12 வேவுக்காரர்கள்
12 வேவுக்காரர்கள்
(1) அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
-எண்ணாகமம் 13 : 4
வேவுக்காரரின் பெயர்: சம்முவா
அர்த்தம்: வதந்தி
விளக்கம்:
- வேவுப்பார்க்க சென்றவர், அந்த இடத்தைப் பற்றின வதந்தியை பரப்புகிறார்.
அப்பாவின் பெயர்: சக்கூர்
அர்த்தம்: ஞாபகம் வைத்து கொள்
விளக்கம்:
- நல்ல விஷயங்களை விட வதந்திகள் தான் நம் மனதில் அதிகம் நிற்கும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கோத்திரத்தின் பெயர்: ரூபன்
அர்த்தம்: “அதோ பார் உன் மகன்”
விளக்கம்:
- ஆண்டவருக்கு பிரியமான காரியங்களை நாம் செய்தால் தேவன் பெருமையாக நம்மை காட்டி “அதோ என் பிள்ளை” என்பார்.
- ஆண்டவருக்கு பிரியமல்லாத காரியங்களை நாம் செய்தால் பிசாசு ஆண்டவருக்கு நம்மை காட்டி “அதோ உங்கள் பிள்ளை” என்பான்.
(2) சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.
-எண்ணாகமம் 13 : 5
வேவுக்காரரின் பெயர்: சாப்பாத்
அர்த்தம்: நியாயந்தீர்த்தல்
விளக்கம்:
- நியாயந்தீர்க்கிறவன் எப்படி இருக்க வேண்டும்?
அப்பாவின் பெயர்: ஓரி
அர்த்தம்: உயர்ந்த பிறப்பை உடைய ஒருவன்
விளக்கம்:
- நாமும் உயர்ந்த பிறப்பை உடையவர்கள். மறுபிறப்பின் மூலம் பிதாவின் பிள்ளைகள் ஆகி இருக்கிறோம்.
கோத்திரத்தின் பெயர்: சிமியோன்
அர்த்தம்: செவி கொடு
விளக்கம்:
- அவன் உயர்ந்த பிறப்பை உடைய அப்பாவின் மகன் என்றால் உயர்ந்த இடத்தில் இருந்து சரியாய் தான் நியாயந்தீர்க்க வேண்டும்.
- செவி கொடுத்தால் தான் சரியாக நியாயந்தீர்க்க முடியும். விசுவாசமே கேட்பதால் தான் வரும்.
(3) யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
-எண்ணாகமம் 13 : 6
வேவுக்காரரின் பெயர்: காலேப்
அர்த்தம்: நாய்
விளக்கம்:
- காலேப் நாயைப் போல நன்றியுள்ளவர்.
அப்பாவின் பெயர்: எப்புன்னே
அர்த்தம்: பார்க்கிறவன்
விளக்கம்:
- தீர்க்கத்தரிசி
- எபிரேய மொழியில் Hozeh, Roeh என்று 2 பதங்கள் உள்ளன.
- Roe’h என்றால் “காண்கிறவன்” என்று அர்த்தம்.
- Hoze’h என்றால் “பார்க்கிறவன்” என்று அர்த்தம்.
- ஆங்கிலத்தில் “Seer” எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
- தமிழில் “ஞானதிருஷ்டிக்காரன்” என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
- அந்த வகையில் பார்க்கப் போனால் எப்புன்னே என்பவர் ஒரு தீர்க்கத்தரிசி.
கோத்திரத்தின் பெயர்: யூதா
அர்த்தம்: துதி
விளக்கம்:
- தேவனை துதிக்கிற விஷயங்களை பார்ப்பவன்.
- நாம் சுபாவத்திலேயே தேவனை துதிப்பவர்கள்.
- காலேப் பிறப்பால் ஒரு யூதன் அல்ல.
- அவர் புறஜாதியார்.
- ஆபிரகாம் காலத்தில் யூதனாக மாறின பரம்பரையை சேர்ந்தவர்.
- அது ஒரு அடையாளம்.
- நாம் புறஜாதியாராய் இருந்து ஆபிரகாமின் சந்ததிக்குள் யூதா கோத்திரத்துக்குள் இயேசுவானவரால் வந்து இருக்கிறோம்.
(4) இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.
