தேவனுடைய ஆசீர்வாதமும், தேவனுடைய அனுமதியும்.

தேவனுடைய ஆசீர்வாதமும், தேவனுடைய அனுமதியும்.

தேவனுடைய ஆசீர்வாதம் (Blessing of God)

  • கர்த்தர் பூமியில் கொடுத்திருக்கிற அனைத்துமே தேவனுடைய ஆசீர்வாதம் தான். 
  • சிலரை பொருளாதார ரீதியில் ஆசீர்வதிக்கிறார்.
  • சிலருக்கு உடல் நல சுகத்தை கொடுத்திருக்கிறார்.
  • சிலருக்கு ஆவிக்குரிய ரீதியில் ஆசீர்வதித்திருக்கிறார்.
  • சிலருக்கு நல்லெண்ணங்களையும், சமாதானத்தையும் கொடுத்திருக்கிறார். 
  • ஆனால் ஆசீர்வாதத்தை கர்த்தரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர் கொடுத்திருக்கும் கட்டளைகளை நாம் பின்பற்ற வேண்டும். 
தேவனுடைய அனுமதி (Permission / Will of God)
  • தேவனுடைய அனுமதி என்பது கர்த்தர் சில காரியங்களை நம் வாழ்வில் அனுமதிக்கிறார். 
  • அது அவரிடம் இருந்து வரும் ஆசீர்வாதம் அல்ல. அனுமதி.
  • இந்த அனுமதியை இரண்டாக பிரிக்கலாம். 
  • நேரடி சித்தம் (God's perfect will) — தேவன் விரும்பும் பரிசுத்த செயல்.
  • அனுமதி சித்தம் (God's permissive will) — மனிதர் தேர்ந்தெடுக்கும் செயல்களை அனுமதிப்பது.

தேவனுடைய ஆசீர்வாதமும் அனுமதியும் சேர்ந்து பார்க்கும்போது:

  • இவை இரண்டும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
  • சில நேரங்களில், நாம் நினைக்கும் ஆசீர்வாதம் தாமதமாகலாம், ஆனால் அது தேவனுடைய காலத்தில்(time) நிறைவேறும் (பிரசங்கி 3:11).
  • நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் நன்மை, தீமை, எல்லாம் தேவனுடைய மேன்மையான நோக்கத்திற்கு இணங்கத்தான் நடைபெறும் (ரோமர் 8:28).

இங்கு நாம் இரண்டு சம்பவங்களை கொண்டு இந்த தேவ அனுமதியை ஆராய்வோம்.


சம்பவம் 1:

தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.

 -எண்ணாகமம் 11 : 33

  • இந்த வசனத்தில் இஸ்ரவேல் மக்கள் இறைச்சி கேட்டு தேவனுக்கு எதிராக முறுமுறுத்தார்கள் என்று வாசிக்கிறோம். 
  • எனவே கர்த்தர் அவர்கள் பாளையம் முழுவதையும் காடையினால் நிரப்பினார். 
  • ஆனால் அதை எடுத்து வாயில் வைக்கும் போது கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் மூண்டு வாதையால் வாதித்தார் என்று வாசிக்கிறோம்
  • இஸ்ரவேல் மக்கள் தேவனிடம் நன்றியில்லாமல், முறுமுறுத்து மனதின் எண்ணங்களோடு இறைச்சிக்காக வற்புறுத்தினார்கள். 
  • தேவன் அவர்கள் கோரிக்கையைத் திருப்தி செய்தபோதும், அவர்களின் தவறான மனநிலையின் காரணமாக வாதை அனுப்பி அவர்களை தண்டித்தார்.

கற்றுக் கொள்ள வேண்டுய முக்கிய பாடம் (Key Lesson)

  • தேவனை எதிர்த்து சுய ஆசையோடு முறுமுறுத்துதல் என்பது பாவம்.
  • தேவன் நமக்குத் தேவையானதை தருகிறார்; ஆனால் நாம் அவசியமில்லாத ஆசைகளை வற்புறுத்திக் கேட்டால், அது நமக்கு பாதகமாகவும் முடியும்.
  • “நாம் தேவனின் கொடைகளை நன்றி மனதோடு ஏற்றுக்கொள்வதை தான்” பைபிள் விரும்புகிறது.
  • இது நமக்கும் தேவனை நம்பிக்கையோடு, நன்றியோடு ஏற்றுக்கொள்ளும் மனம் இருக்கவேண்டும் என்பதை எச்சரிக்கையாக சொல்லுகிறது.

சங்கீதம் 78:18–31 - அவர்கள் தங்கள் சொந்த ஆசையைப்பற்றி தேவனைச் சோதித்தார்கள்; இறைச்சி கேட்டார்கள்; தேவன் கோபப்பட்டு வாதை அனுப்பினார்.

