பவுலின் நிரூபங்களில் - அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி
பவுலின் நிரூபங்களில் - அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி
- ரோமர்
- 1 கொரிந்தியர்
- 2 கொரிந்தியர்
- கலாத்தியர்
- எபேசியர்
- பிலிப்பியர்
- கொலோசெயர்
- 1 தெசலோனிக்கேயர்
- 2 தெசலோனிக்கேயர்
- 1 தீமோத்தேயு
- 2 தீமோத்தேயு
- தீத்து
- பிலேமோன்
பவுலின் நிருபங்களின் காலவரிசை
பவுலின் நிருபங்கள் பொதுவாகக் கருதப்படும் காலவரிசையில்:
- கலாத்தியர் — கி.பி. 48–49
- 1 தெசலோனிக்கேயர் — கி.பி. 50–51
- 2 தெசலோனிக்கேயர் — கி.பி. 51–52
- 1 கொரிந்தியர் — கி.பி. 54–55
- 2 கொரிந்தியர் — கி.பி. 55–56
- ரோமர் — கி.பி. 56–57
- எபேசியர் — கி.பி. 60–62
- பிலிப்பியர் — கி.பி. 60–62
- கொலோசெயர் — கி.பி. 60–62
- பிலேமோன் — கி.பி. 60–62
- 1 தீமோத்தேயு — கி.பி. 62–64
- தீத்து — கி.பி. 63–65
- 2 தீமோத்தேயு — கி.பி. 66–67
இப்போது இந்த வரிசையில் பவுல் தன்னை எவ்வாறு விவரிக்கிறார் என்பதை கவனியுங்கள்.
மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,
-கலாத்தியர் 1 : 1
நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.
-1 கொரி 15 : 9
பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
-எபேசியர் 3 : 8
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
-1 தீமோத்தேயு 1 : 15
- அவர் கிறிஸ்துவுடன் நெருங்கி நடந்துகொண்டே போகப் போக, தன்னைப் பற்றிய பெருமை குறைந்தது. கிறிஸ்துவைப் பற்றிய மகிமை பெருகியது.
முடிவுரை:
பவுலின் வாழ்க்கையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்:
“நான் சிறுக வேண்டும்; கிறிஸ்து பெருக வேண்டும்.”
ஆரம்பத்தில்:
“நான் அப்போஸ்தலன்.”
பின்னர்:
“அப்போஸ்தலர்களில் சிறியவன்.”
அதன்பின்:
“பரிசுத்தவான்களில் சிறியவன்.”
இறுதியில்:
“பாவிகளில் பிரதானமானவன்.”
- இது மனச்சோர்வு அல்ல.
- இது தாழ்வு மனப்பான்மையும் அல்ல.
- நான் என் பலவீனத்தை ஒப்புக்கொள்ளும்போது, அவருடைய வல்லமை வெளிப்படுகிறது.
- நான் என்னை வெறுமையாக்கும்போது, அவர் என்னை நிரப்புகிறார்.
- நான் என்னை தாழ்த்தும் போது , அவர் உயர்த்துகிறார்.
Comments
Post a Comment