லூக்கா சுவிசேஷம் - கேள்விகள்

GRACE MISSION CHURCH

(AYYAMPALAYAM – ALAMPATTI – KAVUNDAMPALAYAM)

BIBLE QUIZ EXAM – லூக்கா

NAME:                                            BRANCH:                                      DATE:

தேர்ந்தெடுத்து எழுதுக:

  1. லூக்கா புத்தகத்தை யார் யாருக்கு எழுதினார்?
    A. லூக்கா - யூதர்களுக்கு 
    B. பவுல் - லூக்காவுக்கு 
    C. லூக்கா - தேயோப்பிலுவுக்கு 
    D. லூக்கா - பவுலுக்கு.

  2. மரியாளுக்கு இயேசு பிறப்பார் என்று அறிவித்த தூதன் யார்?
    A. காபிரியேல் 
    B. மிகாவேல் 
    C. ரபாயேல் 
    D. எலியா

  3. தேவதூதன் மரியாளிடம் தோன்றின போது மரியாளை என்னவென்று அழைத்தார்?
    A. சகோதரியே!  
    B. ராஜாத்தியே 
    C. கிருபை பெற்றவளே! 
    D. அன்பு நிறைந்தவளே!

  4. இஸ்ரவேலின் ஆறுதல் வர காத்திருந்த தேவபக்தியும், நீதியும் நிறைந்த மனிதர் யார்?
    A. சிமியோன் 
    B. மத்தேயு 
    C. பிலிப்பு 
    D. அந்திரேயா

  5. ஆசேர் கோத்திரத்தில் இருந்து வந்த பெண் தீர்க்கத்தரிசி யார்?
    A. மார்த்தாள் 
    B. அன்னாள் 
    C. லிதியா 
    D. பிரிஸ்கில்லா

  6. இயேசுவின் 12 வயதில், அவர் எருசலேம் பண்டிகைக்கு சென்று திரும்பாமல் இருந்த போது, 3 நாளைக்கு பின்பு, மரியாளும், யோசேப்பும் அவர் ஆலயத்தில் யார் நடுவில் அமர்ந்து இருக்க கண்டார்கள்?
    A. மேய்ப்பர் 
    B. போதகர் 
    C. யோசேப்பு  
    D. சிமியோன்

  7. இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
    A. பேதுரு 
    B. யோவான்ஸ்நானன்
    C. அந்திரேயா 
    D. யாக்கோபு

  8. யோவான்ஸ்நானன் எ‌ந்த ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கத்தார்?
    A. மனந்திரும்புதலுக்கேற்ற 
    B. பரிசுத்த ஆவியானவரின் 
    C. அக்கினி 
    D. இரட்சிப்புக்கேற்ற

  9. இயேசுவானவர் ஆவியானவரால் வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது எத்தனை நாட்கள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்?
    A. 30 
    B. 20 
    C. 40 
    D. 10

  10. இயேசு, பிசாசானவன் சோதனை முடிந்த பின்பு ஆவியானவருடைய பலத்தினாலே எங்கு திரும்பிப் போனார்?
    A. பெத்தானியா 
    B. நாசரேத் 
    C. கலிலேயா 
    D. எருசலேம்

  11. இயேசு முதன்முதலில் அழைத்த சீஷர்கள் யாவர்?
    A. பேதுரு, யாக்கோபு, யோவான் 
    B. பேதுரு, அந்திரேயா, யாக்கோபு 
    C. பேதுரு, யோவான், மத்தேயு 
    D. யாக்கோபு, மத்தேயு, அந்திரேயா

  12. மத்தேயுவின் மறுபெயர் என்ன?
    A. தோமா 
    B. லேவி 
    C. லூக்கா 
    D. சிமியோன்
  13. யாரை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்று இயேசு சோல்லுகிறார்?
    A. நீதிமான்களை
    B. பாவிகளை
    C. பரிசேயரை
    D. யூதரை

  14. இயேசு ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று யார் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்?
    A. பரிசேயர்
    B. வேதபாரகர்
    C. வேதபாகரும், பரிசேயரும்
    D. சதுசேயர்

