தளவரிசைப்படுத்தின மேடை என்றால் என்ன?
தளவரிசைப்படுத்தின மேடை என்றால் என்ன?
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
-யோவான் 19 : 13
-யோவான் 19 : 13
John 19:13 When Pilate therefore heard that saying, he brought Jesus forth, and sat down in the judgment seat in a place that is called the Pavement, but in the Hebrew, Gabbatha.
இந்த வசனத்தில் காணப்படும் தளவரிசைப்படுத்தின மேடை என்றால் என்ன?
இதை ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு விதமாக அழைப்பார்கள்.
1) ஆங்கிலத்தில் - Judgement seat or pavement
2) எபிரேய மொழியில் - கபத்தா (gab-a-tha)
3) அராமிய மொழியில் - கபத்தா(gabhetha)
4) கிரேக்க மொழியில் -லித்தோஸ்ட்ரோடோஸ் (lithostroton)
- இதன் அர்த்தம் என்னவென்றால் உயர்ந்த மேடை/கற்கள் பதிக்கப்பட்ட தரை (pavement)/கல் மேடை/நடை பாதை ஆகும்.
- அது மென்மையான, சதுரமான, வெட்டப்பட்ட கற்களால் அமைக்கப்பட்டதால் அது அவ்வாறு அழைக்கப்பட்டது.
விளக்கம்:
- புதிய ஏற்பாட்டு தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தை சுற்றி கற்களால் பதிக்கப்பட்ட ஒரு இடம் இருக்கும்.
- அதை தான் “கபத்தா” என்று அவர்கள் அழைத்தனர்.
- அங்கு தான் யூதேயாவின் ரோமானிய ஆளுநரான பொந்தியு பிலாத்துவின் நியாயாசனம் வைத்திருந்தார்கள்.
- அங்கு வைத்துதான் கைதிகளுக்கு தீர்ப்பு சொல்லுவார்.
- சாதாரண உலக ஜனங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் இடம் அது.
- இயேசுவை சிலுவையில் அறையும்படி தீர்ப்பு அளித்த இடமும் அதுவே!
தீர்ப்பு வழங்கும் இடம்
- கர்த்தர் தெரிந்து கொண்ட இடத்திலிருந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கீழ்க்காணும் வசனம் குறிப்பிடுகிறது.
- அந்த கர்த்தர் தெரிந்துக்கொண்ட இடம் தான் கற்கள் பதிக்கப்பட்ட தளவரிசைப்படுத்தின மேடை.
- அது தான் கபத்தா.
- அங்கு வைத்து தான் எல்லோருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.
-உபாகமம் 17 : 10
-உபாகமம் 17 : 10
- புதிய ஏற்பாட்டுக் காலத்தில் “கபத்தா” என்ற இடம் தேவாலயத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது.
- அதில் பாதி பரிசுத்தமானது(holy-ஆசாரியர்களுக்கு);
- பாதி பொதுவானது.(common-பொது ஜனங்களுக்கு)
- அதற்கு இரண்டு கதவுகள் இருந்தன.
- ஒன்று பரிசுத்தமான பகுதிக்கும், மற்றொன்று பொதுவான பகுதிக்கும் இருந்தது.
- பிலாத்து ஒரு புறஜாதியார் என்பதால், அவர் இந்த பொதுவான பகுதியின் கதவு வழியாக நுழைவார்.
பைபிளில் இந்த வார்த்தை எங்கெல்லாம் காணப்படுகிறது
- இந்த தளவரிசைப்படுத்தப்பட்ட இடம், பழைய ஏற்பாட்டில் 1 இராஜா 6:15; 6:16; 6:30;7:7; 2 இராஜா 16:17; 2 நாளா 7:3; எஸ்தர் 1:6; எசேக்கி 40:17;40:18;42:3 ஆகிய வசனங்களில் காணப்படுகிறது.
- புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு முறை யோவா 19:13ல் காணப்படுகிறது.
அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
-2 நாளாகமம் 7 : 3
- இந்த வசனத்தில் இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய மகிமையை கண்டபோது அவர்கள் தரைமட்டும் குனிந்து கர்த்தரை வணங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது.
- மக்கள் எல்லோரும் அந்த தேவாலயத்து வெளிப்பிரகாரத்தில் நின்றிருந்தபடியினால் தரைமட்டும் குனிந்தார்கள் என்பதனை தளவரிசைமட்டும் என்று குறிப்பிடுகின்றனர்.
பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின் மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின்மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,
-2 இராஜாக்கள் 16 : 17
- இங்கு ஆகாஸ் ராஜா, தேவனுக்குரியவைகளை அவமதித்து, தேவாலயத்தில் இருந்தவைகளை அகற்றி தளவரிசையிலே வைத்தான் என்று வாசிக்கிறோம்.
போஜனபலி இயேசுவில் நிறைவேறியது:
நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக.
-லேவியராகமம் 2 : 5
- பழைய ஏற்பாட்டில், போஜனபலி தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட வேண்டும் என வாசிக்கிறோம்.
- போஜனபலியையும் இயேசு சிலுவையில் நிறைவேற்றினார் என்றால், இந்த விதியும் நிறைவேறி இருக்க வேண்டும் அல்லவா??
- ஆம். நிறைவேற்றினார்.
- இந்த தட்டையான சட்டி என்பது எபிரேய மொழியில் makh’ab’ath இல்லது ka’batha என்று அழைக்கப்படும்.
- அதே கபத்தாவில் இருந்து தான் பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்.
ஆங்கிலத்தில் இப்படி அழகாக சொல்லுவார்கள்
Gethsemane - Place of Sorrow - The Cup
Gabbatha - Place of Sentence - The Crown
Golgotha - Place of Suffering - The Cross
அதன் அர்த்தம் என்னவென்றால்,
கெத்செமனே - துக்கத்தின் இடம் - கோப்பை
கபத்தா - தண்டனையின் இடம் - கிரீடம்
கொல்கொதா - துன்பத்தின் இடம் - சிலுவை
Comments
Post a Comment