இரகசிய வருகை to புதிய வானம், புதிய பூமி
Order:
இரகசிய வருகை (Rapture)
உபத்திரவ காலம் மற்றும் மகா உபத்திரவ காலம் (Tribulation and Great Tribulation)
இரண்டாவது வருகை (Second Coming)
நியாயத்தீர்ப்பு (Judgment)
ஆயிரமாண்டு அரசாட்சி (Millennium)
இறுதி தீர்ப்பு (Final Judgment)
புதிய ஆகாயமும் புதிய பூமியும் (New Heavens & Earth)
1. இரகசிய வருகை (Rapture)
- இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த அந்த நாளில் இருந்து கிறிஸ்து இரகசியமாக வருகிற நாள் வரை, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அனைவரும், கிறிஸ்துவோடு வாழ்கிற அனைவரும்(சபை- மணவாட்டி) மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
- இந்த வருகை இரவிலே திருடன் வருவது போல வரும். ஒருவரும் அந்த நாளையும், நாழிகையையும் அறிய மாட்டார்கள்.
- பரிசுத்த ஆவியானவரும் இந்த நேரத்தில் பூமியில் இருந்து எடுத்துக் கொள்ளப்படுவார்.
- சபைக்காக கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் சபை எடுத்துக்கொள்ளப்படும் போது அவரும் எடுத்துக்கொள்ளப்படுவார்.
- எந்த நேரத்திலும் ஆயத்தமாக இருப்பது அவசியம்.
- இந்த இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதும், கைவிடப்படுவதும் ஒரு வகையான நியாயத்தீர்ப்பு தான்.
- அதாவது கர்த்தரோடு வாழ்பவர்களை இயேசு எடுத்துக்கொண்டு மீதியானவர்களை பூமியிலேயே விட்டுவிட்டு சென்று விடுவார்.
- இதுவே ஒரு நியாயத்தீர்ப்பு தான்.
- சபைக்கு வேறொரு நியாயத்தீர்ப்பு வேண்டுவதில்லை.
2. உபத்திவ காலம் மற்றும் மகா உபத்திரவ காலம் (Tribulation) – 7 ஆண்டுகள்
|
உபத்திரவ காலம் |
மகா உபத்திரவ காலம் |
|
முதல் மூன்றரை வருடம் |
இரண்டாவது மூன்றரை வருடம் |
|
பொய்யான சமாதானம், ஏமாற்றம் |
கடும் வேதனை, தேவனுடைய கோபம் |
|
யூதர்களின் பழைய ஏற்பாட்டு பலிகள் தொடங்கப்படும் |
ஆலயம் அவமதிக்கப்படும், யூதர்கள் வனாந்தரத்தில் ஒளிவார்கள். (மத் 24:15-22) |
|
சத்துரு, பொய்யான சமாதானத்தின் மூலம் உலகத்தின் அதிகாரத்தை பெற்றுக் கொள்வான். Antichrist rises in power |
சத்துரு, தன்னை தேவன் என்று கூறி, அனைவரும் என்னை வழிபடுங்கள் என்று சொல்வான். Antichrist demands worship (2 தெச 2:4) |
|
தேவாலயம் கட்டப்பட்டு பலிகள் வழக்கமானவைகள் ஆகும். |
அக்கிரமானவைகளும், அவமதிப்பும் தேவனுடைய ஆலயத்திற்குள் நிகழும். |
|
1260 நாட்கள் -42 மாதங்கள்- மூன்றரை ஆண்டுகள் எருசலேமில் 2 சாட்சிகள் (மோசே, எலியா) பிரசங்கம் செய்வார்கள். (வெளி 11) |
அந்த இரண்டு சாட்சிகளும் கொல்லப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து உயிர்ந்தெழுந்திருப்பார்கள். |
|
முதல் 6 முத்திரைகள் (யுத்தம், பஞ்சம், மரணம்) (வெளி 6) |
எக்காளம் மூலம் கடுமையான தண்டனைகள், மற்றும் இருள் |
|
பொய்யான சமாதானத்தின் கீழ் ஒண்றினைவார்கள். Global religious unity rises |
கள்ளத்தீர்க்கத்தரிசியின் உலகம் முழுவதற்கும் ஒரே ஆட்சி உலகம் one-world religious system grows and led by False Prophet |
|
கர்ததரை பிடித்துக் கொள்பவர்கள் துன்புறுத்தப்படுவார்கள். பலர் கொல்லப்படுவார்கள். |
கர்ததரை பிடித்துக் கொள்பவர்கள் மறைந்து, ஒளிந்து வாழ்வார்கள் |
|
144,000 யூதர்கள் முத்திரையிடப்படுவார்கள். (வெளி 7) |
அர்மகெதோன் யுத்தம் |
3. இரண்டாவது வருகை (Second Coming of Christ)
4. மக்களுக்கான நியாயத்தீர்ப்பு (Judgment of the Nations - SHEEP and GOAT’s Judgment
யார் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது உயிரோடு இருக்கிற மக்களுக்கான நியாயத்தீர்ப்பு. அதாவது கடைசி 7 வருடங்களில் வாழக்கூடிய மக்களுக்கு அவரவர் கிரியைகளின்படி நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
யார் நியாயந்தீர்ப்பார்கள்?
