பைபிளும், யாசேர் புத்தகமும்

பைபிளும், யாசேர் புத்தகமும்

நாம் பைபிளில் 2 இடங்களில் யாசேர் புத்தகத்தைக் குறித்து வாசிக்கிறோம். 

1. யோசுவா 10:13
2. 2 சாமுவேல் 1:18
  • 2 தீமோத்தேயு 3 : 8 - இந்த வசனத்தில் யாசேர் புத்தகம் என்று குறிப்பிடப்படவில்லை. 
  • ஆனால் இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள் யாசேர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
இப்போது பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களையும், அதற்கு இணையான யாசேரின் புத்தக வசனங்களையும் காண்போம். 

வேதத்தை ஆராய்ந்து அறிவோம்
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
 -பிரசங்கி 12 : 13
Ecclesiastes 12:13 Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man.

பைபிள் வசனம்: யோசுவா 10 : 13
“அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது”.

யாசேர் புத்தக வசனம்: யாசேர் 88:63-64
“அவர்கள் தாக்கிக் கொண்டிருந்தபோது, பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. யோசுவா எல்லா மக்களின் கண்களுக்கும் முன்பாக: சூரியனே, நீ கிபியோனிலும், சந்திரனே, நீ அயலோன் பள்ளத்தாக்கிலும், அந்த ஜனங்கள் தங்கள் சத்துருக்களைப் பழிவாங்கும் வரைக்கும், அசையாமல் நில் என்றான்.
கர்த்தர் யோசுவாவின் சத்தத்தைக் கேட்டார், சூரியன் வானத்தின் நடுவில் முப்பத்தாறு நிமிஷம் அசையாமல் நின்றது, சந்திரனும் அசையாமல் ஒரு நாள் முழுவதும் அஸ்தமிக்காமல் நின்றது”.

பைபிள் வசனம்: 2 சாமுவேல் 1:18
“(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின புலம்பலாவது:”

யாசேர் புத்தக வசனம்: யாசேர் 56:8-9
“யாக்கோபு யூதாவை நோக்கி: என் மகனே, நீ பராக்கிரமசாலி என்று உன் சகோதரர்கள் அறிவார்கள்; அவர்கள்மேல் நீ ராஜாவாயிரு, உன் குமாரர் தங்கள் குமாரர்மேல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்கள் என்றான்.
உன் மகன்களுக்கு வில்லையும், யுத்த ஆயுதங்களை உபயோகிக்கும் முறையையும் மட்டும் கற்றுக் கொடு. அப்போதுதான், அவர்களின் சத்துருக்களை ஆளும் சகோதரர்களின் யுத்தங்களில் அவர்கள் வெற்றி பெற முடியும்”.
  • சவுலும், யோனத்தானும் மரித்த பொழுது, இதை தான் தாவீது புலம்பலாக பாடுகிறார். 
  • யாக்கோபு தன் மகன்கள் யூதாவுக்கு கொடுத்த இந்த ஆசீர்வாதத்தை குறித்து சொல்லி புலம்புகிறார். 
  • இப்படி ஆசீர்வாதத்தைப் பெற்ற யூதா விழுந்து போனதே என்று புலம்புகிறார். 
பைபிள் வசனம்: 2 தீமோத்தேயு 3:8

யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்”.

யாசேர் புத்தக வசனம்: யாசேர் 79:25-28
 பார்வோன் மோசேயை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்; அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எபிரெயரின் தேவனாகிய கர்த்தர்: எனக்கு ஊழியஞ்செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடும் என்று சொல்ல எங்களை உம்மிடத்தில் அனுப்பினார் என்றார்கள். 
பார்வோன் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டபோது, அவர்களுக்கு முன்பாக மிகவும் பயந்து, அவர்களை நோக்கி: இன்று போய், நாளைக்கு என்னிடத்தில் திரும்பி வாருங்கள் என்றான்; அவர்கள் ராஜாவின் வார்த்தையின்படி செய்தார்கள். 
அவர்கள் போனபின்பு, பார்வோன் மந்திரவாதியான பிலேயாமையும், அவன் குமாரர்களான யந்நேயையும், யம்பிரேயையும், ராஜாவுக்குச் சொந்தமான சகல மந்திரவாதிகள், ஆலோசனைக்காரர்கள் எல்லோரையும் அழைப்பித்தான்; அவர்கள் எல்லாரும் வந்து ராஜாவுக்கு முன்பாக அமர்ந்தார்கள்

மோசேயும் அவன் சகோதரன் ஆரோனும் தன்னிடம் சொன்ன வார்த்தைகளையெல்லாம் ராஜா அவர்களுக்குச் சொன்னான். மந்திரவாதிகள் ராஜாவை நோக்கி: சிங்கங்கள் வாசலிலே அடைபட்டுக் கிடந்தபோது, அந்த மனிதர்கள் எப்படி உம்மிடத்தில் வந்தார்கள் என்றார்கள்”.

  • இவர்கள் இரண்டு பேரும், நாம் எண்ணாகமம் 22-ல்  வாசிக்கக்கூடய பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் மகன்கள் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறது. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4