-எண்ணாகமம் 13 : 7
வேவுக்காரரின் பெயர்: ஈகால்
அர்த்தம்: கர்த்தர் மீட்டு கொள்வார்
விளக்கம்:
- இது தான் நம்முடைய எதிர்பார்ப்பு.
- எந்த விதமான ஆபத்தில் இருந்தும் காத்து கொள்வார்.
- இவன் வேவுபார்க்க போய் விட்டு வந்து எதிர்மறையாக பேசுகிறார்.
அப்பாவின் பெயர்: யோசேப்பு
அர்த்தம்: கர்த்தர் கூட்டி கொடுப்பார்.
விளக்கம்:
- நமது வாழ்க்கையில் தேவன் யோசேப்பாக செயல்படுகிறார்.
- கூடுதலான ஆசீர்வாதத்தை தருகிறவர் தேவன்.
கோத்திரத்தின் பெயர்: இசக்கார்
அர்த்தம்: கர்த்தருடைய பரிசு(நித்திய ஜீவன்) வந்து கொண்டிருக்கிறது.
விளக்கம்:
- நமக்கு இந்த பெயர் ஒரு தீர்க்கத்தரிசனம்.
- பிரதிபலன்கள்(rewards) இரண்டு வகைப்படும்.
- உடனடியான மற்றும் நித்தியமான.
- நமக்கு இயேசுவானவர் வாக்குத்தத்தம் பண்ணின நித்திய பிரதிபலன் எது? யோவான் 3:16
- நித்திய ஜீவன் தான் நமது நித்திய கிரயம்/பரிசு.
- தற்காலிகமான கிரயம் - உலகத்தில் கிடைக்கும் பரிசு.
- அது வந்தாலும், வராவிட்டாலும் பிரச்சனை இல்லை.
(5) எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.
-எண்ணாகமம் 13 : 8
வேவுக்காரரின் பெயர்: ஓசேயா
அர்த்தம்: கர்த்தருடைய இரட்சிப்பு
அப்பாவின் பெயர்: நூண்
அர்த்தம்: பாம்பு
கோத்திரத்தின் பெயர்: எப்பிராயீம்
அர்த்தம்: கனி தருதல்
விளக்கம்:
- நூணின் மகன் ஓசேயா.
- நம்மை அடையாளப்படுத்துகிறது.
- நாம் எப்படி இந்த உலகத்தில் பிறந்தோம், பாவத்தில்.
- நாம் பாவத்தில் பிறந்தோம் என்றால் நாம் நூணின் பிள்ளைகள்.
- சர்ப்பம் என்பது சாத்தானுக்கு அடையாளம். பிசாசின் பிள்ளைகள், தேவனுடைய பிள்ளைகள் என இரு வகைப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
- ஆனால் ஓசேயா தன் பெயரில் இரட்சிப்பை கொண்டு இருக்கிறார்.
- கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவை உடையவன்.
- நாம் நூணின் பிள்ளைகளாக பிறந்து, இயேசுவின் மூலம் பாவத்திற்கு மரித்து, தேவனுடைய பிள்ளையாக பிறந்தோம்.
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
-யோவான் 15 : 4
- இயேசு சொல்கிறார், நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் நீங்கள் கனி கொடுப்பீர்கள் (எப்பிராயீம்)
(6) பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.
-எண்ணாகமம் 13 : 9
வேவுக்காரரின் பெயர்: பல்த்தி
அர்த்தம்: விடுவித்தல்
விளக்கம்:
- இந்த மனிதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தார்கள். அவர்களை கர்த்தர் விடுவித்தார்.
- எனவே கிறிஸ்தவர்களாகிய நம்மை பல்த்தி என்று அழைக்கலாம்.
அப்பாவின் பெயர்: ரப்பூ
அர்த்தம்: குணமாக்கப்பட்டேன் (கடந்த காலம்)
விளக்கம்:
- Yehovah Ropha போல.
- நான் குணமாக்கப்பட்டவனுடைய, குணம் பெற்ற மகன்.
- நான் சுகமான பிள்ளை.
- எனக்கு நோய்கள் (illness) இருக்கலாம்,
- ஆனால் நான் நோயாளி அல்ல.
- நமக்கு சுகவீனங்கள் இந்த பூமியில் இருக்கும் வரை வரும்.
கோத்திரத்தின் பெயர்: பென்யமீன்
அர்த்தம்: வலது கையின் மகன்
விளக்கம்:
- யூதர்களுக்கு வலது கரம் என்பது வல்லமை, அதிகாரம்.
