சேனைகளின் கர்த்தர்

சேனைகளின் கர்த்தர் என்றால் என்ன? 

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
 -ஏசாயா 6 : 3

அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
 -1 சாமுவேல் 17 : 45

தமிழில் சேனைகளின் கர்த்தர் (படைகளின் ஆண்டவர்)
ஆங்கிலத்தில் LORD of HOSTS
எபிரேய மொழியில் YAHWEH SABAOTH
  • “சேனைகளின் கர்த்தர்” என்றால் எல்லா சேனைகளுக்கும் தலைவரும், ஆண்டவருமான தேவன். 
  • “சேனை” என்பது ஜனங்களின் திரள்கூட்டம். படைகள், இராணுவங்கள் ஆகும். (Army)
  • பரலோக சேனை - தேவ தூதர்கள் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்கள். (சங்கீதம் 103 : 20)
  • வானமும், பூமியும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகின்றன.
  • தேவனின் முழுமையான அதிகாரத்தைக் குறிக்கிறது. 
உதாரணம்:
  • உதாரணமாக ஒரு நாட்டின் ஜனாதிபதி தனியாகப் போராடுவதில்லை. 
  • அவருக்கு கீழ் ஒரு பெரிய இராணுவம் இருக்கிறது.
  • அவருடைய கட்டளைக்கு கீழ் இராணுவம், கடற்படை, கப்பற்படை, பாதுகாப்புப் படைகள் இருக்கும்.
  • ஜனாதிபதி “யுத்தம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டால் அவருக்கு கீழுள்ள படைகள் செயல்படும். 
  • அதேப் போல் கர்த்தரே தலைமை அதிகாரி. மற்ற அனைத்தும் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்பட்டு இருக்கின்றன. 
முழு விளக்கம்:
  • “சேனைகளின் கர்த்தர்” என்று நாம் உச்சரிக்கும் போது, நாம் எதிரியினிடத்தில் “எனக்கு எதிராக எத்தனை பேர் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன்.  ஏனென்றால் என்னோடு இருப்பவர் “சேனைகளின் கர்த்தர்” என்ற சொல்லுகிறோம். 
  • “நான் யார்” என்பதை விட, நான் யாருடைய அதிகாரத்தின் கீழ் நாம் நிற்கிறேன் என்பதே முக்கியம். 
நான் தனியாக இல்லை
என்னோடு கர்த்தர் இருக்கிறார். 
கர்த்தருடைய அதிகாரத்தின் கீழ் சேனைகள் இருக்கின்றன
எனவே எதிரியின் தொகையோ, பலமோ முக்கியமல்ல
என்னோடு இருக்கும் தேவனுடைய மகத்துவம் தான் முக்கியம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்