யோவான் 5 -38 வருட வியாதியஸ்தன்-அற்புதம்
யோவான் 5 - 38 வருட வியாதியஸ்தன்-அற்புதம்
இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
-யோவான் 5 : 1
இவைகளுக்குப்பின்பு
- இயேசுவானவர் முதலாவது அற்புதத்தை கானா ஊரிலே செய்து முடித்து, எருசலேமிற்கு பண்டிகைக்கு வருகிறார்.
- திரும்பவும் கானா ஊருக்கு போகிறார்.
- அங்கே ராஜாவின் மனுஷர் கப்பர்நகூமில் இருந்து வந்து தன்னுடைய மகனைக் குறித்து இயேசுவானவரிடம் கேட்டு, இயேசுவானவர் நீ போ, அவன் சுகமாக இருக்கிறான் என்று சொல்லி அவனை சுகமாக்கி அனுப்பினாரே.
- அந்த சம்பவங்களுக்கு பிறகு
எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
-யோவான் 5 : 2
-யோவான் 5 : 2
4 சுவிசேஷங்கள்:
- மத்தேயு யூதர்களுக்கு இயேசுவை ராஜாவாக/மேசியாவாக காட்டுகிறார்.
- மாற்கு ரோமர்களுக்கு இயேசுவை ஊழியக்காரனாக காட்டுகிறார்.
- லூக்கா கிரேக்கர்களுக்கு இயேசுவை மனுஷகுமாராக காட்டுகிறார்.
- யோவான் யூதர்களுக்கு இயேசுவை தேவனாக காட்டுகிறார்.
எபிரேய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம்
- யூதர்களுடைய தலைநகரம் எருசலேம்.
- சுற்றி நடந்து வந்தாலே 4 கிமீ தான்.
- யூதர்களுக்கு எருசலேம் முழுவதையும் தெரியும்.
- ஆனால் யோவான் அவர்களுக்கு ஏன் பெதஸ்தா குளம் என எழுதுகிறார்.
- ஏனென்றால் யூதர்கள் அதை மறந்து விட்டார்கள்.
- யூதர்களுடைய மொழி எபிரேய மொழி.
- புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டாலும் இந்த யோவான் சுவிசேஷம் யூதர்களுக்கு எழுதப்பட்டது.
- எபிரேய மொழியில் பெதஸ்தா என்னப்பட்ட குளம் என்று ஏன் சொல்ல வேண்டும்.
- யூதர்களுக்கு எழுதுகிற யோவான், பெதஸ்தா என்ற பெயர் எபிரேய மொழி என்று அந்த மொழி பேசுகிறவர்களுக்கே ஏன் சொல்ல வேண்டும்.
ஆட்டு வாசலினருகே இருக்கிறது
- ஆட்டு வாசல் என்ற ஒன்று இருக்கிறது என்று சொல்லவில்லை.
- ஏனென்றால், அந்த இடம் எல்லோருக்கும் தெரியும்.
- அதன் பக்கத்தில் இந்த குளத்தை தான் யாருக்கும் தெரியவில்லை.
அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
- இதற்கும் இந்த அற்புதத்திற்கும் என்ன சம்பந்தம்?
அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
-யோவான் 5 : 3
-யோவான் 5 : 3
- எவனோ ஒருவன் கிலப்பி விட்டப் பொய் கதை.
- இதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாமும் யாருடைய புரளியையும் நம்பி, பொய் எதிர்பார்ப்பை வைத்து கொள்ளக்கூடாது.
- நாம் இரட்சிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நம்மை எப்படி நடத்தி வருகிறார் என்பதை நினைத்து பார்த்து திருப்தி ஆக வேண்டும்.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
-1 தீமோத்தேயு 6 : 6
ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
-யோவான் 5 : 4
தண்ணீரைக் கலக்குவான்
- இது உண்மையா?
- இல்லை பொய்.
- எவனோ ஒருவன் சொன்ன பொய்.
முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
-யோவான் 5 : 5
- 38 வருடங்கள் வியாதியாய் இருந்தான் என்று ஆவியானவர் யோவான் மூலம் ஏன் நமக்கு சொல்லுகிறார்.
