யெஷூரன்
யெஷூரன் என்றால் என்ன?
உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.
-ஏசாயா 44 : 2
-ஏசாயா 44 : 2
இந்த வசனத்தில் குறிப்படப்படும் யெஷூரன் என்றால் என்ன?
- இது ஒரு எபிரேய மொழிச் சொல்.(“Yeshoorun” is a Hebrew word)
- அர்த்தம்: நேர்மையானவள். (Upright one)
- இது இஸ்ரவேலின் ஒரு குறியீட்டு பெயர். (A symbolic name for Israel)
- இஸ்ரவேலுடைய சிறந்த தன்மையை விவரிக்கிறது. (Describing her ideal character)
- இது கவிதை நடையில் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை(a poetical)
- இது ஒரு மென்மையான மற்றும் அன்பான தொனியில் தன் மக்களை அழைக்கும் ஒரு வார்த்தை (a tender and loving appellation of the people of Israel)
- முக்கியமாக இந்த appellation என்ற வார்த்தை, புனைப்பெயர் (nickname) என்ற அர்த்தத்தை கொண்டது.
யாசேரின் புத்தகம்:
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.
-யோசுவா 10 : 13
- யாசேர் புத்தகம் என்று பைபிளில் வாசிக்கிறோமே!
- அந்த புத்தகம் இந்த யெஷூரன் என்ற வார்த்தையோடு மிகவும் தொடர்புடையது.
- யாசேர் புத்தகம் என்பதற்கு நேர்மையானவரின் புத்தகம் அல்லது நீதிமானின் புத்தகம் என்று அர்த்தம். (The Book of Jasher which means the Book of the Upright or the Book of the Just Man)
- முக்கியமாக இந்த புத்தகத்தை இஸ்ரவேலின் ஹீரோக்களின் புத்தகமாகக் கருதுகின்றனர்.(The book of Jashar was a collection of stories about the exploits of Israel's heroes, including Joshua)
- நாமும் பைபிளில் யோசுவா 10:13 ல் ஆண்டவர் யோசுவா மூலம் செய்த அற்புதத்தையும், அதன் கீழ் இதெல்லாம் யாசேர் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று வாசிக்கிறோம்.
- அதேப் போல 2 சாமுவேல் 1:18 லும் கூட தாவீது பாடின புலம்பலைக் குறித்து யாசேர் புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று வாசிக்கிறோம்.
- 2 தீமோத்தேயு 3:8 ல் “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல” என்று வாசிக்கிறோம். இந்த இரண்டு பேரும் யாசேரின் புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறார்கள் என்று வேத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.
-உபாகமம் 32 : 15
ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.
-உபாகமம் 33 : 5
யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
-உபாகமம் 33 : 26
Comments
Post a Comment