அப்போஸ்தலர் - அதிகாரம் 6 -முழு விளக்கம்
அப்போஸ்தலர் – அதிகாரம் 6 - விளக்கம்
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
-அப்போஸ்தலர் 6 : 1
அர்த்தம்:
- கிரேக்க மொழி பேசும் யூதர்கள் (Hellenistic Jews) எபிரேய மொழி பேசும் யூதர்களுக்கு (Hebraic Jews) எதிராக முறுமுறுத்தனர்.(murmur)
- அவர்களுடைய விதவைகள் அன்றாட உணவுப் பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்டதாக கூறினர்.
- கிரேக்கர்கள் அவர்கள் விதவைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
- இது இந்த இருவருக்கும் இடையான கலாச்சார வேறுபாட்டின் காரணமாக நடந்தது.
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
-அப்போஸ்தலர் 6 : 2
அர்த்தம்:
அப்பொழுது - பந்தி விசாரிப்பின் முறுமுறுப்பின் போது- பன்னிரு அப்போஸ்தலர்கள் விசுவாசிகள் அனைவரையும் கூட்டினர்.
- அப்போஸ்தலர்கள் தேவ வசனத்தை போதித்து கொண்டு இருந்தபடியினால், அவர்களால் அதை விட்டு விட்டு இந்த உணவு விநியோகப் பிரச்சனையை தீர்ப்பது கடினமாக இருந்தது.
- அதனால் தான் அப்போஸ்தலர்கள் சொல்லுகிறார்கள், இந்த பிரச்சனையை கவனிப்பதற்காக நாங்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதை நிறுத்த முடியாது என்று.
-அப்போஸ்தலர் 6 : 3
அர்த்தம்:
சகோதரரே - அங்கு இருந்த விசுவாசிகள்- பரிசுத்த ஆவியும், ஞானமும் நிரம்பிய ஏழு பேரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள்.
- உணவுப் பங்கீட்டைப் பொறுப்பாக மேற்கொள்ள இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- இவர்கள் ஆங்கிலத்தில் Deacons என்று அழைக்கப்படுவார்கள்.
- ஒரு டீக்கன் என்பவர் தேவாலயத்தில் நடைமுறைத் தேவைகளுக்கு உதவுவதோடு ஊழியத்தை ஆதரிக்கும் ஒரு ஊழியர்-தலைவராக இருப்பார்.
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
-அப்போஸ்தலர் 6 : 4
அர்த்தம்:
நாங்களோ - அப்போஸ்தலர்கள்- அப்போஸ்தலர்கள் தங்கள் இரண்டு பிரதான சேவைகளை வலியுறுத்துகின்றனர்.
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
-அப்போஸ்தலர் 6 : 5
அர்த்தம்:
- இந்த யோசனை அனைவருக்கும் ஏற்றதாக இருந்தது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பேர்:
- ஸ்தேவான்
- பிலிப்பு
- பிரொகோர்
- நிக்கானோர்
- தீமோன்
- பர்மெனா
- நிக்கோலா
- இவர்கள் அனைவரின் பெயர்களும் “கிரேக்கப் பெயர்கள்”; புறக்கணிக்கப்பட்ட Hellenistic Jewish குழுவினர்.
- அதிகாரத்தின் தொடக்கத்தில் அவர்கள் தங்கள் விதவைகளை எல்லாரும் வித்தியாசமாக நடத்துகிறார்கள் என்று குறைப்பட்டு கொண்டதால் அவர்களில் இருந்தே 7 பேரை தேர்ந்தெடுக்கின்றனர்.
-அப்போஸ்தலர் 6 : 6
அர்த்தம்:
அவர்களை - அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினர்.- அப்போஸ்தலர்கள் அவர்களுக்கு ஜெபம் செய்து, அவர்கள் மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்தனர்.
- அதிகாரம் மற்றும் பொறுப்பை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.
-அப்போஸ்தலர் 6 : 7
அர்த்தம்:
தேவவசனம் விருத்தியடைந்தது - Word of God increased- தேவனுடைய வார்த்தை மிகவும் பரவியது.
- சீஷர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது.
- யூத ஆசாரியர்களில் பலரும் இயேசுவை விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டனர்.
