ராகேல் பெற்ற பென்யமீனும்; மரியாள் பெற்ற இயேசுவும்
ராகேல் பெற்ற பென்யமீனும்; மரியாள் பெற்ற இயேசுவும்
பெத்தேல் - தேவனின் வீடு (House of God)
இஸ்ரவேல் - கர்த்தரே வெற்றி பெறுகிறார். (God prevails-Prevail means to successfully persuade someone of something)
பெனொனி - 'என் துக்கத்தின் மகன்' (Son of my sorrow)
பென்யமீன் - 'வலது கையின் மகன்' (Son of the right hand)
வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு பிறப்புகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உண்டு.
பென்யமீன் |
இயேசு |
யாக்கோபின் அன்புக்குரிய மகன் |
தேவனுடைய பிரியமான குமாரன் (மத் 3:17) |
பென்யமீன் பிறந்த போது ராகேல் மரணமடைந்தாள் (ஆதி 35:16-18) |
இயேசுவின் பிறப்பின் போது குழந்தைகள் கொல்லப்பட்டனர் (மத்தேயு 2:16-18), |
இரண்டு பெயர்களை கொண்டவர் - பெனொனி, பென்யமீன் |
இரண்டு பெயர்களை கொண்டவர் - நசரேயனாகிய இயேசு, கிறஸ்து. |
பென்யமீன் என்ற பெயரே "வலதுகரத்தின் மகன்" என்று பொருள். |
தேவனுடைய வலதுகரத்தில் இருக்கிறார் (எபிரேயர் 1:3). |
மந்தையின் துருக்கத்தோடு தொடர்புடையவன் (ஆதி 35:21). ஏதேர் என்ற கோபுரம் அதாவது Migdal-Eder அதாவது மந்தையின் துருக்கம். |
மந்தையின் துருக்கத்தில் பிறந்தார்.(லூக்கா 2:12) |
அவள் இறக்கப் போகிறாள் என்பதை அறிந்த ராகேல், தன் மகனுக்கு பெனொனி (என் துக்கத்தின் மகன்) என்று பெயரிட்டாள். |
உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப் போகும் என்று சிமியோன் மரியாளிடம் சொன்னார். ( லூக்கா 2:34-35).மரியாளுக்கு பிறந்த இயேசு என்ற குழந்தை ஒரு நாள் 'துக்கத்தின் மகனாக' மாறும். அதாவது நம் பாவங்களை சுமக்கப் போகிறார். |
ஆனால் இஸ்ரவேல் ('கர்த்தர் வெற்றி பெறுகிறார்') அவனுக்கு பென்யமீன் 'வலது கையின் மகன்' என்று பெயர் சூட்டினான். |
ஆனால் வெற்றி தருகிற அவருடைய பிதாவாகிய தேவன் அவரை உயிர்த்தெழச் செய்து தன் வலது கரத்தில் உட்காரச் செய்வார். |
Comments
Post a Comment