ஆகாய், செருபாபேல் பெயர் அர்த்தம்

ஆகாய், செருபாபேல் பெயர் அர்த்தம்


ஆகாய் - பெயர் அர்த்தம்:

  • ஹக்(Hag) என்றால் பண்டிகை என்று அர்த்தம். 
  • Hag/yah என்றால் கர்த்தருடைய பண்டிகை என்று அர்த்தம். 
ஹக்(Hag) என்ற எபிரேயச் சொல்லின் அர்த்தம்:

  • சந்தோஷம், மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்று அர்த்தம்.
லேவியராகமம் புத்தகத்தில் 7 பண்டிகைகளை குறித்து கர்த்தர் பேசுகிறார். அதெல்லாம் கர்த்தருடைய பண்டிகைகள். 
1) பஸ்கா பண்டிகை
2) புளிப்பில்லாத அப்ப பண்டிகை
3) முதற்கனி/பலன் பண்டிகை (அசைவாட்டும் பண்டிகை)
4) Shav’ot என்று சொல்லப்படுகின்ற பெந்தெகொஸ்தே பண்டிகை. 
5) எக்காளப் பண்டிகை
6) Yom Kippur என்று சொல்லப்படுகின்ற பாவ நிவிர்த்தி பண்டிகை (Day of Atonement)
7) கூடாரப் பண்டிகை


அந்தப் பண்டிகைகளின் அர்த்தம் என்ன? 

  • கர்த்தர் கொண்டாடுகிறார்.
  • கர்த்தர் சந்தோஷப்படுகிறார்.
  • என்னுடன் சேர்ந்து நீங்களும் சந்தோஷப்படுங்கள் என்று ஆண்டவர் மக்களுக்கு சொல்கிறார். 
  • நாமும் கர்த்தரோடு சேர்ந்து அவருடைய சந்தோஷத்தில் நுழைவது என்று அர்த்தம். 
  • புதிய ஏற்பாட்டில் ரோமர் 12 ல் சந்தோஷப்படுகிறவர்களோடே சந்தோஷப்படுங்கள்; துக்கப்படுகிறவர்களுடனே துக்கப்படுங்கள் என்று சொல்லப்படுகிறது. 
  • நம் தேவன் சந்தோஷமான தேவன். 
  • ரசித்து உருவாக்குகின்றவர். 

ஆனால் பெயரிலேயே கர்த்தருடைய சந்தோஷத்தை கொண்டவன் இந்த ஆகாய்


செருபாபேல் அர்த்தம்:

  • செரு(Zehu) என்றால் பிறந்தவன் என்று அர்த்தம். 
  • பாபேல்(Bah-El) என்றால் தேவனுடைய வாசல் என்று அர்த்தம். 
  • தேவனுடைய வாசலில் பிறந்தவன் என்று அர்த்தம். 
பாபேல் கோபுரம்:
  • நிம்ரோத் மக்களை ஏவி கட்டின கோபுரம் தான் பாபேல்.
  • Bah-el இருந்த இடம் தான் பாபிலோன்.
  • அந்த இடத்தில் தான் பிற்பாடு பாபிலோன் கட்டப்பட்டது. 
  • பாபிலோன் என்றால் பாபேல் கோபுரம் இருந்த இடம். 
  • செருபாபேல் யூதாவில் பிறந்திருக்க வேண்டியவர் ஆனால் பாபிலோனில் வைத்து பிறந்து விட்டார். 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்