ஆவிக்குரிய வளர்ச்சிக்கான முதல் 4 படிகள் - ரிக் வாரன்
ஆவிக்குரிய வளர்ச்சிக்கான முதல் 4 படிகள்
தேவனுடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிடுவது எப்படி?
ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தினமும் ஒரு அமைதியான ஜெப நேரம் அவசியம் என்று நீங்கள் உறுதியாக நம்ப தொடங்கியவுடன், அதை எப்படி செலவிடுவது என்று யோசித்து இருக்கலாம். அதைச் செய்தே ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆர்வமும் வந்திருக்கலாம், ஆனால் எப்படி என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கலாம்.(1) சரியான மனப்பான்மையுடன் தொடங்க வேண்டும் (Start with Proper Attitudes)
(2) ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (Select a Specific Time)
(3) ஒரு தனி இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (Choose a Special Place)
(4) ஒரு எளிய திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் (Follow a Simple Plan)
(1) சரியான மனப்பான்மைகளுடன் தொடங்குங்கள்
கர்த்தரின் பார்வையில், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்பதை விட, “ஏன் செய்கிறீர்கள்” என்பது மிக முக்கியமானது.
“கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்”.
-1 சாமுவேல் 16 : 7
-1 சாமுவேல் 16 : 7
ஒரு மனிதனுக்கு தவறான மனப்பான்மையுடன், சரியானதைச் செய்வது மிகவும் சாத்தியமாக இருக்கிறது.
இங்கு அமத்சியாவும் முழுமனதோடு செய்யவில்லை என்று பார்க்கறோம்.
“அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை”.
-2 நாளாகமம் 25 : 2
“அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை”.
-2 நாளாகமம் 25 : 2
ஒரு அமைதியான ஜெப நேரத்தில் கர்த்தரை சந்திக்க வரும்போது, உங்களுக்கு கீழ்க்கண்ட சரியான மனப்பான்மைகள் இருக்க வேண்டும்.
(1) எதிர்பார்ப்பு (Expectancy):
- எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வத்துடன் கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்.
- ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் அவரோடு உறவாடப் பழகுங்கள்.
- அப்போது ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும்.
தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
-சங்கீதம் 63 : 1
(2) பயபக்தி (Reverance):
- கர்த்தரின் பிரசன்னத்திற்குள் அவசர அவசரமாக செல்லாதீர்கள்.
- உங்கள் இருதயங்களை தயார்படுத்திக் கொண்டு அவர் முன்பாக அமைதியாக உட்காரப் பழகுங்கள்.
- அந்த அமைதி உங்களின் உலகத்தின் எண்ணங்களை அவர் அழிப்பதற்கு உதவுகின்றது.
கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது.
-ஆபகூக் 2 : 20
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
-சங்கீதம் 89 : 7
-சங்கீதம் 89 : 7
- கர்த்தருடைய சந்நிதிக்குள் வருவது என்பது ஒரு ‘கால்பந்து விளையாட்டுக்கோ’ அல்லது ‘வேறு எந்த வகையான பொழுதுபோக்கு விஷயத்திற்கோ’ செல்வது போன்றதல்ல.
- முதலில் விழித்திருங்கள்.
- பின்பு, நீங்கள் “நம்மை படைத்தவரையும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரையும், மனிதர்களை பாவத்திலிருந்து மீண்டுக் கொண்டவரையும் சந்திக்கப் போகிறேன்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- முழுமையாக ஓய்வெடுத்து தெளிவாக, விழிப்போடு அவர் முன்பாக செல்லுங்கள்.
- காலையில் கர்த்தரோடு செலவிடப் போகும் அமைதியான ஜெப நேரத்தை, உங்களுடைய முந்தைய இரவு தீர்மானிக்கிறது.
- எனவே, முதல் நாள் இரவு சீக்கிரமாகப் படுக்கைக்குச் செல்லுங்கள்; அப்போது உங்களால் விழிப்புடன் அவர் முன்பாக நிற்க முடியும்.