- எனவே, நாம் வல்லமையும், அதிகாரமும் பூரணப்படுத்தப்பட்ட தேவனுடைய பிள்ளைகள்.
(7) செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.
-எண்ணாகமம் 13 : 10
வேவுக்காரரின் பெயர்: காதியேல்
அர்த்தம்: தேவனே என்னுடைய அதிர்ஷ்டம்
விளக்கம்:
அப்பாவின் பெயர்: சோதி
அர்த்தம்: என்னுடைய இரகசியம்
விளக்கம்:
- பவுல் தெசலோனிக்கேயர் புத்தகத்தில் சொல்கிறார், நாம் மரிப்பதில்லை என்ற இரகசியத்தை சொல்கிறார்.
- கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமே இந்த இரகசியம்.
- நாம் நரகத்திற்கு செல்வதில்லை.
- அது மற்றவர்களுக்கு தெரியாது.
கோத்திரத்தின் பெயர்: செபுலோன்
அர்த்தம்: மரியாதை
விளக்கம்:
- நாம் மரியாதைக்குரிய கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
- அப்படிப்பட்ட மரியாதைக்குரிய கோத்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த பரம இரகசியத்தினுடைய மகனாய் இருக்கின்ற ‘தேவனே என்னுடைய அதிர்ஷ்டம்’ என்று சொல்லப்படுகிற மகன் எங்களுக்கு இந்த தேசத்தை பெற்று கொள்ள அதிர்ஷ்டம் இல்லை என்கிறான்.
(8) யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
-எண்ணாகமம் 13 : 11
வேவுக்காரரின் பெயர்: காதி
அர்த்தம்: என் படை
விளக்கம்:
- இவன் தேவனுடைய இராணுவம்/படை.
- அவருடைய சேனை நாம். சேனைகளின் கர்த்தர் அவர்.
அப்பாவின் பெயர்: சூஸ்
அர்த்தம்: குதிரை
விளக்கம்:
- நாம் குதிரையின் மேல் போகிற இராணுவம். குதிரையை போல இருக்க வேண்டும்.
- குதிரையில் சவாரி செய்வது கஷ்டம்.
- ஆனால் பழகி விட்டால் கெம்பீர தோற்றம்.
- நாம் குதிரையின் மேல் இருக்கிற போர்வீரர்.
- உவமானமாக குதிரை பரலோகத்தில் இருப்பதை குறிக்கிறது.
கோத்திரத்தின் பெயர்: யோசேப்பு-மனாசே
அர்த்தம்: மறந்து விடு
விளக்கம்:
- நாம் மறக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
- நமக்கு பிசாசு மறக்க வேண்டிவைகளை ஞாபகப்படுத்துவான்.
(9) தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.
-எண்ணாகமம் 13 : 12
வேவுக்காரரின் பெயர்: அம்மியேல்
அர்த்தம்: அம்மி - என் ஜனங்கள்; யேல் - தேவன்; தேவனின் மக்கள்.
விளக்கம்:
- தேவன் சொல்கிறார் இவர்கள் என்னுடைய ஜனங்கள்
அப்பாவின் பெயர்: கெமல்லி
அர்த்தம்: என் தேவன் முதலீடு செய்கிறார்.
விளக்கம்:
- தேவன் நமக்குள் தன்னை முதலீடு செய்கிறார். லாபத்தை பெறும்படியாக.
- நம்முடைய துதிகள், நன்றிகள், ஸ்தோத்திரங்கள்.
- வேறு எதையும் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது இல்லை.
கோத்திரத்தின் பெயர்: தாண்
அர்த்தம்: நியாயாதிபதி
விளக்கம்:
- நமது நியாயாதிபதி தேவன்.
- உங்களை நீங்களே நியாயம் தீர்த்து கொள்ளாதீர்கள்.
(10) ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
-எண்ணாகமம் 13 : 13
வேவுக்காரரின் பெயர்: சேத்தூர்
அர்த்தம்: மறைந்திருத்தல்
விளக்கம்:
- தேவன் நம்மை உலகத்திற்கு மறைத்து வைத்து இருக்கிறார்.
- சாதாரணமாக எதை நீங்கள் ஒளித்து வைப்பீர்கள். மிகப் பெருமதியான ஒன்றை தான்.