சங்கீதம் 106:14–15 - அவர்கள் ஆசையை நிறைவேற்றினார்; ஆனாலும் அவர்களுக்கு நோயும் வந்தது.

I கொரிந்தியர் 10:6–11 - இது நம்முக்குப் பாடமாக எழுதப்பட்டது — ஆசைப்பட்டு தேவனை சோதிக்க வேண்டாம்.


சம்பவம் 2:


இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து; அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.

 -எண்ணாகமம் 22 : 20


அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

 -எண்ணாகமம் 22 : 22

  • இந்த வசனத்தில் பாலாக் ராஜா, பிலேயாம் தீர்க்கத்தரிசி சம்பவத்தை வாசிக்கையில், முதல் முறை பாலாக்கின் பெரிய மனிதர்கள் பிலேயாம் தீர்க்கத்தரிசியிடம் வந்து இஸ்ரவேலரை சபிக்க வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 
  • அவர் கர்த்தரிடம் விசாரித்த போது கர்த்தர் பிலேயாமிடம் முதலில் "இல்லை, நீ அவர்களோடே போகக்கூடாது" (எண் 22:12) என்றார்.
  • பின்பு மறுபடியும் பாலாக்கின் பெரிய மனிதர்கள் அவரிடம் இரண்டாம் முறை வந்த போது பிலேயாம் மறுபடியும் கர்த்தரிடம் விசாரிக்க சென்றார்; தேவை இல்லாமல் கர்த்தரிடம் கேட்க வருகிறார் (ஏற்கனவே பதில் இருந்தும்). 
  • கடைசியாக, கர்த்தர் கூறுகிறார்: “போ. ஆனால் என் வார்த்தையே பேச வேண்டும்.” (அதாவது, தேவன் ஒரு விதத்தில் பிலேயாமின் உறுதியான ஆசைக்கு அனுமதி அளிக்கிறார் – ஆனால் விருப்பமின்றி!) இது முரண்பாடாகத் தோன்றலாம். 
  • ஆனால் , இது பிலேயாமின் உள்ளார்ந்த நோக்கத்தை தேவன் வெளிப்படுத்தும் ஒரு காட்சி. 
  • தேவன் அனுமதித்தாலும்பிலேயாம் ஆசைப்பட்டது பணத்திற்கும் புகழுக்கும்தான். 
  • தேவனின் அனுமதி ஒரு ஆசீர்வாதமாஇல்லை – சில நேரங்களில் தேவன் நம்மை நம்முடைய சுய விருப்பத்தின்படி அனுமதிக்கிறார்ஆனால் அது சிறிது நேரத்திற்குப் பின் நஷ்டமாய் முடிவடையலாம்.
  • வெளிப்படையில் கீழ்ப்படிதல் இருந்தாலும், உள்ளத்திலுள்ள நோக்கம் தேவனுக்குத் தெரியும்.
  • பிலேயாம் தேவனுடைய வார்த்தைகளை பேசத் தயாராக இருந்தாலும், அவன் மனதில் இன்னொரு ஆசை இருந்தது – அதுதான் கர்த்தரின் கோபத்திற்கு காரணம்.

கற்றுக் கொள்ள வேண்டுய முக்கிய பாடம் (Key Lesson)

  • நாமும் ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் தேவனிடம் கேட்கும் போது, தேவன் அனுமதிக்கலாம்.
  • ஆனால் அது நம்முடைய சுயநல விருப்பத்தின் விளைவாக இருக்கலாம். 
  • தேவனின் திட்டத்திலும், விருப்பத்திலும் நாம் நிற்க வேண்டியது முக்கியம் – அனுமதியில் அல்லஆசீர்வாதத்தில் வாழ வேண்டும்.
  • நாம் ஒரு காரியத்தை செய்வதற்கான உள்நோக்கம் தூய்மையானதா என எப்போதும் சோதிக்க வேண்டும்.
  • தேவன் சில நேரங்களில் நாம் பிடிவாதம் பண்ணும்போது, அனுமதி கொடுக்கலாம் (ஆனால் அது நம் ஆசீர்வாதத்துக்கல்ல).
  • உள்நோக்கம் தேவனிடம் முக்கியம். 
  • வெளிப்படையாக கீழ்ப்படிந்தாலும், உள்ளத்திலே வேறு எண்ணம் இருந்தால், தேவன் அதைக் கண்டுகொள்கிறார்.
2 பேது 2:15-16 – “பிலேயாம் அநீதத்தின் கூலியை விரும்பினான்”.
யூதா 1:11 – “பிலேயாமின் வழியில் தவறிப்போனவர்கள்”
நீதிமொழிகள் 16:2 – “மனுஷருடைய வழிகள் அவர்களுக்கு நேர்மைபோல தோன்றும்; ஆனால் கர்த்தர் இருதயங்களைத் நிறுத்துப் பார்க்கிறார்.”


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4