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்.
எப்போது?
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பிறகு, ஆயிர வருட ஆட்சிக்கு முன்பு
நோக்கம்:
கடைசி 7 வருடங்களில் “செம்மறியாடுகளை" (கர்த்தரோடு வாழ்ந்தவர்கள்) "வெள்ளாடுகளிலிருந்து" (கர்த்தரோடு வாழாதவர்கள் மற்றும் கர்த்தர் இருந்தும் அவர் விரும்பியபடி வாழாதவர்கள்) பிரிப்பது.
விளைவு: நீதியுள்ள மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ் ஆயிர வருட ஆட்சியில் நுழைகின்றார்கள், அதே நேரத்தில் துன்மார்க்க மக்கள் பாதாளத்தில் போடப்படுவார்கள்.
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
[தானியேல் 12:2]
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
[தானியேல் 12:3]
அதாவது பழைய ஏற்பாட்டில் மரித்த அனைவரும் இயேசுவின் இரண்டாம் பகிரங்க வருகையின் போது எழுந்திருப்பார்கள். அதில் பரிசுத்தமானவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியில் இடம் பெறுவார்கள்.
பைபிள் குறிப்பு: மத்தேயு 25:31–46, 2 கொரி 5:10 (செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளின் உவமை).
இரகசிய வருகை vs இரண்டாம் வருகை
இரகசிய வருகை என்பது விசுவாசிகளை பூமியிலிருந்து விடுவித்து பரலோகத்திற்கு கொண்டு செல்வதாகும், அதேசமயம் இரண்டாம் வருகையானது அவிசுவாசிகளை நியாயத்தீர்ந்து பூமியிலிருந்து விடுவித்து பாதாளத்தில் போடுவதாகும்.
(The secret coming(Rapture) is to free believers from the earth and take them to heaven, whereas the second coming is to free unbelievers from the earth and cast them into hell.)
5. ஆயிரமாண்டு அரசாட்சி (Millennium)
- கிறிஸ்து 1,000 ஆண்டுகள் பூமியில் ஆட்சி செய்வார்.
- சாத்தான் சங்கிலியினால் கட்டுப்பட்டு இருப்பான்.
- அப்போது அந்த கடைசி 7 ஆண்டுகளில் கீழ்க்கண்ட வசனத்தின்படி இருந்தவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
- இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த நாள் முதல், சபை எடுத்துக்கொள்ளப்படும் நாள் வரை வாழ்கிற மக்களுக்கு பெயர் தான் சபை என்ற மணவாட்டி.
- இவர்கள் இந்த ஆயிரம் வருட அரசாட்சியில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
- இயேசு தன்னுடைய சபையாகிய மனைவியை வீட்டில் வைத்து பராமரிப்பார்.
- பழைய ஏற்பாட்டில் பாவியாக வாழ்ந்தவர்கள் யாவரும், கிருபையின் காலத்தில் பாவியாக மரித்தவர்கள் யாவரும், அந்த கடைசி 7 வருடங்களில் கர்த்தரை அறியாதவர்களாகிய/மறுதலித்தவர்களாகிய மரித்தவர்கள் அனைவரும் அந்த 1000 வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. (வச 20:5)
- இவர்கள் எல்லாரும் இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள். (வச 20:13-14)
- அந்த 7 ஆண்டுகளில் கிறிஸ்துவுக்காக மரிக்கிறவர்கள் தான் உயிரோடு எழும்பி ஆசாரியர்களாக ஆண்டவர் பயன்படுத்துவார்.