  15. மனுஷகுமாரன் எதற்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்று 6 வது அதிகாரத்தில் சொல்லப்படுகிறது? 
    A. ஆலயத்திற்கும்
    B. நியாயப்பிரமாணத்திற்கும்
    C. ஓய்வுநாளுக்கும்
    D. தீர்க்கத்தரிசிகளுக்கும்

  16. கர்த்தரின் வார்த்தையை கேட்டு நடக்கிற மனுஷன் எதன் மேல் வீட்டை கட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்?
    A. மணல்
    B. தண்ணீர்
    C. கற்பாறை
    D. குவியல்

  17. யாருக்கு பிரியமான வேலைக்காரனை இயேசு குணமாக்கினார்?
    A. நூற்றுக்கு அதிபதி
    B. ஆசாரியர்
    C. பரிசேயர்
    D. மீனவர்

  18. எந்த ஊரில் விதவையின் மகனை இயேசு உயிர்ப்பித்தார்?
    A. கானா
    B. நாயீன்
    C. எரிகோ
    D. பெத்தானியா

  19. பரிசேயனின் வீட்டில் இயேசுவின் பாதத்தில் பரிமளதைலத்தை பூசினவள் யார்?
    A. மரியாள்
    B. பாவியாகிய ஒரு ஸ்திரீ
    C. மார்த்தாள்
    D. அன்னாள்

  20. விதை உவமையில், விதை எதை குறிக்கிறது?
    A. கடுகு விதை
    B. தேவனுடைய வார்த்தை
    C. கோதுமை
    D. பார்லி

  21. கடலில் காற்றையும், கடலையும் அதட்டினவர் யார்?
    A. பேதுரு
    B. இயேசு
    C. யோவான்
    D. யாக்கோபு

  22. “லேகியோன்” என்ற அநேக பிசாசுகள் இருந்த மனிதன் எந்த நாட்டில் இருந்தான்?
    A. சமாரியர்
    B. கெரசேனர்
    C. ரோமர்
    D. மீனவர்

  23. கீழ்க்கண்டவர்களில் ஜெப ஆலயத்தலைவன் யார்?
    A. யாயிரு
    B. நிக்கோதேமு
    C. சகேயு
    D. கொர்நேலியு

  24. இயேசுவின் வஸ்திரத்தை தொட்டு குணமான பெண் எத்தனை ஆண்டுகள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள்?
    A. 12 மாதங்கள்
    B. 8 வருடங்கள்
    C. 12 ஆண்டுகள்
    D. 33 ஆண்டுகள்

  25. 5 அப்பங்கள், 2 மீன்களை கொண்டு 5000 பேருக்கு உணவளித்த அற்புதத்தில் மீதியான துணிக்கைகள் எத்தனை கூடைகள் நிறைய எடுக்கப்பட்டது?
    A. 7
    B. 5
    C. 10
    D. 12

  26. யோவான்ஸநானனை சிரச்சேதம் பண்ணினது யார் ?
    A. ஏரோது
    B. பிலாத்து
    C. அகஸ்து
    D. அந்திப்பா

  27. “நீர் தேவனுடைய கிறிஸ்து” என்று சொன்னவர் யார்?
    A. யோவான்
    B. பேதுரு
    C. தோமா
    D. யாக்கோபு

  28. மறுரூப மலை மீது இயேசுவோடு தோன்றியவர்கள் யார்?
    A. மோசே மற்றும் எலியா
    B. ஆபிரகாம் மற்றும் தாவீது
    C. நோவா மற்றும் சமுவேல்
    D. எசாயா மற்றும் எரேமியா

  29. ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொல்லுகிறார்?
    A. நியாயப்பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்
    B. தான, தர்மம் செய்ய வேண்டும்
    C. தன்னை தான் வெறுத்து சிலுவையை எடுத்து கொள்ள வேண்டும்
    D. பலி செலுத்த வேண்டும்

