திராட்சைச்செடியும், திராட்சைக்கொடியும்

திராட்சைச்செடியும், திராட்சைக்கொடியும் 

திராட்சைச்செடி (Vine) மற்றும் திராட்சைக்கொடி (Vine Branches) என்பது பைபிளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு ஒப்புமையாகும். இது தேவன், அவருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலை குறிப்பிடும் போதும், இயேசு கிறிஸ்து மற்றும் விசுவாசிகளை குறிப்பிடும் போதும் பயன்படுத்தியிருக்கிறார். ஆவிக்குரிய வாழ்க்கையை விளக்கும் இந்த உவமைகள், விசுவாசிகளாக நாம் தேவனுடன் இணைந்திருக்கும் அவசியத்தை வலியுறுத்துகின்றன.


திராட்சைச்செடி – இயேசு கிறிஸ்து

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.

 -யோவான் 15 : 1

  • இயேசு தான் மெய்யான திராட்சைச்செடியென்று கூறுகிறார்.
  • தோட்டம் என்பது பரலோகத்தையும், ஆவிக்குரிய ஜீவனையும் குறிக்கிறது. 
  • பிதாவாகிய தேவன் தோட்டக்காரர் – செடியைப் பராமரித்து, தேவையானவற்றை செய்வார். 

திராட்சைக்கொடிகள் – விசுவாசிகள் (நாம்)

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

 -யோவான் 15 : 5

  • விசுவாசிகள் திராட்சை செடியிலிருந்து முளைத்து படர்ந்த கொடிகள்.
  • கிறிஸ்துவில் இணைந்திருக்கும் வரையே அவரிடம் இருந்து ஜீவனையும் பலனையும் பெற முடியும்.
  • அவரிலிருந்து துண்டிக்கப்பட்டால் (தூரமாகினால்), நம்மால் எதையும் செய்ய இயலாது.

பலனளிக்க வேண்டும் – ஒரு விசுவாசியின் நோக்கம்

என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

 -யோவான் 15 : 2

  • ஆவியின் கனிகள் மூலம் விசுவாசிகளாக நாம் பலனளிக்க வேண்டும். (கலா 5:22-23)
  • தேவனுடைய வார்த்தையின் மூலமும், அவருடைய வழிநடத்தலின் மூலமும் நாம் பரிசுத்தமாக்கப்பட வேண்டும்

திராட்சை செடியின் மற்ற உவமைகள்

ஏசாயா 5:1–7 – இஸ்ரவேல் ஜனங்களை தேவன் ஒரு திராட்சைத் தோட்டமாக வளர்த்தார். ஆனால் அவர்கள் நல்ல திராட்சை பழங்களை கொடுக்காமல் கெட்ட பழங்களை கொடுத்தார்கள்.


பாவமான வாழ்க்கை காரணமாக பலனற்ற திராட்சைத் தோட்டமாக மாறினர்.


கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்ன?

  • கிறிஸ்துவுடன் தொடர்பில் இருப்பதே விசுவாச வாழ்க்கையின் மையம்.
  • பலனளிக்காத வாழ்க்கை பயனற்றது.
  • திராட்சை செடியின் கிளைகளாக நாம்: தொடர்ந்து ஜீவனையும், சக்தியையும் கிறிஸ்துவிலிருந்து பெற வேண்டும்; தூய்மையாக்கப்பட்டு பலனளிக்க வேண்டும்; தேவனின் பார்வையில் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

முடிவுரை:


திராட்சைச்செடியும் கொடியும் என்பது பைபிளின் ஆழ்ந்த ஆவிக்குரிய உவமை. நம்முடைய வாழ்க்கை இயேசுவில் இணைந்திருக்க வேண்டியதையும், பலனளிக்கும் வாழ்க்கையாக மாற வேண்டியதையும் இது நமக்குக் கற்பிக்கிறது.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்