-யோவான் 5 : 6
- அங்கு எத்தனையோ வியாதியஸ்தர்கள் இருந்தாலும், இயேசு அந்த ஒருவனை தான் கேட்கிறார். ஏன்?
-யோவான் 5 : 7
- அவன் சுகமாக வேண்டும் என்று சொல்லவில்லை.
- மாறாக புலம்புகிறான்.
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
-யோவான் 5 : 8
- இயேசுவும் சுகமாகு என்று சொல்லவில்லை.
- உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றும் சொல்லவில்லை.
- எப்படி யூதர்கள் இனி பெர்சியாவில் இருக்க தேவையில்லை, நீங்கள் போகலாம் என்று எஸ்தர் புத்தகத்தில் சொன்னாரோ, அதே போல நீ படுத்திருக்க தேவையில்லை, போகலாம் என்கிறார்.
- படுக்கை என்பது வாழுகிற இடத்தை அடையாளப்படுத்துகிறது.
- அந்த வாழுகிற இடத்தை விட்டு எருசலேமை நோக்கி நட என்றார்.
- அடையாளமாக இந்த சம்பவம் இங்கு நடக்கிறது.
உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
-யோவான் 5 : 9
-யோவான் 5 : 9
- அப்படியானால் இந்த பண்டிகை ஓய்வு நாளில் வந்து இருக்கிறது.
- இயேசுவானவர் ஊழியம் செய்த அந்த மூன்றரை வருடங்களுக்குள் எந்தெந்த யூதருடைய பண்டிகைகள் ஓய்வுநாளில் வந்தன என்று கண்டுபிடிக்க வேண்டும்.
- ஒரே ஒரு பண்டிகை தான் ஓய்வுநாளில் வந்தது.
எல்லா கேள்விகளுக்கும் பதில்கள்:
இயேசு செய்த அற்புதங்கள்
- யோவான் புத்தகத்தில் 7 அற்புதங்கள் தான் உள்ளன.
- மரித்து உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களை கலிலேயா கடலருகே சந்தித்த போது யோவான் 21 ல் ஒரு அற்புதத்தை செய்கிறார்.
- வலது பக்கத்தில் உங்கள் வலையை போடுங்கள் என்று சொல்லி, அவர்கள் 153 மீன்களை பிடிக்கிறார்கள்.
- இது தான் யோவான் புத்தகத்தில் வருகிற 8வது அற்புதம்.
- ஆனால் அந்த அற்புதம் இயேசுவானவர் மரித்து உயிர்த்தெழுந்த இயேசு செய்தது.
- மரிக்கும் முன்பு இயேசு செய்த அற்புதங்களில் 7 அற்புதங்கள் தான் யோவான் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
- அந்த 7 லிலும் இயேசுவின் தேவத்துவம் காட்டப்படுகிறது.
- அந்த 7 ல் 5 அற்புதங்கள் மற்ற சுவிசேஷப் புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை.
- இப்போது நாம் பார்க்கிற சம்பவம் கூட மற்ற சுவிசேஷப் புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை.
எஸ்தர் புத்தகத்தின் வெளிப்பாடு:
அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
-எஸ்தர் 2 : 5
அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
-எஸ்தர் 2 : 6
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
-எஸ்தர் 2 : 7
- பெர்சியாவில் அகாஸ்வேரு ராஜாவினுடைய சூசான் அரண்மனையில் நடக்கிற சம்பவம் இது.
- வடக்கு ராஜ்யம் -10 கோத்திரங்கள்- 19 ராஜாக்கள்- கி.மு 722 ம் ஆண்டு அசீரியர்களால் சிதறடிக்கப்பட்டு கைதிகளாய் பற்பல தேசங்களுக்கு கொண்டு போய் போடப்பட்டார்கள்.
- தெற்கு ராஜ்யம் - 2 கோத்திரங்கள் - 20 ராஜாக்கள்.
- நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய ராஜா யூதா ராஜ்யத்திற்கு தன்னுடைய இராணுவத்தையும், அதிகாரிகளையும் அனுப்பி ராஜ வம்சத்தை சேர்ந்த வாலிபர்களை பிடித்து கொண்டு வர வைத்தான்.
