ரோமர் 8:19–22 வசனங்களின் விளக்கம்

ரோமர் 8:19–22  வசனங்களின் விளக்கம்

மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
 -ரோமர் 8 : 19
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
 -ரோமர் 8 : 20
அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
 -ரோமர் 8 : 21
ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
 -ரோமர் 8 : 22

ரோமர் 8:19–22 இந்த வசனங்களில் வருகிற தேவனுடைய புத்திரர் என்றால் யார்? சிருஷ்டி என்றால் என்ன? அழிவுக்குரிய அடிமைத்தனம் என்றால் என்ன? தேவனுடைய பிள்ளைகள் யார்? மாயைக்கு கீழ்ப்பட்டிருக்கிறது என்றால் என்ன? சர்வ சிருஷ்டி என்றால் என்ன? பார்ப்போம் வாருங்கள். 

1. “தேவனுடைய புத்திரர் (Sons of God)” அல்லது  “தேவனுடைய பிள்ளைகள் (Children of God)” என்றால் யார்?
  • இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட உண்மையான விசுவாசிகளைக் குறிக்கிறது. 
ரோமர் 8 : 14 : மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
யோவான் 1 : 12 : அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

2. “சிருஷ்டி (Creation)” என்றால் என்ன?
  • மனிதர்கள் அல்லாத இயற்கை உலகம் முழுவதையும் குறிக்கும்: பூமி, வானம், மரங்கள், மிருகங்கள், இயற்கை, நிலம், கடல் அனைத்தும்.
ஆதி 1:1–31: தேவன் படைத்த அனைத்தும்
ரோமர் 8 : 23: அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

"நாம்" என்று மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறது→ 'சிருஷ்டி' என்பது மனிதன் அல்ல

3. “அழிவுக்குரிய அடிமைத்தனம் (Bondage of Corruption)” என்றால் என்ன?
  • இது சிருஷ்டி தற்போது அனுபவிக்கும் அழிவு, மரணம், இயற்கை பேரழிவுகள் போன்ற வீழ்ச்சியான நிலையைச் சொல்கிறது.
ஆதி 3:17–19: பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்
II பேதுரு 3:10–12: புலம்பும் பூமி, அழியும் இயற்கை

4. “மகிமையான சுயாதீனத்தை (glorious liberty)
  • மகிமையான சுயாதீனம்” என்பது பாவம், மரணம், சிரமம் இல்லாத பரிபூரண சுதந்திரம், தேவனுடைய பிள்ளைகளுக்கான இறுதியான மகிமை (glorification) என்பதை குறிக்கும்.
  • பூமிக்கு மகிமையான சுயாதீனம் என்பது சாபமில்லாத புதிய வானமும், புதிய பூமியும் ஆகும். 
வெளி 22:3: இனி ஒரு சாபமுமிராது
வெளி 21:27: தீட்டுள்ளதும், அருவருப்பையும், பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை. 

5.  “மாயைக்கு கீழ்ப்பட்டிருக்கிறது (Subjected to futility)” என்றால் என்ன?
  • "மாயை (Futility)" என்பது வீணான, நோக்கமற்ற, பயனற்ற நிலை. இது சிருஷ்டி மரணத்திற்கு , அழிவிற்கு ஆளாயிருக்கிற நிலையை குறிக்கிறது.
ஆதி 3:17:  பூமி சாபமடைந்தது

6.“சர்வ சிருஷ்டி (Whole Creation)” என்றால் என்ன?
  • பூமி, வானம், கடல், மரம் - அனைத்தும் சேர்ந்து (மனிதர்கள் இல்லாமல் இயற்கை மட்டும் என்று சொல்லலாம்)
ரோமர் 8:22: "சர்வ சிருஷ்டி" (whole creation)
ஆதி 1: தேவன் படைத்த அனைத்தும்

முடிவுரை: 
  • பாவத்தின் காரணமாக சிருஷ்டி (பூமி) அழியப்போகிறது.
  • ஆனால் தேவனுடைய பிள்ளைகள் (விசுவாசிகள்) ஒருநாள் மகிமையுடன் வெளிப்படும் போது, சிருஷ்டியும் (பூமி) அந்த சாபத்திலிருந்து விடுதலை பெறும். 
  • எனவே தேவனுடைய புத்திரர்(விசுவாசிகள்) வெளிப்படுவதற்கு சிருஷ்டி(பூமி) ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது. 
  • அதேனென்றால் சிருஷ்டியானது (பூமி) அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று (மரணத்திலிருந்து) விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய(விசுவாசிகள்)மகிமையான சுயாதீனத்தைப் (புதிய பூமி, புதிய வானம்) பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே அந்தச் சிருஷ்டியானது(பூமி) சுய இஷ்டத்தினாலே அல்ல கீழ்ப்படுத்தினவராலேயே (கர்த்தர்) மாயைக்குக் (அழிவிற்கு) கீழ்ப்பட்டிருக்கிறது (ஒப்புக்கொடுக்கப்பட்டது).  
  • ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும்(பூமி, இயற்கை) ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?