மாற்கு பவுலோடு ஊழியம் செய்தாரா?

அப்போஸ்தலர் 15:37 — “இந்த மாற்கு யார்?”

அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.

 -அப்போஸ்தலர் 15 : 37 


யார் இந்த மாற்கு

  • இங்கு குறிப்பிடப்படும் மாற்கு என்பவர் “யோவான் மாற்கு (John Mark)” ஆவார்.
  • இந்த மாற்கு, எருசலேமில் இருந்த ஒரு விசுவாசி.

அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

 -அப்போஸ்தலர் 12 : 12

  • மாற்குவின் தாய் மரியாள்.
  • அவர்களுடைய வீடு ஆரம்ப சபையின் கூடுகைக்கான இடமாக இருந்தது.
  • பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது விசுவாசிகள் அந்த வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். 
  • அதனால் மாற்கு சிறுவயதிலிருந்தே சபை சூழலில் வளர்ந்தவர்.

மாற்கு பவுலுடன் எப்போது சென்றார்?


பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.  

 -அப்போஸ்தலர் 12 : 25


பவுலும் பர்னபாவும் முதல் மிஷனரி பயணத்திற்கு சென்றபோது மாற்கு அவர்களுடன் சென்றார்


சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.

 -அப்போஸ்தலர் 13 : 5


பிரச்சனை எங்கே ஏற்பட்டது?


பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

 -அப்போஸ்தலர் 13 : 13

  • மாற்கு, பயணத்தின் நடுவில் குழுவை விட்டு திரும்பினார்.
  • ஏன் திரும்பினார் என்று வேதாகமம் காரணம் சொல்லவில்லை.
  • இது பவுலுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

அப்போஸ்தலர் 15:37-39 இல் என்ன நடந்தது?

  • பவுல் சொன்னார், “மாற்குவை கூட்டிக்கொண்டு போக வேண்டாம்” என்று.
  • ஏனெனில், முன்பு அவர் ஊழியத்தை விட்டுச் சென்று விட்டார். 
  • மீண்டும் அதே பிரச்சனை வருமோ என்று பவுல் நினைத்தார்.
  • ஆனால் பர்னபா, மாற்குவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க விரும்பினார்.
  • ஏனென்றால் பர்னபாவுக்கு மாற்கு சொந்தம். 
  • பர்னபாவினுடைய அக்கா பையன் தான் மாற்கு. 
Colossians 4:10 Aristarchus my fellowprisoner saluteth you, and Marcus, sister's son to Barnabas, (touching whom ye received commandments: if he come unto you, receive him;)
  • இதனால், பர்னபா + மாற்கு → கப்பல் ஏறி சீப்புரு சென்றார்கள்.
  • பவுல் + சீலா → வேறு பாதையில் சென்றார்கள்.

பிற்காலத்தில் பவுல் மாற்குவுடன் மீண்டும் ஊழியம் செய்தார். எப்படி? 


என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.

 -கொலோசெயர் 4 : 10

  • மாற்குவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. 
  • இங்கு பவுல் மாற்குவை தன்னுடன் இருப்பவராக குறிப்பிடுகிறார்.
  • அதாவது, ஒரு காலத்தில் பவுல் மறுத்தவர், பின்னர் பவுலின் ஊழிய நண்பராக மாறினார்.

என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

 -பிலேமோன் 1 : 24

  • இங்கு பவுல் அவரை “உடன் ஊழியக்காரர்” என்று அழைக்கிறார்.

லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
 -2 தீமோத்தேயு 4 : 11

  • இது பவுலின் கடைசி நாட்களில் எழுதப்பட்டது.
  • ஒரு காலத்தில்: “அவனை கூட்டிக்கொண்டு போக வேண்டாம்” என்று சொன்ன பவுலே,
  • பின்னர்: “அவன் எனக்கு பிரயோஜனமுள்ளவன்”என்று சொல்கிறார்.

மாற்கு பேதுருவுடனும் ஊழியம் செய்தார்?

  • மாற்கு பேதுருவுடன் நெருக்கமாக ஊழியம் செய்தார்.
  • பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் மாற்கு சுவிசேஷத்தை எழுதினார் என்று ஆரம்பகால கிறிஸ்தவ பாரம்பரியம் கூறுகிறது.
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
 -1 பேதுரு 5 : 13

  • பேதுரு மாற்குவை “என் மகன்” என்று அழைக்கிறார்.

ஆவிக்குரிய பாடம்

  • ஒரு தோல்வி வாழ்க்கையின் முடிவு அல்ல. மாற்கு ஒரு கட்டத்தில் தோல்வியடைந்தார். ஆனால் தேவன் அவரை மீண்டும் எழுப்பினார்.
  • மனிதர்கள் மறுக்கும் இடத்தில் தேவன் மீண்டும் உருவாக்குகிறார்- பவுல் ஒரு நேரத்தில் மாற்குவை ஏற்கவில்லை. ஆனால் தேவன்: பர்னபா மூலம் அவனுக்கு உதவி செய்தார். பின்னர் பவுலுக்கும் பயனுள்ளவராக மாற்றினார்.
  • முதிர்ந்த விசுவாசி மற்றவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பார். பர்னபாவின் பெயரின் அர்த்தம்:“ஆறுதலின் மகன்” (Son of encouragement). அவர் மாற்குவை கைவிடவில்லை.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்