தானியேல் 9:24-27 விளக்கம்

மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
 -தானியேல் 9 : 24

அந்த நிறைவேறப் போகிற தீர்க்கத்தரிசனம் என்ன?

மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், 
உலகத்தில் மீறுதல், அது யூதர்களினுடைய மீறுதலாக இருக்கட்டும், அந்நியர்களுடைய மீறுதலாக இருக்கட்டும், மீறுதல் இல்லாமல் போய்விட்டதா? இல்லை.

பாவங்களைத் தொலைக்கிறதற்கும், 
பாவங்கள் தொலைந்துவிட்டனவா? இல்லை.

அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், 
அக்கிரமம் நிவிர்த்தி ஆகி விட்டதா? இல்லை.

நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், 
நித்திய நீதி இப்போது உண்டாகி விட்டதா? இல்லை.

தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும்,
அனைத்து தீர்க்கத்தரிசனங்களும், அனைத்து தரிசனங்களும் நிறைவேறி, மூடி முத்திரைப் போடும் நிலைமையிலா இருக்கிறது? இல்லை. நிறைவேறாதது இன்னும் இருக்கிறது. 

மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், 
மகா பரிசுத்தமுள்ளவரை ராஜாவாக அபிஷேகம் பண்ணி ஆகி விட்டதா? இல்லை

உன் ஜனத்தின்மேலும்
  • உன் ஜனத்திற்கு என்று தானியேலைப் பார்த்து சொல்லுகிறார், எனவே யூதர்களுக்கும்
உன் பரிசுத்த நகரத்தின்மேலும் 
  • எருசலேமிற்கும்
  • எனவே, யூதர்களுக்கும், எருசலேமிற்கும் மாத்திரம் தான் இந்த தீர்க்கத்தரிசனம். 
எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
  • ஒரு வாரத்திற்கு 7 வாரங்கள்.
  • எனவே 70*7 = 490 நாட்கள்
  • வேத அர்த்தப்பெயர்ப்பின்படி ஒரு வாரம் ஒரு வருடத்திற்கு சமானம். 
  • எனவே 490 வருடங்கள்.
  • எனவே யூதர்களுக்கும், எருசலேமிற்கும் இத்தனையும் நடந்து முடிய 490 வருடங்கள் கொடுக்கப்படுகின்றன.
  • அந்த 490 வருடங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும்.
இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
 -தானியேல் 9 : 25

1) எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், 
  • நெகேமியாவிற்கு எருசலேம் அலங்கத்தைக் கட்ட அனுமதி கிடைத்த அந்த வருடம் கி.மு 453 ம் ஆண்டு 
  • கட்டளை வெளிப்பட்டது.
  • தானியேலே, இந்த தரிசனம் உன் காலத்தில் அல்ல, உனக்கு பிறகு தான் நடக்கப் போகிறது. 
2) பிரபுவாகிய மேசியா வருமட்டும் 
  • இயேசுவானவர் பிறக்கும் மட்டும்
வரக்கூடிய காலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
1) ஏழு வாரமும், 
  • 7 வாரங்கள் என்றால் 7*7=49 நாட்கள்
  • 49 நாட்கள் என்றால் 49 வருடங்கள்
  • நெகேமியா அலங்கத்தை கட்ட ஆரம்பித்து முடிக்க எடுத்துக் கொண்ட வருடங்கள் 49 ஆண்டுகள்
  • கி.மு 453 ம் ஆண்டு தொடங்கி, கி.மு 404 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 
  • அந்த 49 ஆண்டுகள்
2) அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; 
  • 62+7 = 69 வாரங்கள்
  • 69 வாரங்கள் என்றால் 483 நாட்கள்
  • 483 நாட்கள் என்றால் 483 வருடங்கள்
  • அந்த 483 வருடங்கள் முடியும் போது தானியேலே ஒரு விஷயம் நடக்கும். 
அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
 -தானியேல் 9 : 26

அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்;
  • இயேசுவானவர் சிலுவையிலே மரிப்பார்
  • கி.மு 453 லே தொடங்குகிற அந்த மணிக்கூடு இயேசுவானவர் சிலுவையிலே மரிக்கும் பொழுது நிறுத்தப்படுகிறது. 
  • ஏன்? 
  • அதற்கு பின்பு உன் ஜனத்தின் காலம் அல்ல தானியேலே.
  • அது புறஜாதியாரின் காலம்.
  • அது தான் நாம் வாழுகின்ற கிருபையின் காலம்.
  • இந்த கிருபையின் காலம் முடிவடையும் ஒரு நாள் வருகிறது. 
  • எப்போது?
  • இந்த கிருபை சம்பந்தப்பட்டவர்கள் இந்த உலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போகப்படுகிற அந்த நாள்.
  • அது தான் இயேசுவின் இரகசிய வருகையின் நாள். 
  • சபை எடுத்துக்கொள்ளப்படும் போது, கிருபையின் காலம் முடியும் போது மறுபடியும் அந்த நிறுத்தப்பட்ட மணிக்கூடு சுழல ஆரம்பிக்கும். 
  • எத்தனை வருடங்களுக்கு.
  • இன்னும் ஒரு வாரத்திற்கு.
  • ஒரு வாரத்திற்கு 7 நாட்கள். 
  •  அதாவது 7 வருடங்களுக்கு.
  • அந்த 7 வருடங்கள் தான் மகா உபத்திரவ காலம். 
  • அந்திக்கறிஸ்துவின் காலம். அந்த அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் யூதர்கள் தங்கள் பழைய ஏற்பாட்டின் முறைமையின்படியே அவர்கள் தேவனை ஆராதிப்பார்கள். 
தானியேல் 9:26-27
  • இந்த தானியேல் 9:26-27 ஐ விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் வெளிப்படுத்தல் 11 ம் அதிகாரத்தை வாசிக்க வேண்டும். 
மோசே மற்றும் எலியா:
  • யூதர்களுக்கு 2 சாட்சிகள் வருவார்கள். 
  • அவர்கள் பழைய ஏற்பாட்டு முறைமையின்படி நடத்துவார்கள். அது மோசேயும், எலியாவுமே. 
பிரதிநிதிகள்:
  • மோசே தான் ஆதியாகமம் -உபாகமம் வரையிலுள்ள புத்தகங்களுக்கு பிரதிநிதி்.
  • எலியா தான் யோசுவா -மல்கியா வரையிலுள்ள புத்தகங்களுக்கு பிரதிநிதி்.
  • மிரியாம் தொடங்கி மல்கியா வரையிலான தீர்க்கத்தரிசிகளுக்கு சரியாக நடுவில் வருபவர் தான் எலியா. 
  • இயேசு தான் புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களுக்கும் பிரதிநிதி்
எலியா:
  • எலியா என்றால் தேவன் தான் கர்த்தர்.
  • அவர் தான் தீர்க்கத்தரிசிகளில் எல்லாம் பெரியவர்.
  • ஏனென்றால் அவர் மரிக்கவே இல்லை. 
  • சுழல் காற்றிலே எடுத்துக்கொள்ளப் பட்டார்.
மோசேயை ஆண்டவர் எங்கு அடக்கம் பண்ணுகிறார்.
  • யோர்தான் நதிக்கும் அபாரீம் மலைத் தொடருக்கும் நடுவில் அடக்கம் பண்ணப்பட்டார்.
எலியா எங்கே வைத்து சுழல் காற்றிலே கொண்டுப் போகப்பட்டார்?
  • அதே இடத்தில்.
இரகசிய வருகைக்கு பின்:
  • சபை எடுத்துக்கொள்ளப்படும் போது அந்த இருவரும் அதே இடத்தில் ஊழியத்தை ஆரம்பிப்பார்கள்.
  • மூன்றரை வருடங்கள் சமஸ்த இஸ்ரவேலையும், நியாயப்பிரமாணத்தினால் ஆளுவார்கள். 
  • ஏனென்றால் புதிய ஏற்பாட்டு சபை போய் விட்டது.
  • அந்த 7 வருடங்களின் நடுவில் அவர்கள் இருவரும் கொல்லப்படுவார்கள். 

அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.  
 -தானியேல் 9 : 27

அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; 
  • ஏன்? அந்த 7 வருடங்களின் பாதி என்றால் மூன்றரை வருடங்கள். 
  • அந்த மூன்றரை வருடங்களில் மோசேயும், எலியாவும் கொல்லப்படுவார்கள். 
  • அவர்களுடைய உடல்கள் மூன்றரை நாட்கள் கிடக்கும். 
  • பிறகு அவர்கள் பரலோகத்திற்கு போய் விடுவார்கள்.
  • அதற்கு பிறகு இஸ்ரவேலர்கள் அந்திக்கறிஸ்துவிற்கு தப்பி ஓடி மூன்றரை வருடங்கள் பாதுகாக்கப்படுவார்கள். 

என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
 -வெளிப்படுத்தல் 11 : 3
  • 1260 நாட்கள் என்றால் 42 வாரங்கள். 
  • 42 வாரங்கள் என்றால் மூன்றரை வருடங்கள்.
  • அந்த தானியேல் தீர்க்கத்தரிசனமும், இந்த தீர்க்கத்தரிசனமும் எவ்வளவு அழகாய் ஒத்துப் போகின்றன. 

ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
 -வெளிப்படுத்தல் 11 : 5
  • பழைய ஏற்பாட்டில் அக்கினியை இறக்கி சத்துருக்களை அழித்த தீர்க்கத்தரிசி யார்? எலியா (1 இராஜாக்கள் 18:38).

அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
 -வெளிப்படுத்தல் 11 : 6
  • பழைய ஏற்பாட்டிலே  மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைத்த தீர்க்கத்தரிசி யார்? எலியா.
  • பழைய ஏற்பாட்டிலே தண்ணீர்களை இரத்தமாக மாற்றினவர் யார்? மோசே.
  • பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்க அதிகாரம் பெற்றவர் யார்? மோசே.

மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
 -வெளிப்படுத்தல் 11 : 11
  • மூன்றரை நாட்கள், மூன்றரை வருடங்களுக்கு அடையாளம் என்றால் இயேசுவானவர் ஊழியம் செய்த மூன்றரை வருடங்களுக்கு அது அடையாளம்.

இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
 -வெளிப்படுத்தல் 11 : 12
  • மோசேயும், எலியாவும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.  
 -வெளிப்படுத்தல் 11 : 19
  • அதாவது மோசேயும், எலியாவும் மரித்து மூன்றரை நாட்களுக்கு பிறகு உயிர்த்து அவர்கள் மேலே போனப் பிறகு தான் பரலோகத்தில் தேவாலயம் திறக்கப்படுகிறது. 
  • அப்படியானால் அதுவரை பரலோகத்தில் தேவாலயம் உண்டு. 
  • ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. 
  • ஏன்? 
  • தேவாலயத்தின் நோக்கம் உடன்படிக்கைப் பெட்டி.
  • உடன்படிக்கை இல்லாத தேவாலயம் திறந்திருக்க முடியாது. 
  • மோசேயும், எலியாவும் தான் உடன்படிக்கைப் பெட்டியை மேலே கொண்டு சென்றிருக்க வேண்டும்.
  • யாரை வைத்து ஆண்டவர் உடன்படிக்கைப் பெட்டியை செய்தாரோ, அதே மோசேயைக் கொண்டு அந்த உடன்படிக்கைப் பெட்டியை பரலோகத்திற்கு ஆண்டவர் கொண்டு போய் அங்கு தேவாலயத்தில் வைக்கிறார். 





Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?