ஜாமங்கள் மற்றும் மணி வேளைகள்

ஜாமங்கள் மற்றும் மணி வேளைகள்

ஒரு நாளுக்கு 24 மணி நேரம்.


12 மணி நேரம் இரவு (4*3=12)

  • 12 மணி நேரம் இரவு. 
  • இந்த 12 மணி நேரத்தை தான் 4 ஜாமங்களாக பிரித்திருக்கின்றனர். 
  • ஜாமம் என்பது இரவு நேரத்தைப் பிரித்து காட்டும் காலப்பகுதி ஆகும். 
  • 4 ஜாமங்கள் அதாவது ஒவ்வொரு 3 மணி நேரத்தை கொண்டு கணக்கிடுவார்கள் (4*3=12).

அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் (1) சாயங்காலத்திலோ, (2) நடுராத்திரியிலோ, (3) சேவல் கூவும் நேரத்திலோ, (4) காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.

 -மாற்கு 13 : 35


12 மணி நேரம் பகல் (12*1=12)

  • 12 மணி நேரம் பகல். 
  • பகல் நேரத்தை யூதர்கள் 4 ஜாமங்களாக பிரிக்காமல், 12 வேளைகளாக பிரித்திருக்கின்றனர். (அதாவது ஒன்றாம் மணி வேளை, இரண்டாம் மணி வேளை etc).
  • ஆனால் இதிலும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை யூதர்கள் ஜெபித்தனர். 
  • சில இடங்களில் அதை ஜெப வேளை என்றும் அழைக்கின்றனர். (4*3=12)

இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.

 -யோவான் 11 : 9


இதை பைபிளின் வசனங்களை கொண்டு புரிந்து கொள்ளலாம். 


12 மணி நேரம் இரவு (4*3=12) 

முதலாம் ஜாமம் (சாயங்காலம் 6:00pm to 09:00pm)

அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.

 -லூக்கா 24 : 29


சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.

 -மாற்கு 6 : 47


ஜெபம்: கர்த்தாவே, இன்று என்னோடு இருந்ததற்காக நன்றி. இன்று நடந்த அனைத்தையுமர உம்மிடம் ஒப்படைக்கிறேன். என் பாவங்களை மன்னியும். என் குடும்பத்தையும், வீட்டையும் காத்தருளும். இந்த இரவை உமது சமாதானத்திலும், பாதுகாப்பிலும் நடத்தும். 


இரண்டாம் ஜாமம் (நடுராத்திரி 9:00pm to 12:00 am)


என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

 -சங்கீதம் 63 : 6

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

 -அப்போஸ்தலர் 16 : 25


ஜெபம்: கர்த்தாவே, இந்த இந்த இரவு நேரத்ததில் உம்மைத் தேடுகிறேன். என் குடும்பத்தையும், என் வீட்டையும் உமது கைகளில் ஒப்படைக்கிறேன். எல்லா பயத்தையும், கவலையையும் நீக்கி, உமது சமாதானத்தைத் தாரும். உமது சத்தத்தைக் கேட்கும் இருதயத்தை எனக்குத் தாரும். 


மூன்றாம் ஜாமம் (சேவல் கூவும் வேளை 12:00am to 3:00am)


நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 7 : 19


ஜெபம்: கர்த்தாவே, எந்தக் கட்டுகளும் என்னையும், என் குடும்பத்தையும் ஆளாதபடி விடுதலை தாரும். எல்லா பயத்தையும் உடைத்து, உம்மைத் துதிக்கும் விசுவாசத்தைத் தாரும். சிறையில் இருப்பவர்களுக்கும், துன்பப்படுகிறவர்களுக்கும் விடுதலை தாரும். 


நான்காம் ஜாமம் (அதிகாலை 3:00am to 6:00am) 


இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

 -மத்தேயு 14 : 25

அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

 -மாற்கு 1 : 35


ஜெபம்: கர்த்தாவே, இந்த புதிய நாளில் உம்மை முதலில் தேடுகிறேன். என் வாழ்க்கையின் புயல்களுக்கு நடுவிலும் பயப்படாமல் உம்மை நம்பச் செய்யும். இன்று நான் நடக்க வேண்டிய வழியை காண்பியும். உமது பிரசன்னத்தோடு என்னை நடத்தும். 