- அவர் உங்கள் முழு கவனத்திற்கும் தகுதியானவர்.
- இந்தக் கீழ்ப்படிதலின் மனப்பான்மை மிக முக்கியமானது.
- நீங்கள் என்ன ‘செய்ய வேண்டும்’ அல்லது ‘செய்யக்கூடாது’ என்பதை அவரிடம் கேட்பதற்கான நேரம் இந்த ஜெப நேரம் அல்ல.
- இந்த நேரம் ‘கர்த்தர் நம்மை கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ’அதை செய்ய கவனமாய் அந்த அமைதியான ஜெப நேரத்திற்குள் நுழைய வேண்டும்.
அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
-யோவான் 7 : 17
- எனவே, எதுவாக இருந்தாலும் சரி, அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டும் என்ற மனபான்மையுடன், கர்த்தரைச் சந்திக்க போக வேண்டும்.
(2) ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- “குறிப்பிட்ட நேரம்” என்பது உங்கள் அமைதியான ஜெப நேரத்தை “எப்போது செலவிட வேண்டும்”, “எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்” என்பதோடு தொடர்புடையது.
- பொதுவான விதி இதுதான்: உங்கள் சிறந்த நேரம்(best time) என்பது நீங்கள் சிறந்து(best) விளங்கும் போது தான் இருக்கும்.
- உங்கள் நாளின் சிறந்த பகுதியை(best part) கர்த்தருக்குக் கொடுங்கள்.
- அதாவது நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் விழிப்புடனும் இருக்கும்போது அந்த நேரத்தை அவருக்குக் கொடுங்கள்.
- உங்களின் மீதமுள்ளவற்றை (left over); (leftover time - மீதமுள்ள நேரத்தை) கர்த்தருக்கு கொடுக்க முயற்சிக்காதீர்கள்.
- உங்கள் சிறந்த நேரம்(best time) என்பது மற்றொருவரின் நேரத்தை விட வித்தியாசமாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
- இருப்பினும், நம்மில் பெரும்பாலோருக்கு, அதிகாலை நேரமே சிறந்த நேரமாகத் தெரிகிறது.
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
-மாற்கு 1 : 35
பைபிளில் பல தேவ மனிதர்கள் ஆண்களும், பெண்களும் கர்த்தரை சந்திக்க அதிகாலையில் எழுந்தார்கள்.
அவற்றில் சில:
ஆபிரகாம்: ஆதியாகமம் 19:27
மோசே: யாத்திராகமம் 34:4
யோபு: யோபு 1:5
அன்னாள் மற்றும் எல்க்கானா: 1 சாமுவேல் 1:19 யாக்கோபு: ஆதியாகமம் 28:18
தாவீது: சங்கீதம் 5:3; 57:7–8 ,
(சங்கீதம் 143:8; ஏசாயா 26:9; எசேக்கியேல் 12:8)
- சபை(church) வரலாற்றை நாம் பார்க்கும் போது, தேவனால் அதிகம் பயன்படுத்தப்பட்ட பல கிறிஸ்தவர்கள் அதிகாலையில் அவரைச் சந்தித்தனர்.
“கச்சேரி முடிந்ததும் நீங்கள் இசைக்கருவிகளை சரி செய்ய மாட்டீர்கள். அப்படி செய்தால் அது முட்டாள்தனம். நீங்கள் இசைக்க தொடங்குவதற்கு முன்பே அவற்றை சரி செய்வது வைத்துக் கொள்வது தான் சரி .”
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட பெரும் மறுமலர்ச்சி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வார்த்தைகளைத் தொடங்கியது: “காலை விழிப்பை நினைவில் கொள்ளுங்கள்! - Remember the Morning Watch” எனவே, ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் காலை விழிப்புணர்வை நினைவில் வைத்துக் கொண்டு, நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் வாழ்வில் இயேசு உண்மையிலேயே முதலிடத்தில் இருந்தால், நாம் அவருக்கு நம் நாளின் முதல் பகுதியைக் கொடுக்க வேண்டும்.
