யோபு - part 1
யோபு
- யோபு என்பதன் எபிரேயப் பதம் யோவ் (Yov).
- இந்தப் பெயரின் அர்த்தம் “உபத்திரவம்”.
- இது அவருடைய சொந்தப் பெயர் அல்ல.
- அனால் அவருடைய சொந்தப் பெயர் என்ன என்பது தெரியவில்லை.
- வேதத்தில் எழுதப்பட்ட முதல் புத்தகம் ‘யோபு’.
ஆதார வசனம்:
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில்வரையப்பட்டு,
-யோபு 19 : 23
அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால்நலமாயிருக்கும்.
-யோபு 19 : 24
- யோபு தன்னுடைய வார்த்தை எழுதப்பட வேண்டும் என்று விரும்பினார்.
- அந்த காலத்தில் இருந்த எழுத்து வகைகளை சொல்லி சொல்லுகிறார்.
- யோபுவிற்கு இருந்த வசதிக்கு, பிற்காலத்தில் அவரே அவருடைய கதையை எழுதி இருக்கலாம்.
- இல்லை, யாரையாவது வைத்து எழுதி இருக்கலாம்.
- அப்படி எழுதி இருந்தால், அவர் மோசேக்கு முன்பு வாழ்ந்து இருக்க வேண்டும்.
- ஏனென்றால் முதன்முதலில் 10 கற்கனைகளை எபிரேய மொழியில் எழுதினது மோசே.
- எனவே, அந்த யோபு புத்தகம் முதன்முதலில் எபிரேய மொழியி்ல் எழுதப்பட்டு இருக்க வாய்ப்பில்லை.
இரு வகையான யூதர்களின் புத்தகம்:
1) தல்முட் பவிலி (Talmud Bavli)
2) தல்முட் எருஷலாமி (Talmud Yerushalmi)
தல்முட் பவிலி:
- இது ஒரு பாபிலோனிய தல்முட்.
- யூதர்கள் சிறைப்பட்டு பாபிலோனுக்கு போனதுக்கு பிறகு உருவாக்கப்பட்டது.
- இது நமக்கு தேவையில்லை.
தல்முட் எருஷலாமி:
மெகிதோ பள்ளத்தாக்கு:
- இது தான் உண்மையான தல்முட்.
- இதில் ஒரு பகுதி தான் பாவா-பத்ரா என்பதாகும். (Section Bava Bathra)
- இதில் 14 வது வாக்கியத்தின் இரண்டாவது பகுதி (14 b)
- மோசே தான் முதன்முதலில் யோபு புத்தகத்தை எபிரேய மொழிக்கு மொழிப்பெயர்த்தார் என்று இந்த பகுதி சொல்கின்றது.
- எகிப்திய மொழி
- மீதியானிய மொழி
மீதியானியர்கள்:
- ஒரு பிரபலமான மொழி கிடையாது.
- இந்த மொழி பேசியவர்கள் சீனாய் வனாந்தரத்தில் வாழ்ந்தவர்கள்.
எகிப்தியர்கள்:
- எகிப்தியர்கள் உலகத்தை ஆண்டவர்கள்.
- முதன் முதல் அறுவை சிகிச்சை (surgery) செய்தவர்கள் எகிப்தியர்கள்.
- நைல் நதி நாகரீகம் கொண்டவர்கள்.
- பிரமிட்(Pyramid) கட்டினவர்கள்.
- நிறைய எழுதுபவர்கள்.
- உலகத்தையே ஆட்சி செய்தவர்கள்.
- எனவே மோசே, யோபு புத்தகத்தை எடுத்து எகிப்திய மொழியில் மொழிப்பெயர்த்தார்.
- முதன்முதலில் யுத்தம் என்று ஒன்று நடந்தது இந்த மெகிதோ-வில் தான். (Recorded first battle)
- மெகிதோ-வில் யுத்தம் பண்ணின 2 தேசம் எகிப்தும், பாபலோனும் தான்.
- கடைசி யுத்தம் நடக்கப்போகும் இடம் இது தான்.(அர்மகெதோன்)
யோபு - பழமையான புத்தகம்:
Author Name: J. Sidlow Baxter
Book Name : Explore the Book
Quote: "Job must be the World’s Oldest Book”.
“யோபு புத்தகம்” என்பது உலகின் மிகப் பழமையான புத்தகமாக இருக்க வேண்டும்.
