Posts

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம் ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.  -வெளிப்படுத்தல் 6 : 1 இயேசு கிறிஸ்து முதல் முத்திரையை உடைக்கிறார்.  நான்கு ஜீவன்களில் ஒரு ஜீவன், “நீ வந்து பார்” என்று யோவானிடம் சொன்னது.  இயேசு கிறிஸ்துவின் 4 பரிமாணங்களை வெளிப்படுத்துகிறதான தேவதூதர்கள் தான் 4 ஜீவன்கள்.  சிங்க முகம் இருக்கிற முதலாவது ஜீவன் தான் யோவானிடம் பேசியது.  சிங்க முகம் உள்ள அந்த ஜீவன் இயேசுவை ராஜாதி ராஜாவாக காண்பிக்கிறது.  அதாவது இயேசு ஒரு ராஜாதி ராஜாவாக அந்த முத்திரையை உடைக்கிறார்.  முதலாவது முத்திரை உடைக்கப்படுகிற நேரத்திலே, இயேசு கிறிஸ்து ஒரு ராஜாதி ராஜாவாக உடைக்கிறார். 

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 5 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 5 விளக்கம் முழு வேதாகமத்திலும் இயேசுவினுடைய மகிமை அதிகமாக காட்டப்படுகிற அதிகாரம் இதுவே.  பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலம் என்ற ஒன்று இருந்தது.  அதற்குள்ளே உடன்படிக்ககைப் பெட்டி இருந்தது.  வருஷத்திற்கு ஒருமுறை Yom kippur என்று சொல்லப்படுகிற நாளிலே பிரதான ஆசாரியன் மட்டும் பலிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போவார். அவர் அப்படி போவதற்கு முன்பதாக அவரை அவர்தாமே பரிசுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  நன்றாக குளித்து, புது வஸ்திரம் தரித்து, பாவ மன்னிப்பை பெற்று அவருக்காக ஒரு பலியை செலுத்தி பரிசுத்தம் ஆக்கப்பட்டவராய் உள்ளே செல்ல வேண்டும்.  உள்ளே போன பின்னர் அந்த பலிக்குரிய பூஜை எல்லாம் செய்கிற நேரத்திலே அவருக்குள்ளே எந்த ஒரு பாவமும், எந்த ஒரு குற்றமும் இருக்கக் கூடாது.  அவரிடம் ஒரு ஆண்டவருக்கு விரோதமான காரியம் இருந்தாலும் அவர் செத்து விழுவார்.  வெளியில் இருப்பவர்களுக்கு அது தெரியாது.  எனவே அவரின் காலில் ஒரு மணியை கயிறுடன் கட்டி உள்ளே அனுப்புவார்கள். அவர் அங்கும் இங்கும் நடமாடுகிற அந்த சத்தம் வெளியில...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம் இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.  -வெளிப்படுத்தல் 4 : 1 இவைகளுக்குப்பின்பு சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். இதற்கு முன்பு யாரும் பரலோகத்தின் திறக்கப்பட்ட வாசலை காணவில்லை. “நானே வாசல்” என்று இயேசு சொல்லியிருக்கிறார்.  இயேசு கிறிஸ்து சகல காரியங்களையும் செய்து முடித்து, அவர் பரலோகத்தின் வாசலை திறந்து விட்டார்.  முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது:  வெளி 1-3 வரை யோவானிடம் பேசிய அதே குரல், இயேசுவின் குரல்.  அந்த குரல் எக்காள சத்தம் போல இருந்தது.  இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. இதுவரை நடந்த சம்பவங்கள் பத்மு தீவிலே - பூமியிலே யோவான் இருக்கும் போது அவருக்கு தரிசனமாக காண்பிக்கப்பட...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம் சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.  -வெளிப்படுத்தல் 3 : 1 ஏழு நட்சத்திரங்களையும்  சூரிய வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 நிமிடங்கள் தேவைப்படும். நட்சத்திரங்களின் வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 வருடங்கள் தேவைப்படும். ஏழு நட்சத்திரங்கள் என்பது சபையினுடைய மேய்ப்பர்களை குறிக்கும். இயேசு கிறிஸ்துவானவர் “நீதியின் சூரியன்” என்று மல்கியா 4 வது அதிகாரத்தில் சொல்லப்பட்டு உள்ளது. அது போல மேய்ப்பரானவர்கள் நட்சத்திரங்கள்.  இயேசு கிறிஸ்து அக்கினியை போன்றவர். போதகர்கள் அக்கினியின் ஆவியை கொண்டவர்கள். போதகருக்குள் அக்கினி இருக்க வேண்டும். அது எல்லா இடத்திற்கும் பரவிச் செல்ல வேண்டும்.  எனவே, இயேசு கிறிஸ்துவானவரும், சபையின் போதகரும் சேர்ந்து இந்த சர்தை சபைக்கு பேசுகின்றனர். தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏசாயா 11:1 வசனம் இயேசுவை பற்றி குறிப்பிடுகிறது. அதற்கு அடுத்த வசனம்...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 2 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 2 விளக்கம் 2 மற்றும் 3 ஆம் அதிகாரங்களில் இயேசுவானவர் 7 சபைகளுக்கு கொடுத்திருக்கிற செய்திகளை காணலாம். முதலாம் அதிகாரத்தில் 7 சபைகள் என்ன என்பதைக் கண்டோம்.  இதை ஒரு அட்டவணையாக பிரிக்கலாம். 7 சபைகளி்ல் 2 சபைகளுக்கு எந்தவித குற்றச்சாட்டும் ஆண்டவர் சொல்லவில்லை.  1) சபையின் பெயர் 2) அந்தந்த சபைக்கு இயேசு கிறிஸ்து எப்படி பேசுகிறார். (ஒவ்வொரு சபைக்கும் வித்தியாசமான முறையில் பேசி இருக்கிறார்.) 3) ஆண்டவராகிய இயேசு சபையில் இருக்கிற நல்ல காரியங்களை குறித்து பேசுகிறார்.  4) ஒவ்வொரு சபையில் இருக்கிற குறைகளை எடுத்துக் காட்டுகிறார்.  5) ஆலோசனை கொடுக்கிறார்.  6) எச்சரிப்பைக் கொடுக்கிறார். (செய்யாவிட்டால் உங்களுக்கு இது தான் நடக்கும்) 7) செய்தால் நடக்கப் போகிற நன்மையான காரியங்கள் இவைகள் என சொல்லுகிறார். 

