ஏன் கர்த்தர் ஏசாவை வெறுத்தார்?

ஏன் கர்த்தர் ஏசாவை வெறுத்தார்?

நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
 -மல்கியா 1 : 2
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
 -மல்கியா 1 : 3

"யாக்கோபை நான் சிநேகித்தேன், ஏசாவையோ வெறுத்தேன்" என்று தேவன் சொல்கிறார். தேவன் அனைவரையும் நேசிக்கிறார், பின் ஏன் அவர் அப்படி சொல்ல வேண்டும். 

In Hebrew - Senuah, it’s a Hyperbolic expression 

எபிரேய மொழியில் சிநேகித்தேன், வெறுத்தேன் என்று குறிப்பிடப்படுவது ஒரு உணர்ச்சி அல்ல; இது உவமையாக கூறப்படுகிறது.  "தேர்ந்தெடுத்தார்" vs "தேர்ந்தெடுக்கவில்லை" என்பதைக் குறிக்கிறது. (In Hebrew Idiom, love and hate often mean choosing vs not choosing not emotionally affection vs hostility).

உதாரணம்: 

யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
 -லூக்கா 14 : 26

இங்கு வெறுக்காவிட்டால் " என்று சொல்வதும் ஒரு உவமையாக (idiom) தான். அதன் அர்த்தம் "குறைவாக நேசிக்க" என்பதே!! எல்லாவற்றையும் விட, தேவனை அதிகமாக நேசிப்பதாகும். 

  • யாக்கோபும் ஏசாவும் பிறக்கும் முன்னரே தேவன் சொன்னார்: மூத்தவன் இளையவனை சேவிப்பான்” என்று (ஆதியாகமம் 25:23).
  • இது யார் நல்லவன், யார் கெட்டவன் என்பதற்காக அல்ல; தேவன் தம் உடன்படிக்கையை யாக்கோபின் சந்ததியால் நிறைவேற்ற விரும்பினார். அவ்வளவு தான். 
  • ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை (birthright) அவமதித்தான் (ஆதி 25:34). அது சாதாரண சொத்து அல்ல; தேவனுடைய உடன்படிக்கை ஆசீர்வாதம் அதில் இருந்தது.
  • எபிரேயர் 12:16 — அவன் “சீர்கெட்டவன்” என்று அழைக்கப்படுகிறான்.
  • யாக்கோபு ஏமாற்றினான்; ஆனாலும் அவன் தேவனுடைய ஆசீர்வாதத்தை விரும்பினான்.
  • தேவன் அவனை ஒழுக்கமாக்கி (ஆதி 32 — தேவனுடன் போராடியது) “இஸ்ரவேல்” ஆக்கினார்.

ஆக, “அன்பும் வெறுப்பும்” என்பது யார் நல்லவன்/கெட்டவன் என்ற விஷயம் அல்ல, தேவன் தம் மீட்பு திட்டத்தை யாரால் நடத்த விரும்பினார் என்பதே.

பவுல் நேராக மல்கியாவை மேற்கோள் காட்டி விளக்குகிறார் (ரோமர் 9)

  • மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் (ரோமர் 9:12).
  • பிறக்கும் முன்பே, அவர்கள் எதையும் செய்யாமல் இருந்தபோதே, தேவன் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
  • பலருக்கும் இந்த கேள்வி இருந்திருக்கும்: “அது அநியாயமல்லவா?” என்று.
  • கர்த்தர் மோசேயிடம் சொன்னதை பவுல் குறிப்பிடுகிறார் எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் (ரோமர் 9:15).
  • அதாவது, தேவனுடைய தேர்வு அவருடைய கிருபையால் மட்டுமே.
  • யாக்கோபின் சந்ததி மூலம் தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (இஸ்ரவேல் → இயேசு).
  • ஏசாவின் வம்சம் (ஏதோம்) அந்த வழிக்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
  • பவுல் வலியுறுத்துவது என்னவென்றால் இது மனிதனின் கிரியையால் வரும் தகுதி அல்ல, தேவனுடைய கிருபை மற்றும் திட்டத்தால் வரும் தகுதி. 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?