வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 1 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 1 விளக்கம்

  • இந்தப் புத்தகம் கி.பி. 100 வது வருஷத்திலே எழுதப்பட்ட ஒரு புத்தகம். 
  • இந்தப் புத்தகத்தை எழுதினவர் இயேசுவினுடைய சீஷராக இருந்த யோவான். 
  • இந்தப் புத்தகம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவானவர் தரிசனங்களை யோவானுக்கு காண்பித்த போது அராமிய மொழியில் பேசினார். 
  • இயேசுவினுடைய அனைத்து சீஷர்களும் மரித்துப் போய், கடைசி வரைக்கும் இருந்தவர் தான் இந்த யோவான். 
  • இவர் இந்தப் புத்தகத்தை எழுதும் போது, எபேசு என்கிற சபைக்குத் தலைவராக இருந்தார். 
  • சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை நடக்கும் விஷயங்கள் வெளி 1-3 அதிகாரங்களில் காணப்படுகின்றன. 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் நடக்கப் போகிற விஷயங்கள் வெளி 4-22 அதிகாரங்களில் காணப்படுகின்றன. 
  • இந்தப் புத்தகத்தில் 
- சபைக்கு பரலோகத்தில் என்ன நடக்கப் போகிறது,
- பூமியில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது,
- இஸ்ரவேலருக்கு என்ன நடக்கப் போகிறது,
- அந்திக்கிறிஸ்துவுக்கு என்ன நடக்கப் போகிறது 

என்றெல்லாம் பார்க்கலாம். 

சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். -வெளிப்படுத்தல் 1 : 1
  • இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை இந்த வசனம் காண்பிக்கிறது. 
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் 
  • சீக்கிரத்தில் நடக்கப் போகிற காரியங்கள். 
  • கி.பி. 100 கு பிறகு, நடக்க போகிறவைகள். 
தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, 
  • ஊழியக்காரர் என்றால் சீஷர்கள்.
  • சீஷர்கள் வேறு, விசுவாசிகள் வேறு. 
  • பிசாசுகள் கூட ஆண்டவரை விசுவாசிக்கிறது. 
  • சீஷர்கள் முழுமையாக ஆண்டவருக்கு ஊழியம் செய்வார்கள்.
  • இது எல்லோருக்கும் அல்ல, ஆண்டவருடைய ஊழியக்காரர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம். 
தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். 
  • தேவன் இயேசுவுக்கு கொடுத்தார்.
  • இயேசு கிறிஸ்து தூதனுக்கு கொடுத்தார்.
  • அந்த தூதன் யோவானுக்கு கொடுத்தார். 
  • யோவான் நமக்கு கொடுத்தார். 
  • ஆண்டவர் கொடுக்கிற முறை அழகானது. 

இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
 -வெளிப்படுத்தல் 1 : 2

இவன்
யோவான்

தேவனுடைய வசனத்தைக்குறித்தும், 
  • தேவ வசனத்திற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. 
  • ஆனால் நமக்கு அதில் கொஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
  • யோவான் தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக ஒப்புவிக்கிறார்.
  • யோவான், 1 யோவான், யோவான், யோவான் போன்ற 4 புத்தகங்களையும் எழுதினவர் இவர் தான். 
  • ஆதியாகமம் புத்தகத்தை மோசே எழுதும் போது, ஆண்டவர் அவரை அப்படியே தரிசனத்திலே கடந்த காலத்துக்கு கூட்டிக் கொண்டு போனார். 
  • அதேப் போல இந்த வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை யோவான் எழுதும் போது, ஆண்டவர் அவரை அப்படியே  தரிசனத்திலே எதிர் காலத்துக்கு கூட்டிக் கொண்டு போகிறார். 

இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
 -வெளிப்படுத்தல் 1 : 3
  • இந்த வசனம் 2 காரியங்களைக் குறித்து பேசுகிறது. 
  • முதலாவது இது இந்த வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை குறித்து பேசுகிறது. 
  • இரண்டாவது இது முழு வேதத்தைக் குறித்தும் பேசுகிறது. 
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும்,
  • இதில் எழுதியிருக்கிறவைகள் ஆண்டவருக்கு சந்தோஷம் தரக் கூடியவைகள். 
  • எப்போது சபையை எடுத்துக் கொள்ளலாம் என்று ஆண்டவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். 
  • நமக்கு எதுவுமே புரியவில்லை என்றாலும் வாசிக்க வேண்டும். 
  • நாம் வாசிக்கும் போது பிசாசுக்கு அதைக் கேட்கவே பிடிக்காது. 
  • பிசாசுக்கு upset. ஆண்டவருக்கு happy. 
கேட்கிறவர்களும்,
  • கேட்கிறவர்களுக்கும் ஆசீர்வாதம் இருக்கும். 
இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
  • முதல் மூன்று அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் என்கிறார். 
காலம் சமீபமாயிருக்கிறது
  • ஆண்டவர் 2000 வருடங்களுக்கு முன்னர் இதை சொல்லியிருக்கிறார்.
  • எனவே, இப்போது இன்னும் காலம் சமீபமாயிருக்கிறது.  

யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
 -வெளிப்படுத்தல் 1 : 4

யோவான்
  • யோவான்ஸ்நானன் அல்ல. 
  • இயேசுவினுடைய சீஷனாக இருந்த யோவான். 
  • 12 சீஷர்களில், இயேசுவோடு மிகவும் நெருங்கி இருந்த சீஷர் இந்த யோவான். 
  • செபெதேயுவின் மகன், யாக்கோபின் சகோதரன்.
  • இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தது இந்த யோவான் தான். 
ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது:
  • முதலாவதாக, 7 சபைகளுக்கு எழுதத் தொடங்குகிறார். 
  • ஏழு சபைகள் எவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை பார்ப்போம். 
  • இஸ்தான்புல் என்ற இடத்தில் அதாவது துருக்கியை சுற்றி இருக்கிற இடங்களில் இந்த சபைகளின் இடிபாடுகள் இன்றும் இருக்கிறது. 
  • உண்மையிலேயே இருந்த சபைகளுக்கு தான் இது எழுதப்பட்டது. 
  • ஆனால் அவர்களுக்கு மாத்திரமல்ல இது கொடுக்கப்பட்டது. 
  • வெளி 2:1 - எபேசு சபையின் தூதனுக்கு (Pastor) கு கொடுக்கப்பட்டது. 
  • வெளி 2:7 - எபேசு சபைக்கு(Singular) இயேசு சொன்ன அந்த விடயங்களை, பரிசுத்த ஆவியானவர் எடுத்து சபைகளுக்கு (Plural) கொடுக்கிறார். 
  • இப்படி ஒவ்வொரு சபையின் உபதேசங்களிலும் ஆரம்பத்திலும், கடைசியிலும் அதற்கான வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.  
சபைகளுக்கும்
  • சபையின் காலம் தொடங்கியது முதல், சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை இருக்கிற காலம் தான் கிருபையின் காலம்.
  • அந்தக் காலத்தை ஆண்டவர் 7 பிரிவுகளாக பிரித்திருக்கிறார். 
  • கடைசி காலமாகிய லவோத்திகேயா காலத்தில் தான் நாம் இருக்கிறோம்.  
  • 7 என்றால் முழுமையைக் குறிக்கும். 
In Biblical numerology:
எண்களில் 1-7 எண்கள் எதை குறிக்கும் என்பதைப் பார்ப்போம். 
  1. தேவன்
  2. பிரிவு
  3. உயிர்த்தெழுதல்
  4. இயேசு
  5. தேவ வல்லமை
  6. மனிதன்
  7. பரிபூரணம்
  • 7 சபைகள் என்றால் சம்பூரணமான சபைகள் என்று அர்த்தம். 
  • இயேசு ஆசியாவில் இருக்கிற ஒவ்வொரு சபைக்கு சொன்னதையும் பரிசுத்த ஆவியானவர் எடுத்து எல்லா சபைகளுக்கும் கொடுக்கிறார். 
  • இந்த வெளிப்படுத்தல் புத்தகம் எல்லா சபைகளுக்கும் சொந்தமானது. 
  • திரித்துவம் என்ற சொல் வேதத்தில் இல்லாவிட்டாலும், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை எல்லா புத்தகங்களிலும் திரித்துவத்தைப் பற்றி பேசப்படுகிறது. 
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
 -ஆதியாகமம் 1 : 1
  • தேவனாகிய பிதாவைக் குறிக்கும். 
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
 -ஆதியாகமம் 1 : 2
  • பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. 
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
 -ஆதியாகமம் 1 : 3
  • வெளிச்சமாகிய, குமாரனாகிய இயேசுவைக் குறிக்கிறது 
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், 
  • இது பிதாவானவரைக் குறிக்கும். 
அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
  • 7 விதங்களில் தன்னை வெளிப்படுத்துகிற ஆவிகள். 
  • பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. 
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
 -ஏசாயா 11 : 2

ஏழு ஆவிகள்:

1) கர்த்தருடைய ஆவி
2) ஞானம்
3) உணர்வு
4)ஆலோசனை
5) பெலன்
6) அறிவு
7) கர்த்தருக்கு பயப்படுகிற பயம்



உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
 -வெளிப்படுத்தல் 1 : 5
  • இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது. 
உண்மையுள்ள சாட்சியும், 
  • அவர் ஒருவரே உண்மையுள்ளவர். 
  • இயேசுவை நம்பினவர்கள் என்றுமே கெட்டுப் போனதில்லை. 
மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும்,  
  • இயேசு ஒருவரே மரித்தோரில் இருந்து முதலில் உயிர்த்தெழுந்தார். 
  • இயேசு மரிப்பதற்கு முன்பு, சில பேர் மரித்த பிறகும் அற்புதமாக உயிரோடு எழும்பினர்.(லாசரு, சிறு பெண் etc..)
  • ஆனால் அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை.
  • ஆனால் இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகு ஒவ்வொருவரும் மரித்தோரில் இருந்து உயிரோடு எழும்பி கொண்டே இருக்கிறார்கள். 
  • ஆம். இரட்சிப்பிலே ஒவ்வொருவரும் பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்கிறோம் (ஞானஸ்நானம்).
  • நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகள்.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய (பிதா) பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
 -யோவான் 1 : 12

பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய
  • பூமியில் இருக்கிற ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, ராஜாதி ராஜா.
  • தேவனுடைய அனுமதி இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் நடக்காது. 
  • நாம் செய்கிற பாவத்தின் மிகுதியால் சில விஷயங்களை அனுமதித்திருக்கிறார். 
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிருபை மற்றும் சமாதானம் - தமிழ்.
Grace and Peace - English
Charis and Shalom - Greek
  • கிருபை என்றால் பெற்றுக் கொள்ள தகுதியில்லாத விடயங்களை பெற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம். 
  • இந்தப் புத்தகம் யாருக்காக எழுதப்பட்டது என்று இதை வைத்து நாம் சொல்ல முடியும். 
  • யோவான் “Charis” என்று புறஜாதியாருக்கும், “Shalom” என்று யூதர்களுக்கும் சொல்கிறார். 
  • இந்தப் கிருபையும், சமாதானமும் திரித்துவ தேவனிடத்தில் இருந்து வந்தது.

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
 -வெளிப்படுத்தல் 1 : 6

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, 
  • நாம் பாவிகள்.
  • நமக்குள் எந்த நன்மையும் இருக்கவில்லை. 
  • ஆனாலும் இயேசுவானவர் நம் மீது அன்பு கூர்ந்திருக்கிறார். 
  • யாருமே நம் மேல் அன்புகூர நாம் தகுதியானவர்கள் அல்ல. 
  • நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்தும் நம்மை நேசித்து இருக்கிறார். 
தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி,
  • அவருடைய இரத்தத்தினால் நம்மைக் கழுவினார்.
  • அவர் படைத்த மனிதனே அவரை நிந்தித்தான். 
  • இயேசுவின் மேல் ஒரு அடி விழுவதற்கு முன்னமே அவரின் மன அழுத்தம் காரணமாக இரத்தமே வியர்வையாக வெளி வந்து இருந்தது. 
  • அடித்து, அடித்து அவர் உடம்பில் இருக்கிற எல்லா இரத்தமும் போனது.
  • நம்மேல் ஆண்டவர் அவ்வளவு அன்பு கூர்ந்ததால் தான் இத்தனையும் அவர் பொறுத்துக் கொண்டு நிறைவேற்றினார். 
  • பின்பு உயிரோடு எழும்பினார். 
தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின
  • இயேசுவானவர் நம்மை ராஜாக்களாக, ஆசாரியர்களாக மாற்றியுள்ளார். 
  • ஒரு ராஜாவை சந்திக்க கூட தகுதியில்லாத நம்மை ராஜாக்களாக மாற்றியுள்ளார்.
  • தேவனை தூரத்தில் இருந்து கூட பார்க்க தகுதியில்லாத நம்மை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு போகக் கூடிய ஆசாரியர்களாக மாற்றியிருக்கிறார். 
  • இயேசு கிறிஸ்து நம்மை தன் பக்கத்தில் அமர வைத்திருக்கிறார். 
  • நாம் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறோம். 
  • ராஜாதி ராஜாவானவர் நம்மை கையில் பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்திருக்கிறார். 
  • ஆசாரியர்களாக ஆக்கப் போகிற என்று சொல்லவில்லை, ஆசாரியர்களாக்கின என்று இருக்கிறது. 
  • இப்போதே நாம் ராஜாக்கள் தான். 
  • இரட்சிக்கப்பட்ட யாவரும் ராஜாக்கள், ஆசாரியர்கள். 
  • நாம் பிதாவுக்கு முன்பாக அமர்ந்திருக்கிற ஆசாரியர்கள். 
  • நாம் அந்த படி நடந்து கொள்ள வேண்டும்.
  • பிசாசு நம்மை பார்த்து பயப்பட வேண்டும். 
  • நீங்கள் பிசாசை பார்த்து பயன்படக் கூடாது. 