- தேவன் நம்மை ஒளித்து வைத்திருக்கிறார், பிசாசு நம்மை களவெடுக்காதபடிக்கு.
- உலகம் நம்மை களவாடக்கூடாது என்பதற்காக. நாம் தேவனுடைய சொத்து என்பதால்.
- நாம் நம்மை நம்முடைய பட்டம், படிப்பு இதை வைத்து தான் மதிப்பிடுகிறோம்.
- ஆனால் நாம் எதுவுமே இல்லாவிட்டாலும், பெருமதியானவர்கள்.
அப்பாவின் பெயர்: மிகாவேல்
அர்த்தம்: நம்முடைய தேவனைப் போன்றவர் யார்?
விளக்கம்:
- நம்முடைய தேவனை யாரோடும்/எதோடும் ஒப்பிட முடியாது.
கோத்திரத்தின் பெயர்: ஆசேர்
அர்த்தம்: சந்தோஷம்.
விளக்கம்:
- கிறிஸ்தவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நமக்கு துக்கப்பட ஆயிரம் காரணம் இருக்கலாம்.
- ஆனால் மகிழ்ச்சியாய் இருக்க ஒரு காரணம் உண்டு. தேவன்.
(11) நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.
-எண்ணாகமம் 13 : 14
வேவுக்காரரின் பெயர்: நாகபி
அர்த்தம்: என் இரகசியம்
விளக்கம்:
- நாம் தேவனுடைய இரகசியம். இயேசுவுக்கு நாம் தான் இரகசியம்/மணவாட்டி.
- வானத்தையும், பூமியையும் படைத்தவர் என் மேல் கவர்ச்சியாக இருக்கிறார்.
அப்பாவின் பெயர்: ஒப்பேசி
அர்த்தம்: என்னுடைய அதிகரிப்பு
விளக்கம்:
- நாம் கர்த்தருக்குள் பெருகுகிறவர்களாக இருக்க வேண்டும்.
- தேவன் நமக்கு மகிழ்ச்சியை பெருகப் பண்ணி இருக்கிறார்.
கோத்திரத்தின் பெயர்: நப்தலி
அர்த்தம்: என் போராட்டம்
விளக்கம்:
- நம்முடைய வாழ்க்கை போராட்டமுள்ள ஒரு வாழ்க்கை.
- ஏன்?
- என்னுடைய மணவாளனுக்கு ஒரு எதிரி இருக்கிறான்.
- அவருக்கு எதிரி என்றால் எனக்கும் எதிரி.
- இப்பேர்பட்ட பெருமதியான நான், பெருமதியை காத்து கொள்ள வேண்டுமென்றால் நாம் நம் வாழ்க்கையில் போராட வேண்டும்.
- கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு மலர் பாதை அல்ல,
- முட்கள் நிறைந்த பாதை.
- ஒடுக்கமான பாதை.
(12) காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
-எண்ணாகமம் 13 : 15
வேவுக்காரரின் பெயர்: கூவேல்
அர்த்தம்: தேவனின் மீட்பு
விளக்கம்:
- இது கடைசி பெயரில் போடப்பட்டுள்ளது. ஏனென்றால் நம்முடைய இறுதியான மீட்பு ஆரம்பித்து இருக்கிறது.
- நம்முடைய கடைசி நெருங்கி விட்டது.
- அங்கே தேவன் நம்மை மீட்க வந்தார்.
- தேவன் சபையை எடுத்துக் கொள்ளப் போகிறார்.
- அது தான் நம்முடைய எதிர்பார்ப்பு/நம்பிக்கை.
அப்பாவின் பெயர்: மாகி
அர்த்தம்: குறைக்கவும்
விளக்கம்:
- எதை குறைக்க வேண்டும்?
- உலகத்தின் இச்சை/ஈர்ப்பு நமக்குள்ளே குறைய வேண்டும்.
- ஏனென்றால் வருகை நெருங்கிவிட்டது.
- இப்போது நிறைய சபைகளுக்குள் உலகம் வந்து இருக்கிறது.
கோத்திரத்தின் பெயர்: காத்
அர்த்தம்: நீங்கள் அதிர்ஷ்டமானவர்கள்
விளக்கம்:
- இறுதியாக தேவன் சொல்கிறார், நீங்கள் அதிர்ஷ்டமானவர்கள்.
Comments
Post a Comment