யோபு - part 4
முதல் சுற்று பேச்சுக்கள்:
1) போலியான தாழ்மை - False Humility:
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
-யோபு 4 : 1
நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
-யோபு 4 : 2
- யோபு எப்படிப்பட்டவர் என்பதை 29வது அதிகாரத்தில் இருந்து நாம் கற்றுக் கொண்டோம்.
- ஆனால் எலிப்பாஸ் ஒரு போலியான தாழ்மையை காட்டுகிறார்.
- தந்திரமாக பேசுகிறார்.
- நீங்கள் எவ்வளவு பெரிய ஆள், உங்களிடம் நாங்கள் எப்படி பேசுவது என்பது போன்ற தந்திர வார்த்தைகள்.
- ஒரு போலியான தாழ்மையை காட்டி, கேட்க தேவையில்லாதவனையும் கேட்க வைப்பது.
- இப்படித் தான் கள்ளத் தீர்க்கத்தரிசிகள் வருவார்கள்.
2) போலியான முகஸ்துதி - False Praising :
இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
-யோபு 4 : 3
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
-யோபு 4 : 4
- நீங்கள் லேசுபட்ட ஆளா! அநேகரை திடப்படுத்தினீரே.
- விழுகிறவனை காப்பாற்றி, தள்ளாடுகிறவனுக்கும் கைகொடுத்தீரே!
3) போலியான ஆவிக்குரிய நிலை - False Spirituality:
- யோபு 4:12-16
- இந்த எலிப்பாஸ் யோபுவிடம் ஒரு theory ஐ முன் வைக்கிறான்.
- நீ இந்த நிலைமைக்கு ஆளானதற்கு காரணம் உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இருக்கிற ஒரு பலவீனம் தான் என்று.
4) போலியான குற்றச்சாட்டு - False Allegations / Criticism:
- யோபு 4 & 5 அதிகாரம்.
- யோபுவே நீ மாத்திரம் ஆண்டவரோடு தொடர்ச்சியாக நல்ல இருந்தீனா இந்த நிலைமை உனக்கு வந்து இருக்காது என்று எலீப்பாஸ் சொல்லுகிறான்.
- இந்த எலீப்பாஸின் ஆவி, நம்மை குற்றப்படுத்தும்.
- அந்த ஏதோ தப்பு செய்து இருக்கிறாய்,
- அதனால் தான் உனக்கு இப்படி நேரந்தது என்று நம்மை நினைக்க வைப்பான்.
- Spirit of Condemnation.
- Injection of Guilt - குற்ற உணர்வு என்கிற ஊசி.
- போலியான குற்ற உணர்வை விதைப்பார்கள்.
தேவனை தூஷித்து ஜீவனை விடு - எபிரேய மொழியின் உண்மையான விளக்கம்:
- நீ இன்னும் தேவன் மேல நம்பிக்கை வச்சுருக்கியே, அத ஒரு பக்கம் ஓரமா வச்சுட்டு ஜீவன விடு.
- யோபுவின் மனைவி யாரையுமே குற்றப்படுத்தவில்லை.
யோபு எலிப்பாஸ்-கு சொன்ன பதில்:
- அதிகாரம் 6 & 7.
- யோபுக்குள் எலிப்பாஸ்-ன் பேச்சு ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
- மத அந்திக்கிறிஸ்து பேசி முடித்து விட்டார்.
யோபு 8:
- பில்தாத் - பொருளாதார அந்திக்கிறிஸ்து பேச தொடங்குகிறார்.
- எலிப்பாஸை கொஞ்சம் யோபு திட்டி விடுகிறார்.
- அதற்கு பில்தாத் யோபுவை திட்டுகிறார்.
- அவர் சொன்னதை நீ மறுத்து பேசாதனு
யோபு 8:8-10
- Consultation
- ஒரு வியாபாரம் செய்யும் போது அந்த field ல இருக்கிற ஒருத்தர் கிட்ட அறிவுரை வாங்கி நீங்கள் வியாபாரம் செய்வீர்கள்.
