விளக்கு உவமை - மத்தேயு 5:15
விளக்கு உவமை
மத்தேயு 5:14-16
மாற்கு 4:21-22
லூக்கா 8:16-17
லூக்கா 11:33-36
மத்தேயு 5:14 - நீங்கள் பூமிக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்
விளக்கு:
- விளக்கு என்பது இயேசுவைக் குறிக்கிறது (வெளி 21 : 23; நீதி 6:23)
- 7 பொன்குத்துவிளக்குகள் - 7 சபைகள் (வெளி 1:20)
- சபையின் தலைவர் இயேசுகிறிஸ்து. (எபே 1:23)
விளக்குத்தண்டு:
- விளக்குத்தண்டு என்பது இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரையும் குறிக்கிறது. (ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் சகரியா 4 : 14)
- செருபாபேல்(ராஜா) மற்றும் யோசுவாவை (பிரதான ஆசாரியன்) குறிக்கிறது.
- இன்று ராஜாக்களும், ஆசாரியர்களுமாய் இருப்பது இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம் தான். (வெளி 1:6)
விளக்குத்தண்டில் ஊற்றப்படுகிற எண்ணெய்:
- விளக்கில் ஊற்றப்படுகிற எண்ணெய் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. (1 சாமு 16:13)
- விளக்குத்தண்டில் எண்ணெய் இருந்தால் தான் நம்மிடத்தில் நற்கிரியைகள் இருக்கும்.
- நம்மிடத்தில் நற்கிரியைகள் இருந்தால் தான் அதைக் காண்கிற மக்கள், வெளிச்சத்தை நம்மிடத்தில் காண்பார்கள். (பிலி 2:14)
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளி நம்மில் இருக்கிற பரிசுத்த அவியானவர் மூலமாக இந்த உலகத்தில் பிரகாசிக்கும்.
- தேவன் நம்மை தான் உலக முழுவதும் பிரசித்தப்படுத்துவார்.
நம் கடமை:
- பாவம் செய்கிறவன் தான் வெளிச்சத்திற்கு (இயேசு) மறைந்து இருளிலே (உலகத்திற்குள்) இருப்பான்.
- சூரியனினுடைய ஒளியை, நிலா கடன்வாங்கி பிரதிபலிப்பதைப் போல கிறிஸ்துவின் ஒளியை நாம் பெற்று உலகத்திற்கு ஒளி கொடுப்பதே நம்முடைய கடமையாகும்.
தீபம்:
- மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.(நீதி 20 : 27).
- ஆதாமுடைய ஆவியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது.
- ஆனால் சாத்தான் ஊதின பொய்யால் அது அணைந்து விட்டது. (நீதி 14:25)
- ஆதாம், சாத்தான் சொன்ன பொய்யை ( சாகவே சாவதில்லை) நம்பினதனால் அந்த தீபம் அணைந்தது.
- உலக காரியங்களை நாம் பார்க்கும் போது இந்த தீபம் அணைந்து போக மிகவும் வாய்ப்பு உண்டு.
மரக்கால்:
- உலக காரியங்கள், பயம்.
- உலக காரியங்களோ, பயமோ நாம் மற்றவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவதைத் தடுத்து விடக்கூடாது.
- உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.(சங்கீதம் 119 : 105)
- லூக்கா 11:33-35 - உன்னில் இருக்கிற வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாக இரு.
- உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.(ரோமர் 1 : 21)
- உணர்வு தான் அந்த வெளிச்சம்.
- வெளிச்சம் நம்மிடத்தில் இருக்கும் வரை அந்த உணர்வு நம்மிடத்தில் இருக்கும்.
- வெளிச்சம் அணைந்து விட்டால் அந்த உணர்வு நம்மை விட்டு போய் விடும்.
- அப்போது நம் இருதயம் இருளாகி விடும்.
- உணர்வே இல்லையென்றால் எங்கோ நாம் அந்த விளக்கை அணைத்து இருக்கிறோம் என்று அர்த்தம்.
- எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அணைக்க நாம் ஒரு போதும் வஞ்சனைகாரனுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது.
- ஏசாயா 60:1-2 - கர்த்தரின் ஒளி நம்மீது இருக்கும் போது நாம் இருளின் மத்தியில் ஒளியாக இருக்க வேண்டும்.
- நாம் வெளிச்சத்தை (சத்தியத்தை) பிரதிபலிக்க வேண்டும்.
விளக்குத்தண்டு என்கிற மனிதனில் விளக்கு (தண்டை தாங்குகிற) இயேசுவும், எண்ணெய் என்கி்ற பரிசுத்த ஆவியானவரும், உணர்வு என்கிற பிதாவும் இருந்தால் தான் வெளிச்சம் (திரித்துவம்) என்கிற ஒளியை நம்மால் மற்றவர்களுக்கு பிரதிபலிக்க முடியும். விளக்குத்தண்டு தனியாக இருந்தால் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.
Comments
Post a Comment