  30. எவ்வூரார் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?
    A. சமாரியா
    B. எரிகோ
    C. கானா
    D. பெத்தானியா

  1. இயேசு எத்தனை சீஷர்களை இரண்டிண்டு பேராக அனுப்பினார்?
    A. 50
    B. 70
    C. 100
    D. 12

  2. கள்ளர் கையில் அகப்பட்டு காயப்பட்ட மனிதனுக்கு உதவி செய்தது யார்?
    A. ஆசாரியன்
    B. லேவியன்
    C. சமாரியன்
    D. பரிசேயன்

  3. இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்த போது அவரை ஏற்றுக்கொண்டவர்கள் யார்?
    A. மரியாள் மற்றும் மார்த்தாள்
    B. லீதியாள் மற்றும் தொற்காள்
    C. மரியாள் மற்றும் யோவன்னாள்
    D. எஸ்தர் மற்றும் அன்னாள்

  4. எது சரீரத்தின் விளக்காயிருக்கிறது?
    A. இருதயம்
    B. கண்
    C. ஆத்துமா
    D. மூளை

  5. “பறவைகளை பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று கூறியவர் யார்?
    A. பிலிப்பு
    B. இயேசு
    C. பேதுரு
    D. யோவான்

  6. எந்த பாவம் செய்தவன் மன்னிக்கப்படுவதில்லை?
    A. மற்றவர் பொருளை அபகரிக்கிறவன்
    B. மற்றவருக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லுகிறவன்
    C. பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தூஷணஞ்சொல்லுகிறவன்
    D. வேதத்தை சந்தேகிக்கிறவன்

  7. எங்கு கோபுரம் விழுந்து 18 பேரை கொன்றுப் போட்டது?
    A. சாலோம்
    B. எருசலேம்
    C. பெத்லகேம்
    D. சீலோவாம்

  8. எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்த பெண் எத்தனை வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்டிருந்தாள்?
    A. 18
    B. 12
    C. 28
    D. 38

  9. எத்தனை குஷ்டர் குணமாக்கப்பட்டார்கள், ஆனால் ஒருவன் மட்டும் திரும்பி ஸ்தோத்திரம் செலுத்தினான்?
    A. 9
    B. 10
    C. 12
    D. 11

  10. சகேயு எந்த மரத்தில் ஏறி இயேசுவைக் கண்டார்?
    A. ஒலிவ மரம்
    B. காட்டத்தி மரம்
    C. சித்தீம் மரம்
    D. அத்தி மரம்

  11. நீங்கள் எதில் உண்மையாயிராவிட்டால், உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிக்க மாட்டார்கள்?
    A. நீதியான உலகப்பொருளைப்பற்றி
    B. சொந்த உலக விஷயத்தில்
    C. ஆவியக்குரிய காரியங்களில்
    D. அநீதியான உலகப்பொருளைப்பற்றி

  12. யார் தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பில் அடித்துக் கொண்டான்?
    A. பரிசேயன்
    B. சமாரியன்
    C. நூற்றுக்கு அதிபதி
    D. ஆயக்காரன்

  13. இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கானே! என்று இயேசு யாரிடம் சொன்னார் ?
    A. சகேயு
    B. சீமோன்
    C. பேதுரு
    D. யோவான்

  14. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தது யார்?
    A. தேவகுமாரன்
    B. மனுஷகுமாரன்
    C. பரலோகப்பிதா
    D. பரிசுத்த ஆவியானவர்

  15. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிப்பவர்கள் யார்? 
    A. பரிசேயர்
    B. சதுசேயர்
    C. ஜெபஆலயத் தலைவன்
    D. வேதபாரகன்

  16. எதினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று இயேசு குறிப்பிடுகிறார்?
    A. இரக்கம்
    B. தயவு
    C. பொறுமை
    D. விசுவாசம்

  17. யாரிடம் கர்த்தர் “கோதுமையை புடைக்கிறது போலச் சாத்தான் உங்களை புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான்” என்று சொல்லுகிறார்?
    A. சீமோன்
    B. யாக்கோபு
    C. யோவான்
    D. பிலிப்பு

