யோபு - part 3
பிசாசின் தந்திரங்கள் (Techniques of Devil):
ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில்,
-யோபு 1 : 14
- பிசாசு நம்மை எப்படித் தாக்குவான் என்று பார்க்கலாம்.
- உழுவது பயிர் செய்வதற்கு
- பயிர் செய்வது சாப்பிடுவதற்கு
- சாப்பிடுவது - அத்தியாவசியத் தேவை.
சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
-யோபு 1 : 15
- சபேயர் பயிர்கள் மேல் விழுந்து, அதை சாய்த்து, அதை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்.
- யோபுவின் வேலையாட்களையும் வெட்டிப் போட்டார்கள்.
- ஊத்ஸ் தேசம் , அரேபியாவின் வடக்குப் பகுதியில் இருக்கிறது.
- ஆனால் அரேபியாவின் தெற்குப் பகுதியில் சபேயர் இருக்கிறார்கள்.
- முதல் அடி சாப்பாட்டிற்கு விழும்.
- அதாவது நிம்மதியாக சாப்பிட முடியாது.
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
-யோபு 1 : 16
- ஆடுகள் வருமானத்திற்காக வளர்ப்பார்கள்.
- எனவே, இரண்டாவது அடி வருமானத்திற்கு விழுகிறது.
- அது தேவனுடைய அக்கினி லாம் கிடையாது.
- அது எரிகல் விழுந்தது.
- எரிகற்கள்(meteorites )வானத்தில் உலாவும்.
- அது ozone layer ல் பட்டவுடன், அந்த oxygen உடன் சேர்ந்து, எரிய ஆரம்பிக்கும்.
- அது அப்படியே பூமி நோக்கி வரும்.
- ஆனால் பூமியை வந்தடையும் முன்னமே, சாம்பலாகி விடும்.
Crater hole:
- சில நேரம் பிரம்மாண்டமான எரிகற்கள் வரும் போது, அது பூமியை வந்தடையும்
- அப்போது அந்த இடத்தில் ஒரு குழி(Crater) விழும்.
- இரண்டாவது வருமானத்திற்கு விழும்.
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
-யோபு 1 : 17
- ஊத்ஸ் தேசத்திற்கு கீழ் அராபிய பாலைவனம்.
- ஊத்ஸ் தேசத்திற்கு மேல் நெகேவ், யூதேயா, பாரான் வனாந்திரம் லாம் இருக்கிறது.
- மேற்கு பக்கத்தில் சீன், ஷீன், சீனாய் வனாந்தரம் இருக்கிறது.
- வனாந்தரங்கள் சூழ உள்ள தேசத்தில் வாழ்கிறவர்கள், பயணம் பண்ணுகிற வாகனம் ஒட்டகம்.
- மூன்றாவது அடி போக்குவரத்திற்கு விழும்.
- ஒட்டகத்திற்கு தான் பாலைவனக் கப்பல் என்று பெயர்.
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,
-யோபு 1 : 18
- அடுத்தது அவர் 10 பிள்ளைகளும் ஒரே நேரத்தில் செத்துப் போனார்கள்.
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
-யோபு 1 : 20
- ஒரு பையத்தியக்காரன் போல உடைந்து, இதைச் செய்கிறார்.
இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
-யோபு 1 : 22
- கர்த்தர் யோபு மேல் வைத்த நம்பிக்கை இது தான்.
இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
-யோபு 9 : 12
நான் கெஞ்ச. அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
-யோபு 9 : 16
- இது உண்மையல்ல.
- ஆண்டவரைக் குற்றம் சாட்டுகிறார்
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
-யோபு 2 : 3
- காரணமில்லாமல், நான் அவன் மேல் வைத்த பாதுகாப்பை எடுக்க வைத்தாய் நீ என்கிறார்.
- ஆனாலும் இன்னும் அவன் என் பக்கம் நிற்கிறான் என்கிறார்.
யோபு 3:7-10:
- சாத்தான் யோபுவின் சரீரத்தை தொடுகிறதையும், அவன் வியாதிப்படுகிறதையும் காண்கிறோம்.
- பின்பு அவன் மனைவி யோபுவுடம் என்னக் கூறுகிறாள் என்பதையும் பார்க்கிறோம்.
யோபு 3:12-13
- 7 நாட்கள் யோபுவுடன் தங்கினார்கள் அந்த 3 நண்பர்கள்.
- அவர்கள் நல்ல நண்பர்கள் அல்ல.
- அவர்கள் அந்திகிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவர்கள்.
- பிசாசின் Agents.
- நம்மளோட சேர்ந்து வேதனைப்படுகிற மாதிரி காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் உண்மையானவர்கள் அல்ல.
யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
-யோபு 2 : 11
- இந்த 3 நண்பர்களும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல.
- உண்மையாகவே, யோபுவை பார்க்க வந்த நண்பர்கள்.
- எப்படி யோபுவுடைய பெயர் நமக்கு தெரியாதோ, அதேப் போல இந்த மூன்று பேர்களின் பெயரும் நமக்கு தெரியாது.
எலிப்பாஸ் - தேமான்: (Eliphaz - Teman)
- இது ஒரு எபிரேயப்பெயர்.