Aramaic Expressions:
- யோபு புத்தகத்தில் சில அராமிய எழுத்துக்கள் (Aramaic Expressions) உள்ளன.
- எபிரேய இலக்கியத்தில் நியாயாதிபதிகள் புத்தகத்தின் 5வது அதிகாரத்தில் உள்ள தெபோராளின் அந்த கவிதை தான் அதிஉன்னதமான கவிதை.
- அதிலும் நிறைய அராமிய வெளிப்பாடுகள் அங்கங்கு இருக்கிறது.
- இந்த காரணத்தால் அந்த புத்தகம் பிற்பாடு எழுதப்பட்டது என்று கருத முடியாது.
- இந்த புத்தகத்தில் ஏசாயா எழுதினது போல சில விஷயங்கள் காணப்படுகின்றன.
- கி.மு 2500 - யோபு
- கி.மு 2000 - ஆபிரகாம்
- கி.மு 1500 - மோசே
- கி.மு 1000 - சாமுவேல்
- கி.மு 700 - ஏசாயா
- யோபு தன் அனைத்து பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்த பிறகு, யோபு தேவனோடு ஐக்கியமாக இருந்ததால், யோபுவே தேவனிடம் ‘என்னுடைய கதையை நானே எழுதவா’ என்று கேட்டு இருக்கலாம்.
- தேவனுடைய ஆவியின் உதவியால் யோபுவே அவருடைய கதையை எழுதி இருக்கலாம்.
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
-2 தீமோத்தேயு 3 : 16
முதலாவது மொழிப்பெயர்ப்பு:
- யோபுவிற்கு ஒரு பார்வோன் நண்பர் இருந்தார்.
- அந்த பார்வோன் நண்பர் ‘உன்னுடைய கதையை எகிப்திய மொழியில் மொழிப்பெயர்த்துக் கொடுக்கிறாயா?’ என்று யோபுவிடம் கேட்டார்.
- யோபு தன் நண்பருக்கு எகிப்திய மொழியில் தன்னுடைய கதைய எழுதிகொடுத்தார்.
- உலகின் தலைசிறந்த நூலகம்(Library) எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா(Alexandria) என்ற இடத்தில் உள்ளது.
- கிலியோப்பேட்ரா (Cleopatra) மீது காதல் கொண்ட ஜூலியஸ் சீசர் (Julius Caesar), அவளுக்கு ஏற்கனவே மார்க் அண்டோனி (Mark Antony) என்ற ஒருவர் மேல் காதல் வந்து விட்டது என்று அறிந்து, அந்த கோபத்தில் ஜூலியஸ் சீசர் அவளுடைய பிரதான நூலகத்தை எரித்தான்.
- எனவே, மோசே எகிப்தின் இளவரசனாக இருந்த போது, அந்த நூலகத்திற்கு கண்டிப்பாக போய் இருப்பார்.
- கண்டிப்பாக யோபுவை குறித்த அந்த புத்தகத்தையும் படித்து இருப்பார்.
- மோசே எகிப்திய மொழியில் இருந்த அந்த புத்தகத்தை எபிரேய மொழியில் மொழிப்பெயர்த்தார்.
- பிற்காலத்தில் சாமுவேல், மோசேக்கு 500 வருடத்திற்கு பிறகு வந்தவர், அந்த யோபு புத்தகத்தை மோசேயினுடைய அந்த மொழிப்பெயர்ப்பை அந்த நேரத்தில் மக்கள் பயன்படுத்தின அந்த எபிரேய மொழிக்கு மொழிப்பெயர்த்தார்.
- பிறகு ஏசாயா அதை மீண்டும் மொழிப்பெயர்த்தார். (Isaiah fourth revision).
- முதலில் யோபு
- இரண்டாவது மோசே
- மூன்றாவது சாமுவேல்
- நான்காவது ஏசாயா
அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
-எசேக்கியேல் 14 : 14
- எசேக்கியேல் பாபிலோனில் யூதர்களுக்கு தீர்க்கத்தரிசனமாக உரைக்கிறார்.
- பாபிலோனில் அடிமைத்தனத்திற்குள் இருக்கும் யூதர்களே கேளுங்கள்.
- அதாவது வாழ்க்கையில் சில சூழ்நிலைகள் வரும் போதும், ஆண்டவரை விட்டு பின்வாங்கும் சூழ்நிலைகள் வந்த போதும்,
- நோவா மாத்திரம் தனி ஆளாக நின்று, தன் நீதியை காத்துக் கொண்டார்.
