யோபு - part 5

கடைசியாக ஒரு ஆள்:
  • யோபு இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு 140 வருஷம் உயிர் வாழ்ந்தார். 
  • பிசாசு unfair game விளையாடும் போது, யோபுவால் fair game விளையாடி அவனை ஜெயிக்க முடியவில்லை. 
  • எனவே, challenge செய்த ஆண்டவர், கடைசி நேரத்தில் ஒரு ஆளை இறக்குகிறார். 
யோபு 32:1 விளக்கம்:
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
 -யோபு 32 : 1
  • அந்த 3 பேரும் என்ன நோக்கத்தோடு விளையாடினார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றியாச்சு. 
யோபு 32:2 விளக்கம்:
அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது, யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
 -யோபு 32 : 2
  • இந்த எலிகூ இவ்வளவு நேரம் எங்கு இருந்தாரு.
  • Conversation தொடங்கினதில் இருந்து அங்கு தான் இருக்கிறார். 
  • Reserve in foot ball game - example. 
யோபு 32:3 விளக்கம்:
கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
 -யோபு 32 : 3

எலிகூவுக்கு 3 கோபம் மூண்டது. 
1) situation ஐ பார்த்து
2) யோபு பேசினதை பார்த்து
3) யோபுவின் கூட்டாளிகள் பேசினதைப் பார்த்து கோபம். 

யோபு 32:6,7 விளக்கம்:
ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
 -யோபு 32 : 6

முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
 -யோபு 32 : 7
  • வயது சென்றவர்கள் அல்ல. 
  • நீங்கள் first ல இருந்து விளையாடுறீங்க. 
  • நான் late ஆ வந்தேன். 
  • நான் game கு புதுசு. 
  • Cynical irony. 
Cynical irony என்றால் என்ன?
  • எப்படி உலகத்தின் ஞானி கள்ளத்தனமான பண்ண தனக்காக மக்களை சேர்த்து கொண்டான் என்று ஒரு உவமையை வேதத்தில் பார்க்கிறோம். 
  • ராஜாகிட்ட வாங்கின கடனை குறைத்து எழுத சொல்லுகிறார். நீங்களும் ஜனங்களை சம்பாதியுங்கள். 
  • நீங்க பரலோகம் போகும் போது அவர்கள் உங்களை வரவேற்பார்கள் என்று சொல்லுகிறார். 
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
 -லூக்கா 16 : 9
  • இது தான் Cynical irony. 
  • முரணா, கிண்டலாக பேசுறது. 
  • நீங்களும் உலகத்தார் போல, உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். 
  • அப்போ நித்திய வீட்ல எல்லாரும் உங்கள வாங்க வாங்க னு வரவேற்பாங்களா என்ன? என்று கிண்டலாக சொல்லுகிறார். 
  • அது என்ன சொல்லுதோ, அதற்கு முற்றிலும் முரணானது தான் இந்த cynical irony. 
யோபு 32:8-9 விளக்கம்:
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
 -யோபு 32 : 8

பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
 -யோபு 32 : 9
  • நீங்கள் எல்லாம் இவ்வளவு நேரம் பேசியும் எதுவும் ஞானமாக பேசவில்லையே!
  • சர்வவல்லவரை பற்றி பேசுகிறார். 
யோபு 32:10 விளக்கம்:
ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
 -யோபு 32 : 10
  • தயவு செய்து என்று எல்லாம் சொல்லவில்லை.
  • Authoritative ஆக சொல்லுறாரு. 
யோபு 32:11 விளக்கம்:
இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
 -யோபு 32 : 11
  • நீங்கள் எல்லாம் goal போட்டு முடிக்கும் வரைக்கும் நான் காத்திருந்தேன். 
  • இவரு முதல்ல இருந்து எல்லாத்தையும் கேட்டுகிட்டு தான் இருக்காரு. 
யோபு 32:12 விளக்கம்:
நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
 -யோபு 32 : 12
  • அந்த ஆளுடைய வேதனைக்கேற்ப பேச உங்களில் ஒருவருக்கும் அறிவில்லை என்கிறார். 
எலிகூ அதிகாரத்தோடு பேசுகிறார்:
  • அந்த 3 நண்பர்களும் ஒரு தடவை கூட யோபுவே என்று சொல்லி பேசவில்லை. 
  • ஆனால் எலிகூ, யோபுவே என்று சொல்லுகிறார். 
1) யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
 -யோபு 33 : 1

2) யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
 -யோபு 33 : 31
  • You shut up and listen to me என்று சொல்லுகிறார்.
3) யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
 -யோபு 37 : 14
  • யோபு மாறுதரமாக ஒன்றும் பேசவில்லை. 
Who is எலிகூ?

அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது, யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
 -யோபு 32 : 2

Job 32:2 Then was kindled the wrath of Elihu the son of Barachel the Buzite, of the kindred of Ram: against Job was his wrath kindled, because he justified himself rather than God.

ராமின் வம்சத்தானான (kindred of Ram)
பூசியனாகிய (the Buzite)
பரகெயேலின் குமாரன் (Barachel)
  • ஆபிரகாமுக்கு பிறகு வருகிற பெயர்களோடு இதை ஒப்பிடக்கூடாது. 
  • ஏனென்றால், இது ஆபிரகாமுக்கு 500 வருடத்திற்கு முன்பு நடக்கிறவைகள். 
  • கி.மு.2500 ல் ராம் என்ற ஒரு ஆள் இருக்கவே இல்லை.
  • ஆரானின் மகன் ராம் என்ற தான் கூறப்பட்டுள்ளது. 
  • பூஸ் என்று ஒரு இடமும் அந்த நேரத்தில் இல்லை.
  • அப்போ இது என்ன? 
Meanings:
  • ராம் என்றால் உன்னதம் (highest, greatest, exalted)
  • பூஸ் என்றால் கேவலப்படுத்தப்பட்ட, அவமதிக்கப்பட்ட (contempt)
  • பரகெயேல் என்றால் தேவ ஆசீர்வாதம் (God blesses)
Consolidate:
  • உன்னத வம்சத்தை சேர்ந்தவர். 
  • தேவன் ஆசீர்வாதத்தைப் பெற்ற தேவனுடைய மகன்.
  • ஆனால் கேவலமான இடத்தில் வாழ்பவர். 
  • இது மனிதனாக வந்த இயேசுவுக்கு மாத்திரமே பொருந்தும். 
  • வார்த்தையானவரே அந்த எலிகூ. 
Christophany :
  • பழைய ஏற்பாட்டில் இயேசுவானவர் காணப்படுகிற சமயங்கள்.
எலிகூ in Hebrew:
Aleph + Lamed = El (தேவன்)
yod (Num 10) = இயேசு
Hey + vav + Aleph = Hu (அவரு தான்)
Elihu - அவரே தேவன். 
  • முதல் எழுத்து Aleph, கடைசி எழுத்து Aleph.
  • ஆதியும், அந்தமும் அவரே. (I am the beginning and the end).
  • “அவர் தான் தேவன்” என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
  • “அவர் என் தேவன்” என்று சொல்ல வேண்டுமானால் இயேசு உங்கள் வாழ்வில் வந்து இருக்க வேண்டும்.
  • El என்ற தேவனை, என் தேவன் என்று சொல்ல வேண்டுமானால் Eli என்று சொல்ல வேண்டும். (Eli, Eli lama sabacthani).
Yod:
  • எபிரேய எழுத்துக்களில் எல்லா எழுத்துக்களும் தரையில் படும். Yod என்ற எழுத்து மாத்திரம் தரையில்படாது. 
  • அதே போல
  • எபிரேய எழுத்துக்களில் எல்லா எழுத்துக்களும் மேல ஒரே மாதிரி line ல் காணப்படும். Yod என்ற எழுத்து மாத்திரம் நடுவில் காணப்படும். 
  • இயேசுவானவர் தான் நடுவில் இருந்து கொண்டு பரலோகத்தையும், பூமியையும் இணைத்துக் கொண்டிருக்கிறார். 
  • Yod வந்தால் மட்டுமே Elihu
  • இல்லையென்றால் el-hu.
  • Yod - இயேசு


4+4:
El - தேவனும் இயேசு தான். (4)
Ihu - என் தேவன் என்று அவர் சொல்வதும் இயேசு தான் (4)