- ஆண்டவர் ஆதாமுக்கு கொடுத்த அதிகாரத்தை அவன் சாத்தானிடத்தில் விற்றுப் போட்டான்.
- இப்போது மீண்டும் தேவன் மனிதனுக்கு அந்த ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறார்.
- அது தான் ஆயிரம் வருட அரசாட்சி.
- பிசாசு இல்லாததனால் எந்த ஒரு கெட்ட விஷயமும் இல்லை.
- ஆயிரம் வருட முடிவில் சாத்தான் விடுதலையாவான்.
- ஆயிரம் ஆண்டுகள் இயேசுவின் ஆட்சியில் இருந்தவர்களையும் மோசம் போக்குவதற்காக வருவான்.
- அப்போது ஒரு கூட்டம் வஞ்சிக்கப்படும்.
- சாத்தான் இல்லாத உலகத்தில் அந்த மக்கள் நன்றாய் தான் இருப்பார்கள்.
- எனவே அவர்களுக்கு ஒரு சோதனையாக பிசாசை கொஞ்சகாலம் விடுதலையாக்குகிறார்.
- அவர்கள் இயேசுவுக்கு எதிராக யுத்தம் பண்ண வருவார்கள்.
- அவர்கள் இந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விட்டு விடுவார்கள்.
- அந்த இடத்தில் சாத்தான் பட்சமாய் சாய்கிறவர்களுக்கு கதை முடிந்தது.
6. வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு (Great White Throne Judgment)
யார் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
இரட்சிக்கப்படாமல் இறந்த அனைவரும் அதாவது தங்கள் வாழ்நாளில் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பைப் பெறாத அனைவரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். இதில் அந்த கடைசி 7 வருடங்களில் தவறாக வாழ்ந்தவர்களும் அடங்குவர். இதில் இறுதியில் சாத்தானும் அவனைப் பின்பற்றுபவர்களும் அடங்குவார்கள்.
எப்போது?
ஆயிரமாண்டு அரசாட்சிக்கு பிறகு, உலக காலவரிசையின் முடிவில்.
நோக்கம்: தேவனை நிராகரிப்பதன் அடிப்படையில் ஆதி முதற்கொண்டு அனைத்து பாவிகளுக்கும் இறுதி மற்றும் நித்திய நியாயத்தீர்ப்பு.
முடிவு:
இரட்சிக்கப்படாதவர்கள் நெருப்பு எரியில் (நித்திய தண்டனை) தள்ளப்படுவார்கள். பழைய ஏற்பாட்டில் பாவியாக வாழ்ந்தவர்கள் யாவரும், கிருபையின் காலத்தில் பாவியாக மரித்தவர்கள் யாவரும், அந்த கடைசி 7 வருடங்களில் கர்த்தரை அறியாதவர்களாகிய/மறுதலித்தவர்களாகிய மரித்தவர்கள் அனைவரும் அந்த 1000 வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. (வச 20:5) இவர்கள் எல்லாரும் இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள். (வச 20:13-14)
சாத்தான், அந்திக்கிறிஸ்து மற்றும் கள்ளத்தீர்க்கதரிசி இந்த மூன்றாக செயல்படும் சாத்தான் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படுவான்.
பைபிள் குறிப்பு: வெளி 20:11–15.
7. புதிய வானம் புதிய பூமியும் (New Heavens and New Earth)
- பாவமின்றி, மரணமின்றி, தேவனுடன் எந்நாளும் வாழும் நிலை.
- ஆதி 1:1 ல் சடுதியாக உண்டான வானமும், பூமியும் வெளி 20:11 ல் சடுதியாய் திடீரென்று இல்லாமல் போனது.