- இப்படி தான் பில்தாத் யோபு கிட்ட சொல்றாரு.
- நீ உனக்கு மேல இருக்கிறவங்க கிட்ட ஆலோசனை எடு னு.
- தேவனிடத்தில் இருந்து consultation எடுக்குற ஒரு ஆளுக்கு இவர் புத்தி சொல்லுகிறார்.
யோபு சரிந்ததிற்கான வசன ஆதாரங்கள்:
1) ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
-யோபு 9 : 2
- ஆம். நீங்க சொல்றதும் correct தானு ஒப்புக் கொள்கிறார்.
2) இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
-யோபு 9 : 12
- ஆண்டவர் தான் எல்லாவற்றையும் பறித்து கொண்டார் னு ஒப்பு கொள்கிறார். ஆனால் உண்மையில் ஆண்டவர் பறிக்கவில்லையே
3) நான் கெஞ்ச. அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
-யோபு 9 : 16
- நம்ப மாட்டேன் என்று சொல்லுகிறார்.
4) அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
-யோபு 9 : 17
- புசலினால் - புயலினால் - tempest
- யோபு ஆண்டவரை குறை சொல்லி கொண்டு இருக்கிறார்.
5) நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
-யோபு 9 : 18
- ஆண்டவர் தான் என்னை கசப்பில் நிரப்புகிறார் என்கிறார்.
6) பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
-யோபு 9 : 19
- ஒரு பயங்கரமான விஷயத்தை சொல்லுகிறார். பலத்தை பார்த்தால் அவர் தான் பலத்தவர்.
- ஆனால் நியாயத்தை பார்த்தால் என்னிடம் தான் நியாயம் இருக்கிறது என்கிறார்.
7) என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
-யோபு 10 : 1
- அதாவது உயிரையே வெறுக்கிறார்.
8) மாம்சக்கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
-யோபு 10 : 4
- ஆண்டவரே இப்போது நான் உங்கள் கண்ணை பற்றியே சந்தேகப்படுகிறேன் என்கிறார்.
- இப்போ நீங்க தேவனா பார்க்கிறதில்ல போல.
- மனுஷனா பார்க்க தொடங்கிட்டீங்களோ?
9) நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
-யோபு 10 : 7
- தன்னைத் தானே நீதிமான் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். (Self Righteous)
10) உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
-யோபு 10 : 8
- நீங்கள் தான் என்னை படைத்தீர்.
- நீங்கள் தான் எல்லாவற்றையும் எனக்கு கொடுத்தீர்.
- கடைசியில் நீங்களே எல்லாவற்றையும் நிர்மூலமாக்குகிறீர் என்று சொல்கிறார்.
11) சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
-யோபு 10 : 16
- ஒரு சிங்கம் மாதிரி என்னை வேட்டையாடி நாசம் பண்ணி விட்டீர் என்ற ஆண்டவரை பார்த்து சொல்கிறார்.
12) நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
-யோபு 10 : 18
- என்னை பிறக்க வைத்ததே அநியாயம்.
- கருவிலேயே நான் செத்து போயிருந்தால் நல்லா இருந்திருக்கும்.
13) நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.
-யோபு 10 : 22
- God, leave me alone என்று சொல்கிறார்.
சோப்பார் - அரசியல் அந்திக்கிறிஸ்து:
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
-யோபு 11 : 3
- ஒருவர் பதவியில் ஆசைப்படுவது தான் அரசியல்.
- மற்ற வேட்பாளரை பற்றி கிண்டலாக பேசுவார்கள் (Sarcasm).
- சோப்பார் யோபுவை பார்த்து Sarcastic commentary கொடுக்குறாரு.
- நீ பேசுறத பார்த்தா வீம்பு வார்த்தை பேசுற மாதிரி இருக்கு.
- நீ சொல்றது joke மாதிரி இருக்கு என்கிறார்.