- தானியேல், மிஷாவேல், அசரியா, அனனியா - தானியேல் 1 அதிகாரம்- சம்பவம் நடைபெற்ற ஆண்டு கி.மு 609.
- அதற்கு பிறகு அந்த யூத ராஜரீக வாலிபர்களின் விண்ணப்பத்தின் பேரில் ஒரு சில ஆசாரியர்கள் மற்றும் சிலர் பாபிலோனுக்கு கொண்டு வரப்பட்டார்கள்.
- அப்படி கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் எசேக்கியேல், ஒருவர் மொர்தெகாய்.
- அது நடந்த வருடம் கி.மு 597.
- கடைசியாக யூதா ராஜ்யத்தை பாபிலோனியர்கள் வந்து முழுக்க அடித்து அவர்களை பிடித்து கொண்டு போன வருடம் கி.மு 586.
- ஆண்டவர் சொன்னார் உங்களை நான் 70 வருடங்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பேன் என்று.
- 70 வருடங்களுக்கு பிறகு கோரேஸ் ராஜா பெர்சியாவை ஆண்டு கொண்டு இருந்த சமயம் செருபாபேல், யெசுவா, இவர்களோடு முழுக்க யூதா ஜனங்கள் எருசலேமிற்கு அனுப்பப்பட்ட வருடம் கி.மு 516.
- இப்படி எல்லா யூதர்களும் அடிமைத்தனத்தில் இருந்து திரும்ப எருசலேமிற்கு அனுப்பப்பட்ட போது சிலர் மாத்திரம் திரும்பி போகவில்லை.
- பாபிலோனை பெர்சியா தோற்கடித்து உலகத்தை ஆளுகிறது.
- பெர்சியா என்றால் தற்போதைய ஈரான்.
- பாபிலோன் என்றால் தற்போதைய ஈராக்.
- இப்போது இவர்களை திரும்பிப்போக அனுப்புகிறது பெர்சியா.
- தங்கள் தேசத்தைக் குறித்து ஏக்கத்தோடு இருந்தவர்கள் போகிறார்கள்.
- ஆனால் இந்த பெர்சியாவின் கலாச்சாரத்திற்கு ஊறிப்போய்விட்டவர்கள் திரும்பி போகவில்லை.
- கி.மு 516 ம் ஆண்டு வசதியான அரசகுலத்தாரோடு நல்ல தொடர்பில் இருந்த சிலர் திரும்பி போகவில்லை.
- மொர்தெகாய் நன்கு படித்த, பணக்கார ஒரு ராஜவம்சத்து ஆளாய் இருந்திருக்க வேண்டும்.
- அத்சாள் - ஹடாசா- எபிரேய மொழியில் Haddasa.
- பெர்சிய பெயர் எஸ்தர். யூதப் பெயர் ஹடாசா
இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.
-எஸ்தர் 3 : 1
- 500 வருடங்களுக்கு பிறகு, பெர்சியாவின் ராஜாவோடு இணைகிறார்கள்.
ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.
-எஸ்தர் 3 : 2
- ஆமான் என்ற ஒருவனை அகாஸ்வேரு ராஜா பிரதம மந்திரி ஆக்குகிறார்.
- பார்வான் யோசேப்பை பிரதம மந்திரி ஆக்கினது போல.
- நேபுகாத்நேச்சார் தானியேலை பிரதம மந்திரி ஆக்கினது போல.
- ஆமான் யூதனும் அல்ல, பெர்சிய ராஜ்யத்தை சேர்ந்தவனும் அல்ல.
அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
-எஸ்தர் 3 : 3
இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
-எஸ்தர் 3 : 4
- இப்போது தான் மொர்தெகாய் அவர்களுக்கு சொல்லுகிறார் தான் யூதன் என்று. இப்போது இதை போய் ஆமானிடத்தில் சொன்னார்கள்.
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
-எஸ்தர் 3 : 5
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.
-எஸ்தர் 3 : 6
- ஆமானுக்கு கோபம் என்றால் மொர்தெகாய்-ஐ மட்டும் கொல்லலாமே. ஏன் பெர்சிய ராஜ்யத்திற்கு உட்பட்ட அனைத்து தேசங்களிலும் உள்ள அனைத்து யூதர்களையும் கொல்ல வேண்டும்.