- நாம் அவருடைய ராஜ்யத்தை முதலில் தேட வேண்டும் (மத்தேயு 6:33).
- ஒரு நாளின் மிக முக்கியமான உணவு, காலை உணவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- காலை உணவு தான் பெரும்பாலும் நமது ஆற்றல் நிலைகள், விழிப்புணர்வு மற்றும் அன்றைய மனநிலையை கூட தீர்மானிக்கிறது.
- அதேபோல், நமது நாளை சரியாகத் தொடங்குவதற்கு நமக்கு "ஆவிக்குரிய காலை உணவு" தேவை.
- இறுதியாக, காலையில் நம் மனம், நாம் அன்று செய்யப் போகிற செயல்களில் தெளிவில்லாமல் ஒழுங்கற்று இருக்கிறது (Our minds are uncluttered from the day’s activities).
- நாம் சரியான ஓய்வை எடுத்தோமாகில் காலையில் நமது எண்ணங்கள் புத்துணர்ச்சாக இருக்கும், மனப்பதட்டம் இருக்காது.
- அதுவே பொதுவாக ஒரு மிகவும் அமைதியான ஜெப நேரமாக காணப்படும்.
- ஒரு தாய் தனது கடிகாரத்தில் அதிகாலை 4:00 மணிக்கு அலாரம் வைத்து, காலையில் எழுந்து ஆண்டவரோடு ஒரு அமைதியான நேரத்தை செலவிட்ட பிறகு, பின்புபடுக்கைக்குச் சென்று, பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் எழுந்திருக்கும் போது எழுந்திருப்பாள்.
- அவளுடைய விளக்கம் என்னவென்றால், நாள் முழுவதும் வீட்டில் குழந்தைகள் இருப்பதால், அதிகாலை மட்டுமே அமைதியாக இருக்கும், தேவனுடன் தனியாக இருக்க முடியும்.
- அந்த முயற்சி அவளுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது(it works for her)
- எனவே, உங்களுக்கு ஏற்ற நேரத்தை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- டாசன் ட்ராட்மேன் (Dawson Trotman) என்பவர் மாலுமி/கப்பலை செலுத்துபவர்களின்(Navigators) நிறுவனர் ஆவார்.
- தனது இரவு அமைதியான ஜெப நேரத்திற்கான குறியீட்டு எழுத்துக்களை வைத்திருந்தார்: அது HWLW என்பது தான்.
- அவர் இரவில் ஒரு குழுவினருடன் அல்லது தனது மனைவியுடன் வீட்டில் இருக்கும்போது உரையாடல் முடிவடைவது போல் தோன்றும் போதெல்லாம், அவர், "சரி, HWLW" என்று கூறுவார்.
- HWLW என்பது “His Word the Last Word ".அதன் அர்த்தம் “அவரது வார்த்தையே கடைசி வார்த்தை" என்பதாகும்.
- மேலும் அவர் அதை பல ஆண்டுகளாக தன் எண்ணங்களை தேவன் மீது நிலைநிறுத்தி அந்த நாளை முடிக்கும் ஒரு வழியைப் பயிற்சி செய்திருந்தார்.(பெட்டி லீ ஸ்கின்னர், டாஸ், சோண்டர்வன், 1974, பக். 103).
- பல ஆண்டுகளுக்கு முன்பதாக நியூயார்க்கில் ஒரு சிறந்த கிறிஸ்தவரும் ஊழியருமான ஸ்டீபன் ஓல்ஃபோர்ட்(Stephen Olford) என்பவர், "காலையில் வேறு யாருடைய குரலையும் கேட்பதற்கு முன்பு ‘நான் கர்த்தரின் குரலைக் கேட்க விரும்புகிறேன்’, ‘இரவில் நான் கேட்க விரும்பும் கடைசி குரலும் அவருடையதாக இருக்க வேண்டும்’" என்று கூறினார்.
