சத்தியம் என்னும் இடைக்கச்சை

சத்தியம் என்னும் இடைக்கச்சை

சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
 -எபேசியர் 6 : 14
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
 -எபேசியர் 6 : 15
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
 -எபேசியர் 6 : 16
இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
 -எபேசியர் 6 : 17

மேற்கண்ட வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசியின் ஆவிக்குரிய ஆயுதங்களை பற்றி விளக்குகிறார். அவையாவன

  1. சத்தியம் என்னும் கச்சை - Belt of truth 
  2. நீதியென்னும் மார்க்கவசம் - Breastplate of Righteousness
  3. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை - Shoes of Peace
  4. விசுவாசமென்னும் கேடகம் - Shield of Faith
  5. இரட்சணியமென்னும், தலைச்சீரா - Helmet of Salvation
  6. தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - Sword of the Spirit - Word of God

உலக யுத்தம்:

உலக யுத்தத்தில், 

  • மார்க்கவசம் என்பது எதிரிகள் எய்யும் அம்பில் இருந்து காத்துக் கொள்ள உதவும். 
  • பாதரட்சை யுத்தத்தில் ஓடுவதற்கு உதவியாக இருக்கும். 
  • கேடகம் தன்னை தற்காத்து கொள்ள உதவும்.
  • தலைச்சீரா தலையில் அடிபடாமல் காக்கும். 
  • பட்டயம் மற்றவர்களை வெட்ட உதவும். 
  • ஆனால் யுத்தத்திற்கு நேரடி சம்பந்தமே இல்லாத இடைக்கச்சை எதற்கு கொடுக்கப்பட்டுள்ளது? 

உலக யுத்தத்தில் இடைக்கச்சை எதற்கு?

ஒரு ரோமப் போர்சேவகனுக்கு, இடைக்கச்சை என்பது 

  • பட்டயத்தை நிலையாகப் பிடித்து வைக்கவும்,
  • மார்க்கவசத்தைப் பாதுகாக்கவும்,
  • Free ஆக நடமாடுவதற்காகவும்,  
  • மேலங்கியை இறுக்கமாக வைத்திருப்பதற்காகவும்,
பயன்பட்டது. 

ஆவிக்குரிய யுத்தத்தில் இடைக்கச்சை எதற்கு?

  • ஆவிக்குரிய ரீதியில் பார்க்கும் போது இங்கு ஒரு குழப்பம் ஏற்படுகிறதே! 
  • என்னவென்றால் சத்தியம் என்றால் தேவ வார்த்தை.
  • ஆனால் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வார்த்தை என்று தனியாக ஒரு ஆயுதம் கூறப்பட்டுள்ளதே!
  • அப்படியென்றால் சத்தியம் என்பது என்ன?  
  • சத்தியம் என்ற கச்சைக்கும், ஆவியின் பட்டயத்திற்கும் என்ன வேறுபாடு. கீழே காண்போம். 

சத்தியம் என்றால் என்ன?

  • சத்தியம் என்பது அடிப்படை (foundation/stability/basic principles). இதை கிரேக்க மொழியில் Logos என்று குறிப்பிடுவார்கள்.  
  • Logos என்பது தேவனின் முழுமையான செய்தி (the full message of God - often written or eternal truth)
உதாரணமாக சில பைபிள் வசனங்களை கீழே காண்போம். 

1) சத்தியம் தேவனில் வேரூன்றியுள்ளது.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

 -யோவான் 14 : 6


2) சத்திய ஆவியானவர் நமக்குள் வாசம் செய்கிறார்.


உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

 -யோவான் 14 : 17


3) வேத வசனமே சத்தியம்.

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
 -யோவான் 17 : 17

4) சத்தியத்திற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சத்தியம் நம்முடைய விருப்பத்திற்கேற்ப மாறாது.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

 -ரோமர் 12 : 2


5) சத்தியம் உலகின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்குகிறது. 


சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

 -யோவான் 8 : 32


6) சத்தியம் மாறாதது.


புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.

 -ஏசாயா 40 : 8


7) சத்தியம் (வார்த்தையானவர்) மாறாதவர்.


இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

 -எபிரேயர் 13 : 8


8) சத்தியம் அறிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, கைகொண்டு வாழ்வதற்கு


அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.

 -எபேசியர் 4 : 15


9) சத்தியத்தினால் நிறைந்தவர் (நித்திய சத்தியம் - Eternal Truth).


அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

 -யோவான் 1 : 14


10) அடிப்படை சத்தியம்.


கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

 -கொலோசெயர் 3 : 16

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

 -கொலோசெயர் 3 : 17

தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம் என்றால் என்ன?

  • ஆவியின் பட்டயம் என்பதை தேவனுடைய வார்த்தையைச் செயல்பூர்வமாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. 
  • உதாரணமாக இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்படும் போது “எழுதப்பட்டிருக்கிறதே” என்று மேற்கொள் காட்டினார். 
  • அது தான் இங்கு சொல்லப்படுகிறது. 
  • இதை கிரேக்க மொழியில் Rhema என்று குறிப்பிடுவார்கள். 
  • Rhema என்பது பேசப்பட்ட அல்லது சொல்லப்பட்ட அல்லது உபயோகிப்பட்ட வார்த்தை ( a specific word spoken or revealed for a moment or situation)

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
 -மத்தேயு 4 : 4

ஒரு ஒப்பீடு - Comparison

சத்தியம் எனும் கச்சை = கணிதக் கோட்பாடுகளை ஆழமாக அறிதல் (Belt of truth = Knowing math principles deeply)


ஆவியின் பட்டயம் = அந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்த்தல் (Sword of the Spirit = Solving problems using those principles)

முடிவுரை

எனவே யுத்தத்தில் கச்சை என்ற அடிப்படை வர்க்கம் இல்லையென்றால், பட்டயம் என்ற ஆயுதத்தை வைக்கவும் முடியாது, அதை தக்க சமயத்தில் பயன்படுத்தவும் முடியாது. 
அதேப் போல சத்தியம் என்ற foundation principles, அதாவது எழுதப்பட்ட தேவ வார்த்தை நம் இருதயத்தில் இல்லையென்றால், தேவ வார்த்தை எனும் பட்டயத்தை எடுத்து தக்க சமயத்தில் நம்மால் உபயோகிக்க முடியாது. கச்சை நேரடியாக யுத்தத்திற்கு பயன்படாவிட்டலும், அதுவே யுத்தத்திற்கு ஆணி வேர். அதேப் போல தான் சத்தியமும். நமக்கு வேத வார்த்தை சாதாரணமானதாக, உபயோகமற்றதாக தோன்றலாம். ஆனால் அந்த உயிருள்ள வார்த்தையின் வல்லமை பெரியது. நமது ஆவிக்குரய யுத்தத்தில் அந்த ஆயுதம் தான் ஆணி வேர். 

இதுவே அந்த வெளிப்பாடு. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2