மத்தேயு 18: 20 விளக்கம்
மத்தேயு 18:20 - விளக்கம்
-மத்தேயு 18 : 20
- இந்த வசனம் பொதுவாக, “இரண்டு அல்லது மூன்று பேர் கூடினால் தான் தேவன் அவர்கள் நடுவில் இருப்பார்” என்று விளக்கப்படுகிறது.
- ஆனால் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேவசமூகத்திற்கு (மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்) வர வேண்டும் என்பதற்காக தானே தேவன் சிலுவையில் அறையப்பட்டு அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரையை இரண்டாக கிழித்து நாம் அவரண்டையில் சேர உதவி செய்தார்.
- இன்று தேவனை விசுவாசித்து ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக ஜெபத்தின் மூலம் அவரிடம் நேரடியாக செல்ல முடியுமே!
- பின் எதற்காக இந்த வசனம் இப்படி கொடுக்கப்பட்டுள்ளது.
- வேதாகமத்தின் முழு ஒளியில் இதை ஆராய்வோம் வாருங்கள்.
ஒவ்வொரு சொல்லாக எடுத்து ஆராய்வோம்.
- ஷ்னாயிம் (שְׁנַיִם) என்பது இரண்டு (ஆண்பால் வடிவம்) என்று பொருள்.
- ஷ்லாஷா (שְׁלֹשָׁה) என்பது மூன்று (ஆண்பால் வடிவம்) என்று பொருள்.
- இந்த 2 அல்லது 3 என்பது சாட்சிகளைக்(witness) குறிக்கிறது.
- எப்படியென தெரிய வேண்டும் என்றால் நாம் நியாயப்பிரமாண புத்தகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.
ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.
-உபாகமம் 19 : 15
- யூத கலாச்சாரத்தின்படி, "இரண்டு அல்லது மூன்று" என்ற கருத்து பெரும்பாலும் சட்ட (legal) அல்லது மதக்(religious) கொள்கைகளுடன் (principles) தொடர்புடையதாக இருக்கிறது.
- அதாவது சாட்சியத்தை உறுதிப்படுத்துதலைக் குறிக்கிறது.
- இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தால் ஒரு விஷயம் உறுதிப்படுத்தப்படுகிறது.
- எனவே மத்தேயு புத்தகத்தில் இயேசு குறிப்பிடும் 2 அல்லது 3 பேர்கள், சரீர ரீதியில் ஒன்று கூடுவதை அல்ல.
- 2 அல்லது 3 புதிய ஏற்பாட்டு சாட்சிகளை கொண்டு யாதொருவன் ஜெபித்தால் அந்த இடத்தில் கர்த்தர் இருப்பார் என்பதே இதன் இரகசியம்.
என் நாமத்தினாலே
இதன் எபிரேயப் பதம் - b’shem Adonai
B'shem: "In the Name of".
Adonai: "The Lord" (a Hebrew name for God).
அர்த்தம்:
- பழைய ஏற்பாட்டு உடன்படிக்கையின் தேவன்(Adonai), தான் கொடுத்த சாட்சியின் உடன்படிக்கையை (உபாகமம் 19 : 15), இங்கு நினைவுகூர்ந்து இங்கு புதிய உடன்படிக்கையின் சாட்சிகளை (2 or 3) கொண்டு எவன் ஒருவன் தன்னுடைய நாமத்தில் ஜெபிக்கிறானோ அவன் நடுவிலே நான் இருப்பார் என்று சொல்லுகிறார்.
எங்கே கூடியிருக்கிறார்களோ,
இதன் எபிரேயப் பதம்: ne’ esfu or asaf
எபிரேய மொழியில், ஆசாஃப் என்பது உடன்படிக்கை அல்லது சாட்சியத்தில் ஒன்றிணைவதைக் குறிக்கிறது.
அர்த்தம்:
- மூன்று சாட்சிகள் ஒன்று கூடுதல்.
இயேசு:
“நான் வருவேன்” என்று சொல்லவில்லை
“நான் இருக்கிறேன்” என்று சொன்னார்.
இதன் அர்த்தம்:
- தேவனுடைய பிரசன்னம் அழைக்கப்பட வேண்டியது அல்ல (not summoned); அது அங்கீகரிக்கப்பட வேண்டியது (revealed).