  18. பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய் இருந்த போது, மக்கள் யாரை விடுதலையாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்?
    A. கள்ளர்
    B. சீமோன்
    C. யோசேப்பு
    D. பரபாஸ்

  19. இயேசுவின் சிலுவையில் “யூதருடைய ராஜா” என்று எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டிருந்தது?
    A. சீரிய, ரோம, கிரேக்க
    B. கிரேக்கு, லத்தீன், எபிரேயு 
    C. எபிரேயு, கிரேக்கு, அராமிய
    D. லத்தீன், அராமிய, சீரிய

  20. தேவனுடைய ராஜ்யத்திற்கு காத்திருந்த ஆலோசனைக்காரன் யார்?
    A. சீமோன்
    B. யோசேப்பு
    C. யோவான்
    D. யாக்கோபு

  1. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?
    A. பெத்லகேம்
    B. கபாலஸ்தலம்
    C. நாசரேத்
    D. ஜெப ஆலயம்

  2. பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டது யார்?
    A. சீமோன் பேதுரு
    B. யாக்கோபு
    C. யோசேப்பு
    D. மல்குஸ்

  3. கல்லறை காலியாக இருந்தபோது, அங்கிருந்த பெண்களுக்கு அந்த 2 தூதர்கள், இயேசுவின் எந்த வார்த்தைகளை நினைவுப்படுத்தினார்கள்?
    A. நான் ஆலயத்தை மீண்டும் கட்டுவேன்.
    B. மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும்
    C. நான் உடனே திரும்பி வருவேன்
    D. நானே தேவன், என்னையெல்லாமல் தேவன் இல்லை.

  4. எம்மாவுக்கு செல்லும் வழியில் சீஷர்கள் ஏன் இயேசு கிறிஸ்துவை உடனே அறிந்துகொள்ளவில்லை?
    A. இருள் இருந்ததால்
    B. இயேசுவின் தோற்றம் வேறுமாதிரி இருந்தது.
    C. அவர்கள் கண்கள் அடைக்கப்பட்டிருந்தது.
    D. அவர்களின் பயத்தினால்

  5. எம்மாவுக்கு செல்லும் இரு சீஷர்களில் ஒருவன் பெயர் என்ன?
    A. சிமோன்
    B. பேதுரு
    C. கிலெயோப்பா
    D. தோமா

  6. திராட்சைச்தோட்ட உவமையில் தோட்டக்காரர்கள் இறுதியில் யாரை கொன்றனர்?
    A. வேலைக்காரர்களை
    B. ராஜாவின் பிரியமான குமாரனை
    C. தீர்க்கத்தரிசிகளை
    D. அயலவர்களை

  7. இயேசு மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணின போது எது இரத்தத்தின் பெருந்துளியாய் தரையிலே விழுந்தது?
    A. வியர்வை
    B. கண்ணீர்
    C. இரத்தம்
    D. தண்ணீர்

  8. யோவான் கொடுத்த ஸநானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று இயேசு கேட்ட பொழுது அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?
    A. மனுஷரால் உண்டாயின்று
    B. தேவனால் உண்டாயிற்று
    C. ஆவியினால் உண்டாயிற்று
    D. எங்களுக்கு தெரியாது

  9. இயேசு மரித்த பொழுது 3 மணி நேரம் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று? அது எந்த மணி நேரம்?
    A. 3 ஆம் மணி நேரத்திலிருந்து 6 ஆம் மணி நேரம் வரை
    B. 6 ஆம் மணி நேரத்திலிருந்து 9 ஆம் மணி நேரம் வரை
    C. 1 ஆம் மணி நேரத்திலிருந்து 3 ஆம் மணி நேரம் வரை
    D. 2 ஆம் மணி நேரத்திலிருந்து 5 ஆம் மணி நேரம் வரை.

