மத்தேயு 9:17 - வாழ்க்கையோடு ஒரு ஒப்பீடு

மத்தேயு 9:17 - வாழ்க்கையோடு ஒரு ஒப்பீடு

புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
 -மத்தேயு 9 : 17

ஒப்பீடு:
புதிய திராட்சரசம் - உயிர்க்கப்பிட்ட ஆவி
பழைய துருத்தி - நம்முடைய சரீரம், ஆத்துமா
ரசம் - பழைய வாழ்க்கை/பாவங்கள்/சிந்தனைகள்

விளக்கம்:
உயிர்ப்பிக்கப்பட்ட ஆவி, நம்முடைய பழைய சரீரத்தில் வைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் விட்டுவிட்டு வந்த பழைய நினைவுகள் அல்லது பாவங்கள், மறுபடியும் உங்களுக்குள் வந்து, உங்கள் சரீரம் மற்றும் ஆத்துமாவை அசுசிப்படுத்த பல வாய்ப்புகள் உண்டு. எனவே நாம் மரித்து புதிய சரீரத்தைப் பெறும் வரை, இந்த பழைய சரீரம் மற்றும் ஆத்துமாவை தினம், தினம் ஜெபத்தின் மூலம் புதிய ஆவியானால் கழுவுவது மிக மிக அவசியம். அப்போது நம்முடைய வாழ்க்கையாகிய ரசம் கெடாமலும், நம்முடைய ஆத்துமாவாகிய துருத்தி கிழியாமலும் இருக்கும். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?