சங்கீதம் 91 விளக்கவுரை
சங்கீதம் 91 விளக்கவுரை
பிசாசு இயேசுவை சோதித்தான்
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:
-மத்தேயு 4 : 5
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
-மத்தேயு 4 : 6
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
-மத்தேயு 4 : 7
மத் 4:7 எங்கு இருந்து எடுத்து தேவன் சொன்னார்
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.
-உபாகமம் 6 : 16
மாசாவிலே என்ன செய்தார்கள்?
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
-யாத்திராகமம் 17 : 7
இங்கு குறிப்பிடப்படும் பரீட்சை என்றால் என்ன?
- “நசா” என்று எபிரேய மொழியில் சொல்லப்படும்.
- அதன் அர்த்தம் “கோபத்தை தூண்டுதல்”.
- உசுப்பேத்தாதே என்று அர்த்தம்.
யார் இந்த சங்கீதத்தை எழுதினது?
- மோசே எழுதின சங்கீதம்.
- Midrash Tehilum - யூதர்களுடைய சரித்தர புத்தகம்.
- அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது அது மோசே தான் எழுதினார் என்று.
- Tehilim என்றால் துதி (சங்கீதங்கள்)
- மோசே ஆசரிப்பு கூடாரத்தை பிரதிஷ்டை செய்த பின் பாடின பாட்டு இது.
- ஆசரிப்பு கூடார வேலையை முடித்தான்.
- யாத் 40:35 கும், 40:36கும் இடையில் தான் இந்த சங்கீதம் 91 பாடல் பாடப்பட்டது.
யாருக்கு இந்த சங்கீதம் எழுதப்பட்டது?
- தேவனுடைய பிரசன்னத்தில், தேவனுடைய நிழலில் தங்குகிற மனுஷனுக்கு.
- தேவனுடைய பிரசன்னத்திற்கு வந்து போகிறவர்கள் அல்ல, அவர் கூடவே 24 மணி நேரமும் தங்கியிருப்பவர்கள்.
- பரிசுத்த ஆவியானவர் என்னுடைய சரீரத்தில் வாழ்கிறார் என்ற உணர்வில் ஆண்டவருக்கு விருப்பமில்லாததைச் செய்யாமலும், அவருக்கு விருப்பமானதை செய்து கொண்டும் வாழ்கிற அந்த கிறிஸ்தவம்.
- தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்கிறவனுக்கு பொறாமை, எரிச்சல் லாம் வராது.
- தேவனை இரவும் பகலும் தேடுகிற கிறிஸ்தவனுக்கு தான் இந்த சங்கீதம் எழுதப்பட்டது.
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
-சங்கீதம் 91 : 1
-சங்கீதம் 91 : 1
- உன்னதமானவரின் என்றால் உயர்ந்த. அதற்கு மேல் உயர்ந்தது எதுவுமே கிடையாது.
- இப்போது மேகம் வந்து ஆசரிப்புகூடாரத்தை மறைக்கிறதே!
- அதனால் அந்த கூடாரத்தில் நீ இருந்தால் மறைக்கப்பட்டு இருப்பாய்.
- தேவனுடைய பிரசன்னத்தில் மறைந்திருக்கிறவன்.
- ஆதி 17 ல் ஆண்டவர் ஆபிராமுக்கு தரிசனமாகி, நான் தான் El shaddai தேவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பின்பு அவன் பெயரை மாற்றுகிறார்.
- Shaddai என்பது ஆக உயர்ந்த வல்லமை.
- நிழல் என்பது மேகத்தையும் குறிக்கிறது.
- El Elyon, El Shaddai என்று தானே வர வேண்டும்.
- ஆனால் El என்று இங்கு உபயோகப்படுத்தப்படவில்லை. ஏன்?
- ஆண்டவரின் பிரசன்னம் அங்கு இருப்பதால், அந்தக் கூடாரத்தை கைக்காட்டி சொல்லுகிறார்.
- தூரமாக இருக்கிற ஆண்டவரை காட்ட தான் El உபயோகிக்க வேண்டும்.
- பக்கத்தில் இருக்கிற ஆண்டவரை பற்றி சொல்ல, கைகாட்டி சொன்னாலே போதும்.
நான் கர்த்தரை(Yahweh) நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
-சங்கீதம் 91 : 2அடைக்கலம் (ஓய்வு - relax)
- அடைக்கலம் என்பது எதைக் குறிக்கிறதென்றால், நாம் வேலை செய்து கலைத்து, ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் ஓய்வு எடுப்பதைக் குறிக்கிறது.
- இந்த சம்பவம் வனாந்தரத்தில் நடக்கிறது.
- நான் கர்த்தருடைய சமூகத்தில் ஓய்வு எடுத்தால் என்னை யாராலும் தொட முடியாது.
கோட்டை (பாதுகாப்பு)
- ஒரு கோட்டையினுடைய அம்சம், அமைப்பு என்ன?
- எதற்காக அது அமைக்கப்படுகிறது?
