புதிய ஏற்பாட்டு ஆலயங்கள்

 புதிய ஏற்பாட்டின் ஆலயம்:


பரிசுத்த ஆவியானவரின் ஆலயம்
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
 -1 கொரி 6 : 19
  • கிறிஸ்தவர்களாகிய நம்முடைய சரீரங்கள்.
  • ஒவ்வொரு தனிக் கிறிஸ்தவனுடைய சரீரம்.
இயேசுவானவரின் ஆலயம்:
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
 -மத்தேயு 18 : 20
  • வேதக்காலத்தில் நடுவிலே இருக்கிறவர் தான் தலைவர்.
  • இயேசுவானவர் இதைச் சொல்லுகிறார்.
  • இரண்டு, மூன்று பேர் கூடுவதை 
எபிரேய மொழியில் Knesset 
கிரேக்க மொழியில் synago-geh 
ஆங்கில மொழியில் synagogue 
தமிழ் மொழியில் ஜெப ஆலயம்
  • பரிசுத்த ஆவியானவரின் ஆலயங்கள் இரண்டாவது, மூன்றாவது இயேசுவின் நாமத்தில் கூடும் போது, இயேசுவானவரின் ஆலயம். எ.கா வீட்டுக் கூட்டம், ஜெபக் கூட்டம், பெண்கள் கூட்டம், வாலிபர்கள் கூட்டம், உபவாச கூட்டம், முழு இரவு ஜெபக் கூட்டம்
பிதாவின் ஆலயம்:
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
 -1 கொரி 3 : 16
  • நீங்கள் என்று பண்மையில் குறிப்பிடப்படுகிறது.
  • தேவன் என்று குறிப்பிடப்படுவது பிதா.
  • இங்கு பவுல் கொரிந்துவிலே இருக்கிற சபையை பார்த்து பேசுகிறார்.
  • சபை.
கிரேக்க மொழியில் Ecclesia
Ec- வெளியே இருந்து 
Clesia - வந்து ஒன்று சேருவது.
  • Knesset ல் உள்ளவர்கள் எல்லாம் புறப்பட்டு வெளியே வந்து பிரமாண்டமாக சேர்ந்து ஆண்டவரை ஆராதிப்பது தான் Ecclesia (சபை).
முடிவுரை:
  • இந்த மூன்றுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். 
  • அப்போது தான் நாம் முழுமையான புதிய ஏற்பாட்டு ஆலயமாக செயல்பட முடியும். 
  • ஏனென்றால் புதிய ஏற்பாட்டில் தேவன் கைகளால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம் பண்ணுவதில்லை. சபை வேறு, சபை கட்டிடம் வேறு. 
பழைய ஏற்பாட்டு தேவாலயத்துக்குள் உடன்படிக்கைப் பெட்டி இருப்பது போல,
புதிய ஏற்பாட்டு ஆலயமாகிய நம் இருதயத்துக்குள் புதிய உடன்படிக்கையின் வார்த்தையாகிய வேதம் இருப்பதாக. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4