பாவம், மீறுதல்,அக்கிரமம்

பாவம், மீறுதல்,அக்கிரமம் 

பாவம் - Sin
  • அடிப்படை அர்த்தம்: “இலக்கை தவறுதல்” (Missing the mark).
  • தேவனுடைய பரிசுத்தமான தரத்தை அடையாமல் தவறுவது  தான் பாவம்.
  • பாவம் என்பது கொலை, திருட்டு, விபச்சாரம் இது மாத்திரம் அல்ல. கிறிஸ்துவின் இயல்பை பிரதிபலிக்காத எதுவுமே பாவம் தான். 
  • பெருமை, சுயநலம், கோபம், மன்னிக்காமை, சந்தேகம், கடுஞ்சொற்கள், பொருளாசை, மாம்ச இச்சைகள்  இவை அனைத்தும் கிறிஸ்துவிடம் காணப்படவில்லை. எனவே அது உங்களிடமும் காணப்படக்கூடாது. 
அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
 -1 யோவான் 2 : 6
  • இதெல்லாம் ஒருபுறம் இருக்க, முக்கியமாக ஒவ்வொரு முறை நீங்கள் பாவம் செய்யும் போதும், உங்களுக்கு தேவன் பரிசாக கொடுத்த மகிமையை இழந்து கொண்டே வருகிறீர்கள். 
  • ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் பாவ எண்ணங்களுக்கு NO சொல்லும் போது, மகிமை மேல் மகிமை அடைகிறீர்கள் என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். 
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
 -யோவான் 17 : 22

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.  
 -2 கொரி 3 : 18

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
 -ரோமர் 3 : 23

எதெல்லாம் பாவம்?
நியாயப்பிரமாணத்தை மீறுகிறது பாவம் (1 யோவான் 3:4)
நன்மை செய்வதை புறக்கணிப்பது பாவம் (யாக் 4:17)
விசுவாசத்தினால் வராத யாவுமே பாவம் (ரோமர் 14:23)
எல்லா அநீதியும் பாவம் (1 யோவான் 5:17)

உதாரணம்: 
பாவங்கள் இரு வகைப்படும். ஒன்று இயற்கையாக வரக்கூடிய ஒன்று. (ஆதாம் மூலம்) இன்னொன்று நாம் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒன்று. (உலகத்துக்கேற்றபடி)

மீறுதல் - Transgression
  • அடிப்படை அர்த்தம்: எல்லையை மீறுதல், நியாயப்பிரமாணத்தை மீறுதல், விரோதம்.
  • தேவன் கொடுத்த எல்லையைத் தெரிந்தே மீறுவது தான் மீறுதல்.
பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
 -1 யோவான் 3 : 4

தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
 -சங்கீதம் 51 : 1

உதாரணம்: ஆதாம், ஏவாள் தேவன் “இந்த மரத்தின் கனியைப் புசிக்காதே” என்று சொன்னதைத் தெரிந்தும் அதைப் புசித்தார்கள் — அது மீறுதல்.

அக்கிரமம் / அநியாயம் - Iniquity 

  • அடிப்படை அர்த்தம்: வளைந்த, மாறிய, தீய வழியில் வாழ்தல்.
  • முன்னதாக திட்டமிட்டு மீண்டும் மீண்டும் செய்யும் பாவம்.

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
 -ஏசாயா 53 : 6
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
 -மத்தேயு 7 : 23

 உதாரணம்: பொய் பேசுவது, ஏமாற்றுவது, திருடுவது ஆகியவற்றை தொடர்ந்து செய்து, அது வாழ்க்கை வழக்காக ஆகிவிட்டால் அது அக்கிரமம்.

சுருக்கமாக

  • பாவம் = தவறுதல் (தெரியாமல், பலவீனத்தால்).
  • மீறுதல் = தெரிந்தும் மீறுதல் (எல்லையை கடந்து செயல்).
  • அக்கிரமம் = பழக்கமாகிய பாவம் (திட்டமிட்டு, மீண்டும் மீண்டும் செய்து, குணமாக மாறுதல்).

நற்செய்தி:
பாவம், மீறுதல், அக்கிரமம், எதுவாக இருந்தாலும் — இயேசுவின் இரத்தம் அனைத்தையும் சுத்தமாக்கும் (ஏசாயா 1:18, 1 யோவான் 1:7).

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)
 -சங்கீதம் 32 : 5 

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை(பாவத்திற்காக) அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
 -ஏசாயா 53 : 5

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?