- எபிரேயர்களே இல்லாத காலத்தில், எப்படி எபிரேயப்பெயர் வந்தது.
- யோபு இதை எழுதும் போது காரணப்பெயர்களை குறிப்பிட்டு இருப்பார்.
- அது பிற்காலத்தில் எழுதப்படும் போது எபிரேய மொழியில் மாற்றப்பட்டு இருக்கும்.
- A Descriptive nouns describe them, there might be known what they represent
- El என்றால் தேவன்
- Eli என்றால் என் தேவன்
- Phaz என்றால் தூய்மையான தங்கம்.
- My God is pure Gold.
- எகிப்தியர்கள் Opooz என்ற மாட்டு சாமியை முன்னால் கொண்டு செல்வார்கள்.
- அதாவது யுத்தத்திற்குப் போகும் போது, தூரப் பிரயாணம், வேட்டைக்கு போகும் போது முன்னால் கொண்டு செல்வார்கள்.
- அதை தான் இந்து மதத்தில் நந்தி என வைத்து உள்ளார்கள்.
- நந்தி என்றால் மாடு.
- யாத் 32 ல் மக்கள் பொன் கன்றுகுட்டியை செய்து வைத்து, இவைகள் தான் நம்மை எகிப்தில் இருந்து கூட்டிக் கொண்டு வந்த தெய்வம், நம்மைக் கூட்டிக் கொண்டு போகப் போகிற தெய்வம் என ஆரோனிடம் சொன்னார்கள்.
- யெரொபெயாம் காலத்தில் அவன் அதே போல ஒரு கன்றுக்குட்டியை தாணிலும், பெத்தேலிலும் செய்து வைத்து உங்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்த தெய்வங்கள் இவை என மக்களிடம் சொல்கிறான்.
- தேவன் இது தான் எனக் காண்பித்தார்கள்.
- விக்கிரக ஆராதனை - Idol Worship
- இது ஒரு ஆவிக்குரியப் பிரச்சனை.
- எலிப்பாஸ் என்பவன் தான் மத அந்திக்கிறிஸ்து.
- Religious Antichrist
- Antichrist is against Christ, and also you substitute something in place of Christ.
- எந்த ஒரு மனிதனும் ஆபத்துக் காலத்தில் ஆண்டவரைத் தேடுவான்.
- He gives 3 speech
- ஆவிக்குரிய அந்திக் கிறிஸ்துவாக செயல்படுகிறான்.
- தேமான் என்பது ஒரு ஊர் கிடையாது.
- பிற்காலத்தில் தேமான் என்கிற ஒரு ஊர் வந்தது.
- அது தான் ஏதோம்.
- பிற்காலத்தில் அந்த இடத்திற்கு ஏதோமியர்கள் வந்தார்கள்.
- ஆனால் யோபுவின் காலத்தில் அங்கு ஏதோமியர்கள் வாழவில்லை.
- தேமான் என்றால் தெற்கிலிருந்து (from the south) என்று அர்த்தம்.
- யோபுவிற்கு முதல் முதல் வந்த attack தெற்கில் இருந்து வந்தது.
- அதாவது சபேயர் தெற்கில் இருந்து வந்தார்கள்.
- Spiritually, கீழ இருந்து என்பது பிசாசைக் குறிக்கிறது.
- இவர் ஆவிக்குரிய ஆலோசனை யோபுவிற்கு கொடுக்கிறார்.
யோபு 4:12-16:
- தனக்கு தரிசனம் கிடைத்ததாக கதை விடுகிறார்.
- Don’t be fooled by stupid Eliphaz’es.
பில்தாத் - சூகியன்: (Bildad - Shuah)
- இதுவும் ஒரு எபிரேயப்பெயர்.
- He gives 3 speech
- Commercial Antichrist
- இவர் தான் பொருளாதார அந்திக்கிறிஸ்து.
- Meaning - Pagal has loved
- பாகால் நம்மை நேசித்து விட்டான் என்று அர்த்தம்.
- பாகால் செழிப்பின் தெய்வம்.
- Prosperity is a commercial term.
- இப்போது நிறைய மக்களை செழிப்பின் உபதேசம் தாக்கி கொண்டு இருக்கிறது.
- Shuah என்றால் அமிழ்ந்து போவது ( Sinks down)
- இவர் பொருளாதார ஆலோசனை யோபுக்கு கொடுக்கிறார்.
சோப்பார் - நாகமாத்தியன்: (Zophar - Nammah)
- இதுவும் ஒரு எபிரேயப்பெயர்.
- He gives 2 speech
- இவர்தான் அரசியல் அந்திகிறிஸ்து (political Antichrist)
- சோப்பார் என்றால் குதிக்கிறது.
- Nammah என்றால் அழகு, pleasant, beautiful
- இன்றைக்கு சபைக்குள் politics வந்து விட்டது.
- அரசியல் ஒரு சாக்கடை. ஆனால் பார்ப்பதற்கு அழகு போல தெரியும்.
- அரசியல்வாதிகளுக்கு தேவையானது நடந்தது என்றால் அமைதியாக இருந்து விடுவார்கள்.
- அதனால் தான் 2 speeches
Comments
Post a Comment