ஆதியாகமத்தில் உருவாக்கப்பட்ட பலிபீடங்கள்
ஆதியாகமத்தில் பலிபீடங்கள் குறித்த முக்கிய அம்சங்கள்
நோவாவின் காலத்தில்- ஆதியாகமத்தில் முதன்முதலாக பலிபீடத்தை கட்டியவர் நோவா.
ஆபிரகாமின் காலத்தில்:
சீகேம்:
- அவர் மோரே என்னும் சம பூமிமட்டும் வந்து, அங்கு ஒரு பலிபீடத்தை அமைத்தார்.
பெத்தேல்:
பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். (ஆதி 12 : 8).மம்ரே (எப்ரோன்):
அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். (ஆதி 13 : 18)மோரியா மலை:
தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். (ஆதி 22 : 9).ஈசாக்கின் காலத்தில்:
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். (ஆதி 26 : 25)
- இது கானான் தேசத்தில், அவர் இருந்தபோது நடைபெற்றது.
யாக்கோபின் காலத்தில்
பெத்தேல்:
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான். (ஆதி 35 : 7)ஏல்பெத்தேல்
- பெத்தேல் என்றால் “தேவனுடைய வீடு” என்று அர்த்தம்.
- ஏல்பெத்தேல் “தேவனுடைய வீட்டின் தேவன்” என்று அர்த்தம்.
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான். (ஆதி 33 : 20)
ஏல் எலோகே இஸ்ரவேல்" என்பது எபிரேய மொழியில் இருந்து வந்த சொற்களாகும்.
ஏல் எலோகே இஸ்ரவேல்" என்பது எபிரேய மொழியில் இருந்து வந்த சொற்களாகும்.
இதன்அர்த்தம்:
"எலோகே" (Elohe): "இஸ்ரவேலின் தேவன்"
"இஸ்ரவேல்" (Israel): "தேவனுடன் போராடியவர்" அல்லது "தேவனால் ஆட்கொள்ளப்பட்டவர்" என்ற பொருள் கொண்ட பெயர்.
"இஸ்ரவேலின் உண்மையான தேவன்” என்று அர்த்தம்.
Comments
Post a Comment