- தானியேல் அவ்வளவு பிரச்சனையிலும் தன்னுடைய விசுவாசத்தைக் காத்துக் கொண்டார்.
- அதே போல யோபுவும் அத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தன் ஆத்துமாவை காத்துக் கொண்டார் என்று சொல்கிறார்.
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
-யாக்கோபு 5 : 11
- புதிய ஏற்பாட்டிலும் யோபுவைக் குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது.
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
-யோபு 5 : 13
-யோபு 5 : 13
இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
-1 கொரி 3 : 19
-1 கொரி 3 : 19
தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம்என்னுடையவைகள்.
-யோபு 41 : 11
-யோபு 41 : 11
தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
-ரோமர் 11 : 35
- யோபு புத்தகம் தேவ வார்த்தை
- எகிப்திய பார்வோன்கள் தேவனாகவே எண்ணப்பட்டர்கள்.
- நைல்நதி(அப்பா) + சூரியன்(அம்மா) = பார்வோன்(மகன்)
- அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள்.
- 1st dynasty, 2nd dynasty இப்படி நிறைய சரித்திரங்கள் உண்டு.
- எகிப்தை ஆட்சி செய்தவர்களில் கடைசியாக ஆட்சி செய்தது பெண். அவள் பெயர் தான் கிலியோப்பேட்ரா.
- அதற்கு அப்புறம் எகிப்து நொறுக்கப்பட்டது, பின்பு பார்வோன் இல்லை.
- இப்போது இருக்கிற எகிப்தில் வாழ்பவர்கள் அராபியர்கள்.
4th dynasty:
- திடீரென்று Egyptologist 4வது எகிப்திய பரம்பரையில் வரும் போது (4th dynasty), அவர்கள் 3 ராஜாக்களை சந்திக்கிறார்கள்.
- Khofu மன்னன் (தாத்தா)
- Khofra மன்னன் (அப்பா)
- Mhakamure மன்னன் (மகன்)
- இவர்கள் 3 பேரும் ஆட்சி செய்த காலத்தில் எகிப்தில் விக்கிரக ஆராதனை இருந்ததற்கான தடயமே இல்லை.
- இவர்களின் சிலையும் இல்லை.
- இவர்கள் வாழ்ந்த காலம் கி.மு. 2500.
- யோபு வாழ்ந்த அதே காலம்.
- “நான் செத்துப்போனால் என்னை அடக்கம் செய்வதற்கு விசித்திரமான ஒரு கட்டிடம் வேண்டும்” என Khofu மன்னன் ஆசைப்பட்டான்.
- எனவே, பிரமிட் கட்டினான்.
- அவருடைய மகன் அதை விட சிறிய பிரமிட் ஒன்று கட்டினார்.
- அவருடைய பேரனும் அதை விட சிறிய ஒரு பிரமிட் கட்டினார்.
- அதற்குள் யாரையும் அடக்கம் செய்யவும் இல்லை.
- அதற்குள் விக்கிரகங்களும் இல்லை.
- Orion என்று ஒரு constellation இருக்கிறது.
- 3 நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.
- அந்த 3 stars ஐயும், அந்த 3 pyramid ன் உச்சியில் இருக்கிற துளை வழியாக பார்த்தால் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது.
- எகிப்தியர்கள் வான சாஸ்திரிகளா? அல்ல.
- அந்தளவு வான சாஸ்திரம் தெரிந்த ஒரு ஆள் அந்த காலத்தில் வாழ்ந்தாரா?
அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
-யோபு 9 : 9
Job 9:9 Which maketh Arcturus, Orion, and Pleiades, and the chambers of the south.
கர்த்தர் யோபுவிடம் பேசினது:
- யோபுவின் ஞானத்தால் எதை புரிந்து கொள்ள முடியுமோ அதை தேவன் அவரிடம் பேசுகிறார்.
- இவ்வளவு பெரிதான விஷயங்களை தேவன் அவரிடம் பேசுகிறார் என்றால், அவர் எவ்வளவு பெரிய ஞானி!
அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
-யோபு 38 : 31
Job 38:31 Canst thou bind the sweet influences of Pleiades, or loose the bands of Orion?
- யோபுவுக்கு மாத்திமே தெரிந்திருந்தது எந்த அமைப்பில் கட்டினால், Orion constellation க்கு ஏற்ற மாதிரி கட்ட முடியும் என்று.