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
 -வெளிப்படுத்தல் 1 : 7
  • இயேசு கிறிஸ்து இன்று எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க போகிறோம். 
இதோ, 
  • இயேசு அவருடைய இரண்டாவது வருகையை தரிசனத்தில் யோவானுக்கு காண்பித்தார். 
  • இரண்டாவது வருகையை போன்ற ஒன்றை காண்பிக்கவில்லை.
  • இரண்டாவது வருகையையே காண்பித்தார்.
  • ஆண்டவர் யோவானை ஆவிக்குள்ளாக எடுத்துக் கொண்டு போனார். 
  • அவர் வருகிற அந்த நாளுக்கே அழைத்து சென்றார். 
  • Greek word - Iddoo என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 
  • யோவான் இயேசு வருவதைக் கண்டு, “இதோ அவர் வருகிறார்” என்று வெளிப்படுத்துகிறார். 
அப் 1:9-11
  • இயேசு ஒலிவ மலையில் இருந்து எப்படி எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்று தூதர்கள் சொன்னார்கள். 
கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; 
  • எல்லோரும் அதைக் காண்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 
  • உலகத்தில் உள்ள அனைவரின் கண்களும் காணும்.
  • யூதர்களும், ரோமர்களும் கூட காண்பார்கள். 
பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
  • ஏன் புலம்புவார்கள்?
  • அவர் வரும் போது இந்த பூமியில் கிறிஸ்தவர்கள் இருக்க மாட்டார்கள். 
  • கிறிஸ்தவர்கள் இருந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். 
  • கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கு முன்பு இந்த சபை எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். 

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
 -வெளிப்படுத்தல் 1 : 8
  • வெளிப்படுத்தல் புத்தகத்தில் முதன்முறையாக இயேசு பேசப் போகிறார். 
  • இயேசு தன்னை அறிமுகப்படுத்தி காண்பிக்கிற விதம் இது. 
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்:
  • அவருடைய அடையாள அட்டையை (Identity Card) கொடுக்கிறார்.
  • என்னுடைய Address - எல்லா இடங்களிலும் இருக்கிறவர். 
  • என்னுடைய வயது - நான் இருந்தேன், இருக்கிறேன், இனிமேல் வரப் போகிறேன். 
  • இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே இப்படி சொல்ல முடியும். 
நான் அல்பாவும், ஓமெகாவும், 
  • கிரேக்க எழுத்துக்கள் மொத்தம் 24 இருக்கின்றது. 
  • முதல் எழுத்து அல்பா, கடைசி எழுத்து ஓமெகா. 
  • இந்த முழு உலகத்தையுமே ஆண்டவர் நேசிப்பதால் தான் அந்த இரண்டு கிரேக்க எழுத்துக்களை பயன்படுத்துகிறார். 
  • யோவானும், இயேசுவும் Aramic என்ற மொழியில் பேசிக் கொண்டார்கள். 
  • அது கொஞ்சம் எபிரேய எழுத்துக்களைப் போல சார்ந்திருக்கும். 
  • ஆனால் எழுதப்படும் எழுத்துக்கள் எபிரேய எழுத்துக்கள் தான். 
  • Aramic மொழியில் பேசுவதனால் இயேசு யோவானுக்கு Aleph and Tau என்று தான் சொல்லியிருக்க வேண்டும். 
  • ஏன் அவர் அப்படி சொல்லவில்லை. 
  • அப்படி சொல்லியிருந்தால் அவர் யூதர்களுக்கு மாத்திரம் தான் தேவனாக இருந்திருப்பார். 
  • பேசுவது அராமிய மொழியாக இருந்தாலும்,
  • யோவான் நீ இவைகளை எபிரேய மொழியிலோ, அராமிய மொழியிலோ எழுத வேண்டாம். 
  • கிரேக்க மொழியில் எழுது என்று ஆண்டவர் சொன்னார். 
  • காரணம் கி.மு 334 வது வருடத்தில் இருந்து சர்வதேச மொழியாக இருந்தது இந்த கிரேக்க மொழி. 
  • எனவே, இயேசு இந்த புத்தகத்தை முழு உலகத்தில் இருக்கிற அனைவரும் வாசிக்க வேண்டும் என்று நினைத்து கிரேக்க மொழியில் எழுத வைத்தார். 

உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
 -வெளிப்படுத்தல் 1 : 9

பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
  • யோவான் இருந்தது மத்திய தரைக்கடலில் இருக்கிற ஒரு சின்ன தீவிலே. 
  • 6 மைல் நீளம், 12 மைல் அகலமுமான ஒரு தீவு. 
  • அந்த தீவு உண்டாயிருப்பது மண்ணினாலே அல்ல.
  • எரிமலை கற்கள் மூலம் உண்டாயிருக்கிறது. 
  • அந்த தீவிலே மரங்கள் முளைக்காது. 
  • பகலிலே வெப்பம் அதிகம்; இரவிலே குளிர் அதிகம். 
  • கடலுக்கு நடுவில் ஒரு பாலைவனத்தை வைத்திருப்பது போல. 
  • யோவானுக்கு இந்தப் புத்தகத்தை எழுதும் போது 90 வயது போல இருக்கும்.
  • 20 வயதில் இயேசுவுக்கு சீஷராக வந்தார், இப்போது 70 வருடங்கள் கடந்துவிட்டது. 
ஏன் யோவான் அங்கு கொண்டு போகப்பட்டார்?
  • ரோமர்கள் யோவானை அந்த இடத்தில் சிறை வைத்திருந்தார்கள். 
  • யோவான் இப்போது வயது சென்றவராக இருக்கிறார். 
  • யோவான் தற்போது எபேசு சபை தலைமை போதகராக இருந்தார். 
  • ஏன் ஆண்டவரே இப்படி ஒரு கடினமான இடத்தில் என்னை கொண்டு வந்து வைத்திருக்கிறீர் என்று யோவான் நினைத்திருக்கலாம். 
  • ஆண்டவர் யோவானை ஒரு கொடுமையான தீவுக்கு கொண்டு செல்லாவிட்டால் நமக்கு இந்த வெளிப்படுத்தல் புத்தகம் கிடைத்திருக்காது.
  • அதுபோல, விசுவாசிகளாகிய நம்மையும் ஆண்டவர் கடினமான பாதையில் கூட்டி செல்வது அவர் நம்மிடம் பேச வேண்டும் என்பதற்காக. 
  • எனவே, அவருக்கு கீழ்ப்படியுங்கள்.

கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 1 : 10

கர்த்தருடைய நாளில் 
  • இங்கு கர்த்தருடைய நாள் என்று சொல்லப்படுவது ஓய்வு நாள் (சிலருக்கு சனிக்கிழமை, சிலருக்கு ஞாயிற்றுக்கிழமை, சிலருக்கு வெள்ளிக்கிழமை - Sabbath).
ஓய்வு நாளில் யாதொரை வேலையும் செய்ய வேண்டாம். 
  • Melac - chayah in Hebrew
  • தனக்கு லாபத்தை பெற்றுக் கொடுக்கிற ஒரு வேலை
  • அதை ஓய்வு நாளில் செய்ய வேண்டாம் என்பது தான் அதின் அர்த்தம். 
ஆவிக்குள்ளானேன்; 
  • ஆண்டவருக்குள்ளே யோவான் சென்றார்.
  • ஆண்டவர் பரலோகம், பூமி அனைத்து இடங்களுக்கும் யோவானைக் கூட்டி கொண்டு சென்றார். 

அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
 -வெளிப்படுத்தல் 1 : 11
  • தற்காலத்திலே துருக்கியாக இருக்கிற இடத்தில் இருக்கிற 7 நகரங்களில் உள்ள 7 சபைகள். 
  • சபை ஆரம்பித்த காலம் முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரைக்கும் உள்ள காலங்கள் 7 காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த சபைகளில் உள்ள குணாதிசயங்கள் எல்லா சபைகளுக்கும் பொருந்தும். 

அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
 -வெளிப்படுத்தல் 1 : 12
  • ஏழு பொன் குத்துவிளக்குகள் - ஏழு சபைகள்
  • ஏழு என்றால் முழுமையை குறிக்கும். 
  • ஏழு சபைகள் என்றால் எல்லா சபைகளையும் குறிக்கும். 
  • இயேசு காட்சி கொடுத்தார். 