எலிகூ என்ற பெயரில் வருகிற ஒவ்வொரு எபிரேய எழுத்துக்களின் அர்த்தம்:
  • Aleph - தேவனைக் குறிக்கும். 
  • Hey - தேவன் தம்முடைய வல்லமையை பரிசுத்த ஆவியானவர் மூலமாக காண்பிக்கிறார். (அப் 1:8)
Hey எழுத்து:
  • மற்ற எல்லா மிருகங்களையும் ஆணும், பெண்ணுமாக வார்த்தையினால் ஆண்டவர் படைத்தார். 
  • மனிதனை மட்டும் தான் மண்ணினாலே உருவாக்கி தன் ஜீவசுவாசத்தை ஊதி படைத்தார்.
ஊதுவது 3 வகையாக ஊதலாம். 
1) உதடுகளால் ஊதலாம்
2) வாயால் ஊதலாம்
3) தொண்டையால் ஊதலாம்
  • தொண்டையினால் ஊதினால் Hey என்ற உச்சரிப்பே வரும். 
  • தேவன் ஊதும் போது தேவ வல்லமை கொடுக்கப்பட்டது. 
  • தேவ வல்லமை அவனுக்குள் போனதால் தான் அவன் ஜீவ ஆத்துமா ஆனான். 
  • ஆதி 17 ல் ஆபிராம் என்பவரின் பெயர் ஆபிரகாம் ஆக மாற்றப்படவில்லை.
  • அந்த பெயருக்குள் Hey என்ற தேவ வல்லமையை கொண்டு வருகிறார். 
  • அவர் ஆபிரகாம் ஆனார். 
  • வேதத்தில் ஒரே ஒருவர் தான் “ஊதி நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். 
  • அவர் தான் இயேசு. 
  • அதனால் இயேசு ஊதினதை போல ஊழயக்காரர்கள் செய்தால் அவர்கள் அந்திக்கிறிஸ்துக்கள். 
Vav
  • கூடார ஆணியைக் குறிக்கிறது. 
  • மனிதனைக் குறிக்கிறது. 
  • இயேசு என்ற மனிதனுக்கு மாத்திரம் தான் கையில் ஆணி அடித்தார்கள். 
  • நடுவில் வருகிற yod தேவனாகிய இயேசுவைக் காட்டுகிறது. 
  • அந்த கடைசி வார்த்தையில் திரித்துவம் உள்ளது. 
  • தேவன் திரித்துவர் என்று இந்தப் பெயரில் சொல்லப்படுகிறது. 
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
 -யோபு 32 : 18
  • இயேசுவானவராலே மாத்திரமே இப்படி சொல்ல முடியும். 
இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புதுரசத்தைப் போலிருக்கிறது.
 -யோபு 32 : 19
  • புதிய ஏற்பாட்டிலும் நாம் புது துருத்திகளை பற்றி இயேசு பேசுவதைப் பார்க்கிறோம். 
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
 -யோபு 33 : 4
  • மனிதனாகிய வந்த இயேசுவை உண்டாக்கினவர் பரிசுத்த ஆவியானவர் என்று தீர்க்கத்தரிசனமாக இங்கு சொல்கிறார். 
  • மரியாளிடம் தேவதூதன் பரிசுத்த ஆவியினால் நீ கர்ப்பவதி ஆவாய் என்று சொன்னான். 
தேவன் வீண்வார்த்தைக்குச் செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.
 -யோபு 35 : 13
  • எலிகூ பேசினதற்கு பிறகு யோபு மறுமொழி சொல்லவும் இல்லை. 
  • யோபுவினுடைய சிநேகிதர்களும் பேசவில்லை.
  • அடுத்து தேவன் பேசுகிறார். 
  • அந்த நேரத்தில் இயேசுவின் பேச்சைக் கேட்டவர்களுக்கு இவர் கர்த்தருடைய தூதனானவர் என்று தெரிந்திருந்தது.
அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:
 -யோபு 38 : 1
  • இவ்வளவு நேரம் இயேசு பிசாசோடே தான் பேசினார்.
  • இப்போது தான் முதல்முறையாக யோபுவோடே பேசுகிறார். 
அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
 -யோபு 38 : 2
  • ஆண்டவர் யோபுவை தான் குறிப்பிடுகிறார். 
தேவன் பேசிகிற காரியங்கள்:
  • Rhetoric questions.
  • பதிலை எதிர்ப்பார்த்து கேட்கும் கேள்விகள் அல்ல.
  • நீ அப்போது இல்லவே இல்ல ன்ற பதில் அதில் இருக்கு.
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
 -யோபு 38 : 7
  • இங்கு தேவபுத்திரர் என்பது தேவ தூதர்கள் அல்ல. 
  • இது ஒரு கவிதை
  • ஆண்டவரும் கையில் நூல் பந்து வைத்தில்லை.
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
 -யோபு 38 : 8
  • சமுத்திரத்துக்கு கதவு இல்லை.
  • இது ஒரு கவிதை. 
இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும்.
 -யோபு 40 : 15

லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
 -யோபு 41 : 1
  • இது Dinosaur or dragon லாம் கிடையாது. 
கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
 -யோபு 42 : 7
  • இப்போது கடைசியாக யோபு பேசினதைக் குறித்து பேசுகிறார். 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?