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 1 விளக்கம்

Image
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 1 விளக்கம் இந்தப் புத்தகம் கி.பி. 100 வது வருஷத்திலே எழுதப்பட்ட ஒரு புத்தகம்.  இந்தப் புத்தகத்தை எழுதினவர் இயேசுவினுடைய சீஷராக இருந்த யோவான்.  இந்தப் புத்தகம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவானவர் தரிசனங்களை யோவானுக்கு காண்பித்த போது அராமிய மொழியில் பேசினார்.  இயேசுவினுடைய அனைத்து சீஷர்களும் மரித்துப் போய், கடைசி வரைக்கும் இருந்தவர் தான் இந்த யோவான்.  இவர் இந்தப் புத்தகத்தை எழுதும் போது, எபேசு என்கிற சபைக்குத் தலைவராக இருந்தார்.  சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை நடக்கும் விஷயங்கள் வெளி 1-3 அதிகாரங்களில் காணப்படுகின்றன.  சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் நடக்கப் போகிற  விஷயங்கள் வெளி 4-22 அதிகாரங்களில் காணப்படுகின்றன.  இந்தப் புத்தகத்தில்  - சபைக்கு பரலோகத்தில் என்ன நடக்கப் போகிறது, - பூமியில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது, - இஸ்ரவேலருக்கு என்ன நடக்கப் போகிறது, - அந்திக்கிறிஸ்துவுக்கு என்ன நடக்கப் போகிறது  என்றெல்லாம் பார்க்கலாம். 

April 2023 - Bible Quiz Questions and Answers

April Quiz ஆதியாகமம்  26-50  ஈசாக்கு ,  யாக்கோபு   மற்றும்   யோசேப்பு Questions: 1)  ஈசாக்குடைய   வேலைக்காரர்   வாக்குவாதம்   பண்ணி   வெட்டப்பட்ட   கிணறுகளின்   பெயர்   ஏசேக்கு   மற்றும் ரெகொபோத். சரியா?தவறா? 2)  ஈசாக்கு   தேவன்   எனக்குத்   தரும்   எல்லாவற்றிலும்   தசமபாகம்   செலுத்துவேன்   என்று   சொல்லிப்  பொருத்தனை பண்ணிக் கொண்டான் .  சரியா?தவறா? 3)  இஸ்ரவேல்   ஏதேருக்கு   அப்புறத்தில்   தங்கிக்   குடியிருக்கும் போது   ரூபன்   போய் ,  தன்   தகப்பனுடைய  மறுமனையாட்டியாகிய  சில்பாளோடே   சயனித்தான் .  சரியா?தவறா? 4)  யோசேப்பின்   சகோதரர்கள் ,  பென்யமீனை   கூட்டிக்   கொண்டு   வரப்   போகும்   போது   சிமியோனை  யோசேப்பினிடத்தில்  விட்டு   சென்றார்கள் .  சரியா?தவறா? 5)  யாக்கோபு   ஆசேர்   கோத்திரத்துக்கு   கொடுத்த ...