  10. சீஷர்களின் கண்கள் எப்போது திறக்கப்பட்டது?
    A. இயேசு அப்பத்தை எடுத்து அதை பிட்டு அவர்களுக்கு கொடுத்த போது
    B. இயேசு வழியில் அவர்களுடன் பேசும்போது
    C. இயேசு அவர்களுடன் நடக்கத் தொடங்கிய போது
    D. இயேசு அவர்களைவிட்டு மறைந்தபோது

பொருத்துக (10)

எண்

பெயர்

பொருத்துக

1

சகேயு

சல்மோனின் குமாரன்

2

சிரேனியு

பிரதான ஆசாரியன் 

3

யவீரு 

ஆயக்காரன்

4

பர்தொலொமேயு

எரிகோ

5

போவாஸ்

யோவான்ஸ்நானனின் தந்தை 

6

சிரேனே ஊரானாகிய சீமோன்

ஏரோதின் காரியக்காரன்

7

காய்பா

இயேசுவின் 12 சீஷர்களில் ஒருவன்

8

லேவி

ஜெப ஆலயத்தலைவன் 

9

சகரியா

சிலுவையை சுமந்தவர்

10

கூசா

தேசாதிபதி

சரியா / தவறா (10)

  1. கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் இடதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குத் தரிசனமானான்.
  2. எலிசபெத்து கர்ப்பவதியானதும் ஐந்து மாதங்கள் வெளிப்படாதிருந்தாள்.
  3. யூதேயா நாட்டில் நாசரேத் இருக்கிறது. 
  4. யோவான்ஸ்நானன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்தான்.
  5. “உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்கு பலன் என்ன” என்று இயேசு சொன்னார்.
  6. கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் சோதனை காலத்தில் பின் வாங்கிப் போகிறார்கள்.
  7. அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள் என்று இயேசு பரிசேயரிடம் சொன்னார்.
  8. ஒருவன் இயேவைப் பார்த்து “நீர் விதைக்காததை அறுக்கிறவர், நீர் கடினமுள்ள மனுஷன்” என்று சொன்னான்.
  9. பிலாத்துவும், ஏரோதுவும் சிநேகிதரானார்கள்.
  10. பரபாசென்பவன் விபச்சாரத்தினிமித்தம் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.

நிரப்புக (10)

  1. என் வார்த்தைகளை கேட்டும் _________________ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடு  வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்.”
  2. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு __________அல்ல.
  3. ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் _____________________ பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்
  4. “அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; ______________ உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்” என்றார்.
  5. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல _____________ நாட்களிலும் நடக்கும்.
  6. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ________________குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
  7. உங்கள் ______________ உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
  8. கெத்செமனே தோட்டத்தில், இயேசு மிகவும் __________, ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்.
  9. வானமும் பூமியும் ஒழிந்துபோம், _______________ ஒழிந்துபோவதில்லை.
  10. இவன் யூதருடைய ராஜா என்று, _______, ________, __________ எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.

பதிலளிக்கவும் (10)

  1. இயேசு பிறந்த பொழுது குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று யாரால் கட்டளை பிறந்தது.
  2. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்”. இந்த சம்பவம் எந்த உவமையில் சொல்லப்படுகிறது?
  3. "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று. தேவதூதனிடம் சொன்றது யார்
  4. பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்” என்று சொன்னது யார்?
  5. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் எந்த இடத்தை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
  6. எதன் நிறைவினால் அவனவன் வாய் பேசும்? 
  7. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்கு போனார்கள். அதில் பெருமையோடு ஜெபித்தது யார்? தாழ்மையோடு ஜெபித்தது யார்?
  8. பத்து பேர் குணமடைந்தார்கள். ஒருவன் மட்டும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான். அவன் யார்? 
  9. நியாயாதிபதி தேவனுக்கு பயப்படாதவன். அவனிடம் ஒரு விதவை நியாயங்கேட்டு  அவனை தொந்தரவு செய்தாள். இது எதைக் குறித்த உவமையில் சொல்லப்படுகிறது. 
  10. நீ குணப்பட்ட பின்பு, உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்று இயேசு யாரிடம் கூறினார்? 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?