அப் 9:5 தாற்றுக்கோல் விளக்கம்

அப் 9:5 தாற்றுக்கோல் விளக்கம்

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

 -அப்போஸ்தலர் 9 : 5

  • “முள்ளில் உதைப்பது உனக்கு கடினமாம்” (அப் 9:5) ஆண்டவர் சொன்ன இந்த முள் எது?
  • ஆண்டவர் கூறுகின்ற இந்த முள் ஒருவேளை கருவேல முள்ளா? நிச்சயம் இல்லை. 
  • ஒரு மனிதன் தெரிந்தே முள்ளில் உதைப்பானா?
முள்- Goad:
  • இந்த வசனத்தில் வருகின்ற “முள்” என்ற வார்த்தை எபிரெய மொழியில் “Dorbon” என்று கொடுக்கப்பட்டுள்ளது 
  • ஆங்கிலத்தில் “GOAD” என்று கொடுக்கப்பட்டுள்ளது. 
  • அதற்கு அர்த்தம் என்னவென்றால்  “தாற்றுகோலிலுள்ள முள்” ஆகும். 
  • இதை “தாற்றுகோல் முள்”  என்று படிக்க வேண்டும்.

அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால்(goad) முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.  
 -நியாயாதிபதிகள் 3 : 31
கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும்,
தாற்றுக்கோல்களையும்(goads) கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.
 -1 சாமுவேல் 13 : 21
ஞானிகளின் வாக்கியங்கள்
தாற்றுக்கோல்கள்(goads) போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
 -பிரசங்கி 12 : 11

ஆகிய வசனங்களில் "தாற்றுக் கோல்" என்ற வார்த்தை இடம் பெறுகிறது. 


இந்த முள் எப்படி இருக்கும்:

  • இந்த தாற்றுக்கோல் 10 அடி நீளமுள்ள மரத்தால் ஆன கூர்மையான  நீண்ட கோல் ஆகும். 
  • அதன் முனைபகுதியில் ஆணி அடித்திருப்பார்கள்.
  • அது “முள்" போன்று கூர்மையாக இருக்கும்.

அதனுடைய நோக்கம்:

  • பாலஸ்தீனாவில் மாடுகளை விவசாய நிலத்தில் சுறுசுறுப்பாக ஒட்டுவதற்கு பயன்படுத்தினார்கள்.
  • வயல்வெளிகளில் ஏர் உழும் போது கலப்பையிலுள்ள கொழுவில் ஒட்டியிருக்கும் “சேற்றை” அந்த ஆணிக்கொண்டு நீக்குவதற்கு பயன்படுத்தினார்கள். 
  • அது இன்னும் ஆழமாய் உழுவதற்கு ஏதுவாகும்.  

வசனத்தின் பிண்ணனி:

  • இப்படிப்பட்ட சமயங்களில் சில நேரங்களில் மாடுகள், காளைகள் கிடைக்கவில்லையென்றால் கழுதை வைத்து உழுவார்கள்.
  • ஆகவே காளைகளோ அல்லது கழுதைகளோ பொறுமையாக செல்லும் போது வேகமாக செல்லுவதற்கு தாற்றுகோலால் கால் பகுதியில் குத்துவார்கள்.
  • அந்த சமயத்தில் கழுதையோ அல்லது மாடுகளோ அந்த தாற்றுகோலை எட்டி உதைக்கும். 
  • அப்படி உதைக்கும் சில நேரங்களில் கழுதையின்  கால் தாற்றுக்கோலின் முனைபகுதியின் கூர்மையான முள்ளில் பட்டு (சேற்றை எடுக்கும் ஆணியில்) வலியையை ஏற்படுத்தும்.
  • அப்பொழுது அதற்கு கடினமாக இருக்கும்.
  • இதைதான் ஆண்டவர் பவுலிடம் “முள்ளில் உதைப்பது உனக்கு கடினம்” என்று கூறுகின்றார்.

கற்றுக்கொள்ளும் சத்தியம் என்ன?

  • தாற்றுக்கோலின் ஆணி போன்ற கூர்மையான “முள்“ என்பது “சபையாகும்“ என்று இயேசு கூறுகின்றார். 
  • “முள்ளில் உதைப்பது உனக்கு கடினமாம்” (அப் 9:5). 
  • எப்படி கலப்பையில் உள்ள "சேறுகள்" அந்த ஆணியின் மூலம் நீக்கபடுகின்றதோ அதே போல் ஒரு மனிதனின் பாவ சேற்றை வசனத்தின் மூலம் நீக்க தேவன் சபையை பயன்படுத்துகின்றார்.
  • அப்படிபட்ட சபையை நீ  துன்புறுத்தினால் உனக்குதான் கடினம் "சவுலே" என்று கூறுகின்றார். 
  • அதாவது இந்த உலகத்திலேயே உ்ன்னை பரிசுத்தமாக்குகின்ற சபையையே நீ எட்டி உதைத்தால் உன் பாவம் கழுவப்படுவது கடினம் என்று பவுலிடம் கூறுகின்றார்.  
  • ஆகவே சபையை புறகணித்தால் புறகணிக்கின்றவா்களுக்கு அது கடினமாகும் என்று ஆவியானவர் கூறுகின்றார்.


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4