நரகம்

நரகம் (Hell) 

வேதாகமத்தில் “நரகம்” என்ற கருத்து ஒரே ஒரு வார்த்தையால் மட்டும் விளக்கப்படவில்லை.

பழைய ஏற்பாட்டில் 1 எபிரேய வார்த்தை, புதிய ஏற்பாட்டில் 4 கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த போதனையை நான்கு தலைப்புகளாக பார்க்கலாம்:

  1. அந்தகாரம் (Tartarus in Greek)

  2. பாதாளக்குழி (Abyss in Greek)

  3. மேல் பாதாளம் (Sheol in Hebrew / Hades in Greek) – மேல் & கீழ் பாதாளம் (Paradeisos in Greek)

  4. நரகம் – அக்கினிக்கடல் (Gehenna in Greek / Lake of Fire)

அந்தகாரம் (Tartarus) – இருள்

பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே (Tartarus in Greek) தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
 -2 பேதுரு 2 : 4

தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
 -யூதா 1 : 6

பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே(Tartarus in Greek) தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
 -2 பேதுரு 2 : 4

யார் இதில் பிரவேசிப்பார்கள்?

  • பாவம் செய்த தூதர்கள்.

  • இறுதி நியாயத்தீர்ப்புக்காக காத்திருப்பவர்கள்.

பாதாளக்குழி (Abyss in Greek) – Bottomless Pit

தங்களைப் பாதாளத்திலே (abyss in Greek-deep) போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
 -லூக்கா 8 : 31

நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து (abyss in Greek - bottomless pit) ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
 -வெளிப்படுத்தல் 17 : 8

யார் இதில் பிரவேசிப்பார்கள்?

  • லேகியோன் போன்ற அசுத்த ஆவிகள்

பாதாளம்

(A) மேல் பாதாளம் (Paradeisos in Greek; Paradise In English / Abraham’s Bosom)

  • இது மரணத்துக்கு பின் நல்ல ஆத்துமாக்கள் தங்கும் இடமாக கருதப்படுகிறது.
  • இளைப்பாறுதலின் இடம்
  • பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இருந்த இடம்
  • “பரதீஸ்” என அழைக்கப்பட்டது.
  • “ஆபிரகாமின் மடி” (லாசரு)
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 -லூக்கா 23 : 43

கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
 -2 கொரி 12 : 2

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
 -வெளிப்படுத்தல் 2 : 7

யார் இதில் பிரவேசிப்பார்கள்?

  • பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்

  • தேவனுக்குள் வாழ்ந்து மரித்து போனவர்கள்

  • லாசரு (லூக்கா 16)

(B) தாழ்ந்த பாதாளம் (Sheol in Hebrew; Hades in Greek)

என் ஆத்துமாவைப் பாதாளத்தில்(Sheol in Hebrew) விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
 -சங்கீதம் 16 : 10

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் (Hades in Greek) விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
 -அப்போஸ்தலர் 2 : 27

  • இது மரணத்திற்கு பின் தீய ஆத்துமாக்கள் தங்கும் இடமாகக் கூறப்படுகிறது.

Sheol குறித்த வசனங்கள்

அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் (Sheol in Hebrew) இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
 -ஆதியாகமம் 37 : 35

நீர் என்னைப் பாதாளத்தில் (Sheol in Hebrew) ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
 -யோபு 14 : 13

மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள (Sheol in Hebrew) வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
 -சங்கீதம் 89 : 48

செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே (Sheol in Hebrew) செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
 -பிரசங்கி 9 : 10

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:
 -ஏசாயா 38 : 9
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் (Sheol in Hebrew) வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
 -ஏசாயா 38 : 10

யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
 -மத்தேயு 12 : 40

அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் (Spirits in prison) பிரசங்கித்தார்.
 -1 பேதுரு 3 : 19
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
 -1 பேதுரு 3 : 20

அவள் வீடு பாதாளத்துக்குப்போகும்(Sheol in Hebrew) வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.  
 -நீதிமொழிகள் 7 : 27

மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் (Sheol in Hebrew) இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.
 -சங்கீதம் 55 : 15

அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் (Sheol in Hebrew)  இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
 -எண்ணாகமம் 16 : 33

என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் (Sheol in Hebrew) எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.
 -உபாகமம் 32 : 22

துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே (Sheol in Hebrew) தள்ளப்படுவார்கள்.
 -சங்கீதம் 9 : 17

பாதாளத்திலே (Hades in Greek)அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
 -லூக்கா 16 : 23

Hades குறித்த வசனங்கள்

வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம்(Hades in Greek) தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்.
 -மத்தேயு 11 : 23

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின்(Hades in Greek) வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
 -மத்தேயு 16 : 18

வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம்(Hades in Greek) தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,
 -லூக்கா 10 : 15

பாதாளத்திலே(Hades in Greek) அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
 -லூக்கா 16 : 23

என் ஆத்துமாவைப் பாதாளத்தில்(Hades in Greek) விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
 -அப்போஸ்தலர் 2 : 27

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய(Hades in Greek) திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
 -வெளிப்படுத்தல் 1 : 18

நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம்(Hades in Greek) அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 6 : 8

சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும்(Hades) தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 -வெளிப்படுத்தல் 20 : 13

யார் இதில் பிரவேசிப்பார்கள்?

  • தேவனை நிராகரித்தவர்கள்

  • அக்கிரமத்திலே வாழ்ந்தவர்கள்

  • ஐசுவரியவான் (லூக்கா 16)

யார் தாழ்ந்த பாதாளத்துக்கு போக மாட்டார்கள்?

கீழான பாதாளத்தை(Sheol in Hebrew) விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
 -நீதிமொழிகள் 15 : 24

நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு(Sheol in Hebrew) அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
 -நீதிமொழிகள் 23 : 14

  • நீதிமான்கள் தாழ்ந்த பாதாளத்துக்குச் செல்ல மாட்டார்கள்.

நரகம் - அக்கினிக்கடல் (Gehenna in Greek/ Lake of Fire)

உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில்(Gehenna in Greek) தள்ளப்படுவதைப்பார்க்கிலும். உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
 -மத்தேயு 5 : 30 

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
 -மத்தேயு 10 : 28

அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே(Gehenna in Greek) தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
 -வெளிப்படுத்தல் 20 : 14

யார் இதில் பிரவேசிப்பார்கள்?

  • அந்தகாரம், பாதாளக்குழி, கீழ் பாதாளம் இவற்றில் உள்ள ஆத்துமாக்கள், தூதர்கள், அசுத்த ஆவிகள், சாத்தான், சர்ப்பம், மிருகம், கள்ளத்தீர்க்கத்தரிசி எல்லாம் அக்கினிக் கடலிலேப் போடப்படும்.
  • இறுதி நியாயத்தீர்ப்பில் குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்கள்.

முடிவுரை

இந்த நரகத்தை பற்றி அறிந்த பின்பாவது பாவத்திலிருந்து மனந்திரும்பி தேவ பயத்தோடு வாழ்ந்து பரதீசுக்கு எடுத்துக்கொள்ளப்பட ஆயத்தமாவோம்.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?