- இந்து தேசம் முதல் எத்தியோப்பியா வரை.
- பின் வருகிற வசனங்களில் தங்களுடைய எதிரிகளாகிய ஆமானுடைய மக்களையெல்லாம் மொர்தெகாயும், எஸ்தரும், யூதர்களும் சேர்ந்து கொலை செய்து அந்த இனத்தையே அழித்துப் போடுகிறார்கள்.
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
-எஸ்தர் 9 : 24
ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,
-எஸ்தர் 9 : 26
- எபிரேய மொழியில் பூர் என்பது சீட்டு போடுதல்.
- இந்த எஸ்தர் கதை நடந்த வருடம் கி.மு 478.
- கர்த்தர் தனது மக்களை காப்பாற்றுவார்.
- யார் அழிக்க நினைத்தாலும் கர்த்தருடைய பாதுகாப்பு கர்த்தருடைய பிள்ளைகளின் மேல் இருக்கும்.
இயேசுவானவரின் ஊழியம்:
- அப்படியானால் இது இயேசுவானவரின் ஊழியத்தின் ஆரம்ப காலங்களில் நடக்கின்ற ஒரு அற்புதம்.
- இயேசுவானவர் 33 வருடங்கள் ஊழியம் செய்தார்.
- அதில் அவர் ஆரம்பத்தில், இடையில், முடிவில் செய்த அற்புதங்கள் என்று உண்டு.
கர்த்தருடைய பண்டிகைகள்:
- வேதத்தில் 7 பண்டிகைகள் உண்டு.
- அவை கர்த்தருடைய பண்டிகைகள் என்று சொல்லப்படும்.
1) பஸ்கா பண்டிகை
2) புளி்ப்பில்லாத அப்ப பண்டிகை
3) அசைவாட்டும் முதற்கனி பண்டிகை
4) அறுவடை/பெந்தெகொஸ்தே பண்டிகை
5) எக்காளப் பண்டிகை
6) ஒப்புரவாக்குதலின் பண்டிகை
7) கூடாரப் பண்டிகை
யூதருடைய பண்டிகை:
- ஆனால் இங்கு கர்த்தருடைய பண்டிகைகள் என்று சொல்லப்படாமல் யூதருடைய பண்டிகை என்று சொல்லப்படுகிறது.
- அப்படியானால் யூதருடைய பண்டிகை என்றால் என்ன?
- இங்கு வந்த யூதருடைய பண்டிகை, ஓய்வு நாளில் வந்த பண்டிகை.
- வேத அறிஞர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், இயேசுவானவர் ஊழியம் செய்ய தொடங்கின அந்த மூன்றரை வருடங்களில் இந்த பூரிம் பண்டிகை ஒன்று தான் அவர் ஊழியம் செய்த முதல் வருடத்தில் ஒரு ஓய்வு நாளில் வந்தது.
சகரியா புத்தகத்தின் வெளிப்பாடு:
- எஸ்தர் புத்தகத்தினுடைய பூரிம் பண்டிகைக்கும், யோவான் சுவிசேஷத்தின் 5 வது அதிகாரத்தில் உள்ள பெதஸ்தா குளத்து அற்புதத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.
- இயேசு அந்த சுகம் கொடுத்த நாள் பண்டிகை நாளாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
- எஸ்தர் புத்தகத்தில் மாத்திரம் தான் தேவன், கர்த்தர் என்ற நாமங்கள் வராத புத்தகம். ஏன்?
- உண்மையாக இஸ்ரவேல் ஜனங்களை ஆமானுடைய சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றினது தேவன்.
- அதிலும் விசேஷமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
- அத்சாள் - ஹடாசா- அது ஒரு மிருதுச்செடியைக் குறிக்கும்.
இதோ, இன்று இராத்திரி சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே (Hadassa வுக்குள்ளே, எஸ்தர்- குள்ளே) நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.
-சகரியா 1 : 8
அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.
-சகரியா 1 : 9
அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.
-சகரியா 1 : 10
- Typology, Christophany, Theophany என்றெல்லாம் இருக்கிறது.
- ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் 3 தேவதூதர்கள் வந்தார்கள்.
- அதில் ஒருவர் இயேசு.
