உபத்திரவம் - Affliction

உபத்திரவம் - ஒரு வேதாகமப்பார்வை (Affliction: A Biblical Perspective)

உபத்திரவத்தைக் குறித்தான ஒரு ஆழமான பார்வை

  1. உபத்திரவத்திற்கான காரணம் மற்றும் நோக்கம் (The Reason or Purpose of Affliction)

  2. மனிதனுடைய மற்றும் தேவனுடைய அணுகுமுறை (The Right Responses to Affliction - Human and Divine)

  3. விளைவுகள்(The Result or Outcome of Affliction)

(1) உபத்திரவத்திற்கான காரணம் மற்றும் நோக்கம் (The Reason or Purpose of Affliction)

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் உபத்திரவம் என்பது தற்செயலானது அல்ல. தேவன் உபத்திரவத்தை அனுமதிப்பதற்கு பைபிள் பல்வேறு காரணங்களை முன் வைக்கிறது.

நியாயத்தீர்ப்புக்கான உபத்திரவம் - பாவம் மற்றும் கீழ்ப்படியாமை (Judgmental Affliction - Sin and Disobedience)

  • நோக்கம்: தொடர்ச்சியான பாவத்தின் விளைவாக (As a result of persistent sin)

  • வசனம்"பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.
     -ஆமோஸ் 3 : 2

    கர்த்தர் இஸ்ரவேலரை தேசத்தினின்று அகற்றினார் (2 இராஜா 17:7–18)

மனிதனின் தேர்ந்தெடுப்பின் விளைவுகள் (Consequences of Human Choices)

  • நோக்கம்: பாவம் அல்லது பிற செயல்களின் இயற்கையான விளைவுகள் (Natural results of sin or others’ actions)

  • வசனம்"மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்." — கலாத் 6:7

சாத்தானின் தாக்குதல்கள் (Satanic Attacks)

  • நோக்கம்: ஆவிக்குரிய எதிர்ப்பு மற்றும் சோதனை (Spiritual opposition and testing)

  • வசனம்"அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு போய், யோபுவை வாதித்தான்..." — யோபு 2:7

அப்பா பிள்ளையை  ஒழுங்குப்படுத்துதல் ( Disciplinary -Fatherly Correction)

  • நோக்கம்: நம்மை கர்த்தர் அன்பாக திருத்துகிறார் (Loving correction from God)

  • வசனம்"கர்த்தர் எவனிடத்தில் அன்புகூரைகிறாரோ அவனை சிட்சித்து திருத்துகிறார்..." — எபிரே 12:6–11

உயர்த்துவதற்காக, தயார் செய்வதற்காக (Promotional -To Elevate or Prepare)

  • நோக்கம்: மேம்படுத்த, பரீட்சை பார்க்க, ஊக்குவிக்க (To refine, test, and promote)

  • வசனம்"கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது." — சங் 105:19 (Joseph’s affliction)

உருவாக்குவதற்காக, கனிதருவதற்காக (Productive - To Bear Fruit)

  • நோக்கம்: நம்முடைய குணத்தை மேம்படுத்தவும், கிறிஸ்துவின் சாயலை உருவாக்கவும் (To build character and Christlikeness)

  • வசனம்"உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்...." — ரோமர் 5:3–5


(2) உபத்திரவத்தை அணுகும் முறை - RESPONSES IN AFFLICTION

எப்படி அணுக வேண்டும் - How Should We Respond?

  1. நம்மை ஆராய்ந்து அறிவதற்கு (Examine Ourselves)
    "
    நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.." — புலம்பல் 3:40

  2. ஜெபம் மற்றும் கர்த்தரை தேடுவதற்கு (Pray and Seek God)
    "
    உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.." — யாக் 5:13

  3. பொறுமையோடு இருப்பதற்கு (Endure with Patience)
    "
    சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; ..." — யாக் 1:12

  4. பாடுகளின்போது கர்த்தரில் களிகூர (Rejoice in Suffering - When it's for Christ)
    "
    கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்...." — 1 பேதுரு 4:13

  5. தேவனுடைய திட்டத்தை நம்ப (Trust God’s Purpose)
    "
    அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.." — யோபு 13:15

உபத்திரவத்தை கர்த்தர் எப்படி அணுகுகிறார் - How Does God Respond?

  1. கர்த்தர் காண்கிறார், அறிந்திருக்கின்றார் (He Sees and Knows)
    "
    அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்...." — யாத் 3:7

  2. கர்த்தர் ஆறுதல் அளிக்கிறவர் (He Comforts)
    "
    நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்..." — 2 கொரி 1:3–4

  3. கர்த்தருடைய சரியான நேரத்தில் விடுவிப்பார் ( He Delivers in His Time)
    "
    நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." — சங் 34:19

  4. கர்த்தர் நம்மை புடமிடுவார் (He Refines Us)
    "
    அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; — சகரியா 13:9


(3) RESULTS OR OUTCOMES OF AFFLICTION

  1. சுத்திகரிக்கப்பட்ட விசுவாசம் (Refined Faith)
    "
    உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து….." — யாக் 1:3

  2. தேவனை சார்ந்திருத்தல் அதிகரித்தல் (Increased Dependence on God)
    "
    நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்" — 2 கொரி 1:9

  3. கர்த்தருடைய கிருபையை ஆழமாக உணருதல் (Deeper Experience of God's Grace)
    "
    அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்." — 2 கொரி 12:9

  4. நித்திய கனமகிமை (Eternal Reward)
    "
    மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." — 2 கொரி 4:17

  5. மற்றவர்களுக்கு சாட்சியாகவும், ஆறுதல் செய்கிறவர்களயாயும் மாற (Testimony and Ministry to Others)
    "
    தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்..." — 2 கொரி 1:4

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4