தேவன் (God) மற்றும் கர்த்தர் (LORD)

தேவன் (God) மற்றும் கர்த்தர் (LORD)

நாம் பைபிள் வாசிக்கும் போது தேவன், கர்த்தர், ஆண்டவர் என்ற பதங்களை காண்கிறோம். ஏன் பைபிளில் சில சமயங்களில் 'தேவன்' என்றும், சில சமயங்களில் 'கர்த்தர்' என்றும் தனித்தனியாக (அல்லது சேர்த்தும்) கொடுக்கப்பட்டுள்ளது?" ஏன் பைபிள் அப்படி பிரித்து காட்டுகிறது. அதற்கு என்ன அர்த்தம், என்ன நோக்கம் என்பதனை கீழே காண்போம். 

தேவன் (God)

  • தமிழில் தேவன் 
  • ஆங்கிலத்தில் God 
  • எபிரேய மொழியில் Elohim
  • கிரேக்க மொழியில் Theos
விளக்கம்:
  • ‘எல்’ என்றால் தேவன், ஓஹிம் என்றால் பண்மைபெயர் (Elohim - plural of majesty). 
  • படைப்பின் தேவன் (Universal Creator God)
  • பொதுவான தேவன். (General Title)
  • சர்வ வல்லமையுள்ள தேவன் (supreme and mighty)
  • வல்லமை (Power), செயல் (Action), ஆட்சி தலைமை உரிமை (Sovereignty).
  • அவர் படைக்கிறார்பாதுகாக்கிறார்நீதியை நிறைவேற்றுகிறார்.
  • தேவனுடைய கரத்தை அதாவது அவர் கரம் செய்யக் கூடியவைகளை காண்பிக்கிற பெயர் (Hand of God) 
  • Hand of God (Elohim) — தேவன் பெரியவராக இருக்கிறார். அவர் நம்முடைய தேவைகளை நிறைவேற்ற வல்லமை உள்ளவர் (சங் 19:1, எரேமி 32:17)

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

 -அப்போஸ்தலர் 17 : 24


கர்த்தர் (LORD in all caps)

  • தமிழில் கர்த்தர் 
  • ஆங்கிலத்தில் LORD 
  • எபிரேய மொழியில் YAHWEH (YHWH)
  • கிரேக்க மொழியில் Kurios
விளக்கம்:

  • தேவனின் தனிப்பட்ட உடன்படிக்கைப் பெயர் - இருக்கின்றவராகவே இருக்கிறேன் (Personal Covenant Name of God) — "I AM" Personal name of  God
  • தேவனுடைய உள்ளம் அதாவது அவர் இருதயம் நம் மேல் வைத்திருக்கிற அன்பு, கிருபை, உடன்படிக்கையை காண்பிக்கிற பெயர் (Heart of God - Covenant, Relationship, Love) —
  • Heart of God (YHWH) — தேவன் நம்முடன் இருக்க விரும்புகிறார். அவர் நம்மை தனிப்பட்ட முறையில் நேசிக்கிறார் (யாத் 34:6, ஓசியா 2:19-20)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

 -யோவான் 3 : 16


கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.

 -யாத்திராகமம் 15 : 6

(Your right hand is glorious in power, O LORD)


கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.

 -யாத்திராகமம் 34 : 6


தேவன் (Elohim)

கர்த்தர் (YHWH)

Hand of God

Heart of God

படைக்கிறார்

இரட்சிக்கிறார்

அதிகாரம்

அன்பு

வல்லமையுள்ள செயல்

கிருபையுள்ள உறவு 


இரண்டும் சேர்ந்து வரும் போது என்ன அர்த்தம்?


உபா. 6:4

"இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

English — "Hear O Israel: The LORD our God, the LORD is one." (Deut 6:4)

அதாவது

இஸ்ரவேல் மக்கள் உரிமையாக சொல்லுவார்கள்: "எங்கள் உடன்படிக்கையின் தேவன்(கர்த்தர்) தான்சிருஷ்டிப்பு செய்த ஒரே உண்மையான தேவன்(தேவன்)" என்று.


தனித்தனியாக வரும் போது என்ன அர்த்தம்?

ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,

 -உபாகமம் 7 : 9

The LORD your God is God; He keeps covenant and mercy)

  • தேவன் நம்மிடம் அன்புகூறுதல் (கர்த்தர்)
  • உடன்படிக்கை, தயவு (கர்த்தர்)
  • அனைத்தும் சேர்ந்து ஒரே தேவன். கர்த்தரும் அவரே! தேவனும் அவரே!

உதாரணம்:

  • ஆதி. 1:1 — ஆதியிலே தேவன் (Elohim) வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.(படைப்பு)
  • ஆதி. 2:4 — தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.(உறவுமிக்க தேவன்)
  • உபா 6:4 இஸ்ரவேலே கேள்நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
  • சங் 100:3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்நாம் அல்லஅவரே நம்மைஉண்டாக்கினார்நாம் அவர் ஜனங்களும்அவர் மேய்ச்சலின்ஆடுகளுமாயிருக்கிறோம்.

