பாவம், மீறுதல்,அக்கிரமம்
பாவம், மீறுதல்,அக்கிரமம் பாவம் - Sin அடிப்படை அர்த்தம்: “இலக்கை தவறுதல்” (Missing the mark). தேவனுடைய பரிசுத்தமான தரத்தை அடையாமல் தவறுவது தான் பாவம். பாவம் என்பது கொலை, திருட்டு, விபச்சாரம் இது மாத்திரம் அல்ல. கிறிஸ்துவின் இயல்பை பிரதிபலிக்காத எதுவுமே பாவம் தான். பெருமை, சுயநலம், கோபம், மன்னிக்காமை, சந்தேகம், கடுஞ்சொற்கள், பொருளாசை, மாம்ச இச்சைகள் இவை அனைத்தும் கிறிஸ்துவிடம் காணப்படவில்லை. எனவே அது உங்களிடமும் காணப்படக்கூடாது. அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். -1 யோவான் 2 : 6 இதெல்லாம் ஒருபுறம் இருக்க, முக்கியமாக ஒவ்வொரு முறை நீங்கள் பாவம் செய்யும் போதும், உங்களுக்கு தேவன் பரிசாக கொடுத்த மகிமையை இழந்து கொண்டே வருகிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் பாவ எண்ணங்களுக்கு NO சொல்லும் போது, மகிமை மேல் மகிமை அடைகிறீர்கள் என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். -யோவ...