- பழைய ஏற்பாட்டில் இயேசு என்று சொல்லப்படாமல் கர்த்தருடைய தூதனானவர் என்று வரும்.
- மனோவா- அவன் மனைவி-சிம்சோனை பற்றின தீர்க்கத்தரிசனம்- அங்கு தரிசனமானவரும் இயேசு தான்.
- கிதியோன் ஐ சந்தித்து பலசாலியே என்று சொன்னவர் இயேசு.
- சாத்ராக், மேஷாக். ஆபெத்நெகோ - 4வதாக வந்த இயேசு.
- மிருதுச்செடிகளுக்குள்ளே - எபிரேய மொழியில் அது ஹடாசா.
- எஸ்தர் - பெர்சிய பெயர்
- உண்மையாக எஸ்தர் என்று அறிமுகமாகிற அந்த பெண்ணுக்குள்ளே இருந்து செயல்பட்டு யூதர்களை அந்த எதிரியிடம் இருந்து காப்பாற்றி அந்த எதிரிகளை அழித்தவர் இயேசு.
- எஸ்தர் புத்தகத்தின் கதாநாயகர் இயேசு.
- எந்த வருஷத்திலே இந்த மக்கள் இஸ்ரவேலுக்கு திரும்பி போகிறார்கள்? கி.மு 516.
- எந்த வருஷத்திலே இந்த எஸ்தரின் கதை நடக்கிறது? கி.மு 478.
- 516 ல் இருந்து 478 ஐ கழித்தால் 38.
- 38 வருஷங்கள் பெர்சியாவிலே யூத ஜனங்கள் வாழுகிறார்கள்.
- அது அவர்களுடைய தேசம் அல்ல.
- அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.
- அப்படியே கிடக்கிறார்கள்.
- பெதஸ்தா குளத்திலே ஒருவன் 38 வருஷமாக கிடக்கிறான்.
- யூதருடைய பூரிம் பண்டிகை வந்தது.
- இயேசுவானவர் அந்த பண்டிகையின் போது இப்போது தான் முதல் தடவையாக வருகிறார்.
- அவர் வாழ்ந்தது நாசரேத்திலே.
- நாசரேத்தில் எருசலேமிற்கு அடிக்கடி வந்தார்கள் கர்த்தருடைய பண்டிகையின் போது.
- ஆனால் இப்போது அந்த பண்டிகையை கொண்டாடுவதற்கே இயேசுவானவர் எருசலேமிற்கு வருகிறார்.
- அங்கே வந்தால் யாரும் அறியாத ஒரு இடம் இருக்கிறது.
- அந்த இடத்தின் பெயர் பெதஸ்தா.
- பெதஸ்தா என்பது பெயிட்-ஹடாசா வினுடைய சுருக்கம்.
- பெயிட் என்றால் வீடு; ஹடாசா என்றால் அந்த பெண்.
- அது தான் பெதஸ்தா என்று அழைக்கப்படுகிறது.
- கி.மு 478 ல் நிர்மூலமாகி போயிருந்த அந்த யூதர்கள் தப்பி எதிரிகளையெல்லாம் அழித்து விட்டு திரும்ப தங்கள் தேசத்திற்கு வருகிறார்கள்.
- வந்து வருடாவருடம் இதை பூரிம் பண்டிகையாக 7 நாள் கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
- உடனே கி.மு 8 ம் நூற்றாண்டளவில் செய்யப்பட்ட ஒரு அழகான ஓடை இருந்தது.
- அந்த ஓடையை தரித்து தண்ணீரை தேக்க வைத்து அந்த தண்ணீரை எழுசலேமில் பயன்படுத்திக் கொண்டு வந்த ஒரு குளம் இருந்தது.
- அந்த குளத்தை தெரிவு செய்தார்கள். ஆட்டு வாசலுக்கு அருகே.
- அந்த இடத்திலே ஒவ்வொரு வருடமும் யூதர்கள் வந்து பூரிம் பண்டிகையை கொண்டாடுவதற்கு பிரமாண்டமான 5 மண்டபங்கள் செய்தார்கள்.
- கி.மு 478 கு பிறகு எத்தனையோ வருடங்களுக்கு அந்த இடத்திற்கு தான் யூதர்கள் வருவார்கள்.