இதனால், வேதாகம ஆசிரியர்கள் தேவன் யார் என்பதைப் பொறுத்து (அதாவது — படைக்கிறார், நம்முடன் உள்ள உறவு, இரட்சிக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு) எந்த பெயரை பயன்படுத்துவது எனத் தேர்வு செய்தனர் என்று கூறுகின்றனர். 


ஆவிக்குரிய நடைமுறை (Application)

  • நாம் தேவனின் Hand-ஐ (வல்லமையை) அறிந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.
  • நாம் தேவனின் Heart-ஐ (அன்பை) அறிந்து உறவுப் பிணைப்பு வைக்க வேண்டும்.

"Know the hand of God to trust His power; Know the heart of God to rest in His love."



கர்த்தர் என்ற YHWH - ஆண்டவர் என்ற Adonai


அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

 -யாத்திராகமம் 3 : 14 

Exodus 3:14
"And God said unto Moses, I AM THAT I AM: and he said, Thus shalt thou say unto the children of Israel, I AM
hath sent me unto you."

  • இங்கே "I AM" = எபிரேயத்தில் Ehyeh asher ehyeh (אֶהְיֶה אֲשֶׁר אֶהְיֶה) → வேர் சொல் "hayah" (הָיָה)
  • hayah = to be / to exist / to become
  • இதுவே YHWH (יהוה) என்ற பெயரின் வேர்ச்சொல். அதாவது தேவன் தன்னை "நான் இருக்கிறவர்" (Self-existent, Eternal One) என்று வெளிப்படுத்துகிறார்.

ஏன் யூதர்கள் YHWH (கர்த்தர்) என்று உச்சரிக்கவில்லை?

  • பழைய ஏற்பாட்டில் YHWH (Tetragrammaton — நான்கு எழுத்துக்கள்: י (Yod) ה (Hey) ו (Vav) ה (Hey)) என்பது தேவனின் தெய்வீகமான தனிப்பட்ட பெயர்.

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

 -யாத்திராகமம் 20 : 7

  • அதனால் யூதர்கள் (2ம் நூற்றாண்டு B.C. முதல்) மிகவும் பயத்துடன், YHWH-ஐ சொல்வதைத் தவிர்த்து, அதற்கு பதில் Adonai (אֲדֹנָי) (Lord / Master) என்று சொல்லத் தொடங்கினார்கள்.
  • Adonai (אֲדֹנָיLord (capital L, small ord) My Lord / My Master (கட்டளையிடும் அதிகாரம் உள்ளவர்)
  • Adonai என்பது "அதோன்" (Adon) என்ற சொல்லின் பன்மை; மரியாதை வடிவம் (plural of majesty) — "My Sovereign Lord" என்பதைக் குறிக்கிறது.
  • வேதாகமம் வாசிக்கும் போது, எங்கே YHWH இருந்தாலும், யூதர்கள் Adonai என்று அதற்கு பதிலாக வாசிப்பார்கள்.

ஆண்டவர் / கர்த்தர் 

Adonai

Lord or master 

Reverential substitution for YHWH


ஏன் இதற்கு முக்கியத்துவம்? (ஆழமான அர்த்தம்)

  • YHWH (கர்த்தர்) தேவனின் தன்னிச்சையான, தனிப்பட்ட பெயர்,எப்போதும் இருக்கிறவர் (Eternal & Self-Existent One).
  • "I AM WHO I AM" என்பது தேவன் எந்த ஒரு மாற்றத்திற்கும் உட்படாத தன்மையை காட்டுகிறது.
  • Adonai (Lord) என்பது தேவனின் அதிகாரத்தை காட்டுகிறது. 
  • அந்த ஆண்டவரின்மீதான மரியாதையும் பயமும்
  • தேவ நாமத்திற்கு மிகுந்த மரியாதைபயபக்தி, 2வது கட்டளையை மீறக்கூடாது என்ற நோக்கம்.
  • இயேசுவே "I AM" என்று தன்னைத் தெளிவாகச் சொன்னார்

வசன ஆதாரங்கள்

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -யோவான் 8 : 58

 (இயேசு தான் YHWH என்பதை வெளிப்படுத்துகிறார். அதனால் யூதர்கள் கற்கள் எடுக்க முயன்றனர்)


அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

 -யாத்திராகமம் 3 : 14

("I AM WHO I AM")


சர்வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

 -யாத்திராகமம் 6 : 3

 (“I appeared to Abraham... but by my name LORD (YHWH) I was not known to them")


கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

 -சங்கீதம் 110 : 1

("The LORD said to my Lord (YHWH said to Adonai)")


நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,

 -லூக்கா 20 : 42

( “David said... The LORD said to my Lord")


முடிவாக

Adonai - மரியாதை மற்றும் பயபக்தியின் அடையாளமாக YHWH என்பதற்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டது.
YHWH / hayah - தேவனின் தனித்துவமான "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்பதன் வெளிப்பாடு.

வேதத்தை வாசிக்கையில் இதன் பின்னணி தெரிந்தால் வசனங்களில் உள்ள ஆழமான அர்த்தம் தெளிவாகப் புரியும்.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4