பயங்கரமான விதையை விதைக்கிறான்:
உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
-யோபு 11 : 6
- நீ இவ்வளவு வேதனைப்படுறீயே!
- உனக்கு வந்த வேதனை குறைவு.
- போதிய அளவு தண்டனை உனக்கு வரல என்கிறான்.
- இன்னும் அதிகமான தண்டனை உனக்கு கிடைச்சுருக்கணும் என்கிறார்.
யோபு 12-14:
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
-யோபு 14 : 1
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
-யோபு 14 : 2
- யோபு பேசுகிறார்.
- தன்னைப் பற்றி பேசுகிறார்.
- நான் சீக்கிரம் செத்து போயிடுவேன்.
- அந்த குறுகிய வாழ்க்கையிலும் எனக்கு சஞ்சலத்த அதிகமாய் இருக்கிறது என்கிறார்.
யோபு 15 - 21:
- Round 2
நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
-யோபு 15 : 4
தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
-யோபு 15 : 13
- உன்னுடைய வாழ்க்கையில் ஜெபம் போதாது.
- Spiritual guilt ஐ கொண்டு வருகிறான்.
- தேவனுக்கு விரோதமாக உன்னுடைய ஆவி செயல்படுகிறது என்கிறான்.
- ஆவியை எழுப்பாத - don’t resist
- தேவனுக்கு விரோதமாக உன்னுடைய ஆவியை எழுப்பாத.
யோபு 16-17 - யோபு பேசுகிறார்:
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
-யோபு 16 : 11
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
-யோபு 16 : 12
என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
-யோபு 17 : 1
யோபு 17:11-16:
- இருளின் பிள்ளை மாதிரி பேசுகிறார்.
- Spiritual ஆ நல்லா இருந்த ஒரு ஆள, இந்த spiritual பிசாசு எலிப்பாஸ் இப்படிலாம் பேச வைக்குது.
Round 2 - பில்தாத்:
அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
-யோபு 18 : 15
- பில்தாத்
- பில் என்ற சுபிட்சத்தின் தெய்வத்தின் பேரைக் கொண்டவன்.
பொருளாதார அந்திக் கிறிஸ்து. - Ledger ல balance nil.
- Commercially you are completely out.
- கொஞ்சம் தஞ்சம் நம்பிக்கை இருந்ததும் போய்டுச்சு.
யோபு 19 - யோபு உடைந்து போய் விட்டார்:
தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
-யோபு 19 : 6
நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
-யோபு 19 : 8
அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
-யோபு 19 : 10
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
-யோபு 19 : 13
என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள். என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.
-யோபு 19 : 14
என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.
-யோபு 19 : 15
- இவ்வளவுக்கும் காரணம் ஆண்டவர் என்கிறார்.
யோபு 20 - சோப்பார்l - last speech:
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம் என்றான்.
-யோபு 20 : 29
யோபு 22 - எலிப்பாஸ் - last speech:
முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
-யோபு 22 : 6
விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.
-யோபு 22 : 7
விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
-யோபு 22 : 9
- ஆனால் யோபு அப்படிப்பட்டவர் இல்லை. எல்லோருக்கும் உதவி செய்தார்.
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
-யோபு 22 : 23
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
-யோபு 22 : 27
- எலிப்பாஸ் கு யோபுவினுடைய தேவனை தெரியவே தெரியாது. ஆனால் அவன் over ஆ பேசுறான்.
- False prophecy
யோபு 23, 24:
- யோபு கொஞ்சம் தெளிவுக்கு வந்து moderate ஆ பேசுறாரு.
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
-யோபு 23 : 3
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
-யோபு 23 : 4
- அப்படிப்பட்ட யோபுவையே பிசாசு தான் அனுப்பிய 3 நபர்களால் தள்ளாட வைத்தான்.
- ஆனால் அதோடு கதை முடியவில்லை.
Comments
Post a Comment