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி, தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 1 : 13

ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே,
  • ஏழு சபைகளுக்கு மத்தியில் இயேசு இருக்கிறார். 
  • இயேசு எல்லா சபைகளுக்கும் மத்தியில் இருக்கிறார். 
மத்தியில் நின்று கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைக் காண்போம். 
  • யூத கலாச்சாரத்தின் அடிப்படையிலே தலைவன் தான் நடுவில் நின்று கொண்டிருப்பார். 
  • இயேசு கிறஸ்து தான் “சபைகளின் தலைவர்” என்று அர்த்தம். 
மூப்பர்கள் என்றால் யார்?
  • மூப்பர்கள் என்றால் தலைமை போதர்களுக்கு உதவி செய்துகொண்டு, இயேசு கிறிஸ்துவின் கீழ் தங்களை தாழ்மைப்படுத்திக் கொண்டு, வசனத்திற்கு கீழ்ப்படிந்து சபையை நடத்துபவர்கள். 
நிலையங்கி, தரித்து, 
  • பாதம் வரை ஒரு அங்கியை தரித்திருக்கிறார். 
  • பிரதான ஆசாரியனுடைய அங்கி அது. 
  • ஆரோனுடைய வம்சத்தில் வருகிறவர்கள் பிரதான ஆசாரியர்களாக வருவார்கள். 
  • இயேசு உடுத்தியிருந்தது லேவிய பிரதான ஆசாரியனின் உடை அல்ல. 
  • அது மெல்கிசெதேக்கு அணிந்திருந்தற்கு ஒப்பான ஒரு அங்கி. 
  • இயேசு லேவி கோத்திரத்தில் வரவில்லை. யூதா கோத்திரத்தில் வந்தார். 
  • யூதா கோத்திரத்தில் இருந்து வந்த ஒருவருக்கு பிரதான ஆசாரியனாக மாற முடியுமா?
  • சாலேம் என்பது தான் தற்காலத்தில் இருக்கிற எருசலேம் நகரம். 
  • புறஜாதியார் ஆசாரியராக மாற முடியாது.
  • பிரதான ஆசாரியன் என்ற தலைப்பில் ஆண்டவர் யூத தன்மையை ஒரு புறம் வைத்துவிட்டு.
  • இஸ்ரவேலரல்லாத குடும்பமாகிய இந்த மெல்கிசெதேக்கின் வம்சத்திலே பிரதான ஆசாரியனாக வந்து, இஸ்ரவேலரல்லாத நம்மை ஆண்டவர் பிரதான ஆசாரியர்களாக மாற்றியுள்ளார்.  
  • இயேசு சிலுவையில் மரிக்கும் போது பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே உள்ள திரை கிழிந்தது. 
  • காரணம் அந்த திரை நமக்கு தேவையில்லை. 
மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த,
  • யூத கலாச்சாரத்தில் ஒரு போட்டியில் வெற்றி கொள்பவர்களுக்கு பொற்கச்சை அணிவிப்பார்கள்.
  • ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் வெண்கல பொற்கச்சையும், கொஞ்சம் பணக்காரனாக இருந்தால் வெள்ளி பொற்கச்சையும், ராஜவம்சத்தை சேர்ந்தவராக இருந்தால் பொன் பொற்கச்சையும் அணிவிப்பார்கள். 
  • இங்கு இயேசு அணிந்திருப்பது பொன் பொற்கச்சை.
  • அவர் ஒரு ராஜா.  
  • அவர் வெற்றிபெற்றவர். 
  • மிருகத்தோடு போராடி வெற்றிக் கொண்டார்.
  • யாரும் போராட பயப்படுகிற பிசாசு என்ற மிருகம். 
  • இனி இயேசு பிசாசை தோற்கடிப்பதற்கு ஒன்றும் இல்லை. 
  • இயேசு பிசாசை தோற்கடித்து முடித்து விட்டார். 
  • அதனால் தான் அந்த பொன் பொற்கச்சையை அணிந்திருக்கிறார். 
  • அது அவர் வெற்றியின் அடையாளம். 
மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
  • மனுஷகுமாரன் என்று நேரடியாக சொல்லவில்லை. 
  • நான் காண்பது மனுஷகுமாரனை தான் என்று யோவானுக்கு தெரியும்.
  • இப்போது மனுஷகுமாரன் என்று சொல்ல முடியாது. 
  • ஏனென்றால் இப்போது அதை விட மகிமையாக காணப்படுகிறார். 
  • அவர் தான், ஆனால் இப்படி அவரைக் கண்டதில்லையே!
  • இவ்வளவு மகிமை உள்ளவரை மனுஷகுமாரன் என்று சொல்ல முடியவில்லையே. 
  • யோவான் இயேசுவைக் கண்டு பிரமித்து போய் இருந்ததினாலே அப்படிச் சொல்கிறார்.
  • அதனால் தான் மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர் என்று சொல்லுகிறார். 

