தோட்டக்காரராகிய இயேசு
தோட்டக்காரராகிய இயேசு
- இயேசு தோட்டக்காரர் என்ற இந்த கருத்து, யோவான் 20:15ல் வரும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் வருகிறது.
இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
-யோவான் 20 : 15
-யோவான் 20 : 15
- இங்கே மகதலேனா மரியாள் இயேசுவை தோட்டக்காரர் என்று நினைத்தாள். ஏன்?
- அவளுக்கு மனிதனாக வந்த இயேசுவின் உருவைத் தெரியும்.
- அவளுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்பதால், இயேசு வேறு ஒரு உருவத்தில் வந்திருக்க வேண்டும்.
- ஏன் அவர் தோட்டக்காரர் உருவில் அவளுக்கு காட்சியளிக்க வேண்டும்.
முதலில் பைபிளில் காணப்படுகிற தோட்டங்களின் தொகுப்பை பார்ப்போம்
(1) ஏதேன் தோட்டம்
- தோட்டம் என்பது ஆண்டவருக்கு பிடித்தமான ஒன்று.
- ஆதியிலே கர்த்தர் ஆதாம் ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தை உருவாக்கி கொடுத்தார். (அங்கு அனைத்து வகை மரங்களும் இருந்தன)
-ஆதியாகமம் 2 : 8
- இங்கு கொடுக்கப்பட்டுள்ள உண்டாக்கி என்பதன் எபிரேய வார்த்தை nawtah என்பதாகும்.
- ஆங்கிலத்தில் “planted” என்று கொடுக்கப்பட்டு இருக்கும்.
- அதன் அர்த்தம் பயிரிட்டு, நட்டு என்பதாகும்.
- யார் தோட்டத்தில் பயிரிடுவார்கள்? தோட்டக்காரர்கள்.
- தேவன் தான் ஏதேன் தோட்டத்தை பயிரிட்டார்.
நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
-ஆதியாகமம் 9 : 20
-ஆதியாகமம் 9 : 20
ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.
-ஆதியாகமம் 21 : 33
(2) கெத்சமனே தோட்டம்
- பின்பு அவர் பூமியில் வாழ்ந்த பொழுது கெத்சமனே என்ற தோட்டத்தில் தன்னுடைய பெரும்பாலான ஜெபங்களை செய்தார். (ஒலிவ மர தோப்பு)
(3) கொல்கொதா தோட்டம்
- கடைசியில் கொல்கொதாவில் சிலுவையில் அறையப்பட்டார்.
- இந்த கொல்கொதா அமைந்திருந்த இடமும் ஒரு தோட்டம் தான். (திராட்சை தோப்பு)
- கொல்கொதா என்பதே தோட்டம் தான்.
-யோவான் 19 : 41
ஏன் இயேசு கொல்கொதா என்னும் தோட்டத்தில் உள்ள சிலுவையிலே அறையப்பட்டார்?
- இஸ்ரவேலில் எத்தனையோ சிலுவைகள் இருக்கிறது.
- ஆனால் ஏன் பெயர்செபாவில் இருக்கும் சிலுவையில் இயேசு அறையப்படாமல் அவர் எருசலேம்-யோப்பா சந்தியில் காணப்படுகிற கொல்கொதாவிலே சிலுவையில் அறையப்பட்டார்.
- ஏனென்றால் அது தேவனுடைய திட்டம்.
- அங்கு தான் தோட்டம் இருக்கிறது.
- தோட்டம் இருக்கிற இடத்தில் தான் அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பது தான் தேவ திட்டம்.
அடைக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தின் கதவு, கொல்கொதாவில் உள்ள தோட்டத்தின் சிலுவையின் மூலம் திறக்கப்பட்டது
- ஆதி 3:24 ன் படி ஏதேன் தோட்டத்தின் கிழக்கு வாசலை மூடி கேரூபீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் ஆண்டவர் வைத்தார்.
- அந்த ஏதேன் தோட்டத்தின் காவலின் அடையாளமாக சுடரொளி பட்டயம், கேரூபீன்கள் இவை இரண்டும் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலையில் விசித்திர வேலையாக (Embroidery) பண்ணப்பட்ட இருந்தது.
- ஏதேன் தோட்டம் என்பது தேவன் வந்து உலாவின இடம், தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்த இடம்
- அதே போல மகா பரிசுத்த ஸ்தலமும் தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்த இடம்.
- அன்று தேவனால் மூடப்பட்ட ஏதேன் தோட்டத்தின் வாசலின் கதவு, சிலுவையில் இயேசு மரித்ததன் மூலம் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரை கிழிந்ததன் (சுடரொளி பட்டயம் திரையை மேலிருந்து கீழாக சரியாக நடுவில் வெட்டிக் கொண்டு வந்தது) மூலம் திறக்கப்பட்டது.
- அதன் முலம் கேரூபீன்களும் இரண்டாக தகர்க்கப்பட்டது.
- மறுபடியும் தோட்டத்திற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
- அன்று வாழ்ந்த ஆதாம், ஏவாள் ஏக்கத்தோடு ஏதேன் தோட்ட வாசலை பார்த்திருப்பார்கள்.
- அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கேரூபீன்களும், சுடரொளி பட்டயமும்.
- பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஆசாரியர்களும் அந்த மகா பரிசுத்த ஸதலத்தின் திரையை ஏக்கத்தோடு பார்த்திருப்பார்கள்.
- அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கேரூபீன்களும், சுடரொளி பட்டயமும்.
- ஆனால் இயேசுவானவர் சபையாகிய நமக்கு அந்த தோட்டத்திற்குள் நுழைவதற்கான அதிகாரத்தை கொடுத்து இருக்கிறார்.
- நாம் எவ்வளவு பாக்கியவான்கள்.
முடிவுரை:
- பரலோகத்தை கர்த்தர் தோட்டத்தோடு ஒப்பிடுகிறார். எனவே தான் பிதாவை திராட்ச தோட்டக்காரர் என்றும் தன்னை திராட்சச்செடி என்றும் இயேசு குறிப்பிடுகிறார். (யோவான் 15:1)
- அதனால் தான் அவர் கொல்கொதா என்னும் தோட்டத்தில் மரித்து, தோட்டக்காரராக உயிர்த்தெழுந்து, தோட்டக்காரராகவே மகதலேனா மரியாளுக்கு காட்சியளித்தார்.
- பின்பு ஆதாம், ஏவாளுக்கு அடைக்கப்பட்ட தோட்டத்தின் கதவு நமக்கு திறக்கப்பட்டது.
- நமக்கு அந்த தோட்டத்தில் (மகா பரிசுத்த ஸ்தலத்தில்/பரலோகத்தில்) நுழையும் வாய்ப்பை அருளினார்.
Comments
Post a Comment