.
  • பள்ளத்தாக்குகளில் தான் யுத்தங்கள் நடக்கும்.
  • ஆனால் பள்ளத்தாக்கின் லீலிகளாய் ஆண்டவர் நம்மை மாற்றி விட்டார். 
  • அசுத்தமான, பாவமான உலகத்திலே இருந்தாலும்
  • சபை பழுத்த கனிகளை ஆண்டவருக்கு கொடுக்கின்ற ஒரு சபையாய் இருக்க வேண்டும். 
  • ஆவியின் கனிகளையும் இங்கு எடுத்து கொள்ளலாம்.
  • வாதுமை தோட்டத்துக்கு மணவாளன் வருகிறார் பழுத்த பழங்களை பார்ப்பதற்கு
திராட்சச்செடிகள் துளிர்விட்டு
  • திராட்சைசெடிகள் துளிர்விடுவதைப் பார்க்க
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
 -யோவான் 15 : 1
  • திராட்சைசெடிகள் துளிர்விட்டு கனி தருவதை பார்க்க வருகிறார். 
மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும்
  • மாதுளம் செடி- அந்த கன்னங்கள் எப்படி இயேசுவுக்கு மாத்திரம் கனி தருகின்ற அந்த கன்னங்கள்.
  • அதை பார்க்க தோட்டத்துக்கு போனேன். 

நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று.
 -உன்னதப்பாட்டு 6 : 12

விளக்கம்:
  • நாம் வேதத்தில் காணும் அம்மினதாப் அல்ல.
  • சரித்திரத்திலே அம்மினதாப் என்ற போர்வீரன் அவர்கள் மத்தியிலே இருந்தார். 
  • அவர்களுடைய இரதம் வேகமாக ஓடும். 
  • அதை தான் இங்கு குறிப்பிட்டு காட்டுகிறார். 
  • அவ்வளவு வேகமாக என் ஆத்துமா, சபையை நோக்கி என்னைக் கொண்டு போகிறது. 
  • நமது மணவாளன் நம்மை பார்க்க எப்போதுமே வேகமாய், அவசரமாய் வருகிறார். 

திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.  
 -உன்னதப்பாட்டு 6 : 13

விளக்கம்:

திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே!
  • சாலொமோனின் பெண் பால் தான் சூலமித்தி. 
  • அர்த்தம் - சமாதானத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறவள். 
  • சபையை குறிக்கின்றது. 
  • சமாதானப் பிரபுவின் மணவாட்டி. 
நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு
  • நாங்கள் என்றால் மணவாளனும், அவருடைய தோழர்களும் (தூதர்கள் அல்லது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்). 
  • வேகமாக சபையை நோக்கி அவர் வருகிறார்.
சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்
  • என்னுடைய சபையை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தெரிகிறது என்று ஆண்டவர் கேட்கிறார்.
  • சபையை பார்க்கும் போது உங்களுக்கு (உலகத்திற்கு) பிரிவினைகள், போட்டிகள், சண்டை, பொறாமைகள் தெரியலாம். 
  • உலகம் சபையை காணும் பொழுது கேவலமான பல விஷயங்களை காணலாம். 
  • ஆனால் இயேசு தன்னுடைய சபையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார். 
  • இயேசுவானவர் உலகத்திற்கு சொல்கிறார்.
  •  தன்னை திட்டுகிறவர்களை கூட அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். 
  • அவர்கள் கிறிஸ்தவர்கள், சபையாய் இருக்கும் பட்சத்தில் நம்மை எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டார்.
அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்  
  • நமது சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருந்தால், அது இரண்டு சேனைக்கு சமானம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4