- அவர் நாமத்தில் உண்மையான ஒப்புதல் இருக்கும் இடத்தில் அவர் ஏற்கனவே இருக்கிறார். (His presence is recognized where agreement in His name exists).
பழைய ஏற்பாட்டு உடன்படிக்கைப்பெட்டி - சாட்சிப் பெட்டி
-யாத்திராகமம் 25 : 22
- இங்கு சாட்சிப்பெட்டியாகிய உடன்படிக்கை பெட்டியிலும் 3 சாட்சிகள் (மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், ஆரோனின் துளிர்த்த கோல், 10 கட்டளைக் கொண்ட கற்பலகைகள்) இஸ்ரவேலருடனான உடன்படிக்கைக்கு சாட்சியாக விளங்குகின்றன.
புதிய ஏற்பாட்டு சாட்சிகள்
இயேசு இதே விதியை மத்தேயு 18-ல் பயன்படுத்துகிறார்
மத்தேயு 18-ஆம் அதிகாரத்தில் இயேசு பேசுவது:
-மத்தேயு 18 : 19
அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் 18:20-ஐ சொல்கிறார்.
-மத்தேயு 18 : 20
- முக்கியமானது எண்ணிக்கை அல்ல, ஒப்புதல் வாக்குமூலம் (agreement).
- பூமியின் சாட்சிகள் ஒருமனப்படுதல்.
- அந்த பூமியின் சாட்சிகள் யாவை என்பதைக் கீழேக் காண்போம்.
புதிய ஏற்பாட்டில்
பவுலும் இதை உறுதிப்படுத்துகிறார்
- இந்த நியாயப்பிரமாண விதி(principle) பழைய ஏற்பாட்டோடு முடிவடையவில்லை.
- புதிய ஏற்பாட்டிலும் அது தொடர்கிறது.
-1 யோவான் 5 : 8
அவனுக்குள் இருக்கிறவர்கள்:
மனிதனுடைய ஆவி (The Spirit of the man)
கிறிஸ்துவின் ஆவி (The Spirit of Christ)
பரிசுத்த ஆவியின் சாட்சி (The Witness of the Holy Spirit )
-ரோமர் 8 : 16
|
1 யோவான் 5:8 ல் கொடுக்கப்பட்டுள்ள சாட்சிகள் |
விசுவாசியிடம் காணப்படுகிற சாட்சிகள் |
|
ஜலம் (Water) |
மனிதனின் ஆவி (The Spirit of Man). மனிதனில் மரித்து போயிருந்த ஆவி, தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலம் உயிரடைந்து நமக்குள் சாட்சிக் கொடுக்கிறது. |
|
இரத்தம் (Blood) |
கிறிஸ்துவின் ஆவி (The Spirit of Christ). பின்பு கிறிஸ்து நமக்காக சிந்தின பரிசுத்த இரத்தத்தின் மூலம் நாம் கழுவப்பட்டு அவருடைய இரத்தம் என்கிற ஜீவனை(life)பெற்றுக் கொண்டு, நம் ஆவி உயிர்பிக்கப்பட்டபடியினால் அந்த கிறஸ்துவின் ஆவி நமக்குள் சாட்சிக் கொடுக்கிறது. |
|
ஆவி (Spirit) |
பரிசுத்த ஆவி (Holy Spirit). இவை இரண்டுக்கும் அடையாளமாக (witness) ஆக பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்து நமக்காக சாட்சிக் கொடுக்கிறவராக இருக்கிறார். |
முடிவுரை:
- மத்தேயு 18:20 என்பது ஒரு அறையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல.
- பூமியில் சாட்சியிடுகிற மனிதனின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி இந்த மூன்று inner witness ம் எந்த மனிதனில் இருக்கிறதோ, அந்த மனிதன் ஏறெடுக்கிற ஜெபத்தை தேவன் கேட்பார், அந்த மனிதினின் மத்தியில் அவர் இருப்பார்.
- இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஜெபிப்பது தவறு என நான் குறிப்பிடவில்லை.
- இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஜெபித்தால் தான் அவர் நம் நடுவிலே இருப்பார் என்ற கருத்து மிகவும் தவறானது.
Comments
Post a Comment