- தாவீதும் தானியேலும் கூட ஒவ்வொரு நாளும் மூன்று முறை கர்த்தரைச் சந்தித்தனர் (சங்கீதம் 55:17; தானியேல் 6:10).
நீங்கள் எந்த நேரத்தை நிர்ணயித்தாலும், அதில் நிலையாக இருங்கள்.
- உங்கள் காலண்டரில் அதை திட்டமிடுங்கள்;
- ஒரு மனிதனோடு உரையாடுவதற்கு நேரம் ஒதுக்குவது போல், நீங்கள் கர்த்தரோடு பேசவும் ஒரு குறித்த நேரத்தை ஒதுங்குங்கள்.
- இயேசுவுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள்! (Appointment with God).
- பின்னர் அதற்காக ஆவலுடன் காத்திருங்கள், அவரை காத்திருக்க வைக்காதீர்கள் அல்லது குறித்த நேரத்திற்கு அவரிடம் செல்லாமல் அவரை ஏமாற்றி விடாதீர்கள்.
- குறித்த நேரத்தில் அவரிடம் செல்லாமல் அவரை காக்க வைப்பது ஒரு நல்ல அனுபவமல்ல(A stood-up date is not a pleasant experience for us)
- மேலும் இயேசுவும் அதை விரும்புவதில்லை.
- எனவே அவருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து விட்டால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள்.
- "நான் எவ்வளவு நேரம் கர்த்தருடன் செலவிட வேண்டும்?" என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.
- இதற்கு முன்பு நீங்கள் அது போன்ற தனிப்பட்ட நேரத்தை தேவனோடு செலவிடவே தொடங்கவில்லை என்றால், நீங்கள் ஆரம்பத்தில் ஏழு நிமிடங்களுடன் (ராபர்ட் டி. ஃபாஸ்டர், கடவுளுடன் ஏழு நிமிடங்கள், நவ்பிரஸ், 1997) தொடங்கலாம்.
- அதையே தினமும் பயிற்சி செய்யுங்கள்.
- இறுதியில் ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்கள் கர்த்தருடன் செலவிட நீங்கள் இலக்கு வைக்க வேண்டும்.
- ஒரு வாரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள 168 மணிநேரங்களில் நாம் கர்த்தரோடு உறவாடவே அழைக்கப்பட்டோம் என்பதை நினைவில் கொள்ளும் போது,1 மணிநேரம் 45 நிமிடங்கள் என்பது மிக கொஞ்சமான நேரமாக தோன்றும்.
(1) ஆரம்பத்திலேயே இரண்டு மணி நேர அமைதியான(ஜெப) நேரத்தை முயற்சிக்காதீர்கள்.
- நீங்கள் சோர்ந்து போவீர்கள்.
- மற்ற எந்த உறவிலும் நீங்கள் வளருவது போல இந்த கர்த்தருடனான உறவிலும் வளர வேண்டும்.
- எனவே தொடர்ச்சியாக ஏழு நிமிடங்களுடன் தொடங்கி அதை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்;
- வாரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் அவரோடு செலவழிப்பதை விட, தினமும் 7 நிமிடம் அவரோடு தொடர்ந்து செலவிடுவது நல்லது.
- கடிகாரத்தைப் பார்ப்பது உங்கள் அமைதியான ஜெப நேரத்தை மற்ற எதையும் விட வேகமாகக் கெடுக்கும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த நேரத்தில் வார்த்தையிலும்(பைபிள்) ஜெபத்திலும் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை முடிவு செய்யுங்கள்; பின்னர் அதைச் செய்யுங்கள்.
- சில நேரங்களில் நீங்கள் ஒதுக்கியதை விட அதிக நேரம் ஆகலாம், சில சமயங்களில் குறைந்த நேரமும் ஆகலாம்.
- ஆனால் உங்கள் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள்.
- இரண்டு மணி நேர அமைதியான ஜெப நேரத்தைக் கொண்டிருப்பதில் ஆவிக்குரிய வளர்ச்சி எதுவும் இல்லை.
- அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
- 15 நிமிடங்களாக இருந்தாலும் சரி, இரண்டு மணிநேரமாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கு இடைப்பட்ட நேரமானாலும் சரி, தேவனுடான ஒரு தரமான உறவையே (quality) நோக்குங்கள்.
(3) ஒரு சிறப்பான இடத்தைத் தேர்ந்தெடுங்கள்
நீங்கள் அமைதியாக நேரத்தை செலவிடும் இடமும் முக்கியமானது.
- ஆபிரகாம் கர்த்தரைச் சந்திக்க ஒரு வழக்கமான இடத்தைக் கொண்டிருந்தார் என்று பைபிள் குறிப்பிடுகிறது (ஆதியாகமம் 19:27).
- இயேசு ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே தோட்டத்தில் ஜெபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் என்று பைபிள் குறிப்பிடுகிறது (லூக்கா 22:39).
- அந்த இடம் நீங்கள் தனியாக, அமைதியாக இருக்கும் இடமாக இருக்க வேண்டும்.
- உங்களை யாரும் தொந்தரவு செய்யவோ அல்லது குறுக்கிடவோ முடியாத இடமாக இருக்க வேண்டும்
- இன்றைய சத்தம் நிறைந்த மேற்கத்திய உலகில், இதற்கு சில புத்திசாலித்தனம் தேவைப்படலாம், ஆனால் அது அவசியம்.
அந்த இடம் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
- மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் நீங்கள் சத்தமாக ஜெபிக்கக்கூடிய (pray loud) இடமாக இருக்க வேண்டும்.
- படிக்க நல்ல வெளிச்சம்(good lighting) உள்ள இடமாக இருக்க வேண்டும். உதாரணமாக அது உங்கள் மேசையாக இருக்கலாம்;
- நீங்கள் வசதியாக இருக்கும் இடம் (Comfortable )(எச்சரிக்கை: படுக்கையில் உங்கள் ஜெப நேரத்தை செலவிட வேண்டாம். அது மிகவும் வசதியானது தான். ஆனால் வேண்டாம்!)
- நீங்கள் எங்கு கர்த்தரைச் சந்திக்க முடிவு செய்தாலும், அதை உங்களுக்கும் அவருக்கும் ஒரு சிறப்பு இடமாக ஆக்குங்கள்.
- நாட்கள் செல்லச் செல்ல, இயேசு கிறிஸ்துவுடன் நீங்கள் அங்கு அனுபவிக்கும் அற்புதமான நேரங்களின் காரணமாக அந்த இடம் உங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக மாறும்.
- அந்த இடத்தில் தான் நீங்கள் ஜீவனுள்ள தேவனைச் சந்திக்கப் போகிறீர்கள்.
- நீங்கள் கர்த்தரைச் சந்திக்கும் இடம், ஆபிரகாம் கர்த்தரை சந்தித்த இடத்தைப் போலவே பரிசுத்தமாக இருக்க முடியும்.
- நீங்கள் ஒரு தேவாலயக் கட்டிடத்தில்(Church) இருக்க வேண்டியதில்லை.
- மக்கள் சில நேரங்களில் (1) தங்கள் காரை அமைதியான இடத்தில் பார்க் செய்து (2) வீட்டில் ஒரு காலியான அலமாரியில்(empty closet), (3) அவர்களின் கொல்லைப்புறங்களில் (backyard) (4) ஒரு பேஸ்பால் விளையாட்டு மைதானத்தில் கூட தங்களது ஜெப நேரத்தை செலவிடுகின்றனர்.
- இந்த இடங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு புனிதமாகிவிடுகின்றன.
(4) ஒரு எளிய திட்டத்தைப் பின்பற்றுங்கள்
- யாரோ ஒருவர், "நீங்கள் எதையும் இலக்காகக் கொள்ளாவிட்டால், நீங்கள் நிச்சயமாக எதையுமே அடையமாட்டீர்கள்!" என்று கூறியுள்ளனர்.
