உண்மையான திருமண வாழ்க்கை

உண்மையான திருமண வாழ்க்கை

திருமணம் என்றால்
இரு உடல்கள் சேர்வது மட்டுமல்ல;
இரு இதயங்கள் ஒரே வீட்டில் வாழ்வது மட்டும் அல்ல.

இரண்டு வாழ்க்கைப் பயணங்கள்
ஒரே பாதையில் ஒன்றாக நடக்கத் தொடங்கும்
ஒரு புதிய ஆரம்பம்.

பல எதிர்பார்ப்புகளோடு திருமணம் செய்யும்
ஆண், பெண் இருவரும்
ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்—
திருமணம் என்பது
ஒருவரின் எதிர்பார்ப்புகளை
மற்றொருவர் நிறைவேற்றும் இடம் அல்ல.

அது
இரண்டு உலகங்கள்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள
மெதுவாக கற்றுக்கொள்ளும் பயணம்.

இங்கே வெற்றி பெறுபவர்கள்
அதிகம் எதிர்பார்ப்பவர்கள் அல்ல;
அதிகம் புரிந்துகொள்வவர்கள்.

அதிகம் கேட்பவர்கள் அல்ல;
அதிகம் கொடுப்பவர்கள்.

ஒரு மனம் அமைதியாக இருக்கும்,
மற்றொரு மனம்
கேள்விகளால் நிரம்பி தவிக்கும்.

ஒருவர்
சொற்களில் அன்பைக் காட்டுவார்;
மற்றொருவர்
செயல்களில் அன்பைக் காட்டுவார்.

சில நேரங்களில்
சின்ன சின்ன வேறுபாடுகள்
பெரிய சண்டைகளாக மாறலாம்.

ஆனால் அந்த சண்டைகளுக்குள் கூட
பிரிந்து போகாத
ஒரு பாசம்
ஒளிந்திருக்கும்

ஒருவர் தவறினால்
மற்றொருவர் புரிந்து கொள்வதும்,
ஒருவர் சோர்ந்தால்
மற்றொருவர் துணையாக நிற்பதும்—
அதுவே உண்மையான உறவு.

பூக்கள் கொடுப்பது மட்டும் காதல் அல்ல;
“I love you” என்று சொல்வது மட்டும் அன்பல்ல;
WhatsApp status போடுவது மட்டும் அன்பல்ல.

மௌனத்திலும் கூட
“நான் உன்னுடன் இருக்கிறேன்”
என்று உணர்த்தும் உறவுதான்
திருமணம்.

அன்பு அதைவிட ஆழமானது.
பார்வையில் இருக்கும் கவனம்,
சொல்லாத வார்த்தைகளில் இருக்கும்
புரிதல்தான்
உண்மையான பாசம்.

முழுமையான மனிதர்கள்
இணைவதில்லை;
வித்தியாசமான இரண்டு மனிதர்கள்
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதுதான்
திருமணம்.

அங்கே ஜெயிப்பது
ஆண் அல்ல,
பெண்ணும் அல்ல—
ஜெயிப்பது
அவர்கள் இருவரின் வாழ்க்கை.

பெண்வாதம் பேசும் ஒரு பெண்ணும்,
ஆண்வாதம் பேசும் ஒரு ஆணும்
எப்போதும் வாதாடிக்கொண்டே இருந்தால்
அந்த குடும்பம்
அமைதியை காணாது.

ஒரு குடும்பம் நன்றாக நடக்க
அவன் அவளுக்காக
சிலவற்றை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்;
அவள் அவனுக்காக
சிலவற்றை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஏனெனில்
திருமணம் என்பது
யார் சரி, யார் தவறு
என்று நிரூபிப்பதற்கான இடமல்ல—

ஒருவருக்காக ஒருவர்
வாழ கற்றுக்கொள்ளும்
ஒரு புனிதமான உறவு.

சுயமரியாதையை விட
குடும்பத்தின் மரியாதையை பெரிதாக நினைப்பவளே
ஒரு நல்ல குடும்ப ஸ்திரீ;

அதேபோல்
தன் சுயமரியாதையை விட 
குடும்பத்தின் மரியாதையை
காக்க நினைப்பவனே
ஒரு உண்மையான ஆண்.

அதுவே
உண்மையான திருமண வாழ்க்கை. ❤️

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?