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;
 -வெளிப்படுத்தல் 1 : 14
  • யோவானுக்கு வெள்ளையாக தெரிகிற காரியம் வெண்பஞ்சும், பனியும். 
  • அவர் கண்டது வெள்ளை நிறத்தை அல்ல.
  • நாம் காண்பதில் அதிகமாக வெள்ளை நிறப் பகுதி காணப்பட்டால் அதற்கு பெயர் - ultraviolet 
  • நாம் காண்பதில் அதிகமாக கறுப்பு நிறப் பகுதி காணப்பட்டால் அதற்கு பெயர்  - infrared 
  • இவை இரண்டையும் கண்களால் பார்க்க முடியாது. 
  • எ.கா welding பண்ணும் போது வருகிற நிறம், சூரிய கதிர்களின் நிறம்.
  • எனவே, அதை பார்ப்பதற்கு infrared glasses கொடுப்பார்கள்.
  • அதை பார்க்க முடியாது என்ற காரணத்தால், infrared glasses மூலம் அதன் தன்மை குறைக்கப்பட்டு நமக்கு காண்பிக்கப்படும்.
  • இயேசுவை முழுமையாக பார்க்கின்ற நேரம் அவருடைய நிறம் இந்த ultraviolet. 
  • தேவ தூதர்களுடைய நிறமும் இது தான். 
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் 
  • இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது. 
  • தலைமயிர் வெண்மையாய் காண்பிக்கப்படுவதன் அர்த்தம் அவருடைய வயது. 
  • அவருக்கு வயது கிடையாது, அவர் பழமையானவர். 
  • ஆனால் அவருடைய style புதுசு. 
  • பழையதும் முடியும், புதியதும் முடியும். 
  • அவர் பழமையானவர், புதுமையானவர், இளமையானவர். 
உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; 
  • நீதியைக் குறிக்கும். 
  • வேதத்தில் வெண்மை நிறம் நீதியையும், பரிசுத்ததையும் குறிக்கும். 
  • ஆண்டவர் எல்லோரையும் ஒரே விதமாக நேசிக்கிறார். 
பரிசுத்தம்:
Kadosh - எபிரேய மொழியில்.
Hagios - கிரேக்க மொழியில் 
  • அதாவது பிரிந்திருப்பது.
  • எல்லாவற்றையும் விட்டு ஆண்டவர் பிரிந்திருப்பது. 
  • யாரோடும் கலக்க மாட்டாத ஒருவர். 
அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;
  • அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போல இருந்ததற்கு காரணம் என்ன? 
  • வேதத்தின்படி அது அவரின் உக்கிரகோபத்தைக் குறிக்கும். 
  • ஆண்டவர் இன்று கோபத்தில் இருக்கிறார். 
  • சபைகளின் மீது கோபமாயிருக்கிறார். 
  • அறுவடை மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம் என்பதால்.
  • இயேசு சபையின் மத்தியில் நின்றும் மக்கள் அவருக்கு பிடித்தமானதை செய்வதில்லை. 
  • ஆண்டவர் எதனால் சபைகளோடு கோபத்தில் இருக்கிறார் என்பதை பின் வரும் அதிகாரங்களில் காண்போம். 
  • “Come and Receive” என்பதை தான் அனைவரும் விரும்புகிறார்கள்.
  • “Come and Repent” என்பதை யாரும் விரும்புவதில்லை. 
  • அனைவரும் பெற்றுக் கொள்வதற்காகவே Church கு வருகிறார்கள். 

அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
 -வெளிப்படுத்தல் 1 : 15

அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; 
  • அவருடைய பாதம் வெண்கலமாக இருக்கிறது. 
  • யாத்திராகமம் 27 ல்  தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 
  • ஆண்டவருடைய கூடாரத்தை செய்கிற நேரத்திலே, அந்தப் பலிக்கு தேவையான விஷயங்கள், பாத்திரங்கள், தூண்கள் அனைத்தும் வெண்கலத்தினால் மேல்பூச்சு பூசப்பட வேண்டும் என்று.
வெண்கலம் - நியாயத்தீர்ப்பு:
  • இந்த வெண்கலம் பிரதிபலிப்பது “நியாயத்தீர்ப்பு”.
  • “கர்த்தருடைய கோபம்” அவர் “கண்களில் காணப்படுகிறது. 
  • “கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு” அவர் “பாதங்களில்” காணப்படுகிறது. 
  • இன்று இயேசு எப்படி இருக்கிறார் என்பதை வேதத்தின்படி பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
  • கைகளிலே அந்த நியாயத்தீர்ப்பு இருந்தால் அடிக்கவும் முடியும், அணைக்கவும் முடியும். 
  • ஆனால் கால்களிலே அந்த நியாயத்தீர்ப்பு இருந்தால் அடிக்க மட்டும் தான் முடியும், அணைக்க முடியாது. 
  • சபை எடுத்துக் கொள்ளப்படும் போது, அது தான் ஆண்டவர் சபைக்கு கொடுக்கிற நியாயத்தீர்ப்பு. 
  • ஆண்டவரை நேசித்து கொண்டிருக்கிற, ஆண்டவருடைய வசனத்திற்கு கீழ்ப்படிகிறவர்களை மாத்திரமே ஆண்டவர் எடுத்துக் கொள்ளுவார். 
  • அது தான் அந்த பாதங்களினால் வரும் நியாயத்தீர்ப்பு.
  • கைவிடப்பட்டு விட்டால், அதற்கு பின்பு ஒரு சந்தர்ப்பமே நமக்கு கிடைக்காது. 
  • அதனால் இப்பொழுதே ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ நாம் பழக வேண்டும். 
அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
  • அவருடைய சத்தம் தண்ணீரின் இரைச்சலைப் போல இருந்தது. 
  • உலகத்திலேயே பெரிய நீர்வீழ்ச்சி Niagara Falls. 
  • அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வருகிற சத்தம் மிகப் பெரியது. 
  • அதைப் போல தேவனுடைய சத்தம் இருந்ததாம்.
  • அதை தான் யோவான் சொல்கிறார். 

தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
 -வெளிப்படுத்தல் 1 : 16
  • நட்சத்திரங்கள் Pastors ஆகிய மேய்ப்பரை ஐ குறிக்கிறது. 
  • 7 சபையின் Pastors ஐ குறிக்கிறது. 
  • தேவ ஊழியர்களை தேவன் தன் வலது கரத்தில் வைத்திருக்கிறார். 
  • அதை இந்த அதிகாரத்தின் கடைசி வசனத்தில் காண்கிறோம். 
இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; 
  • தேவவசனத்தைக் குறிக்கிறது. 
  • அப்படியென்றால் வார்த்தை என்ன செய்கிறது.
  • அது நம்மை வெட்டும்.
  • சபையை ஆண்டவர் நியாயந்தீர்க்கிற வேளையிலே, ஆண்டவர் வார்த்தையை மட்டுமே பேசுவார். 
அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
  • யோவானுக்கு அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை.
  • அவர் அவ்வளவு மகிமை நிறைந்தவர். 

நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
 -வெளிப்படுத்தல் 1 : 17
  • இயேசு மனிதனாக இருந்த போது அவர் கூடவே இருந்த யோவான், அவர் மார்பிலே சாய்ந்திருந்த யோவான், இப்போது அவர் தேவத்துவத்தைக் கண்டு செத்தவனைப் போல விழுந்தான். 
  • அந்த அளவுக்கு இயேசு மகிமையுள்ளவராக இருக்கிறார். 
  • ஆனால் இயேசு பயப்படாதே, நான் உயிரோடு இருக்கிறேன் என்கிறார். 

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
 -வெளிப்படுத்தல் 1 : 18
  • கர்த்தர் சதா காலங்களிலும் உயிரோடு இருப்பவர்.
  • மரித்து, உயிர்த்தெழுந்தவர் மனுஷகுமாரனாகிய இயேசு.
  • அந்த இயேசுவிடம் அனைத்து திறவுகோல்களும் இருக்கிறது. 

நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
 -வெளிப்படுத்தல் 1 : 19
  • கர்த்தர் யோவானிடம் அவன் கண்ட அனைத்தையும் எழுத சொல்லி கட்டளையிடுகிறார். 

என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.  
 -வெளிப்படுத்தல் 1 : 20
  • ஏழு நட்சத்திரங்கள் - ஏழு சபைகளின் தூதர்கள் (Pastors).
  • ஏழு குத்துவிளக்குகள் - ஏழு சபைகளாம் (Churches).
  • கர்த்தர் யோவானுக்கு காண்பித்த அனைத்தையும் எழுத சொல்கிறார். 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4