- அர்த்தமுள்ள அமைதியான ஜெப நேரத்தைக் கொண்டிருக்க, உங்களுக்கு ஒரு திட்டமோ அல்லது பின்பற்ற வேண்டிய பொதுவான சுருக்கமோ தேவைப்படும்.
- முக்கிய விதி(main rule) இதுதான்: உங்கள் திட்டத்தை(plan) எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள் (simple).
- ஒரு பைபிள்: குறிப்புகள் இல்லாமல் நல்ல அச்சுடன் கூடிய சமகால மொழிபெயர்ப்பு.
- ஒரு குறிப்பேடு: கர்த்தர் உங்களுக்குக் காண்பிப்பதை எழுதுவதற்கும், ஜெபப் பட்டியலை உருவாக்குவதற்கும்.
- ஒரு பாடல்: சில நேரங்களில் நீங்கள் உங்கள் துதி நேரத்தில் பாட விரும்பலாம் (கொலோசெயர் 3:16).
(1) கர்த்தருக்காக காத்திருங்கள் (Wait on God - Relax).
- ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள்; கர்த்தரின் பிரசன்னத்தில் ஓடி வந்து அவசர அவசரமாக பேசத் தொடங்காதீர்கள்.
- தேவனின் அறிவுரையைப் பின்பற்றுங்கள்: "நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள்" (சங்கீதம் 46:10; ஏசாயா 30:15; 40:31)
- உங்களை ஒரு பயபக்தியான மனநிலையில் வைப்பதற்காக சிறிது நேரம் அமைதியாக இருங்கள்.
- இது உங்கள் ஜெப நேரம் அல்ல,
- ஆனால் உங்கள் இருதயத்தைச் சுத்திகரிக்கும்படி தேவனிடம் கேட்டு அவருடைய வழிநடத்துதலை பெற்றுக் கொள்ளும் நேரம்.
தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
-சங்கீதம் 139 : 23
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
-சங்கீதம் 139 : 24
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
-1 யோவான் 1 : 9
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
-சங்கீதம் 119 : 18
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
-யோவான் 16 : 13
- நீங்கள் ஒரு புத்தகத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பு அந்த ஆசிரியருடன் இணக்கமாக இருக்க வேண்டும்!
- தேவனுடனான உங்கள் உரையாடல் இங்குதான் தொடங்குகிறது.
- அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களிடம் பேசுவார்.
- நீங்கள் அவருடன் ஜெபத்தில் பேசுகிறீர்கள். உங்கள்
பைபிளை படியுங்கள்:
(1) மெதுவாக படியுங்கள் (slowly): அவசரப்படதீர்கள். அதிக அளவில் படிக்க முயற்சிக்காதீர்கள்; அதில் வேகமாக ஓடாதீர்கள்.
(2) திரும்ப திரும்ப படியுங்கள்(Repeatedly): ஒரு பகுதியை எடுத்து அதை திரும்ப திரும்ப படியுங்கள், உங்களுக்கு அதை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் வரை. அதிகமான மக்கள் தங்கள் பைபிள் வாசிப்பிலிருந்து அதிக நன்மை பெறாததற்குக் காரணம், அவர்கள் வேதாகமத்தை திரும்ப திரும்ப படிப்பதில்லை.