12 மணி நேரம் பகல் (12*1=12)

முதலாம் மணி வேளை (6:00am to 7:00am)

பைபிள் குறிப்பு இல்லை


இரண்டாம் மணி வேளை (7:00am to 08:00am)

பைபிள் குறிப்பு இல்லை


மூன்றாம் மணி வேளை (8:00am to 09:00am)

நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.

 -அப்போஸ்தலர் 2 : 15

  • இந்த சம்பவத்தில் பெந்தெகொஸ்தே நாளன்று ஒருமனப்பட்டு அனைவரும் கூடியிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் அந்த இடத்தை நிரப்பினார் என்று வாசிக்கிறோம். 
  • எனவே யூதர்களுக்கு இது முதலாம் ஜெப வேளை. 
ஜெபம்: கர்த்தாவே, இன்று என் சித்தத்தின்படி அல்ல, உமது சித்தத்தின்படி நடக்க என்னை நடத்தும். பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும். இன்று நான் பேச வேண்டிய வார்த்தைகளையும், செய்ய வேண்டிய காரியங்களையும் வெளிப்படுத்தும். 

நான்காம் மணி வேளை (09:00am to 10:00am)

பைபிள் குறிப்பு இல்லை


ஐந்தாம் மணி வேளை (10:00am to 11:00am)

பைபிள் குறிப்பு இல்லை


ஆறாம் மணி வேளை (11:00am to 12:00pm)

மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்துவருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.

 -அப்போஸ்தலர் 10 : 9

  • “ஜெபம் பண்ணும்படி” - எனவே யூதர்களுக்கு இது இரண்டாம் ஜெப வேளை. 
ஜெபம்: கர்த்தாவே, நான் எடுக்க வேண்டிய ஒவ்வொரு முடிவிலும் உமது ஞானத்தைத் தாரும். என் சுயபுத்தியை சாராமல் உம்மை நம்பச் செய்யும். இன்று நான் செய்யும் வேலைகளையும், என் கைகளின் கிரியைகளையும் ஸ்திரப்படுத்தும். 

ஏழாம் மணி வேளை (12:00pm to 1:00pm)

அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்.

 -யோவான் 4 : 52


எட்டாம் மணி வேளை (1:00pm to 02:00pm)

பைபிள் குறிப்பு இல்லை


ஒன்பதாம் மணி வேளை (02:00pm to 03:00pm)

ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.

 -அப்போஸ்தலர் 3 : 1

    • எனவே யூதர்களுக்கு இது மூன்றாம் ஜெப வேளை. 
    ஜெபம்: கர்த்தாவே, உமது முகத்தைத் தேடுகிறேன். என் குடும்பத்திற்காகவும், நோயாளிகளுக்காகவுமல, தேவையுள்ஏவர்களுக்காகவும் பரிந்து பேசுகிறேன். சுகம், விடுதலை, இரட்சிப்பு தேவைப்படுகிறவர்களை நினைத்தருளும். 


    பத்தாம் மணி வேளை  (3:00pm to 4:00pm)

    அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

     -யோவான் 1 : 39


    பதினொன்றாம் மணி வேளை (4:00pm to 5:00pm)

    பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

     -மத்தேயு 20 : 6


    பன்னிரெண்டாம் மணி வேளை (5:00pm to 6:00pm)

    பைபிள் குறிப்பு இல்லை. 

    • எனவே யூதர்களுக்கு இது நான்காம் ஜெப வேளை. 
    ஜெபம்: கர்த்தாவே, இன்று என்னோடு இருந்த உமது கிருபைக்காக நன்றி. நான் முடிக்க வேண்டிய காரியங்களை உமது கைகளில் ஒப்படைக்கிறேன். இன்னும் உம்மை அறியாதவர்களை இரட்சிப்புக்கு அழைத்தருளும். என் உழைப்பை ஸ்திரப்படுத்தும். இந்த நாளின் மீதமுள்ள நேரத்தையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். 

    Comments

    Popular posts from this blog

    உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

    ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

    ஆவி, ஆத்துமா, சரீரம்