மத்தேயு 5:17 vs எபேசியர் 2:15

மத்தேயு 5:17 vs எபேசியர் 2:15

 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
 -மத்தேயு 5 : 17

சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
 -எபேசியர் 2 : 15

மத்தேயுவில் “அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்று இயேசு சொல்லுகிறார். எபேசியரில் “நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து” என்று இயேசு சொல்லுகிறார். ஏன் இந்த வித்தியாசம்? 

“நிறைவேற்ற வந்தேன்” 

இங்கே இயேசு சொல்லும் பொருள்:

  • நியாயப்பிரமாணம் (மோசேயின் சட்டம்) தேவனால் கொடுக்கப்பட்டது.
  • அதை ரத்து செய்யவோ தள்ளிப்போடவோ அவர் வரவில்லை.
  • அதன் உண்மையான அர்த்தத்தை முழுமையாக நிறைவேற்ற வந்தார்.

உதாரணமாக

  • நியாயப்பிரமாணம் சொல்லுகிறது: பாவத்திற்கு பலி வேண்டும்.
  • இயேசு சிறந்த பலியாக தன்னை அர்ப்பணித்து அந்த நியாயப்பிரமாணத்தின் சட்டங்களை முழுமையாக நிறைவேற்றினார்.

“அழித்தார்” 

இங்கு பவுல் சொல்வது வேறு கருத்து:

  • யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் இடையே நியாயப்பிரமாணமாகிய சட்டதிட்டம் ஒரு பிரிவினையை உருவாக்கியது.
  • இயேசு சிலுவையில் மரித்தபோது அந்த நியாயப்பிரமாணத்தின் பிரிவினைச் சுவர் நீங்கியது.  யூதரும் புறஜாதியாரும் ஒரே ஜனமாக ஆனார்கள்.

அதாவது, நியாயப்பிரமாணத்தின் தண்டனை மற்றும் கட்டுப்பாடு கிறிஸ்துவின் பலியால் முடிவுக்கு வந்தது.

ஒரு கடனைச் செலுத்த வேண்டும் என்று சட்டம் இருந்தால், ஒருவர் அந்த கடனை முழுமையாக செலுத்தினால்அந்த சட்டம் நிறைவேறுகிறதுஅதே நேரத்தில் அந்த கடன் இனி கட்டாயமாக இருக்காதுஅதே போல. இயேசு சட்டத்தை நிறைவேற்றினார். அதன் காரணமாக அந்த சட்டத்தின் கட்டாயம் முடிந்தது.


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்