(3) நிறுத்தாமல்(without stopping): ஒரு வாக்கியத்தின் நடுவில் நிறுத்தி அதை Google ல் சென்று ஆராய முற்படாதீர்கள். உங்கள் உண்மையான மன மகிழ்ச்சிக்காக அந்தப் பகுதியைப் படியுங்கள். கர்த்தர் உங்களுடன் பேச அனுமதியுங்கள். இங்கே உங்கள் குறிக்கோள் தகவல்களைப் பெறுவது அல்ல, ஆனால் வார்த்தையை உண்பதும் கிறிஸ்துவை நன்கு அறிந்துகொள்வதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(4) சத்தமாக ஆனால் அமைதியாக (Aloud but quietly): உங்களுக்கு கவனம் செலுத்த கூடாமல் இருந்தால், அதை சத்தமாக வாசிப்பது உங்கள் கவனத்தை மேம்படுத்தும். நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவும் இது உதவும். ஏனென்றால் நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள், கேட்பீர்கள். மெதுவாகப் படியுங்கள் ஆனால், யாரையும் தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
(5) முறையாக (Systematically): ஒரு நேரத்தில் ஒரு அதிகாரத்தை ஒரு ஒழுங்கான முறையில் படியுங்கள். “ரேண்டம் டிப் - random dip) முறையைப் பயன்படுத்த வேண்டாம்—இங்கே ஒரு பகுதி, அங்கே ஒரு அதிகாரம், இங்கே உங்களுக்குப் பிடித்தது, அங்கே ஒரு சுவாரஸ்யமான பகுதி இப்படி படிக்க வேண்டாம்.. நீங்கள் பைபிளை அது எழுதப்பட்டபடியே படித்தால்—ஒரு நேரத்தில் ஒரு புத்தகம் அல்லது கடிதம்—நீங்கள் அதை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்.
(6) ஒரு புத்தகத்தை முழுவதுமாகப் படிக்க (To get a sweep of a book). சில சமயங்களில் நீங்கள் ஒரு முழு புத்தகத்தையும் ஆய்வு செய்ய விரும்பலாம். அந்த விஷயத்தில், மொத்த வெளிப்பாட்டையும் முழுமையாகப் பெற நீங்கள் அதை வேகமாகப் படிப்பீர்கள். எனவே அந்த நேரம் உங்களால் அதை மெதுவாகவோ அல்லது திரும்ப திரும்பவை படிக்க முடியாது.
(1) தியானித்து மனப்பாடம் செய்யுங்கள் - Mediate and Memorize (பிரதிபலித்து நினைவில் கொள்ளுங்கள் - Reflect and Remember): வேதவசனங்கள் உங்களுக்கு அர்த்தமுள்ளதாகப் பேச, நீங்கள் படிப்பதை தியானிக்க வேண்டும், குறிப்பாக உங்களுக்குப் பேசும் வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும். தியானம் என்பது "உங்கள் மனதில் ஒரு சிந்தனையை மீண்டும் மீண்டும் தீவிரமாகச் சிந்திப்பது" ஆகும். உங்கள் தியானத்திலிருந்து உங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுத்து மனப்பாடம் செய்யலாம்.
(2) கர்த்தர் உங்களுக்குக் காட்டியதை எழுதுங்கள் - Write down what God has shown you (பதிவு செய்யுங்கள் - Record). கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களிடம் பேசும்போது, நீங்கள் என்ன கண்டுபிடித்தர்களோ அதை எழுதுங்கள். எழுதுவது என்பது கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்தியதை நினைவில் வைத்துக் கொள்ள உதவும், மேலும் உங்கள் பைபிள் கண்டுபிடிப்புகளைச் சரிபார்க்கவும் உங்களுக்கு உதவும். கர்த்தர் உங்களுக்குக் காட்டியதை எழுதுவது என்பது வேதத்தில் நீங்கள் காண்பதைப் பயன்படுத்துவதற்கான வழி மற்றும் அது உங்கள் வாழ்க்கையுடன் தொடர்புடையது.
(3) உங்கள் ஜெப நேரத்தை கொண்டிருங்கள் - Have your time of prayer (வேண்டுகோள் - Request). கர்த்தர் தனது வார்த்தையின் மூலம் உங்களிடம் பேசிய பிறகு, ஜெபத்தில் அவரிடம் பேசுங்கள். இது கர்த்தருடனான உரையாடலின் உங்கள் பகுதி.
முடிவுரை:
ஒரு நாளை தவறவிட்டால் என்ன செய்வது? அது எப்போதாவது மட்டுமே நடந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். குற்ற உணர்ச்சியில் ஈடுபட வேண்டாம்.