- எதிரிகளிடம் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வார்கள்? Defensive
- எதிரிகளை தாக்குவது Offensive
- இங்கு கோட்டை என்பது எதிரிகள் என்னை தாக்க வந்தால் என்னை பாதுகாத்து கொண்டு, நான் அவர்களை அழிக்கிறதுமான ஒரு இடம்.
தேவன்
- கர்த்தர் - YAHWEH
- எஜமான் - அது சமஸ்கிருத சொல்
- அதனுடைய தமிழ்சொல் கர்த்தர்.
- Boss - தலைவர்
- என் தேவன்
- கர்த்தர் ஒருவரே என் தேவன்
நான் நம்பியிருக்கிறவர்
- நம்பிக்கைக்கு பாத்திரர்
- விசுவாசம் வேறு, நம்பிக்கை வேறு.
- இவர் என்னை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை.
- நம்பி வாழலாம்.
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
-சங்கீதம் 91 : 3 வேடனுடைய கண்ணி
- சீனாய் வனாந்தரத்தில் வேடர்கள் என்ன கண்ணி வைப்பார்கள்.
- பவுஞ்சு பவுஞ்சாய் பறவைகள் பறக்கும். அந்த பறவைகளை பிடிப்பது அவர்களுக்கு இன்பமான ஒரு விஷயம்.
- பறவைகளுக்காக கண்ணி வைப்பார்கள்.
- அப்படியென்றால் பெரிய குழி தோண்டி அதற்கு மேலே கம்பெல்லாம் வைத்து வலையை விரிப்பார்கள்.
- பறவை வந்து உட்கார்ந்தால் சிக்குற மாதிரி ஒரு வலை.
- அந்த வலைகளுக்கு மேல் சருகுகள் எல்லாம் போட்டு எதுவும் வெளியே தெரியாத மாதிரி வைத்து விடுவார்கள்.
- அதற்கு மேலே தானியங்களை தூவுவார்கள்.
- லட்சக்கணக்கான பறவைகள் அந்த வழியாய் போகும் போது அதில் வந்து உட்காரும்.
- அப்படி நிறைய பறவைகள் உட்காரும் போது அந்த வலை அப்படியே உள்ளுக்குள் போகும்.
- அப்படித்தான் வேடர்கள் பறவைகளை பிடிப்பார்கள்.
ஒப்பீடு:
- அதுப் போல தான் கள்ளத்தீர்க்கத்தரிசிகளும் வலையில் மாட்டிக் கொண்டு குழியில் விழுவார்கள்.
- இங்கு மோசே சொல்கிறார் மக்களைப் பார்த்து,
- இப்போது நீங்கள் பாலைவனத்தில் நடக்கப் போகிறீர்கள்.
- அங்கு பெரிய வேடனாகிய பிசாசு இருக்கிறான்.
- எந்த மாதிரி குழி தோண்டி, எப்படியெல்லாம் வலை விரிச்சு, எப்படிப்பட்ட தானியமெல்லாம் போட்டு உங்களை பிடிப்பானோ தெரியாது.
- அந்த வேடனுடைய கண்ணிக்கு மாட்ட மாட்டீர்கள்.
- தேவன் நம்மோடு இருப்பார்.
- நோய் என்று ஒருமையில் வருகிறது.
- மோசே அந்த மக்களுக்கு எதை சொன்னார்?
- சீனாய் மலையில் உள்ள வனாந்தரம்
- வனாந்தரத்தில் பள்ளத்தாக்கு காய்ச்சல்(valley fever) என்று ஒரு பூஞ்சை நோய் வரும்.
- வனாந்தரம் இரு வகைப்படும். ஒன்று மணல் பாலைவனம். இன்னொன்று மண் பாலைவனம்.
- இங்கு சீனாய் வனாந்தரம் என்பது மண் பாலைவனம்.
- அங்கு இவ்விதமான நோய் வரும்.
- இது வாதை அல்ல. பயங்கரமான கொள்ளை நோய்.
- மோசே தீர்க்கத்தரிசனமாக இந்த மக்களுக்கு சொல்கிறார்.
தப்புவிப்பார்- refer above pic
- சில சமயம் வராமலும் காப்பார்.
- சில சமயம் வந்த பின்னும் காப்பார்.
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
-சங்கீதம் 91 : 4- செட்டைகள் என்றால் பாதுகாப்பு.
- தாய் தன் குழந்தைகளை பாதுகாப்பது போல கர்த்தர் நம்மை மூடி பாதுகாப்பார்.
- பரிசை ஆள் உயரத்துக்கு இருக்கும்.
- கேடகம் வட்டமாக இருக்கும்.
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
-சங்கீதம் 91 : 5- பாலைவனத்தில் எத்தனையோ பயங்கரங்கள் உண்டு.
- அந்த Coccidioides என்ற கொள்ளை நோய் (fungus) அது இரவில் தான் கூடுதலாகப் பரவுமாம்.
- பகலில் வேடர்களின் அம்புக்கும்
- ஆண்டவர் தப்புவிப்பார்.