- மணவாட்டியாகிய சபை இப்போது தான் இறங்கி வருகிறது.(வெளி 21:2)
- பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்,இஸ்ரவேலின்12 கோத்திரங்களும், புதிய ஏற்பாட்டு சபை, 12 அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒன்று கூடி வாழ்வதே இந்த புதிய வானம், புதிய பூமி. (வெளி 21:13-14)
- நகரத்தின் மதிலின் அஸ்திபாரங்களாக -12 அப்போஸ்தலர்கள்
- நகரத்தின் வாசல்கள்- 12 கோத்திரங்கள்
- அந்த நகரம் சதுரமாயிருந்தது (வெளி 21:16)
Extra informations
- இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த அந்த நாளில் இருந்து இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படும் வரை, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அனைவரும், கிறிஸ்துவோடு வாழ்கிற அனைவரும்(சபை- மணவாட்டி) மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இதுவே சபையின் காலம்.
- பின்பு, யூதர்களுடைய பழைய ஏற்பாட்டுக் காலம் தொடங்கும்.
- தானியேலுக்கு ஆண்டவர் 490 வருடங்களை கொடுத்தார்.
இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
-தானியேல் 9 : 25
அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
-தானியேல் 9 : 26
ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும்- 483 years
7 வாரம் = 7*7 =49 நாட்கள் அதாவது 49 வருடங்கள் (Jerusalem rebuilding)
62 வாரங்கள் = 62*7= 434 நாட்கள் (from rebuilding to messiah)
434+49=483
அதாவது 483 வருடங்கள்
62+7=69 வாரங்கள் முடிந்துவிட்டது. 1 வாரம் மீதியாயிருக்கிறது.
கடைசி 7 வருடங்கள் - 7 years
அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
-தானியேல் 9 : 27
கடைசி ஒரு வாரம் மீதியாயிருக்கிறது. அதாவது தானியேலின் 70 வருடங்களில், 69 வாரங்கள் முடிந்து விட்டது. ஒரு வாரம் மீதியாயிருக்கிறது. அதாவது 7 நாட்கள் - 7 வருடங்கள். அந்த மீதியிருக்கிற 7 வருடங்கள், சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு வரக்கூடிய 7 வருடங்களாகும். அதாவது யூதருடைய மீதி 7 வருடங்கள்.
- நெகேமியா மதிலை கட்ட ஆரம்பித்த வருடம் கி.மு 453.
- இயேசு கிறிஸ்து மரித்த வருடம் கி.பி 30.
- 453+30=483
- 453 (B.C.) + 30 (A.D.) = 483 ஆண்டுகள்
- 483 முடிந்தவுடன் பழைய ஏற்பாட்டு காலம் இடை நிறுத்தப்பட்டது.
- கிருபையின் காலம் தொடங்கியது.
- கிருபையின் காலம் முடிவடைவது சபை எடுத்துக்கொள்ளப்படும் போது.
- அதன் பின்பு மீண்டும் 7 ஆண்டுகள் பழைய ஏற்பாட்டுக் காலம்.
- அந்த 7 ஆண்டுகளும், 483 ஆண்டுகளும் ஒன்று சேரும் போது 490 ஆண்டுகள் நிறைவடைகிறது.
- தானியேலால் உரைக்கப்பட்ட 70 வருடங்கள் முழுமையாக நிறைவடையும்.
பழைய ஏற்பாட்டு பலிகள்
- இரகசிய வருகை முடிந்தவுடன், பழைய ஏற்பாட்டு பலிகள் மீண்டும் எருசலேமில் தொடங்கும்.
- அதற்கான எல்லா ஆயத்தங்களும் நடந்து விட்டன.
- ஆலயத்திற்குள் செல்வதற்காக பிரதான ஆசாரியர் பரிசுத்தமாக வேண்டும். அதற்கான பலி சிவப்பு கிடாரி ஆலயத்திற்கு புறம்பே பலியிட வேண்டும்.
- அந்த பலி Aug-3ம் தேதி நடந்தேறி விட்டது.
- Architectural drawings and models ready for building the third temple
- பொன் குத்துவிளக்கு(menorah), தூபவர்க்கம், வெண்கலத் தொட்டி, shofar- எக்காளம், 10 அப்கங்களை கொண்ட மேஜை, golden crown, priestly garments everything is ready
- A group of kohanim, கோகாத் புத்திரர்(descendants of Aaron) have been identified using DNA evidence. These men are trained on all those laws and rituals.
- DNA evidence is given in the temple institute website - Y chromosome of Jewish priests)
Comments
Post a Comment