உப்பு உவமை
மத்தேயு 5:13 - நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்
- உப்பு கெட்டுப் போவதை தடுக்கும். (எ.கா மீன் கெட்டுப் போகாமல் இருக்க உப்பு போட்டு வைப்பார்கள்)
- நாம் இந்த உலகம் கெட்டுப் போவதை தடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
- நாம் இப்போது பூமிக்கு உப்பாய் இருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
- உதாரணமாக ஒரு இடத்தில் சண்டை, சச்சரவு அதிகமாக இருந்தால் நாம் அந்த இடத்திற்கு செல்லும் போது அந்த இடத்தில் சமாதானம் நிலவ வேண்டும்.
- 2 இராஜாக்கள் 2:19-22, தண்ணீர் உப்பினால் ஆரோக்கியமானது.
- அது போல நாம் இருக்கிற இடம் சுத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
- உப்பின் தன்மை நம்பிடம் இல்லையென்றாலும் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டு. (மத் 5:13)
- சத்தியத்தை கேட்டு, நம்மை திருத்திக் கொள்வதற்கு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
- அதை நாம் இழந்து விட்டால் நாம் மிதிக்கப்படுவோம்.
- 2 இராஜாக்கள் 4:9 - அந்த ஸ்திரீ எலிசாவை பரிசுத்தவான் என்று கண்டு கொண்டாள்
- அவரிடம் இருந்த அந்த உப்பு அவர் பரிசுத்தவான் என்று அந்த ஸ்திரீக்கு காட்டிக் கொடுத்தது.
- உப்பு சுவையைக் கொடுக்கக் கூடியது.
- வாழ்க்கைக்கு அர்த்தம் தரக்கூடியது.
Comments
Post a Comment