- நியாயமான நிர்வாகம் என்பது தேவாலயம் வளருவதற்குத் தேவையானது என்பதை இது காட்டுகிறது.
-அப்போஸ்தலர் 6 : 8
அர்த்தம்:
- ஸ்தேவானின் ஊழியம் ஏழு பேரில் மிக வல்லமை வாய்ந்தாக காணப்பட்டது.
-அப்போஸ்தலர் 6 : 9
தற்போது இந்த இடங்களின் பெயர்கள்
லிபர்த்தீனர் - Libya
சிரேனே - Africa
அலெக்சந்திரியா - Egypt
சிலிசியா - Europe
ஆசியா - Asia
அர்த்தம்:
- தர்க்கம் பண்ணினார்கள் - debate, argument
- வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த யூதர்கள் ஸ்தேவானுடன் விவாதிக்கத் தொடங்கினார்கள்.
- ஸ்தேவான் கூறும் போதனையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவனை எதிர்த்தனர்.
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
-அப்போஸ்தலர் 6 : 10
அர்த்தம்:
அவன் -ஸ்தேவான்
- ஸ்தேவானின் ஞானத்துக்கும், பரிசுத்த ஆவியின் வார்த்தைக்கும் அவர்களால் எதிர்த்து நிற்கமுடியவில்லை.
அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
-அப்போஸ்தலர் 6 : 11
அர்த்தம்:
அப்பொழுது அவர்கள் - 6:9 ல் கொடுக்கப்பட்டுள்ள பல நாட்டு யூதர்கள்.மோசேக்கும் - மோசே மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்துக்கும்,
தூஷண வார்த்தை - blasphemy (To mock or speak evil of sacred things)
- அவர்கள் பொய் சாட்சி சொல்ல சிலரை ஏற்படுத்தினார்கள்.
- ஸ்தேவான் மீது பொய் குற்றம் சாட்டினர்கள்.
ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
-அப்போஸ்தலர் 6 : 12
அர்த்தம்:
மூப்பர் - Elders
வேதபாரகர் - teachers of religious law
ஆலோசனைச் சங்கத்தார் - high council -the Sanhedrin, the great council at Jerusalem, consisting of the seventy one members.
- அப் 6:9 ல் ஸ்தேவானுடன் தர்க்கம் பண்ணினவர்கள், அவனை பேச்சினால் வெல்ல வகை காணாமல் ஜனங்களையும், மூப்பரையும், வேதபாரகரையும் ஸ்தேவானுக்கு எதிராக எழுப்பி விட்டனர்.
- பின்பு ஸ்தேவானை ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுந்து கொண்டு சென்றனர்.
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்;
-அப்போஸ்தலர் 6 : 13
அர்த்தம்:
பொய்சாட்சிகள் - lying witness
இவர்கள் - பொய்சாட்சிகள்
பரிசுத்த ஸ்தலத்துக்கும் - the holy temple
வேதப்பிரமாணத்துக்கும் - law of moses
தூஷண வார்த்தை - blasphemous words (தேவனுக்கு விரோதமாக)
- ஸ்தேவானை பற்றி பொய்சாட்சியை மக்கள் கூறுகின்றனர்.
எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
-அப்போஸ்தலர் 6 : 14
அர்த்தம்:
இந்த ஸ்தலத்தை - temple, தேவாலயம்
மோசே நமக்கு கொடுத்த முறைமைகள் - Law, நியாயப்பிரமாணம்
- ஸ்தேவான் சொல்லாதவைகளை, அவன் சொன்னதாகச் சொல்லி பொய் குற்றச்சாட்டை அவன் மீது வைக்கின்றார்கள்.
ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.
-அப்போஸ்தலர் 6 : 15
அர்த்தம்:
ஆலோசனை சங்கம் - high council (எருசலேமில் உள்ள பெரிய ஆலோசனைச் சங்கம், வேதபாரகர்கள், மூப்பர்கள், பிரதான ஆசாரிய குடும்பங்களின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பிரதான ஆசாரியர், சபைத் தலைவர் போன்ற எழுபத்தொரு உறுப்பினர்களைக் கொண்டது.)
- ஸ்தேவானுடன் தேவன் இருந்தார் என்பதை இது காட்டுகிறது.
Comments
Post a Comment