- பெதஸ்தா - பெயிட் ஹடாசா
- ஹடாசா - மிருதுச்செடி. பெயிட் - வீடு
- யூதர்களுக்கு மிருதுச்செடி என்றால் இரக்கம் என்று அடையாள அர்த்தம்.
- ஆகவே கருணை இல்லம்; மிருது இல்லம் என்று அதற்கு பெயர் வைத்திருந்தார்கள்.
- அப்போது தங்கள் இனம் காப்பாற்றப்பட்டதை அவர்கள் கொண்டாடி வந்தார்கள்.
- எது வரை தெரியுமா?
- ஒரு நாள் ஒருவன் ஒரு பொய் கதையை அங்கு சொல்லும் வரைக்கும்.
- தேவ தூதன் குளத்தை கலக்குவான் என்ற பொய்.
- அதை கேட்டு நிறைய நோயாளிகள்(குருடர்கள், முடவர்கள்) குவிந்து, அந்ந அழகான குளம் அசுத்தமாக, துர்நாற்றம் நிறைந்ததாக மாறியது.
- அதனால் அந்த பெதஸ்தா குளம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு விட்டது.
- அடுத்த வருடம் பூரிம் கொண்டாட வந்தவர்கள் நாற்றம் தாங்காமல் ஓடியே விட்டனர்.
- பெதஸ்தா கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டது.
- அவர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் பூரிம் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்தனர்.
- இந்த யூதர்களே பெதஸ்தாவை மறந்து விட்டார்கள்.
- ஆனால் இயேசு மறக்கவில்லை, ஏன்?
- அவர் தான் எஸ்தர் புத்தகத்தின் கதாநாயகர்.
- அந்த இடத்திற்கு அவர் வந்து, எத்தனையோ பேர் அங்கு இருந்தார்கள், ஆனால் ஒருவனுக்கு சுகத்தை கொடுத்தார். ஏன்?
- ஒரு அடையாளத்தை காண்பிப்பதற்காக.
- இதே 38 வருஷங்கள் தான் என் ஜனங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு பெர்சியாவில் இருந்தார்கள்.
1 சாமுவேல் புத்தகத்தின் வெளிப்பாடு:
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
-1 சாமுவேல் 15 : 2
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
-1 சாமுவேல் 15 : 3
அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
-1 சாமுவேல் 15 : 8
சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.
-1 சாமுவேல் 15 : 9
- ஆகாக் - ஒரு மனிதன் அல்ல, ஒரு ராஜ வம்சத்துக்கு தான் ஆகாக் என்று பெயர்.
- பார்வோன் - எகிப்தியன் ராஜா
- ஏரோது - ராஜாக்களின் பெயர்
- இராயன் - ராஜாக்களின் பெயர்
அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
-2 சாமுவேல் 1 : 8
அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
-2 சாமுவேல் 1 : 9
அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான்.
-2 சாமுவேல் 1 : 10
- கடைசியில் சவுல் தான் மிச்சம் வைத்த அந்த அமலேக்கியன் கையினாலேயே செத்தான்.
- இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், ஆண்டவர் விட்டுவிடச் சொல்லி நாம் எதையாவது விடாமல் வைத்திருந்தால் அது ஒரு நாள் நம்மை அழிக்கும்.
அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
-எஸ்தர் 2 : 5
பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன்.
-1 சாமுவேல் 9 : 1
அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
-1 சாமுவேல் 9 : 2
- எனவே, இந்த மொர்தெகாய் சவுல் வம்சத்தில் வந்தவர்.
- 500 வருடங்களாக பிசாசு ஆகாக் சந்ததியை இரகசியமாக வளர்த்து வந்தான்.
- 500 வருடங்களாக ஆண்டவர் சவுல் சந்ததியை பிரசித்தமாக வளர்த்து வந்தார்.
- பின் ஆண்டவர் சவுல் மிச்சம் வைத்த அந்த முழு அமலேக்கிய வம்சத்தையே மொர்தெகாய் மற்றும் எஸ்தரைக் கொண்டு அழித்தார்.
- அந்த சந்தோஷத்தை தான் மக்கள் பூரிம் பண்டிகையாக கொண்டாடி வந்தனர்.
Comments
Post a Comment