- எனவே, Khofu விற்கு pyramid டிசைனை கொடுத்தது யோபுவாக தான் இருந்திருக்க வேண்டும்.
- Khofu என்ற மன்னன், இன்னொரு மன்னனாகிய யோபுவின் உதவியை நாடினார்:
அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
-யோபு 3 : 13
பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,
-யோபு 3 : 14
அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
-யோபு 3 : 15
அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
-யோபு 29 : 25
யோபு 1:1 விளக்கம்:
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
-யோபு 1 : 1
ஊத்ஸ் தேசம் - அமைவிடம்:
- ஊத்ஸ் தேசம் இப்போது இருக்கிற அராபியா-வினுடைய வடக்கு எல்லையில் இருக்கிறது.
- அந்த காலத்தில் ஒரு பெரிய Highway இருந்தது. அதன் பெயர் The King’s Highway.
- எகிப்தில் தொடங்கி, பாபிலோன் வரை போகும்.
- ஒரே நேர்கோட்டில் போகாது.
- எகிப்தில் தொடங்கி North of Arabia வரை போகும்.
- பின்பு மேல் நோக்கி போய் Haran ல முடியும்.
- பின்பு இறங்க பாபிலோனில் முடியும்.
- எகிப்துக்கும், பாபிலோனுக்கும் உள்ள நடுமையம் தான் ஊத்ஸ் தேசம்.
- 1st dynasty லயே, எகிப்தியர்களும், பாபிலோனியர்களும், மெகிதோவில் யுத்தம் செய்தார்கள்.
- எனவே, அவர்களுக்குள் தொடர்பு இருந்தது என நாம் அறிந்து கொள்ளலாம்.
- யோபு Khofu ராஜாவினுடைய நண்பன்.
- எனவே, யோபு தான் pyramid கட்ட Khofu மன்னனுக்கு யோசனை கொடுத்தார்.
- விக்கிரக ஆராதனை தவறு என அவர்களுக்கு வலியுறுத்தி இருக்கலாம்.
- அவர்கள் யோபுவின் தேவனை ஆராதித்தார்கள்.
- Politician - ராஜா என்பதால்
- Religious - பக்தியுள்ளவர்
- Economist - ஏராளமான சொத்துக்களைக் கொண்டவர்
- அரசியல் அந்திகிறிஸ்து (Political Antichrist)
- மத அந்திகிறிஸ்து (Spiritual Antichrist)
- பொருளாதார அந்திகிறிஸ்து (Commercial Antichrist)
யோபுவை பாவம் செய்ய வைத்தது அந்த 3 நண்பர்கள்:
இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
-யோபு 1 : 22
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், (self righteous) அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
-யோபு 32 : 1
யோபு - பிரதான ஆசாரியன்:
- சர்வாங்க தகனபலி செலுத்துவதற்கு அதிகாரம் உடையவர்கள் பிரதான ஆசாரியர் (High Priest).
- இவர் இஸ்ரவேலன் அல்ல. ஆனால் ராஜா.
- அதே போல ஒரு ஆள் நான் மெல்கிசெதேக்கு.
- இவர் ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்தவர்.
- எனவே, யோபு மெல்கிசெசேக்கின் மூதாதையராக இருந்திருக்க வேண்டும்.
|
மெல்கிசெதேக்கு |
யோபு |
|
நீதியின் ராஜா என்று பொருள். |
உபத்திரவம் என்று பொருள் |
|
உண்மையான பெயர் தெரியாது |
உண்மையான பெயர் தெரியாது |
|
வாழ்ந்த இடம் சாலேம் |
வாழ்ந்த இடம் ஊத்ஸ் |
|
அங்கு வாழ்ந்தவர்களுக்கு என்ன ஆனது எனத் தெரியாது |
அங்கு வாழ்ந்தவர்களுக்கு என்ன ஆனது எனத் தெரியாது |
|
இஸ்ரவேலன் அல்ல |
இஸ்ரவேலன் அல்ல |
|
இவர் ஒரு ராஜா |
இவர் ஒரு ராஜா |
|
பிரதான ஆசாரியன் |
பிரதான ஆசாரியன் |
|
கி.மு 2000 ல் வாழ்ந்தார் |
கி.மு 2500 ல் வாழ்ந்தார் |
Comments
Post a Comment