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
-ரோமர் 8 : 1
அதையே பழக்கப்படுத்தி விடாதீர்கள்( Don’t get legalistic)
- ஒரு நாளைத் தவறவிடுவது அதாவது அவரு நாள் ஜெபிக்காமல இருப்பது தோல்வியாக மாறாது.
- ஆனாலும் அதையே பழக்கப்படுத்தி விடாதீர்கள்.
- நீங்கள் ஒரு நேர உணவைத் தவறவிட்டால், நீங்கள் சீரற்றவராக இருப்பதால் சாப்பிடுவதையே விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல.
- அடுத்த உணவில் நீங்கள் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து போவீர்கள்.
- உங்கள் அமைதியான ஜெப நேரத்திற்கும் இதே கொள்கை பொருந்தும்.
- சில புதிய பணி அல்லது ஒரு புதிய பழக்கத்தைப் பழகுவதற்கு பொதுவாக மூன்று வாரங்கள் ஆகும் என்று உளவியலாளர்கள்(psychologists)எங்களிடம் கூறுகிறார்கள்;
- அது ஒரு பழக்கமாக மாறுவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்கிறார்கள்
- பலர் தங்கள் அமைதியான நேரங்களில் வெற்றிபெறாததற்குக் காரணம், அவர்கள் அந்த ஆறு வாரத் தடையைத் தாண்டியதில்லை.
- உங்களுடைய ஜெப நேரம் பழக்கமாவதற்கும் ஆறு வாரங்கள், தொடர்ந்து தினமும் 7 நிமிட ஜெபத்தை பயிற்சி செய்ய வேண்டும்.
(1) ஒரு வலுவான தீர்மானத்தை (சபதம்) எடுங்கள் ( Make a strong resolution - vow):
- நீங்கள் எப்போதும் ஒரு வலுவான முன்முயற்சியுடன் தொடங்க வேண்டும்.
- நீங்கள் அரை மனதுடன் தொடங்கினால், நீங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்.
- உங்கள் முடிவைப் பற்றி மற்றவர்களிடம் கூறி ஒரு பொது அறிவிப்பை வெளியிடுங்கள்.
- ஒரு பழக்கம் கயிறு பந்து போன்றது.
- நீங்கள் அதை கைவிடும் ஒவ்வொரு முறையும், பல இழைகள் அவிழ்க்கப்படுகின்றன.
- எனவே "இந்த ஒரு முறை மட்டும்" என்று ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
- விட்டுக்கொடுக்கும் செயல் விருப்பத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் சுய கட்டுப்பாடு இல்லாததை பலப்படுத்துகிறது.
- உங்கள் புதிய பழக்கத்தை கடைப்பிடிக்க சிறிதளவு உந்துதல் ஏற்படும் போதெல்லாம், அதை உடனே செய்யுங்கள்.
- காத்திருக்க வேண்டாம், ஆனால் உங்கள் பழக்கத்தை வலுப்படுத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தவும்.
- நீங்கள் முதலில் தொடங்கும் போது ஒரு புதிய பழக்கத்தை அதிகமாகப் பயன்படுத்துவது வலிக்காது.
(4) கர்த்தரின் வல்லமையை நம்புங்கள் (Rely on the power of God):
- இவை அனைத்தையும் கேட்ட பிறகு நீங்கள் ஒரு ஆவிக்குரிய போராட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
- மேலும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மட்டுமே நீங்கள் வெற்றிபெற முடியும்.
- எனவே, கர்த்தர் உங்களைப் பலப்படுத்தவும், அவருடைய மகிமைக்காக இந்தப் பழக்கத்தை வளர்க்க உதவவும் அவரிடம் ஜெபியுங்கள்.
ஒரு உறுதிமொழி ஜெபம்(A prayer of Commitment):
“ஆண்டவரே, என்ன நடந்தாலும், ஒவ்வொரு நாளும் உங்களுடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் செலவிட நான் என்னை அர்ப்பணிக்கிறேன். நான் நிலையாக இருக்க எனக்கு உதவும். உங்கள் பலத்தை நான் சார்ந்திருக்கிறேன்.”
Comments
Post a Comment