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
-சங்கீதம் 91 : 6- இது பாட்டு, கவிதை என்பதால் repeated ஆ சொல்லறாங்க.
- எதைக் குறித்தும் கவனமாக இருங்கள், ஆனால் பயப்படாமல் இருங்கள்.
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
-சங்கீதம் 91 : 7- மோசே இந்த இடத்தில் எதைச் சொல்கிறார் என்றால்,
- சீனாய் பாலைவனத்தில் மேடுகள் மலைகள் எல்லாம் இருக்கின்றது.
- யாராவது பிரயாணம் பண்ணி வர வரும்போது, நிறைய பேர் அந்த மேடுகளில் பதுங்கி இருந்து எல்லோரும் ஒரே நேரத்தில் அவர்கள் மேல் பாய்வார்கள்.
- அப்போது அந்த பிரயாணம் பண்ணுகிறவர்கள் திக்குமுக்காடி போய் விடுவார்கள்.
- அதைத் தான் மோசே இங்கு சொல்கிறார்.
- எதிரிகள் உன் மேல் விழாதபடிக்கு கர்த்தர் பாதுகாப்பார்.
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
-சங்கீதம் 91 : 8- கண்களால் பார்ப்பாய். ஆனால் அது உனக்கு நெருக்கமாக வராது.
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
-சங்கீதம் 91 : 9- இன்றைக்கு நான் அடைக்கலமாக பார்க்கிற இதே தேவன் உங்களுக்கும் தேவனாக இருக்கிறார்.
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
-சங்கீதம் 91 : 10- பொல்லாப்பு நேரிடாது.
- அது என்ன பொல்லாப்பு என்றால் வாதை.
- இந்த வாதை என்பது எகிப்தியருக்கு வருகின்ற வாதையை தான் குறிக்கின்றது.
- வாதை - Ne’ga என்ற எபிரேயச்சொல்.
- வாதை என்று குறிப்பிடுகிறதற்கு எபிரேய மொழியில் பல சொற்கள் இருக்கிறது.
- Deber என்ற எபிரேய சொல்லை கூட வாதை என மொழி பெயர்க்கலாம்.
- ஆனால் எகிப்தியருக்கு வந்த 10 வாதைகளில் அதில் பத்தாவது வாதையை தான் பைபிள் Ne’ga என்று சொல்லுகிறது.
- அந்த 10வது வாதை உன் கூடாரத்தை அணுகாது என்கிறார்.
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
-சங்கீதம் 91 : 11
- அந்த இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் நடக்கும் அந்த 40 வருடமும், அவர்கள் வழிகளெல்லாம் அவர்களை காப்பார்.
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
-சங்கீதம் 91 : 12- இந்த மாதிரி கல்லுகள் நிறைந்த பகுதி தான் சீனாய் வனாந்தரம்.
- இந்த கல்லுகளில் நடந்து தான் அவர்கள் பிரயாணம் பண்ணினார்கள்.
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
-சங்கீதம் 91 : 13- பால சிங்கம் என்றால் சிங்கக்குட்டி.
- உண்மையான சிங்கங்கள், விரியம் பாம்புகளை குறிப்பிடுகிறது.
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
-சங்கீதம் 91 : 14- இந்த கடைசி மூன்று வசனங்களும் மோசே பேசுகிற வசனங்கள் அல்ல.
- இதை மோசே எழுதியிருந்தாலும் அதைச் சொன்னது தேவன்.
- அவன் என்றால் இஸ்ரவேலர்கள்.
- நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் தான்.
- நாமும் தேவன் மேல் வாஞ்சையாக இருந்தால், அவர் நம்மையும் விடுவிப்பார்.
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
-சங்கீதம் 91 : 15- ஜெபத்தை குறித்து பேசுகிறது.
- இஸ்ரவேலன் கூப்பிடுவான். அவன் கூப்பிடும் போது கேட்காத மாதிரி இருப்பதற்கு நான் விக்கிரகம் அல்ல.
- மறு உத்தரவு கொடுப்பார்.
- ஸ்தோத்திரம், துதி, நமஸ்காரம், விண்ணப்பம் இதெல்லாம் சேர்ந்தது தான் ஜெபம்.
- அவருக்கு தான் எல்லாமே தெரியுமே என்று சொல்லி நாம் ஜெபிக்காமல் இருக்கக் கூடாது.
- ஆண்டவருடைய கனம் தான் நமக்கு முக்கியம்.
- மனுஷருடைய கனம் நமக்கு தேவையில்லை.
-சங்கீதம் 91 : 16
- ஆயுசை கூட்டிக் கொடுக்கிறார்.
- நீண்ட ஆயுள் கொடுத்து, நிம்மதி இல்லையென்றால் என்ன பிரயோஜனம்.
- நீடிய ஆயுளுடன், திருப்தியான, சமாதானமான, ஆசீர்வாதமான நாட்களை கொடுத்து நான் உன்னை இரட்சிப்பேன்/பாதுகாப்பேன்.
- உன்னை நான் நடத்துவேன் என்கிறார்.
Comments
Post a Comment