குற்றநிவாரண பலி என்றால் என்ன?
குற்றநிவாரண பலி என்றால் என்ன?
"Atonement" என்பது பாவத்தை மூடும் ஒரு நீதி மற்றும் சமாதான செயல். வேதத்தில்,
- பாவம் செய்தவனுக்குப் பதிலாக, ஒரு குற்றநிவாரணப் பலி (மிருகம்) கொடுக்கப்படுகிறது.
- அந்த இரத்தம் ஊற்றப்பட்டதினாலே, அவன் பாவமன்னிப்பைப் பெறுகிறான்.
- ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் பாவநிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
-லேவியராகமம் 17 : 11
குற்றநிவாரண பலி இயேசுவில் நிறைவேறியது.
புதிய ஏற்பாட்டில், இயேசு
- ஒட்டுமொத்த மனிதர்களின் பாவத்துக்காகவும், ஒரே ஒரு முறை, நித்திய மீட்பு பலியாக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
-எபிரேயர் 9 : 12
30 வெள்ளிக்காசுகளும், குற்றநிவாரண பலியும்:
30 வெள்ளிக்காசுகள்
- ஒரு அடிமையின் விலை (யாத்தி. 21:32)
- ஆனால் இயேசு எந்த பாவமும் இல்லாதவராக இருந்தும், அந்த மதிப்பில் விற்கப்பட்டார்.
- அதனால், அவர் பாவியின் இடத்தில் நிற்கும் குற்றநிவாரணபலியாக தம்மை ஒப்புகொடுத்தார்.
அவர் நம்முடைய இடத்தில் அடிமையாய் மாறினார்
அவருடைய இரத்தத்தின் மூலம் நம் குற்றத்தின் சுமையிலிருந்து நிவாரணம் பெற்றோம்.
தேவாலயத்தில் காசு ஒப்புக்கொள்ளப்படவில்லை – ஏன்?
- அந்த பணம் பாவத்தின் மூலம் வந்தது.
- அதாவது, குற்றமற்ற இரத்தத்தை விற்றப் பணம்.
- அந்த காசைக் கொண்டு தேவாலயத்தில் தூய பணி செய்யப்பட இயலாது.
- ஆனால் யூதாஸின் பாவக்காசு, பாவியின் மீட்புக்கு வழிவகுத்தது.
- இயேசுவின் இரத்தம் மட்டுமே பரிசுத்தம் என்பதால், அவர் மட்டுமே உண்மையான குற்றநிவாரண பலியை செலுத்த முடியும்.
தீர்க்கதரிசன நிறைவேறுதல் + குற்றநிவாரணபலி = நம்முடைய மீட்பு
- பழைய ஏற்பாட்டில், வெள்ளிக்காசு = அடிமையின் மதிப்பு
- புதிய ஏற்பாட்டில், இயேசு = நம்மை மீட்கும் பரிசுத்த இரத்தம்
- பழைய ஏற்பாட்டில் பாவம் மூடப்பட்டது - தற்காலிக மன்னிப்பு
- புதிய ஏற்பாட்டில் பாவம் கழுவப்பட்டது - முழு மன்னிப்பு.
Comments
Post a Comment